நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பற்றீஸ் தேவையான பொருள்கள். கோதுமை மா..250கிராம் அவித்த கோதுமைமா..150 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை உருழைக்கிழங்கு 500 கிராம் வெங்காயம் 2 பெரியது பச்சை மிளகாய் 4 தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி கறிவேப்பிலை தேவையான அளவு கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் செய் முறை. இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும். அடுத்தபடியாக. உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட…
-
- 41 replies
- 12.1k views
-
-
கேசரி - எஸ்.ஜெயா அவசரகாலங்களில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் முதலிடம் வகிப்பது கேசரி. குறைந்த கால அளவில் சுவையான இனிப்பை தயார் செய்து ருசிக்க வழிவகை செய்வதே கேசரி. இவையெல்லாம் தேவை ரவை - ஒன்றரை கப் சர்க்கரை - ஒரு கப் நெய் - 50 கிராம் ஏலக்காய் - 5 முந்திரி - 10 கிராம் கேசரி பவுடர் - 1 டீஸ்பூன் பால் - ஒரு கப் தண்ணீர் - அரை கப் இப்படி செய்யவும் ரவையை சிவக்கும் அளவில் வறுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கியபின் கேசரி பவுடரை சிறிது தண்ணீரில் கலக்கி ஊற்றவும். இதனுடன் பாலை சேர்த்து கிளறவும். இது கொதித்தபின் ரவையை சேர்த்து தீயை குறைத்துவைத்து கொண்டு …
-
- 2 replies
- 3.4k views
-
-
உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது. ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங…
-
- 1 reply
- 9.2k views
-
-
தேவைபடும் பொருட்கள்: கரட் 200 கிராம் தக்காளிப்ழம் 2 வெள்ளரிகாய் 1 குடை மிளகாய் 1 எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி மல்லி இலை (நறுக்கியது ) 1 மேசை கரண்டி உப்பு கடுகு அரைப்பு சிறிதளவு செய்முறை :கரட்டை துருவவும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும் மிளகாயை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும் சாப்பிடப் போகும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிளறி சுவைக்கவும்!! நன்றி சமையல் குறிப்பு புத்தகம்!! பி.கு- உடல் ஆரொக்கியதிற்கும்,கண் பார்வை சக்தி அதிகரிபதிற்கும் மிகவும் நல்ல உணவு இந்த கரட் சலாட்!! அப்ப நான் வரட்டா!!
-
- 13 replies
- 4.2k views
-
-
என்னென்ன தேவை: மீன் Red Mullet - 6 உள்ளி / வெள்ளைப்பூண்டு - 6 வெங்காயம் - 1 இஞ்சி விழுது - 1 மே.க மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 1/2 மே.க சீரகம் - 1 1/2 தே.க எண்ணெய் - 3 மே.கா எப்படி செய்யணும்: - முதல்ல மீனை எடுத்து சுத்தம் பண்ணிக்குங்க. படத்தில் இருப்பது போல இருக்கணும். இதுவரை நான் மீனை சுத்தம் செய்யாததால் எப்படி என கேட்காதீர்கள். அண்ணன்களிடம் தான் நானே கேட்கணும். - படத்தில் இருப்பது போல மீனை இரண்டு பக்கமும் கீறிக்கொள்ளுங்கள். - Paper Towel இல் மீனை போட்டு வைக்கணும். ஏன் என்றால் மீனில் இருக்கும் நீர் தன்மை பேப்பரில் ஊறிப் போய்விடும். - இப்போ வெங்காயம், உள்ளி, இஞ்சி, தூள்வகைகளுடன் உப்பை சேர்த்து நன்றாக…
-
- 11 replies
- 10k views
-
-
