கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…
-
- 0 replies
- 978 views
-
-
இனி, மின்மினி -புதிய க்ரைம் தொடர் ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம் நியூயார்க் நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொ…
-
- 15 replies
- 5.4k views
-
-
ஆத்மராகம் - சிறுகதை சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம் மஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின. அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன். ``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள். ``வேலைக்கா?’’ என்றேன். ``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் விசாரிப்பு பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
அவ மனசு அப்படி! புயலுக்குப் பின் அமைதி என்பார்களே... அப்படி இருந்தது வீடு. மேஜை மேல் இருக்கும் டிபன் பாக்சையும், குடையையும் எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள், சாதனா. உடம்பெல்லாம் ஆத்திரத்தில் அதிர, அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். 'இவளை என்ன செய்தால் தகும்' என்பது மாதிரி அவன் மனசு தகித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவளை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டான். எதிர்த்து பேசாதது, பெரியவர்களுக்கு மரியாதை தருவது, என்ன கோபம் வந்தாலும் அதிர்ந்து கத்தாமல…
-
- 0 replies
- 728 views
-
-
குடை - க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது சொன்னால் அன்று குளிர். அது குளிர் என்றால் சூடு. இந்த நிழல் தோற்றம் கூட சுவையானது. மனதை மப்பும் மந்தாரமுமான ஓர் வெளிக்குள் இழுத்துச் சென்றுவிடும். மனித நடமாட்டங்களை இருள் நிறத்துள் பார்க்கும்போது ஓர் மத்திய காலச் சுவாசிப்புக்குள் நான் நுழைந்துவிடுவதுண்டு. என்றும்போல வீதியில் நிறைய அசைவுகள். திடீரென மழை பெய்யத்தொடங்கியது. "அசிங்கமான காலம்" என மழையைத் திட்டியபடி பலர் என்னைக் கடந்து …
-
- 0 replies
- 1.7k views
-
-
குள்ளன் பினு - சிறுகதை சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன் 11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான். பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
குயில்களும் கழுகுகளும் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்... டி.எம்.செளந்தரராஜ னுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். ‘‘சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க...’’ பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை...’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான ஸோலோ பேங்கோஸ் அசத்தலை ஜேம்ஸ், முழங்கால்களுக்கிடையே இடுக்கிய தன் தோல் வாத்தியத்தில் வாசித்து அனைவரிடமும் அப்ளாஸ் வாங்குவான். ‘மதன மாளிகையில்...’ பேங்கோஸ் த…
-
- 1 reply
- 1.3k views
-
-
'எதுவும் தெரியாது!' உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன். சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி. அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா? மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது. கையில் காபியுடன் வந்தாள் ஜானகி. ''எனக்கு வேண்டாம்; எடுத்துட்டு போ...'' ''நீங்க என்ன சின்ன குழந்தையா... எதுக்கு தேவையில்லாமல் கோபப்படறீங்க?'' ''ஆமாம்... எனக்கு எதுவும் தெரியாது. இந்த குடும…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனசும் மனசும் வெளியே அடித்த வெயில் பார்வதியின் அறைக்குள்ளும் லேசாய் எட்டிப் பார்த்தது. உள்ளே வந்த கௌரி ஓடிக் கொண்டிருந்த ஃபேனின் அளவைக் கூட்டினாள். பிறகு கொஞ்சம் கஷ்டப்பட்டு படுக்கையிலிருந்து பார்வதியை நிமிர்த்தினாள். உட்கார வைத்து ஒரு கையில் தாங்கி பிடித்துக் கொண்டாள். கௌரி பார்வதியின் முதுகை உற்றுப் பார்த்தாள். ஆங்காங்கே சிவப்பாய் தெரிந்தது. மெல்ல அந்த இடங்களில் பவுடரைத் தூவினாள். விரல்களால் மெதுவாய் தேய்த்த போது வந்த எரிச்சலில் பார்வதியின் முகத்தில் இருந்த ரேகைகள் நெளிந்தது. "ஒண்ணுமில்லம்மா.. எல்லாம் சரியாயிடும்..'' என்று கௌரி ஆறுதலும் சொன்னாள். அப்படியே பார்வதியிடம் அந்த விஷயத்தையும் சொன்னாள்:…
-
- 1 reply
- 881 views
-
-
