கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
பெய்யெனப் பெய்யும் மழை குமரன் கிருஷ்ணன் முன் குறிப்பு: 1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி. 2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத மனிதர்கள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…
-
- 0 replies
- 994 views
-
-
இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும…
-
- 0 replies
- 627 views
-
-
நிலவிற்குத் தெரியும் தங்கமணி கண்முழித்துப் பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்திலில்லை .அவன் பாத்ரூமில் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.ஆனால் அமைதி கனமாக இருந்தது;முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை.தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப் படியின் முகப்புக்கதவும் திறந்துகிடந்தது.கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்.;மூச்சிறைத்தது அவள் திணறினாள்.. பழைய மரமாடிப்படி சத்தம் ஏற்படுத்தியது.பெரியதாத்தா விழித்துக்கொண் டார். “தங்கமணி..’ மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார். “அவர் அறையில் இல்லை…”தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது. வீடு முழுவத…
-
- 0 replies
- 531 views
-
-
மதுவந்தி - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் கடவுள் ஒரு நாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகிலுள்ள அனைவர் மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கை தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ…. அழகின் அத்தனைத் துளிகளும் ஷ்ரவந்தியின் கண்களில் விழுந்தது. இயக்குநர் ஜோவின் டைரியிலிருந்து... மாலையிலிருந்து ஆறாவது முறையாக, க்யூ நியூஸில் காண்பித்துக்கொண்டிருந்த எனது நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். டி.வி-யில் அந்த இளைஞன் என்னிடம், “டைரக்டர் ஜோவோட பொற்காலம் முடிஞ்சு போச்சுன்னு சொல்ற விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கிறான். சுள்ளென்று வந்த கோபத்தை அடக்க…
-
- 0 replies
- 3.3k views
-
-
சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்! அவர் கடையில்... தொட்டுக் கொள்ள சீனி கொடுப்பார்கள்! . ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை! . ஒரு போர்டு எழுதி போட்டார்! "இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது" . கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்! சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்! . இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்! சீனி கேட்டார்! . முதலாளி சொன்னார்! சீனி கிடையாது! . கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது! . இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்! . அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார் "இனி மேல் தோசைக்கு சீனி கிடை…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 992 views
-
-
டிப்ஸ் தர்மம்! வ ழக்கமாக புதன்கிழமையன்று எனக்கும், மேனேஜருக்கும் ஃபீல்ட் வொர்க் நாள் முழுவதும் இருக்கும். இந்த மேனேஜர் புதியவர். பத்து மணி சுமாருக்கு ஓட்டல் ஒன்றில் இரு வரும் டிபன் சாப்பிட்டோம். பில்லை வைத்த சர்வர் தலையைச் சொறிந்தான். வேறென்ன, டிப்ஸ் வேண்டுகோள்தான்! பர்ஸை எடுத்த என்னைத் தடுத்த மேனேஜர், ‘‘என்னப்பா... சம்பளம் வாங்கா மலா வேலை செய்யறே? போ, போ!’’ என மறுத்து விட்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் ஜஸ்ட் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விஷயங்களில் இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது எனக்கு. இருந்தும் என்ன செய்வது... ஒன்றும் சொல்ல முடியாது. மேனேஜராச்சே! மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு ஓட்டல். சொல்லிவைத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
