Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரே ஒரு பாடல் ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து மென்மையாய் ‘அனுராகினீ... இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்...’ என்று ஸ்பீக்கரில் வழிந்த குரல் படிகளில் இறங்கி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தது. அதனுடன் சேர்ந்து பாடும் மனோகரின் குரலும். சரிதான். மனோகர் இசை மயக்கத்தில் திளைத்திருக்கிறார் போலும் என்று கேட்டைத் திறந்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் படியேறினான் நந்து. மாடியை அடைந்து அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் சற்றே ஆச்சரியமடைந்தான். நவீன் விஜயனும் அங்கு இருந்தார். அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன். “ந…

  2. கலைஞன் பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி ) அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது. மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்…

  3. காதல் போயின் மோதல் இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப் போயிடும்...” காதல் உடைவதற்கு எவ்வளவு எளிமையான ஒரு காரணம். என் கண் முன்னே இன்னொரு ஆளுடன் சுற்றி - தாங்கிக் கொள்ள முடியவில்லை. …

  4. சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகள…

    • 0 replies
    • 1.4k views
  5. முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர், எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது…. வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார். அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை. அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை. அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார். அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது. ஆனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது. …

  6. "விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக…

  7. "சித்தப்பா பூங்கா" தர்ஷன் அருளானந்தன் சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே. விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்க…

  8. Started by நவீனன்,

    நாவல் மரம் சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ம.செ., `அவளை இன்று பார்க்க வேண்டும்' என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப் போன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் தணல் என எரிந்தன. நானும் என் சிந்தையும் சாம்பலாகியும், அவளின் கண்களும், மூக்கின் மச்சமும், பூவரசம் இலையின் நரம்புச் சிரிப்பும், எரியாத விருட்சத்தின் வேராக இன்னும் இன்னும் எனக்குள் இறங்கி வளர்கின்றன. அவளின் நினைவுகள், வளரும் நிலம் என மாறிய என் பொழுதுகளில் யுத்தம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எறிகணைகள் விழுந்து வெடித்த வீதிகளில் ஊரே இடம்பெயர்ந்துகொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், கோயில் கிணற்றில் தண்ணீர…

  9. அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை. ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். அமண்டா ஒரு சோபாவில் காலை நீட்டியபடி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ரொறொன்ரோவின் லொப்லோஸ் சுப்பர்மார்க்கெட்டுக்கு முன்னே அவனை அமண்டா சந்தித்தாள். அவனுக்கு 25 வயது இருக்கும். ஒரு விளம்பரத் துண்டை அவளிடம் நீட்டினான். அசிரத்தையாக அதைப் படித்தபோது அதில் இப்படி எழுதியிருந்தது. ’நான் ஓர் அக…

  10. அமரந்தா - சிறுகதை சிறுகதை: நரன், ஓவியங்கள்: ஸ்யாம் புனே ரயில்வண்டி நிலையத்தில் இரைச்சலும் பரபரப்பும் நிறைந்திருந்தது. வெவ்வேறு வயது, நிறம், தோற்றம், மொழி கொண்ட கலவையான மனிதர்கள் பயணத்திற்காய் ரயில் நிலையம் முழுக்கப் பரவிக்கிடந்தார்கள். நிலையத்தில் அந்த இருவரையும் கடந்து செல்லும் எல்லாமனிதர்களும் விநோதத் தன்மையோடு சில நொடி நேரம் நிலைகுத்திப் பார்த்து, பின் அவர்களிடமிருந்து பார்வையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே கொஞ்சமாய் நரை சிதறியிருந்த முடிகளோடு நாற்பந்தைந்து வயதுப் பெண்ணாய்த் தோற்றமளிக்கும் வயிறு புடைத்த பெண் அமரந்தா ஆறாவது நடை மேடையைத் தேடியபடி மெள்ள நடந்து வந்துகொண்டிருந்தாள். உடன் அந்தப் பெண்ணின் எழுபது சதம்…

  11. வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…

  12. அம்மாவின் கைமணம்! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தானப்பா இருக்கு.. இன்னமும் ஒங்க சித்தப்பா, அத்தைகளுக்கு பத்திரிகை கொடுக்கலையே..'' ""என்னப்பா செய்றது. நேரம் சரியா இருக்கே.. என்னோட ஆபீஸ் ஆட்களுக்கு இன்று கொடுத்து முடிக்கல. தபால்ல அனுப்புவோம்னு சொன்னா கேக்க மாட்டீங்கிறிங்க.. நேர்லதான் போய் கொடுக்கணும்னு சொல்றீங்க.. அதுலயும் நானும் ஒங்க கூட வரணும்ங்கிறீங்க'' ""இல்லப்பா. என்னோட ஒடம்பொறப்புக்களுக்கும் மூணாவது மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி தபால்ல அனுப்புறது சரி இல்லப்பா. நாம எல்லாரும் நேர்ல போய்த் தர்றதுதான் மரியாத..'' ""அப்ப கொஞ்சம் பொறுங்க.. என்னோட வேல…

  13. சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்! சுத்தேசி ரொமான்ஸ் படத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா தற்கொலைக்கு முயல மாட்டேன் ஒருபோதும் - நான். அது கோழைகளின் பேராயுதம். நான் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்வாகனம் எதுவும் வந்து மோதி எனை கொல்லட்டும். * என் பேருந்துப்பயணத்தில்... அதிவேக ஓட்டுநரின் அலட்சியத்தால் அந்த பாலம் பிளந்து பேருந்து சுக்குநூறாகி சிதைந்து அழியட்டும் என்னையும் பலியாக்கி. * நீண்டதூர ரயில் பயணத்தில் நியாயமான கோரிக்கையி…

