நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
தெல்லிப்பளை.. துர்க்கை அம்மன் ஆலய, தேரோட்டம் இன்று! வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து துர்க்கை அம்மன் உள் வீதியுலா வந்து 9 மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்ர்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2022/1298099
-
- 2 replies
- 345 views
-
-
15/06/2024 அன்று என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நண்பர் [பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்] மற்றும் கட்டிட பொறியாளர் 'திரு கந்தையா ஈஸ்வரன்' ஆகியோரின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரின் இறுதிக்கிரிகைகள் ஜூன் 20, வியாழன் அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue L3R 5G1, Toronto, Canada தொலைபேசி 905 305 8508. காலை 10.00 மணி முதல் மதியம் 1,30 மணி வரை பார்வையிட்டு, அதே நாளில் மதியம் 2.00 மணிக்கு தகனம் செய்யப்படும் . "திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024] "யாழ் மத்திய கல்லூரியில் ஒன்றாக படித்து பேராதனை பொறியி…
-
- 2 replies
- 341 views
-
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகல…
-
-
- 4 replies
- 340 views
- 1 follower
-
-
நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்..! மறைந்த நகைச்சுவை நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர். அதேவேளை Jaffna Jaguars எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்தி…
-
- 0 replies
- 340 views
-
-
பெருமளவான மக்கள் கலந்து கொண்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல், ஆறு பகுதியாகப் பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காம பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்களாகத் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன.அத்துடன் சீர்பாத பரம்பரையுடன் தொடர்புபட்டதாகவும் ஆலய வரலாறுகள் கூறுகின்றன. கதிர…
-
- 0 replies
- 338 views
-
-
இரணைமடு குளத்தின் 101 ஆவது ஆண்டு நிறைவில் 101 பாணைகளில் பொங்கல் கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட நீர்ப்பாசன…
-
- 0 replies
- 337 views
-
-
நயினாதீவு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின்... திருவிழா ஆரம்பம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன. https://athavannews.com/2022/1289022
-
- 0 replies
- 330 views
-
-
மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாம…
-
-
- 2 replies
- 326 views
-
-
கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின்... சிலை, மட்டக்களப்பில் திறந்து வைப்பு! உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர். உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு க…
-
- 0 replies
- 320 views
-
-
13 APR, 2024 | 03:44 PM குரோதி என்ற பெயரைக் கொண்ட புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.15 மணியளவிலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்றிரவு 9.04 மணியளவிலும் பிறக்கின்றது. 'குரோதி' வருடப்பிறப்பு சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. …
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் ! தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. htt…
-
- 0 replies
- 314 views
-
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி…
-
-
- 3 replies
- 311 views
- 1 follower
-
-
ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா! December 9, 2024 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த. கலைச்செல்வனிடம் கற்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய த. கல…
-
- 0 replies
- 310 views
-
-
குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !! 1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்…
-
- 0 replies
- 309 views
-
-
"உங்கள் சிறப்பு நாளில் எங்கள் அன்பான மகளுக்கு" / "To Our Dearest Daughter on Your Special Day" [12 / 07/ 2024] [இங்கு, நாட்டிய உடை முழுவதும் தாயின் சேலையில் இருந்து தைத்ததுடன், இந்த பிரத்தியேக ஆட்டம் தாய்க்கு அர்ப்பணிக்கப் பட்டதும் ஆகும் / Here dance dress is completely made out from mother’s sari and dance is dedicated for MOTHER] "ஜூலை பன்னிரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய மகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும் மகிழ்வான புன…
-
- 0 replies
- 307 views
-
-
பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். இதன்போது பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் .வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1301854
-
- 0 replies
- 304 views
-
-
“On the day of this Independence Day (04/02/2025)" On this day of freedom bright, I searched for truth in morning light. Independence—what does it mean? A land unchained, a soul serene? Self-rule, they say, self-sufficiency, Freedom, liberty—words of potency. Yet echoes rise in silent air, Are we truly free and fair? Seventy-seven long years have passed, Since colonial chains were cast. Yet do our women walk unafraid, From cruelty’s grasp and justice delayed? Do our children laugh and play, Safe from shadows where dangers lay? Do scholars climb the heights they dream, Or sink beneath a broken scheme? Cast…
-
- 0 replies
- 297 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்... “ குமார வாசல்” கோபுர, கலாசாபிசேகம்! வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்திற்கு உட்புறமாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட “குபேர திக்கு, குமார வாசல்” கோபுர கலாசாபிசேகம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவமாகும். காலை, இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக பெருமான் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து கோபுர கலாசாபிசேகம் இடம்பெற்றது. அதன்போது பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானை தரிசி…
-
- 0 replies
- 292 views
-
-
சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது சர்வதேச சமூக நீதிக்கான தினம் மற்றும் தாய்மொழி தின நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கலந்து கொண்டார். இலங்கையில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழிகளை கற்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பாகவும் தேர்தலில் பெண்களின் வகிபாகம் தொடர்பாக அவர் இதன்போது விளக்கமளித்திருந்தார். இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, உதவி அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேசசெயலாளர் கமலதாஸ், செட்டிக்குள…
-
- 0 replies
- 291 views
-
-
நல்லூர் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா பூஜைகள் தொடர்பான அட்டவணை வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இது ஆடி அமாவாசைக்கு அடுத்த 06ம் நாள் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா விசாக்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமங்கள் இன்றி வருகை தருவதற்கும் இலங்கை அரசாங்கம் தடைகளை தளர்த்தியுள்ளது. இந்த நிலையில் பெருமளவான மக்கள் நல்லூர் கந்தன் தரிசனத்திற்கு வருகைத் தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நாளை ஆரம்பமாகியுள்ள மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலை…
-
- 0 replies
- 288 views
-
-
'தைப்பொங்கல் 2025' 'புதிய கதிரவன் காலையில் உதிக்க அன்பும் அமைதியும் நெஞ்சில் மலர நெல் விளைந்து செழிப்புத் தர நாடும் நலமும் மகிழ்ந்து கொண்டாட குடும்பம் ஒன்றுகூடி உவகை அடைய தமிழர் திருநாள் பொங்கி இனிக்கட்டும்! 'May this Pongal bring joy anew, Golden harvests and skies so blue. Rice and milk in the pot overflow, Prosperity and love in your life grow. Happy Thaipongal to you and your kin, Let peace and happiness begin!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 283 views
-
-
கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு ! By Shayithan.S (அஷ்ரப் ஏ சமத்) மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இலக்கிய நட்புடன் பழகியவரும் கவிஞருமான ஜெயபாலனுடன் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்தாா். அவருடன் கொழும்பில் உள்ள தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் எழுத்தளாா்கள் நட்புறவுச் சந்திப்பு நிகழ்வு ஒன்று நேற்று (22) வியாழக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள தாருஸ்ஸலாம் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா், மற்றும் கவிஞா் டொக்டா் தாசீம் அகமத், மேமன் கவி, கவிஞா் ஹசீர், கின…
-
- 0 replies
- 282 views
-
-
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://at…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
யாழில். இடம்பெற்ற முத்தமிழ் விழா !! யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு முப்பெருந்தமிழ் விழா இடம்பெற்றது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நேற்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது. https://athavanne…
-
- 0 replies
- 280 views
-