தேவையான பொருட்கள் எக் பீட்டர் கோதுமை மா அல்லது அரிசிமா வெந்நீர் அளவுகேற்ப உப்பு தேங்காய் பூ கோதுமைமா புட்டினை அவிப்பம் ஓகேயா :P போதுமானவளவு கோதுமை மாவினை 5 நிமிடங்கள் ஒரு கோப்பையில் போட்டு மைக்ரோவேயில் வைக்க பின் அந்த மாவினை அரிந்தெடுத்து புட்டு குழைக்கும் பாத்திரத்தில் இடுக.அளவுகேற்ப உப்பு வெந்நீர் சேர்த்தபின் எக்பீட்டரை உபயோகித்து ஒரு 30 செக்கண் மாவினை குழையுங்க.ஊரில பேணியால குத்திற மாதிரி புட்டு குழைக்கப்பட்டுவிடும்.பின் புட்டு குழலிலோ அல்லது ஸ்ரிமரிலோ தேங்காய்பூவினை கலந்து அவித்து எடுத்து பரிமாறுங்கள் Copyright 2002-2007 eelavan85, All Rights Reserved. :P எக் பீட்டர்
-
- 33 replies
- 8k views
-
-
தேவையானப் பொருட்கள் இறால் - அரை கிலோ சி. வெங்காயம் - ஐம்பது கிராம் பூண்டு - மூன்று பல் தக்காளி - மூன்று மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன் உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - மூன்று கொத்து தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன் சீரகம் - கால் டீ ஸ்பூன் செய்முறை * இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும். * வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும். * தேங்காய் & சீரகத்தை அரைக்கவும். * சோம்ப…
-
- 36 replies
- 12.7k views
-
-
நாண் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1/4 கிலோ வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவைக்கு யீஸ்ட் - 1 மேஜைக்கரண்டி சோடா உப்பு - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - 1/4 கப் பால் - 1/2 கப் நெய் - 3 தேக்கரண்டி செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு,யீஸ்ட்,சோடா உப்பு,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து,கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி நன்கு பிசையவும்.1/2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு சின்ன உருண்டைகளாக பிடித்து மெல்லிய சப்பாத்தி போல் வளக்கவும்.சீஸை மேலே தூவி இரண்டாக மடித்து oven-ஐ 350 ல் வைத்து 7- 9 நிமிடம் பேக் செய்து, நெய் தடவி 3 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்படி செய்துவிட்டு பேபிக்கு கொண்டு வந்து தாங்கோ எல்லாரும் சரியா................ :P ;) ht…
-
- 69 replies
- 13.6k views
-
-
மட்டன் 1/2 கிலோ தனியா பொடி மிளகுப் பொடி மஞ்சள் பொடி தயிர் 1 கப் முந்திரி 150 கிராம் மல்லி இலை 1 கட்டு வெஙகாயம் 1 உப்பு இஞ்சி.பூண்டு விழுது ஜீரகப் பொடி மட்டன்,உப்பு,தயிர்,இஞ்சி.பூண்
-
- 16 replies
- 5.6k views
-
-
தேவையான பொருட்கள்: முள் இல்லாத மீன் துண்டுகள் - 4 இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன் கரம் மசாலா - 1ஸ்பூன் மக்காச்சோள மாவு - 1ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - சிறிது மிளகுத்தூள் - 3ஸ்பூன் புளி - ஒரு சிறு உருண்டை செய்முறை: புளி கரைத்து வைத்துக் கொள்ளவும். மீதி உள்ளஅனைத்தையும் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மீன் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். புளி தண்ணீர் 10 நிமிடம் சூடு செய்து வெந்த மீனை போடவும் மேல் கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும் ................