  14. என்ர நிலமையை முதலாவதா எழுது… XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ…. உங்களைத்தான் இங்காலை வாங்கோ…. அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன். யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு…

    • 0 replies
    • 1k views
  15. அரிசி சோமசந்தரம் மாஸ்ரரின்ர இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்றால் கறுப்போ வெள்ளையோ துணியால முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஒராளைப் போட்டுத்தள்ள வேணும். இல்லையென்றால் இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்றால் கள்ளனுக்கு மரியாதையில்லை. இவன் கள்ளன் இல்லையென்றும் இல்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செலவுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட்டைக் கழற்றிப் போட்டிட்டு ஈசிச் சேரில படுத்து வயித்தைத் தடவிக் குடுத்துக் கொண்டிருப்பார். இவன் பொக்கற்றுக்குள்ளயிருந்து இருபதோ முப்பது ரூபா எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். இன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மா…

  16. மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு! வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும். பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள். 'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந…

  17. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் 18 வயது ‘‘பிறந்த நாள் அதுவுமா ஏன்டா சோகமா இருக்க?” என்ற நண்பனிடம், ‘‘எனக்கு 18 வயசு ஆகிருச்சுடா... இனிமே போலீஸ், கோர்ட் எல்லாம் பார்த்து, ரொம்ப பத்திரமா இருக்கணும்டா” என்றான் முருகன்! - உதயகுமார் ஆசுவாசம் தேர்வு முடிந்ததும் துள்ளிக்குதித்து விளையாடியது, பாடம் சொல்லிக்கொடுத்த அம்மாவின் மனம்! - கி.ரவிக்குமார் இது சத்தியம் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் பகவத் கீதையைக் காட்டி, `‘இதன் மீது ஆணையாக...’’ என சத்தியம் செய்யச் சொன்னார்கள். ‘`நான் இதைப் படித்ததே இல்லையே, பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் கூண்டில் நிற்பவர்! - எம்.ஆர். மூர்த்தி விளம்பரம் …

  18. ஏவல் - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம் ‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கு…

  19. சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை ஆனந்த விகடன் 9.10.1988 இங்கிலாந்து. 1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கே…

  20. "கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேர‌த்துல நடந்துடலாம்" என்ற கோபுவிடம், "விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான். ஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டற‌மாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லா…

  21. பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை ஓவியம்: ஸ்யாம் விறுவிறுவென வீசிக்கொண்டிருந்த ஊதக்காற்றோடு போராடி, திமிலர்கள் கரை நோக்கி திமிலைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சில வங்கங்களும் வல்லங்களும் நாவாய்களும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. பரதவ குலப் பெண்கள் இரவு ஆகாரத்துக்காகப் புளியும் மிளகும் சேர்த்துக் குழம்பு செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே இருளை விரட்ட தீச்சுளுந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. கடலோடிவிட்டு வந்த பரதவர் கைகளில் விரால், கனவா, மத்தி மீன்களும், சிலரிடம் சிவப்பு இறால்களும் நிறைந்திருந்தன. இரை தேடிச் சென்ற குருகுப் பறவை கூட்டங்களும், கடலின் மேற்பரப்பில் நீந்திய மீன்குஞ்சுகளைப் பசியாற உண்டுவிட்டு, புன்னைத் தோப்புக்கு விரைந்துகொண்டிருந்தன. ந…

  22. சுலாப் இன்டர்நேஷனல் - பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: செந்தில் சின்னாரு, தன் அடிவயிறு கனத்திருந்ததை உணர்ந்தாலும், தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்தான். ஆனாலும், அடிவயிற்றின் அலப்பறை தூக்கத்தைக் கலைத்துப்போட்டது. இனியும் தாமதித்தால், டவுசரிலேயே பேர்வாதி முடிந்துவிடும் அபாயத்தை உணர்ந்தவனாக ஓட்டம் பிடித்தான். விவரம் தெரிந்ததில் இருந்து சின்னாருக்கு எப்போது எல்லாம் அடிவயிறு கனத்துவிடுகிறதோ, அப்போது எல்லாம் இப்படித்தான் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கும் சுலாப் இன்டர்நேஷனலுக்கும் டவுசரைப் பிடித்தபடி ஓடுவான். இப்போதும் அப்படித்தான். வீட்டில் இருந்து இருநூறு அடி தூரத்தில் பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. தன் ஜோட்டுக்காரன்கள…

  23. பள்ளத்தாக்கு - அகரமுதல்வன் தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்…

  24. கண்ணாடிப் பந்து - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் “லைஃப்... நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்கு. அதுல ரெண்டு... ரப்பர் பந்துகள். ஒண்ணு... கண்ணாடிப் பந்து. You know what all?” நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட... என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன். `அந்த மூன்று பந்துகள் என்னென்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்... எனக்கு எ திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்…

  25. லவ் ‘‘என்னடா, தரணி! நீ லதாவை ஒன் சைடா லவ் பண்றதா சொன்னே... ஆனா, எப்பவும் ஸ்கூல், படிப்புன்னே சுத்திட்டு இருக்கே? அவ பின்னாடியே சுத்தினாதானே சரியான சமயத்துல ‘ஐ லவ் யூ’ சொல்ல முடியும்?’’ - என் அட்வைஸைக் கேட்டு தரணி ஒன்றுமே சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். நாங்கள் +2 முடித்தபோது தரணி நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது லதா அவள் வகுப்புத் தோழன் ஒருவனைக் காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை தரணியிடம் சொன்னபோதும் சிரிப்புதான் பதில். கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான் தரணி. சில மாதங்களிலேயே கல்யாணப் பத்திரிகையோடு வந்தான். கூடவே லதாவும். அவள்தான் மணப்பெண்ணாம். ‘‘எப்படிடா?’’ - ரகசியமாய்க் கேட்டே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.