கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 839 views
-
-
"என் அன்பு மகளே" "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’யாமே," தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்…
-
- 0 replies
- 523 views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும். வெளியே விளையாடப்போனால் இருட்டிய பின்னர்தான் வீடு திரும்புவான். நான் சொல்வேன் ’இன்று முழுக்க விளையாடியது போதும். இனி படிக்கலாம்.’ ’இப்பவேயா?’ என்பான். ‘இல்லை அடுத்த கிறிஸ்மஸ் வரும்போது’ என்பேன் நான…
-
- 0 replies
- 1.2k views
-
-
"தைரியமானவள்" வவுனியாவில் உள்ள ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும். இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை! "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்…
-
- 0 replies
- 735 views
-
-
மீதமிருக்கும் கனவுகளின் ஈரம் ஜிஃப்ரி ஹாசன் களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன்.…
-
- 0 replies
- 863 views
-
-
அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன் ஓவியங்கள்: ரவி அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற கா…
-
- 0 replies
- 759 views
-
-
------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ---------------------------------------------------- தொடரும்...........................
-
- 0 replies
- 859 views
-
-
டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போக…
-
- 0 replies
- 1k views
-
-
அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை எழில்வரதன் - ஓவியம்: ரமணன் அசையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு. அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத…
-
- 0 replies
- 4k views
-
-
எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
-
- 0 replies
- 596 views
-
-
இரண்டொழிய வேறில்லை “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள். இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?” உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம். “அன்பு பவளம்! இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்! பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும். ஆசை அத்தான்’ செந…
-
- 0 replies
- 954 views
-
-
ஓர் ஊரின் கதை ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா? இருக்கே! நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே! ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு. சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது! இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது. ஓ! எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது! இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக. அவுக ஊர்வழி போறப்ப தூள் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
களவாணி மழை சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
உதிரிப்பூக்கள் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ‘‘மத்தவங்கள்லாம் வரலையா?” - அனுஷா கதவைத் திறந்தவுடன் பிரகாஷ் கேட்டான். ‘‘மொதல்ல உள்ள வா. எல்லாரும் வர்ற நேரம்தான். வந்ததும் வராததுமா ‘எப்படி இருக்கே’னு கேட்கத் தோணுதா உனக்கு?” “எப்படி இருக்கே அனு? பார்த்து ரொம்ப நாளாச்சு.” ‘இப்ப கேளு ட்யூப் லைட்... மர மண்டை’ -நினைத்ததைச் சொல்லாமல் அடக்கிக் கொண்டாள். அவளை சந்தோஷத்துடன் பார்த்தான் பிரகாஷ். ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இன்னமும் கல்லூரிப் பெண்போலத்தான் இருந்தாள். நிறம்கூட கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் மினுமினுப்பாக மாறியிருந்தது. அனுஷாவின் பின்னாலே நடந்து, அவள் சோபாவில் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே இருந்த ஓர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தா…
-
- 0 replies
- 3k views
-
-
ஒரு நிமிடக் கதை உளவியல் உளவியல் உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான். “வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்” – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி. “10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?” –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள். “அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் …
-
- 0 replies
- 2.6k views
-
-
நிபந்தனை ‘‘இந்த வீட்டு லொகேஷனுக்கும் இருக்கிற வசதிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய்கூட வாடகை கொடுக்கலாம். சுவற்றில் ஆணி அடிக்கிற பழக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. நானும் என் மனைவியும் வேலைக்குப் போறதால, குழாய்த் தண்ணீர் அதிகம் செலவாகாது. கரென்ட் யூனிட்டுக்கு நீங்க இரண்டு ரூபாய் அதிகமா வசூலிச்சுக்கலாம். எங்க உறவுக்காரங்க யாரும் இங்க வந்து தங்கமாட்டாங்க. லேட் நைட் வந்து பெல் அடிக்கிற பழக்கமே எங்களுக்கு இல்ல. ஓகேன்னா, இப்பவே ஒரு வருஷ அட்வான்ஸை கொடுத்துடறேன்!’’ - வீட்டுக்காரர் கோபாலிடம் சொல்லி முடித்தான் பாலு.மனைவி காட்டிய சைகையைப் புரிந்துகொண்டு, யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லி பாலுவை…
-
- 0 replies