பார்ட் டைம் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ வேன், மினி லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கடையில் ஒரு பக்கமாக உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. கனஜோராக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்தால், ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் போலிருந்தது.…
-
- 0 replies
- 1k views
-
-
சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன். குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறுதுளை – தர்மு பிரசாத் 1 திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும் சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உச்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வறண்ட தொனியில் இருந்தது. திருவின் அம்மா தனபாக்கியம் வீட்டை ஒட்டி நீண்டிருந்த வெளிக்குந்தில் அமர்ந்திருந்தார். படலையிலிருந்து கூப்பிட்டதைக் கேட்காமல் சூடை மீனை வயிற்றுப் பக்கமாகக் கீறி, நீரிலிட்டு அலசிச் சுத்தம் செய்வதைப் பார்த்த மொறீஸுக்கு கடும் சினம் வந்தது. பொறுமையிழந்த மொறீஸ…
-
- 0 replies
- 1k views
-
-
இரவில் ஊருக்கு வந்தவன் - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் நான் பாலு வீட்டு முன்பு காரில் இருந்து இறங்கியபோது, இரவு மணி மூன்று. காவிரியில் குளித்துவிட்டு, பாதங்களில் நீர் சொட்டச் சொட்ட எத்தனையோ காலைகளில் நான் நடந்த ஊருக்கு, நண்பர்களுடன் ஆயிரமாயிரம் கதைகள் பேசிச் சிரித்துத் திரிந்த ஊருக்கு, ஒரு திருடன்போல் இரவில் வந்து இறங்கியிருக்கிறேன். விடிவதற்குள் வந்த வேலையை முடித்துக்கொண்டு, யார் கண்ணிலும் படாமல் கிளம்ப வேண்டும். நான் கார் கதவை அடித்துச் சாத்தியபோது, இரண்டு மூன்று தெரு நாய்கள் என்னைப் பார்த்துப் பலவீனமாகக் குரைத்துவிட்டு ஓய்ந்தன. சாலையோரச் சாக்கடையில் இருந்து தவளைகளின் கொர்... கொர்... சத்தம். புதிதாக பெயின்ட் அடித்திருந்த சிவ…
-
- 0 replies
- 9.6k views
-
-
யார் ஏழை ❓❓❓��? ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗ சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் �வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗ இதில் யார் பணக்காரர்...❓ 3'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் …
-
- 0 replies
- 622 views
-
-
ஆடாத நடனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வரும் செல் அழைப்பு எரிச்சல் ஊட்டுகிறது. கதிர்கதறிக் கொண்டிருந்த செல்லின் வால்யூமை குறைத்தான். எதிர் சுவரில் மணி பார்த்தான். “ஆறு”. இந்த அதிகாலையில் அழைப்பது யார்? குன்றத்தில் இருந்து மோகன். சோம்பலாக எடுத்து “சொல்டா..” என்றான் ஒரு சின்ன மௌனத்தின் பின் மோ கன்விசும்புவது தெரிந்தது. “கதிரு….சித்தப்பு இறந்துட்டாப்ளடா..” என்றான். ஒருகணம் தலை சுற்றுவது போல இருந்தது கதிருக்கு. சித்தப்புவின் சிரித்தமுகம் நிழலாடியது. நாக்கு லேசாய்க் குழறியது. “என்னடா சொல்றே..? எப்படா..?” “ கதிரு. . . ரூம்லேருந்து ரெண்டு நாளா இறங்கிவரவே இல்லையாம். ஏதும் உடம்புக்கு முடியலையான்னு கேக்க நேத்து நைட்டு நம்ம டீக்கடை பன்னீரு பார்த்துருக்காரு. கதவு அடை…
-
- 0 replies
- 926 views
-
-
அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன் ஓவியங்கள் : செந்தில் சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன். நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை. அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிற…
-
- 0 replies
- 1.8k views
-
-
சுஜாதாவின் நகைச்சுவை சிறுகதை... சிரிக்க விரும்பினால் மட்டும் படிங்க.. சுஜாதாவினை தமிழ் இலக்கிய உலகம் இழந்த நாள் இன்று....தமிழ் உரைநடையில் ஒரு புலிப்பாய்ச்சலை நிகழ்த்திய அந்த மனிதனின் நினைவாக... ------------------------------------------------------------------------------------------------------------------------------------ 'அன்புள்ள டாக்டர் ராகவானந்தம், உங்கள் 16௮௭3 தேதியிட்ட விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்ட முறைப்படி தானியங்கும் ஊர்தியன்றைத் தயாரிப்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் நம்புவதால் உங்கள் விண்ணப்பத்தை ஏற்பதற்கில்லை. இக் கடிதம் உங்கள் 17௮௭3 தேதியிட்ட ஞாபகக் கடிதத்தையும் தீர்வு செய்கி…