-
- 48 replies
- 7.5k views
-
-
தேவையான பொருட்கள்: நண்டு 2 சிவப்பு மிளகாய் 3-4 தக்காளி கூழ் [Tomato Paste] உள்ளி+இஞ்சி விழுது சீனி சிக்கன் ஸ்டொக் [Chicken Stock] சோளமா லெமன் க்ராஸ் [Lemon Grass] உப்பு செய்முறை: நண்டை சுத்தமாக்கி, நீரினால் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் நண்டை பேப்பர் டவலில் போட்டு நீரை ஒற்றியெடுங்கள். சிறிதளவு சோளமாவில் போட்டு பிரட்டி எடுங்கள். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நண்டு துண்டுகளை போட்டு வறுக்கவும். பின்னர் மிளகாய் & லெமன் கிராஸை நன்றாக அரைத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வேறு ஒரு சட்டியில் எண்ணெய் போட்டு சூடாக்கி அதில் உள்ளி, இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை கிளறவும். [2 நிமிடங்கள்] அதில் அரைத்த விழுதை சேர்…
-
- 10 replies
- 4.2k views
-
-
தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு
-
- 6 replies
- 3.1k views
-
-
தேவையான பொருட்கள்: கோதுமை மா 03 கப் அரிசிமா 01 கப் வறுத்த உழுத்தம்மா 01 கப் சீனி 03 கப் செய்முறை: கோதுமை மா, அரிசிமா, உழுத்தம்மா இவற்றை 03:01:01 விகிதத்தில் ஒன்று சேர்த்து (இந்த விகிதத்தில் தான் இன்று கலந்தோம்) தேவையான அளவு சுடுநீர் விட்டு, சிறிதளவு உப்பும் விட்டு இடியப்பம் பிழிவதற்கு குழைப்பது போல் மாவை குழைக்க வேண்டும். பின் முறுக்கு உரலில், விருப்பமான வடிவை உடைய அச்சை போட்டு பின் பிழிய வேண்டும். இதை பிழிந்து மேசை ஒன்றின் மீது இட்டபின் (மேசை சுத்தம் இல்லையென்றால் பேப்பர் விரிக்கலாம்) கத்தியால் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு கொதிக்கும் எண்ணைச் சட்டியில் இறக்கி எடுக்க வேண்டும். பிழிந்த மாவை வெட்டும் போது பொறுமையாக அழகாக வெட்ட வேண்…
-
- 20 replies
- 16.2k views
-
-
தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …
-
- 12 replies
- 4.2k views
-
-
தேவையானப் பொருட்கள் வௌவால் மீன் - 2 புளி எண்ணெய் - 150 மி.லி. கடுகு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - அரை கப் இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது) பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் - அரைத் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கிராம்பு - 2 ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி தேங்காய் - ஒன்று வினிகர் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் த…
-
- 10 replies
- 3.5k views
-
-
தேவையானப் பொருட்கள் கறி - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் ) தண்ணீர் - 7 கப் நெய் - 100 கிராம் எண்ணெய் - 200 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 3 ரம்பயிலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் பல்லாரி - 1/2 கிலோ தக்காளி - 1/4கிலோ கொ.மல்லி - 1 பெரிய கட்டு புதினா - 1 கட்டு உப்பு - தேவைக்கு கேசரி கலர் - கொஞ்சம் எலுமிச்சை - 1 செய்முறை பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும். கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும். தாளிக்க: குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம…
-
- 69 replies
- 11.9k views
-
-
மாமிச கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய் செய்முறை: முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் …
-
- 16 replies
- 7.3k views
-
-
தேவையான பொருட்கள்: வெற்றிலை பாக்குத்தூள் கற்கண்டு தூள் பீடா கலவை அல்லது சர்பத் கலவை கராம்பு செய்முறை: பீடா கலவையை (கடையில் வாங்கலாம்) முதலில் அடுப்பில் வைத்து சிறிதளவு கொதிக்க வைக்க வேண்டும். (அம்மாவிடம் எவ்வளவு நேரம் என்று கேட்டபோது சட்டி கொதிக்க மூன்று நிமிசம் பிடிக்கும் என்றபடியால் ஒரு ஐந்து நிமிடம் என்று எழுதச்சொன்னா) பின் இந்த கலவையுடன் பாக்குத்தூள், கற்கண்டு தூள் ஐ கலந்து குழைக்க வேண்டும். இந்த கலவையை வெற்றிலையினுள் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து, கராம்பு குச்சியினால் மடிப்பு கழறாதபடி குற்றிவிட வேண்டும். பீடா கலவை கிடாக்காவிட்டால் சர்பத் கலவையையும், பக்கற்றில் வரும் தேங்காய்ப்பூ தூளையும் பயன்படுத்த முடியும். மேலே உள்ள பீடா எனது வ…
