நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது. தைப்பூசத் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது கதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா | Virakesari.lk
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 85 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும், கீழை இந்தோ ஐரோப்பிய மொழியில் ஜன்-ஜன(Jana) எனும் சொல்லும் மூலமொழி தமிழிலிருந்து தோன்றிய வரலாற்றினை விளக்குகிறார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST) அம…
-
- 0 replies
- 535 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்முறை நடைபெறாது – குரு முதல்வர் 11 Views கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை – இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை…
-
- 1 reply
- 638 views
-
-
இரணைமடு குளத்தின் 101 ஆவது ஆண்டு நிறைவில் 101 பாணைகளில் பொங்கல் கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 101 ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட நீர்ப்பாசன…
-
- 0 replies
- 330 views
-
-
11ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11ம் திகதி வடக்குகிழக்கில் முழுமையான ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. https://thinakkural.lk/article/103812
-
- 3 replies
- 499 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்! 17 Views ‘ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்’ எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊடக அறிக்கையில், “சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படை…
-
- 0 replies
- 433 views
-
-
சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வு பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்…
-
- 0 replies
- 583 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள் 32 Views ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 502 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 92 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரையாற்றவுள்ளார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: …
-
- 0 replies
- 471 views
-
-
வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு.! வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார். https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/95259/
-
- 0 replies
- 484 views
-
-
கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன் தரும் விதைகள் கிளிநொச்சி நிலத்தில் .. கிளி மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை கிளிநொச்சி பிரதேசங்கள் எங்கும் நடும் திட்டமாகும். இத்திட்டமானது கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. "உன் தலைமுறைக்காக ஒரு மரம் நடு.." "அடுத்த தலைமுறைக்காக ஒரு விதை நடு.." கட்டம் 1 – 24/10/2020, வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசங்களில் 10,000 பனம் விதைகள் நடும் நிகழ்வு இடம்பெறுகிறது . http://kilipeople.org/கற்பகா-திட்டம்-ஒரு-மில்ல/
-
- 4 replies
- 1.1k views
-
-
யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படம் வெளியீடு ! December 7, 2020 ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகள் பற்றிய ஆவணப்படத்தின் இறுவட்டு வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள யோகர் சுவாமி சாமாதி ஆலயத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா ஆவணப்படத்தை வெளியிட்டு வைக்க, சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாதன் சுவாமி ஆகியோர் இறுவட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். மு.சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும், இ.தனஞ்சயனின் எழுத்து மற்றும் இயக்கத்திலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. #…
-
- 1 reply
- 580 views
-
-
திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை
-
- 0 replies
- 458 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 5 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 28.11.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘உல்’ என்பது ஓர் பழந்தமிழ் வேர்ச்சொல். இதற்குச் ‘சுற்றுதல், சுழல்தல், உருள்தல்’ என்பன வேர்ப்பொருள்கள். ‘உல் -> உர் -> உருள் -> உருளை’, ‘உருளை -> உருடை’ என்ற சக்கரம் குறிக்கும் சொற்கள் வரலாறும் இவ்வேரிலிருந்துதான் உருவாகின. தமிழில் சக்கரத்தினைக் குறித்த சொல் பிறகு அச் சக்கரத்தினை உடைய வண்டியினையும் குறித்துள்ளது. ‘உருடை’ என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் ‘ரோட’ என்று திரிந்துள்ளது. இலத்தீனில், ‘r…
-
- 0 replies
- 436 views
-
-
சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்தது - தேவஸ்தானம் தகவல் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதுபோக பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலையில் பூஜை வழிபாடு கட்டணம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:- …
-
- 0 replies
- 473 views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
ரவிராஜின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு.! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் இடம்பெற்றது. அமரர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வினை சுமந்திரன் அணியினர் காலை 9 மணிக்கும் சசிகலா ரவிராஜ் தலைமையிலான அணியினர் 9.30 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியிருந்தனர். ஏட்டிக்குப் போட்டியாக குறித்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றமை குறி…
-
- 0 replies
- 595 views
-
-
நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் – நீங்களும் இணையலாம்! November 9, 202000 SHARE0 கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப்போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே காணப்படும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஆவணப்படுத்தப்பட தேவையான தங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க முன்வருமாறு க…
-
- 0 replies
- 457 views
-
-
நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் 24 Views சகல ஆலயங்களிலும் நாளை நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாட்களுக்கு, நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மதத்தலைவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்கவேண்டும் என்று நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பில் நல்லை…
-
- 0 replies
- 555 views
-
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு October 24, 2020 Share 14 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 24.10.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘கடு’ என்பது ஓர் பழந்தமிழ்ச் சொல். இச் சொல் பற்றித் தொல்காப்பியர் எழுதியுள்ளார். இச் சொல்லுக்குப் பத்து பொருள்களைக் அவர் குறிப்பிடுகிறார். அப் பத்து பொருள்களில் கூர்மை என்பதும் ஒன்று. இக்’கடு’ என்னும் சொல், ‘கடி’ எனவும் இதே கூர்மை பொருளில் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள்ளது. ட>ர திரிபில் இக்’கடு’ சொல், …
-
- 0 replies
- 546 views
-
-
வித்தியாரம்பம் செய்வதற்கு எதிர்வரும் 26ஆம் திகதியே சிறந்தநாள் – ஐயப்பதாச குருக்கள்! வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தசமியில் வித்யாரம்பம் செய்வது குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்பதனால். நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே, 26ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் செய்யவேண்டும். அட்டமி மற்றும் நவமி திதியில் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட…
-
- 0 replies
- 867 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாடு DicksithOctober 20, 2020 (எம்.ஜி.ஏ நாஸர்)கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.பீடாதிபதி கலாநிதி ஜே. கென்னடி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகல் பிரதம அதிதியாகக் கல…
-
- 0 replies
- 788 views
-
-
உடல் ஆரோக்கியத்திற்காக கிளிநொச்சியில் நடை பவனி.! கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக வழிப்புணர்வுக்குமான நடைபவனியானது, கிளிநொச்சி இந்துக் கல்லூரி தொடக்கம் கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை 9.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணிக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்றலில் ஆரம்பமான நடையானது 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவுப்பெற்றது. முக்கியமாக மாணவர்கள் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள போதை பொருள் பாவணைக்கு எதிரான விழிப்புணர்வு,…
-
- 2 replies
- 744 views
-
-
யாழ்ப்பாணம் அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்
-
- 2 replies
- 824 views
-