நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
தொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018 பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைமைக் கிராம அலுவலர் எஸ். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் கலந்து கொண்டனர். கலாசார உத்தியோகத்தர் பொன்.சுகந்தன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். . சைவப்புலவர் கலாபூஷணம் ச.உருத்திரேஸ்வரன், கலாபூஷணம் வெ. மு…
-
- 0 replies
- 543 views
-
-
சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா! மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல…
-
- 0 replies
- 540 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது. இம்முறை தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 29.09.2013 அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு அகவணக்க விளக்கேற்றளும் நடைபெறவுள்ளது. டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கி…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 85 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை விளக்குகிறார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அம…
-
- 0 replies
- 536 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945 இல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்த…
-
- 0 replies
- 531 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு http://tamil24news.com/news/archives/122182
-
- 0 replies
- 531 views
-
-
குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்ற ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு October 4, 2018 1 Min Read யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழுவும் இளையோர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய குறும்பட போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ‘வெளிச்சம்’ குறும்பட வெளியீடு 30.9.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பங்கு இளையோர் ஒன்றியத் தலைவர் திரு.எமிலியன் குருசோ தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிற…
-
- 0 replies
- 525 views
-
-
"அன்பால் ஆள்வோம்” [27/11/2024] "அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோமே!" "உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோமே!" "ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தருமே!" "பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்குமே!" "எங்களுக்காக உயிர்க்கொடுத்த தியாகிகளையும் தன்னலமற்று தாய்நாட்டுக்காக வாழ்ந்தவர்களையும் மனத்திலேற்றி தீபமேற்றி வணங்குவோமே ஒருகனமாவது அவர்களைச் சிந்தி…
-
- 1 reply
- 524 views
-
-
-
யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019 January 12, 2019 எதிர்வரும் பொங்கல் திரு நாளில் ஓர் கலாசார சங்கமம்.. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, சுதேசிய விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நாடாத்தப்படவுள்ளது, காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய கலாசார நடைபவனி யாழ் நகரினை வலம்வரும்… தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளின் ஆற்றுகைகள் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும். தமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திர…
-
- 0 replies
- 522 views
-
-
´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ – சிறுவர் தினம் இன்று! சர்வதேச சிறுவர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. ´நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம்´ எனும் தொனிப்பொருளில் இவ்வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையின் பல இடங்களிலும் பாடசாலைகளிலும் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் உள்ள சிறுவர்களில் பலர் பெற்றோரின் பாதுகாப்புடன் வாழும் அதேநேரம், 13704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் 87,854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2321 சிறுவர…
-
- 0 replies
- 521 views
-
-
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி! வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் 200ஆவது முன்னிட்ட நிகழ்வின் ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணகல்லூரி உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட…
-
- 2 replies
- 516 views
-
-
நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா October 1, 2018 1 Min Read யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். . தமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்பு…
-
- 0 replies
- 516 views
-
-
2021 ஆம் ஆண்டின், துணிச்சல் மிக்க ரனித்தாவை, மன்னார் கௌரவித்தது! April 17, 2021 துணிச்சல் மிக்க பெண்ணிற்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு. 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்ணிற்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17.04.21) மாலை 3 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில், மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செய்யல்லப்பட்டார். …
-
- 2 replies
- 514 views
-
-
சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று! சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று(புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையானது, புலம்பெயர்வோருக்கான தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு முன்னரே அவர்களுக்கான சமவாயத்தை 1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பிரகடனப்படுத்தியது விசேட அம்சமாகும். இந்த சர்வதேச சமவாயத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர…
-
- 0 replies
- 514 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இன்று 21.09.2014 பிரான்ஸ் தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார். காலம்: 21.09.2014 இடம்: 4-6 place de la République, 93100 Montreuil Métro: Robespierre (ligne 9) sorti : Rue Barbés நேரம்: 14.00 - 15.00 தொடர்புகளுக்கு: 07 52 53 48 92 (Facebook)
-
- 0 replies
- 509 views
-
-
-எம்.றொசாந்த் நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவம், செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளததாக, கோவில் அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம், நாளை மறுதினம் (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது. இதன்போது, நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (08) காலை அவசரமாக கூடிய கோவில் அறங்காவலர் சபையினர், மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்துள்ளதாக அறிவித்துள்ளனர். Tamilmirror Online || நயினாதீவு திருவிழா பிற்போடப்பட்டது
-
- 0 replies
- 509 views
-
-
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போர் புரிந்து விதையாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுத் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்,கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் முதல் களப்பலியான பெண்போராளி 2வது லெப். மாலதி ஆகியோரின் நினைவுதாங்கிய 26 வது ஆண்டு http://www.sankathi24.com/news/33288/64//d,fullart.aspx
-
- 0 replies
- 507 views
-
-
கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு! உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் ரொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. "கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்து கொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்…
-
- 0 replies
- 507 views
-
-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுச் சிறப்பாக இடம்பெற்றது. https://newuthayan.com/story/16/ஒட்டுசுட்டான்-தான்தோன்ற.html
-
- 0 replies
- 505 views
-
-
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பண்டகசாலை திறப்பு விழா மற்றும் ஆலய சுற்றுக்கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழா, அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆலயத் தலைவர் க.வடிவேல் தலைமையில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களான எம்.காளிதாசன், ஆர். ஜெகநாதன் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் தலைவர்கள் ஆலய தலைவர்கள் கும்பாபிசேக குழுவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அ…
-
- 2 replies
- 503 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள் 32 Views ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 502 views
-
-
யாழ் இந்துக் கல்லூரியின் செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி November 30, 2018 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செயன்முறை தொழினுட்ப மன்றத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி கல்லூரி அதிபர் தலைமையில் 30.11.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அயற் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் பல்வேறு துறை சார் புத்தாக்கங்கள் வெளிக்கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை மன்ற பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். http://globaltamilnew…
-
- 0 replies
- 501 views
-
-
ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம். இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. http://www.sankathi24.com/news/37385/64//d,fullart.aspx
-
- 0 replies
- 500 views
-
-
எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான…
-
- 1 reply
- 500 views
-