நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் க…
-
- 0 replies
- 634 views
-
-
இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பல் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது - அரை கப் உ.பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும…
-
- 0 replies
- 1.7k views
-
-
சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி மட்டன் -1/2kg மிளகாய் தூள்- 1tbsp மஞ்சள் தூள்- 1tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை பாஸ்மதி அரிசி-3 கப் கெட்டி தயிர்-1கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2 தக்காளி(பொடியாக நறுக்கியது)-3 பெருஞ்சீரகம் -1tsp பிரியாணி இலைகள் கிராம்பு பட்டை ஏலக்காய் புதினா கொத்தமல்லி இலைகள் அரைக்க தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய்-3 பச்சை மிளகாய்-4 வெங்காயம்-1/4 கப் பெருஞ்சீரகம் -1tsp கிராம்பு-4 ஏலக்காய்-6 பட்டை -2 இஞ்சி துண்டுகள் பூண்டு-15 புதினா இலைகள்-1/2 கப் செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய்…
-
- 0 replies
- 3.6k views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
வாங்க இண்டைக்கு நாம தாமரை தண்டு வச்சு ஒரு பிரட்டல் கறி செய்வம், இது விரத சாப்பாட்டோடையும், மரக்கறி உணவுகளோடையும் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கும் இந்த தாமரை தண்டு கிடைச்சா இப்பிடி ஒரு தரம் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க, செய்து பாத்திட்டு எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 552 views
-
-
-
- 0 replies
- 617 views
-
-
தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி தேவையான பொருட்கள் : கோவக்காய் – 1 கப் தக்காளி – 3 தனியா தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு சீரகம் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் – சிறிதளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 733 views
-
-
-
பேர்கர் கிங்' பேர்கரில் பிளேட் - அமெரிக்கர் அதிர்ச்சி! [sunday, 2014-06-15 21:24:36] தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பேர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பேர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பேர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப…
-
- 0 replies
- 540 views
-
-
செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்காதவர்களே இல்லை. அந்த ரெசிபிக்களை வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (கீறியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையானஅளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூ…
-
- 0 replies
- 523 views
-
-
கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையானவை : சிறிய வெங்காயம் 150 கிராம், தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10, மல்லி 2ஸ்பூன், மஞ்சள் 25 கிராம், புளி சிறிய எலுமிச்சை அளவு, சீரகம் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, வெந்தயப்பொடி 1 சிட்டிகை. கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை : *வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். *7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது. *வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, க…
-
- 0 replies
- 630 views
-
-
செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 10 முந்திரி - 10 மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் கசகசா - கால் ஸ்பூன் பட்டை, கிராம்பு - சிறிதளவு ஏலக்காய் - 2 ஜாதிக்காய்ே - 1 புதினா, மல்லி - சிறிதளவு நெய் - 4 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - ஸ்பூன் தயிர் - 1 ஸ்பூன் பால் - 2 ஸ்பூன் எப்படிச் ச…
-
- 0 replies
- 809 views
-
-
[size=6]ஜவ்வரிசி ஊத்தப்பம்[/size] [size=4][/size] [size=4]ஜவ்வரிசி ஊத்தப்பம் காலையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு டிபன். இது மிகவும் சுவையாகவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இந்த ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]ஜவ்வரிசி - 1 கப் அரிசி - 1 கப் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 கொத்தமல்லி - சிறிது உப்பு - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]அரைக்க :[/size] [size=4]பச்சை மிளகாய் - 4-6 இஞ்சி - 1/2 இஞ்ச் தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் ஜவ்வரிசி மற்றும…
-
- 0 replies
- 976 views
-
-
[size=4]வீட்டில் தினமும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் கொண்டைக்கடலையை வைத்து குழம்பு போல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும். அத்தகைய கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்துதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]கொண்டைக்கடலை - 150 கிராம் கத்தரிக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 3 குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 3 முந்திரி பருப்பு - 2 கசகசா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி (துருவியது) புளி - ச…