-
- 0 replies
- 869 views
-
-
கட்சிக்காரன் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய் தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்துக் கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறீங்க?” என்று கேட்டாள். “துண்டு.” “வேட்டி சட்டதான் போட்ட…
-
- 0 replies
- 2.7k views
-
-
திருக்கார்த்தியல் - சிறுகதை இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது. செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம்,…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. அ+ அ- சத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி. "என்ன ஐபிஎல்தானே..” என்று கேட்டபடி , ரிமோட்டைப்பிடுங்கி "படக்" என்று தொலைக்காட்சியை நிறுத்தினார். "தண்ணீருக்கு போறாடறாங்க , விளையாட்டு இப்ப கேக்குதா?" அய்யப்பனுக்கு வேண்டுதல் போல் கறுப்பு வேட்டி , கறுப்புச்சட்டை. அவர் கைகளில் கறுப்புப்புடவை. "இந்தா, இத கட்டிக்கிட்டு வாக் போகலாம் புறப்படு" மனைவி நடக்க , சகாக்களுடன் மரத்தின் நிழலில் அம…
-
- 0 replies
- 1.1k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ரேட்டிங் அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை. - எஸ்.ராமன் ரகசியம் `இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா. - கே.சதீஷ் பணம் ``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ். - சி.சாமிநாதன் தயவு ``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன். - டி.ஏ.சி.பிரகாஷ் ஹீரோயின் கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர். - பெ.பாண்டியன் எச்சரிக்கை ``அந்த ஆன்ட்டியோட மிய…
-
- 0 replies
- 686 views
-
-
அப்பா ‘‘பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...’’ கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி. அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘அப்பாவால இப்ப வரமுடியாது செல்லம்... அம்மாவை கூட்டிட்டு போ’’ தொய்வான குரலில் கதிரவன் சொல்லச் சொல்ல அணுகுண்டின் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு கதற…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு நிமிடக் கதை பழக்கம் ‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோஸ்ராடாமஸ்.... 1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது …
-
- 0 replies
- 10.6k views
-
-
ஈழத்து பிரபல சிறுகதை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் சிறுகதைகள்..எல்லாவற்றையும் இந்த ipaper மு்றையில் தொகுக்க பட்டிருக்கிறது ..விரும்பியளவில் பெருப்பித்தும் விரும்பிய பக்கங்களையும் பார்க்க கூடியதாயுள்ளது http://sinnakuddy.blogspot.com/2009/01/ipaper.html
-
- 0 replies
- 869 views
-
-
ஒரு நிமிடக் கதை: குறையொன்றுமில்லை டாக்டர் அழைக்க, உள்ளே நுழைந்த பகவதியம்மாவுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். “சொல்லுங்கம்மா..! இன்னைக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை ..?” டாக்டரின் கிண்டல் புரிந்தாலும் பொருட் படுத்தாமல், “டாக்டர்..! எனக்கு ரெண்டு நாளாவே யூரின் சரியா போகலை. நிறமும் மஞ்சளா இருக்கு. மஞ்சள் காமாலையா இருக்குமோ..?” என்றார் பகவதியம்மா. “இது வெயில் காலம்.. நிறைய தண்ணி குடிங்க.. உஷ்ணத்துக்கே யூரின் மஞ்சளாத்தான் போகும்..” என்று டாக்டர் சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டார். டெஸ்ட் எடுக்கச் சொல்லி பார்த்து விட்டுத்தான் போவார். பகவதியம்மாவை ஆறு மாதமாகத்தான் டாக்டருக்கு…
-
- 0 replies
- 819 views
-