Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வெள்ளரிக்காய் தால் தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு வெள்ளரிக்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1 துவரம் பருப்பு - 100 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 4 (நறுக்கியது) மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் எண்ணெ…

  2. தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை ரெடி. காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும். http://t…

  3. முட்டை தக்காளி மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை - 4 இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 2 ஏலக்காய் - 1 க.பட்டை - சிறிது கிராம்பு - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - தேவையான அளவு. செய்முறை: முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், க.பட்டை, கிராம்பைப் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் வெ.பூண்டு…

  4. கோர்ன் சீஸ் டோஸ்ட் குழந்­தை­க­ளுக்கு கோர்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உட­லுக்கு மிகவும் ஆரோக்­கி­ய­மா­னதும் கூட. எனவே மாலையில் பசி­யுடன் வரும் குழந்­தை­க­ளுக்கு சீஸ் மற்றும் கோர்னைக் கொண்டு அற்­பு­த­மான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்­க­ளது பசி அடங்­கு­வ­தோடு, அவர்­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். தேவை­யான பொருட்கள்: பிரட் - – 6 துண்­டுகள் வெங்­காயம் - – - ¼கப்(பொ. ந) குடை­மி­ளகாய் - –- ¼ கப் (பொ.ந) வேக வைத்த ஸ்வீட் கோர்ன் - – ½ கப் துரு­விய சீஸ் –- ½ கப் காய்ச்­சிய பால் – ¾ கப் மிளகுத் தூள் - – ½ தே.க வெண்ணெய் - …

  5. தேவையான பொருட்கள்: சிக்கன் லிவர் – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்…

  6. செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 1 கப் பூண்டு - 8 பல் (நறுக்கியது) தக்காளி - 1 புளி - 1 எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு…

    • 1 reply
    • 648 views
  7. கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி தேவையானவை: கொத்துக்கறி - அரை கிலோ சீரக சம்பா அரிசி - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - 2 இஞ்சி-பூண்டு - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 பட்டை - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு புதினா - சிறிதளவு பச்சைப் பட்டாணி - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - அரை பழம் உப்பு - தேவையான அளவு நெய் + எண்ணெய் - தலா 100 மில்லி செய்முறை: குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு …

    • 1 reply
    • 859 views
  8. தேவையான பொருட்கள்: தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 5 கறி குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை : 1.தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். 2.அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். 3.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). 4.வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்…

    • 3 replies
    • 1.3k views
  9. கோழிக்குழம்பு என்னென்ன தேவை? சிக்கன் -அரை கிலோ , சிறிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மல்லித் தூள் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள்-அறை ஸ்பூன் உப்பு-தேவையான அளவு தாளிக்க : வெந்தயம் -கால் ஸ்பூன் சோம்பு -கால் ஸ்பூன் பட்டை -கிராம்பு பிரியாணி இலை – தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு …

    • 3 replies
    • 2.2k views
  10. சீமை சுரைக்காய் நூடில்ஸ் சுவி அண்ணா உங்கள் கருத்துகள் வரவேற்கிடுகிறது..

    • 1 reply
    • 1.6k views
  11. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 250 கிராம் எண்ணெய் - 4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு தேங்காய் - 2 சில் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 புளி - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும். கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூ…

  12. சப்பாத்திக் கொத்து தேவையான பொருட்கள் சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு. செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்…

  13. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250g வெங்காயம் - 100g பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மசாலாத்தூள் -1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை,உப்பு , எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை தோல்சீவி மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும் . வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயையும் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் சட்டியில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அரைப்பதத்திற்கு வெந்ததும் மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1…

    • 1 reply
    • 870 views
  14. செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (கீறியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையானஅளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூ…

  15. திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 பூண்டு - 30 புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு அரைக்க: மிளகு - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - சிறிதளவு கல் உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை…

    • 7 replies
    • 6.4k views
  16. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 500g கடலைமாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 50g மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை உருளைக்கிழங்கை நன்கு அவிக்கவும். தோலை நீக்கி பிசைந்து வைக்கவும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டவும். சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , பச்சை மிளகாயை வதக்கவும். வதக்கியதும் பிசைந்த உருளைக்கிழங்கை யும் உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும்…

    • 6 replies
    • 1.8k views
  17. தேவையான பொருட்கள் சிக்கன் – 1/2 கிலோ பூண்டு – 1 முழு பூண்டு இஞ்சி – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 4 – 5 சோம்பு – 2 தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 100 கிராம் கறிவேப்பிலை – 2 கொத்து கடலை மாவு – 1 /2 கப் தேங்காய் – 1/4 மூடி எண்ணெய் உப்பு – தேவையான அளவு செய்முறை 1.சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக பாத்திரத்தில் வைக்கவும். 2.மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து மைப்போல் அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும். 3.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் 1 மேசைக்கரண்டி, தேவையான உப்…

  18. தேவையானவை: கோழிக்கறி-1 /2 கிலோ பச்சை மிளகாய்-4 தக்காளி-4 சிவப்பு மிளகாய்-10 மல்லி- 25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி-கொஞ்சம் மிளகு -6 தேக்கரண்டி சீரகம்-1 தேக்கரண்டி சோம்பு-1 /2 தேக்கரண்டி கசகசா-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-10 பல் தேங்காய்-1 /2 மூடி ஏலம்-1 பட்டை- சிறு துண்டு கிராம்பு- 3 எண்ணெய்-3 தேக்கரண்டி கறிவேப்பிலை-1 கொத்து உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 2.தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். வே…

  19. திருநெல்வெலி மட்டன் குழம்பு தேவையானவை: மட்டன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு. அரைக்க : தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்) கசகசா - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க: பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ச…

  20. தேவையான பொருட்கள்: சிக்கன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ எண்ணெய் - 200 கிராம் பட்டர் - 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு தயிர் - 1/2 லிட்டர் ப்ரைடு ஆனியன் - ஒரு கப் பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எலுமிச்சை - ஒன்று பட்டை - ஒரு சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 5 பிரிஞ்சி இலை - 2 ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 ஜாதிபத்திரி - சிறிதளவு கொத்தமல்லி தழை - ஒரு கொத்து புதினா - ஒரு கொத்து குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு செய்மு…

  21. சிம்பிளான... மோர் குழம்பு மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மோர் - 1 கப் தேங்காய் - 1/2 கப் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு…

    • 10 replies
    • 1.7k views
  22. தேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம், வெங்காயம் – 2 சீரகத் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கு கொத்தமல்லி தழை – சிறிதளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : 1 சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும் 2.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் 3. சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 4.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். 5.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள…

    • 2 replies
    • 714 views
  23. சென்னை ஸ்பெஷல்: சைவ பிரியாணி என்னென்ன தேவை? கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக் கிழங்கு - தலா 100 கிராம் பச்சை மிளகாய் - 4 தயிர் - 3 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 4 ஏலக்காய் - 2 ஜாதிக்காய்த் தூள் - சிறிதளவு வெங்காயம், தக்காளி - தலா 2 இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் பாசுமதி அரிசி - 2 கப் புதினா, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவை…

    • 1 reply
    • 772 views
  24. மங்லோரியன் சிக்கன்.......... தேவையான பொருட்கள்: சிக்கன் – 1 கிலோ (சுத்தமாக கழுவியது) வெங்காயம் – 1 (நறுக்கியது) தேங்காய் பால் – 1/2 கப் (கெட்டியானது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 3 ஏலக்காய் – 3 வரமிளகாய் – 4 தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய …

  25. மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

    • 1 reply
    • 767 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.