-
- 0 replies
- 872 views
-
-
குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ் காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - அரை கப், வெங்காயம் - 2 கேரட் - 50 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி சாஸ் - 3 ஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : * கொத்தமல்லி,…
-
- 0 replies
- 408 views
-
-
மரக்கறி ஜாம் தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 காரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி செய்முறை காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும். தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சீனி, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கிளறவும். குறிப்பு: இதை காற்று புகாத போத்தலிள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]ரவை - 1 கப் தயிர் - 1 கப் (சற்று புளித்தது) தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி - சிறிது சோடா மாவு - 1 சிட்டிகை மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்ப…
-
- 0 replies
- 900 views
-
-
தேவையானவை மட்டன் -1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன் தனியா பொடி - 1ஸ்பூன் வெந்தயம் - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு-1 ஸ்பூன் க.மிளகாய்-3 இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 1ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 1 தனியா - 1 ஸ்பூன் க.மிளகாய்-2 ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும். ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும். கடாய…
-
- 0 replies
- 2.6k views
-
-
தேவையான பொருட்கள்: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 1 கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் பூண்டு - 10 பல் கொத்தமல்லித் தழை - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு வறுத்து பொடி செய்ய: மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் தனியா - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 செய்முறை: வாணலியில் பொடித்த மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் சிறிது நேரம் வறுத்து பொடி செய்யவும். பூண்டை தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சிக்கனை லேசாக வதக்கவும். இத்துடன் கறிவே…
-
- 0 replies
- 667 views
-
-
உணவுகளை உணர்வுகளாக்கும் கார்னிஷிங் உணவின் அழகு பார்ப்பவர்களின் கண்களை நிறைத்து, வயிற்றையும் நிறைக்க வேண்டும். அதற்கு மிகமுக்கியமான விஷயம் உணவை நாம் எப்படிப் பரிமாறுகிறோம் என்பதே. ‘‘அதெல்லாம் ஹோட்டல் செஃப்களுக்குத்தான் கைவரும். நமக்கெல்லாம் வராதுப்பா” என்பவர்களுக்கு ‘அது ரொம்ப ஈஸி’ என்று தன் அனுபவங்களையே உங்களுக்கு டிப்ஸாக தந்திருக்கிறார் டாக்டர் செஃப் வினோத் குமார், சாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை பயிற்றுநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி. “ஒரு பாட்டு பாடுறப்ப... அல்லது இசையை கேட்குறப்ப உங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள் இல்லையா?! அப்படித்தான் ஒரு உணவை பார்க்கிறபோது அதனுடைய மணத்தை மூளை கணித்து, அத…
-
- 0 replies
- 716 views
-
-
என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். அதிலும் ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. இந்த பண்டிகையின் போது கூட, இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன…
-
- 0 replies
- 564 views
-
-
மசாலா வடை குழம்பு அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும். இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: மசாலா வடை - 10 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மல்லிப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை …
-
- 0 replies
- 696 views
-
-
[size=5]தேவையான பொருட்கள்[/size] சாதம் - 2 கோப்பை கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு [size=5]செய்முறை[/size] 1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும். 2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை…
-
- 0 replies
- 727 views
-
-
பாம்பே மட்டன் பிரியாணி என்னென்ன தேவை? பாசுமதி அரிசி - 750 கிராம் கேவைத்த மட்டன் - 750 கிராம் வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 2 தக்காளி- 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 20பல் இஞ்சி - 50கிராம் தயிர் - 2ஸ்பூன் எலுமிச்சை- 1 பட்டை- 4 கிராம்பு- 8 ஏலக்காய்- 9 பிரிஞ்சி இலை- 2 சீரகம்- 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய்- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்- 1/4 ஸ்பூன் கரம் மசாலா- 1/4 ஸ்பூன் குங்குமப்பூ- 1/4 சிட்டிகை பால் - 2ஸ்பூன் தேவையான அளவு உலர்ந்த பிளம்ஸ் உலர்ந்த திராட்சை புதினா கொத்தமல்லி உப்பு நெய், எண்ணெய் எப்படி செய்வது? இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தம…
-
- 0 replies
- 733 views
-