நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மலாய் பேடா ----------------- காளான் - 2 கப் தேங்காய் துருவல் - 1 கப் வெங்காயம் - 2 மிளகாய் - 5 மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு. செய்முறை --------------- முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக க…
-
- 2 replies
- 2.1k views
-
-
அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி. ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும். செய்முறை: ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும். அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும். கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம். கூட எல்லாருக்கும் அளவுகள் கொ…
-
- 147 replies
- 25.7k views
-
-
கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் செய்முறை: கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைத்தபின் எலும்பில்லாத கோழிக்கறியை அடித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்…
-
- 38 replies
- 6.7k views
-
-
INGREDIENTS * 1 1/2 pounds meaty frog legs * 1 cup milk * 1 eggs, lightly beaten, divded * 1 teaspoon garlic powder * 1/2 teaspoon onion powder * * 1 cup all-purpose flour * 1/4 cup fine dry bread crumbs * 2 tablespoons yellow cornmeal * 1/2 teaspoon baking powder * 2 teaspoons salt * 1 teaspoon fresh ground black pepper * 1 teaspoon cayenne pepper * 1 teaspoon paprika * 1/2 teaspoon dried oregano * 1/2 teaspoon ground thyme * 1/4 teaspoon cumin * 1 teaspoon dried parsley * * 1/2 cup olive oil * 3 tablespoons butter * * 1 small onion, diced * 5 large mushrooms, diced * 2 tablespoons all-purpose flour * 1 cup milk …
-
- 3 replies
- 2k views
-
-
தேவையான பொருட்கள்:- பாதாம் பருப்பு - 250 கிராம் நெய் - 800 மி.லி. பால் - 200 மி.லி. சர்க்கரை - 500 கிராம் ஏலக்காய் - 4 செய்முறை:- பாதாம் பருப்பை நன்றாக ஊறவைக்கவும். அதை தோல் நீக்கி அரைக்கவும், அரைத்த விழுதை பாலில் கரைக்கவும். வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கை படாமல் கிளறவும். கிளறும் போதே நெய், கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதமாக வரும்போது இறக்கி விடவும். --------------------------------------------------------------------------------
-
- 58 replies
- 8.4k views
-
-
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப் பாசிப் பருப்பு - கால் கப் நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 15 தூளாக்கிய வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 5 தேங்காய்ப்பால் - 1 கப் செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும். பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும். தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டு…
-
- 11 replies
- 3.4k views
-
-
தேவையானவை:- முழுக்கோதுமை மாவு - 1 கப். வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:- வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.
-
- 10 replies
- 3.2k views
-
-
பிரட் கட்லட் தேவையான பொருள்கள்:- சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6 உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப் கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப் மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப் žரகப்பொடி - 1ஸ்பூன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் செய்முறை:- முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, žரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக…
-
- 16 replies
- 6.2k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. தேவையான பொருட்கள்: சிவப்புபச்சை அரிசி - 1 பேணி நீர் - 2 பேணி தேங்காய் பால் - 1 பேணி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. அரிசியை கழுவி 2 பேணி நீரில் அவியவிடவும். 2. அரிசி அரைவாசி அவிந்ததும் பாலையும் உப்பையும் சேர்த்து நன்றாக காய…
-
- 12 replies
- 4.3k views
-
-
மரக்கறி ஜாம் தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 காரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி செய்முறை காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும். தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சீனி, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கிளறவும். குறிப்பு: இதை காற்று புகாத போத்தலிள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்
-
- 0 replies
- 1.5k views
-
-
முட்டை பொரியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான். :P