-
- 31 replies
- 13.6k views
-
-
தேவையானவை வாழைப்பூ 1 பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 கடுகு , சீரகம் விரும்பினால் தேங்காய்ப்பூ சிரிதளவு(உடலில் கொழுப்பு கூடினவர்கள் பாவிக்காமல் இருப்பதே நன்று) :P சிறிதளவு எண்ணை உப்பு இறால் மிளகாய்த் தூள் செய்முறை முதலில் வாழைப்பூவை சிறிது சிறிதாக அரிதல் வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு 1 மணித்தியாலத்திக்கு மேலாக ஊர விட வேண்டும் அப்பத்தான் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும், பின்னர் தண்ணீரை அகற்றி வாழைப்பூவை மட்டும் எடுத்து வைத்தல் வேண்டும் இறாலையும் தோல் நீக்கி வைக்க வேண்டும் பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை போட வேண்டும் பின் சிறிதி எண்ணை விட்டு சூடானதும் அதில் கடுகு சீரகத்தை போட வேண்டும் பின் சிறிதாக அர…
-
- 8 replies
- 4.7k views
-
-
தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் - 3/4 டின் பால் - 1/2 லிட்டர் பால் க்ரீம் - 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும். பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும். மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேர…
-
- 3 replies
- 3.1k views
-
-
பல விதமான நாசி கோரிங் செய்யும் பழக்கத்தில் நானே உருவாக்கிய செய்முறை இது. சுவையாகவும், அதே சமயம் இலகுவில் சமைக்க கூடியதாகவும் இருக்கும். இனி செய்முறை: தேவையான பொருட்கள்: சாதம் 1 கப் வெள்ளை பூண்டு + இஞ்சி விழுது 1 மே.க அரைத்த செத்தல் மிளகாய் விழுது / Hot Chilli Paste 1 மே.க ஸ்ப்ரிங் ஒனியன் 1/4 கப் [நறுக்கியது] நீளமாக நறுக்கிய வெங்காயம் 1 [சின்னது] முட்டை பொரியல் [தோசை தட்டில் போட்டு எடுத்து சிறிதாக வெட்டி எடுக்கவும்] சோய் சோஸ் 1 மே.க உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1. சட்டியில் எண்ணையை சூடாக்கி வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2. பூண்டு+ இஞ்சி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 3. பின்னர் மிளகாய் விழுதையும்,…
-
- 11 replies
- 4.3k views
-
-
மலாய் பேடா ---------------- வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் -5 காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 5 புளி - சிறிதளவு மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: ------------- முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும். மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். இத…
-
- 10 replies
- 4.6k views
-
-
தேவையான பொருட்கள் ------------------------------ முட்டை - 6 பெரிய கேரட் - 1 பொட்டுகடலைமாவு - அரை கப் தேங்காய் - 1 முடி பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 மிளகாய் - 6 இஞ்சி - சிறிதளவு சோம்பு - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கசகசா - 2 ஸ்பூன் பூண்டு - 8 சீரகம் - 2 ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை செய்முறை: ---------------- முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய…
-
- 4 replies
- 2.8k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…
-
- 3 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- கோழி 1 கி பெரிய வெங்காயம் 6 மிளகாய் வற்றல் 7 தக்காளி 5 இஞ்சி, பூண்டு சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி கரம் மசாலா டால்டா அல்லது நெய் வினிகர் எலுமிச்சை சாறு வெள்ளரிக்காய் செய்முறை: ------------- முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறு…
-
- 14 replies
- 4.2k views
-