- 1k views
-
-
கண்கள் திறந்தன! பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், 'இங்க பாருப்பா... நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டார். ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா இல்லாமல், சினேகமாக பழகிய பத்மநாபனை, முரளிக்கு பிடித்து விட்டது. மேலும், அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பது தெரியவர, சந்தோஷமானான். 'எனக்கும் இதெல்லாம் பிடிக்கும் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தச் சுவடுகளின் பின்னால் - அல்லையூர்சி.விஜயன் (இத்தாலி) அவளைப் பார்த்தால் யாரெனத் தோன்றும்! அவளுக்கு வயது பத்து. பார்த்தால் கண்கள் ஏமாந்துதான் விடுகின்றது! உணர்ச்சிகளின் கூட்டு மனித வடிவம். அப்படியாயின் அவள் யார்? வண்ணத்துப் பூச்சியின் காலங்கள் போலவே வாழவேண்டிய வயது! இந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? வீதியிலுள்ள குப்பை கூளங்களையெல்லாம்...... துருவித் துருவி பார்க்கிறாளே! இவள் மனதை யார் துருவுவார்? இவளின்று சோகங்களுக்குச் சொந்தக்காரி...... ஏக்கங்களுக்கு எஜமானி. இவள் வெளிச்சங்களை நிராகரித்தவள் அல்ல...... வெளிச்சம்தான் இவளை நிராகரித்தது! 'மனதுக்கும், நினைவுக்கும் ஒரே பாதை!" நம்புகின்றீர்களா? காற்று வழி வரும் வாசம் மாதிரி..... கால் தூண்டும் இடமெல்லாம் இவளைக் காணலாம். பசிய…
-
- 0 replies
- 1k views
-
-
முடியாட்டம் அஜிதன் கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில் அது வெறும் ’பிராந்தங்கடவு’ என்றானது. இப்போது அதை யாரும் எப்படியும் அழைக்க வேண்டியத் தேவை இல்லை. கொல்லத்தில் படகுச் சேவை நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அருகிலேயே ஐந்து கோடி செலவில் அரசாங்கம் நிர்மானித்த மாபெரும் கான்கிரீட் பாலம் ஒன்று இடைவெளிகள் விழுந்த தன் ராட்சதப் பற்களால் காயலைக் கவ்விப்பிடித்தது போல் குறுக்கே சென்றது. அதில் விரையும் வாகனங்களுக்கும் அவற்றின் பரபரப்புக்கும் தொடர்பே இல்லாதது போல நண்பகலிலும் இறுக்கமான அமைதியில் பிராந்தங்கடவு மூழ…
-
- 0 replies
- 743 views
-
-
அமெரிக்காவிலிருந்து வந்த அத்தான் - லட்சுமி ராஜரத்தினம் ’நாளைக் காலையில் நாம் கொடைக்கானல் கிளம்புகிறோம்; தயாராக இரு.’ ‘உண்மையாகவா?’ இதழ்களை சற்றே விரித்துக் கண்கள் மலர அவளிடம் வசந்தி கேட்டாள். மகிழ்ச்சியில் அவன் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். இரவின் உறக்கம் அவளைக் கொடை ஹில்லின் நினைவுடனேயே தழுவுகிறது. ’என்ன இப்பொழுதே இப்படி நடுங்குகிறாயே? இந்த ஸீஸனில் அவ்வளவு குளிர் கிடையாது. இது செகண்ட் ஸீஸன்..’ ப்ரெஞ்ச் ஸீசன் என்று பெயர்.’ கொடைக்கானல் மலையின் ‘ரிசர்வ்’ செய்யப்பட்ட அறையில் இருவரும் தங்கி இருந்தார்கள். அவளுடன் பேசும் பொழுது, அவளுக்குத் தெரிந்த ஒன்றை விளக்கும் பெருமை அவனிடம் பொங்கி வழிந்தது. எதையும் ச…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: கோலமாவு "இங்க பாருங்க...நீங்க ப்ராடக்ட்டை வாங்கி ஒரு வருஷமாயிட்டுது. ஆமாங்க .... சொன்னோம் ... டேர்ம்ஸ்சை அக்ரீமெண்ட்டுலே பாருங்க .. என்ன ... இல்லையா ... எங்கோ வெச்சுட்டீங்களா .... அதுக்கும் நாங்க தான் பொறுப்புன்னு சொல்லிடப்போறீங்க ... பாருங்க, இது இரு மல்டி நேஷனல் கம்பெனி...வாக்கு கொடுத்தா தவற மாட்டோம். ஒரு வருஷத்திற்கு ஃப்ரீ சர்விஸ் வீட்டுக்கு வந்து செய்து கொடுப்போம்.. . அப்புறம் செய்வது எல்லாம் பெயிட் சர்விஸ் தான். என்ன...உங்களுக்கு வயசாயிடுத்தா.. அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்... யாரையாவது திணைக்கு கூட்டிவாங்க.... நான் கம்பெனி வைஸ் பிரெசிடெண்ட்.... இந்த விஷயமெல்லாம் என் கையி…
-
- 0 replies
- 782 views
-
-
சேற்றுழவு முடிந்ததும், வயலில் பரம்புக் கட்டையை வைத்து பரம்படித்துக்கொண்டிருந்தான் முருகேசன். பரம்படிப்பு இன்றைக்கு முடித்தால்தான், நாளைக்கு நாற்று நடவை ஆரம்பிக்க முடியும். வாய்க்காலில் தண்ணீர் ஓடும் போதே, நடவை முடித்துவிட்டால், தண்ணீர் பிரட்சனை வராதல்லவா..... காளை மாடுகள் இரண்டும் பரம்புத்தடியை இழுத்துச் செல்ல, பரம்புத் தடிமீது ஏறி நின்று கொண்டான் முருகேசன். ஏதோ விமானத்தில் பறப்பது போல் இருந்தது முருகேசனுக்கு. உன்மையில் விமானத்தில் பறக்க ஆசைப்பட்டவன்தான் முருகேசன்....... இயற்பியலின் மீதும், விண்வெளி ஆராய்ச்சியிலும், மிக்க ஈடுபாடு உள்ளவன்தான். அதனாலேயே இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தான், தனது இளங்கலை மற்றும் முதுக…
-
- 0 replies
- 2k views
-
-
ஒருநிமிடக் கதை: டைம்..! அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள். என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் … “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?” காத்திருப்பின் …
-
- 0 replies
- 935 views
-
-
யானை வீட்டுக்காரி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில் சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் …
-
- 0 replies
- 2.7k views
-
-
‘அவனை அழிக்கிறேன் பார்’ சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம். உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை. நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். போலியான ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-