-
- 11 replies
- 5.3k views
-
-
தமிழ் புது வருட தினமான இன்று, சுவையருவியில் இருந்து உங்களுக்காக ஒரு இலகுவான சர்க்கரை பொங்கல் செய்யும் முறை. அனைவருக்கும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகின்றேன். சர்க்கரை பொங்கல் pic:nandyala தேவையான பொருட்கள்: அரிசி = 1 பேணி வறுத்த பாசி பயறு = 1/3 பேணி சர்க்கரை = 1 பேணி தேங்காய் பால் = இ பேணி நீர் = 3 பேணி Cashewnuts = 2 மே.க Raisins = 2 மே.க செய்முறை: 1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும். 2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது…
-
- 3 replies
- 4.8k views
-
-
தேவையான பொருட்கள்:- கரட், கோதுமை பச்சைமா,கோதுமை அவித்தமா,சீனி,எண்ணை,தேவையான அளவு உப்பு,அடுப்பு,தாச்சிசட்டி,பண
-
- 6 replies
- 3.5k views
-
-
மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ வெள்ளைப் பூண்டு -75கி இஞ்ச -75கி பட்டை -5கி ஏலக்காய் -5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி,புதினா -சிறிதளவு எலுமிச்சம் பழம் செய்முறை கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை ,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகள…
-
- 12 replies
- 3.7k views
-
-
முந்திரி ஸ்வீட் இது அதிக கலோரி உள்ள ஸ்வீட்.நாளைக்கு ஸ்வீட் சாப்பிட்டு தான் எனக்கு வெயிட் போட்டிடுச்சு என்று யாரும் புகார் கொடுக்க கூடாது. முந்திரி பருப்பு -1கப் சர்க்கரை அதே கப்பில் -11/2கப் ரோஸ் எசன்ஸ்-1/2 ஸ்பூன். முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு முடியும் வரை நைசாக தூள் ஆக்கவும். இப்ப முந்திரி தூளையும்,சர்க்கரையையும் ஒன்றாக கலந்து அடுப்பில வையுங்கள். ஒரு நிமிடம் வறுத்து,லேசாக தண்ணீர் தெளிக்கவும்.விடாமல் கிண்டி கொண்டே இருக்கவும்,கலவை ஒன்று சேர்ந்தவுடன் சிறிதளவு எடுத்து கையில் உருட்டி பாருங்கள். கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வந்தால் உடனே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்பொழுது எசன்ஸ் சேர்த்து கலவை ஆறும் வரை விடாம…
-
- 0 replies
- 1.9k views
-
-
பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…
-
- 68 replies
- 10.6k views
-
-
-
-
சிவானந்தா ஆச்சிரம ஆரோக்கிய மான சாப்பாட்டு முறைகள். சிவானந்தா சைவச்சாப்பாட்டுக் கடை ஆக்கங்கள் கைகளில் உண்டு ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு தந்து கொண்டு இருப்பேன். தற்போது தமிழில் அதனை மொழிபெயர்த்துக்கொண்டு உள்ளேன். மீண்டும் நாளை வருக. நன்றிகள்.
-
- 0 replies
- 1.8k views
-
-
ஸ்பைசியான் மெக்ஸிக்கன் ஆட்டுக்கறி மிக விரைவில் தரவுகளுடன் வரவிருக்கிறது. நாக்குக்கு உறைப்பாகவும், நல்ல வாசமான் மூலிகைகள் கொண்டு தயாரிக்கபட்டது. அன்மையில் உள்ள உங்கள் மெக்ஸிக்கன் கடைகளினை கண்டு அதில் சில வகை மிளகாய்கள் வாங்குவதற்காக பார்த்து வையுங்கள். நாளை தொடர்கிறேன்.
-
- 20 replies
- 4.5k views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
பூண்டு( உள்ளி) ஊறுகாய் தேவையான் பொருட்கள்: வெள்ளைப்பூண்டு உரித்தது( உள்ளி)- 4 கோப்பை உப்பு தூளு- ஒரு கோப்பை தமிழீழ மிளகாய்த்தூள்- ஒரு கோப்பை வெந்தயம்- ஒரு மேஜைக்கரண்டி நற்சீரகம்- ஒரு மேஜைக்கரண்டி பெருங்காயப்பொடி- சிறிதளவு....அடடே மறந்திட்டேனுங்க மீண்டும் தக்காளி ரசத்துக்கு போரனுங்க மீண்டும் வாரன்...
-
- 18 replies
- 4.4k views
-
-
நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள் என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும். 1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. 2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க.
-
- 46 replies
- 7.6k views
-
-
இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…
-
- 6 replies
- 3.7k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: (முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்) * கெட்டியான மீன்- 500 கிராம். * மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி. * மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி. * இஞ்சி, பூண்டு அரைப்பு- ஒரு மேஜைக்கரண்டி. * எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி. * வெஜிடபிள் ஆயில்- வறுப்பதற்கு. (அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி, மீனில் பூசி எண்ணையில் அதிகம் வெந்து போகாத அளவிற்கு வறுத்து வையுங்கள்) * பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- இரண்டு கப். * இஞ்சி, பூண்டு நறுக்கியது- ஒரு மேஜைக் கரண்டி. * கேரட் சிறியதாக நறுக்கியது- இரண்டு கப். * குடை மிளகாய் சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி. * ப.மிளகாய் வட்டமாக நறுக்கியது- இரண்டு தேக்கரண்டி…
-
- 16 replies
- 4.2k views
-