சிந்தனை செய் மனமே! விமான நிலைய லவுஞ்சில் மெதுவாக நடை போட்டுக் கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தான் மூர்த்தி. காயத்ரி மாதிரி இருக்கிறதே?. அவளே தானா? பக்க வாட்டில் அவள் முகத்தைப் பார்த்த போது சந்தேகமாக இருந்தது. டேபிள் ஃபேன் திரும்புவது போல மெதுவாக முகத்தைத் திருப்பினாள். அவள் முகம் பிரகாசமாய்ப் பளிச்சிட்டது. காயத்ரி தான் அவள். செதுக்கிய மாதிரி இருக்கும் அந்த மூக்கும் அளவான நெற்றியும் அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? எவ்வளவு நாட்கள் காவிரிக் கரையில் எட்ட நின்று அந்த அழகை ஆராதித்திருக்கிறான். அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நாலு வயது பையன். அவன் உடை வெளி நாட்டு ஸ்டைலில் இருந்தது. முதுகில் "புசு புசு'வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒருநிமிடக் கதை : தலையைச் சுத்தி ஒரு மொட்டை! உடல் தேறி, ஆபீசுக்குப்போகப்போவதாகச் சொன்னதும் மகிழ்ந்த மீனாட்சி, மகன் கால்களில் செருப்புடன் தலை முடி வெட்டக் கிளம்பியதும் திடுக்கிட்டாள். இப்போதுதான் செந்தில் உடல் நலம் தேறி நடமாடத்தொடங்கி இருந்தான். அவன் பார்த்துப்பான் என்று கை விரித்து டாக்டர் சொன்னபோது ஒருநிமிடம் மூச்சு நின்றுபோய்தான் வந்தது அவளுக்கு. டாக்டர்…டாக்டர் என்று பின்னால் ஓடிப்போயும் கிடைக்காத பதிலால் சிறிது நேரம் திகைத்து , ஒரு... ஒருரூபாய் காயினை மஞ்சள் துணியில் முடிந்து “அப்பா, வெங்கடாசலபதி பெருமானே, நீதான் துணை. நல்ல படியா புள்ள ப…
-
- 1 reply
- 4.3k views
-
-
வெட்டுக்கத்தி - சிறுகதை குமாரநந்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் அவர்கள் வெகுநேரம் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெயில் மிதமாக இருந்தது. காலை நேரத்தின் அடையாளமாய் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கறிக்கடையைத் திரும்பவும் நோட்டமிட்டார்கள். இளைஞன் ஒருவன் கறி வெட்டிக்கொண்டிருந்தான். மெள்ள கடைப் பக்கம் நகர்ந்து சைகை காட்டினார்கள். அந்த இளைஞன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு ‘காசு கொடு’ என்பது போலக் கையை நீட்டினான். வந்த இருவரில் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவன் உள் பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். இளைஞன் பணத்தை வாங்கி, கறி வெட்டும் கட்டைக்கு அப்பால் இருந்த பெட்டியில் வ…
-
- 1 reply
- 2k views
-
-
அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை ஓவியங்கள் : ரமணன் வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து ம…
-
- 0 replies
- 638 views
-
-
அவளது வீடு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பி…
-
- 2 replies
- 4k views
-
-
வேட்டை - வா.மு.கோமு உச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது. ‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்ல…
-
- 0 replies
- 2.1k views
-
-
தண்டனை! அதிகாலை ஐந்து மணி- முகத்தைக் கழுவி, துடைத்த துண்டை தோளில் போட்டபடி, பழைய சைக்கிளை வெளியே எடுத்தான் ரத்தினம். கட்டடம் கட்டும் மேஸ்திரி அவன். சத்தம் கேட்டு விழித்துக்கொண்டாள், அழகேஸ்வரி. ''யோவ்... நாழி வளத்தாம சீக்கிரம் போயிட்டு வா... வேல நிறைய கிடக்கு,'' பதிலுக்குத் தலையை அசைத்தபடி மெதுவாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 10 நிமிடத்தில் மெயின் ரோட்டிலிருக்கும் அரச மரத்தடி டீக்கடையை வந்தடைந்தான். அப்போது தான் பாய்லரை பற்ற வைத்து, முதல் குவளை டீயை ஆத்தி முடித்தான் கடை மாஸ்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
துறவு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார். காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று... பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார். பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார். வழியிலி…
-
- 3 replies
- 1.2k views
-
-
டெரரிஸ்ட் - சிறுகதை ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி 20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடை…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..! சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து, அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும். சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வ…
-
- 0 replies
- 909 views
-
-
தாய்மையே வெல்லும்! "அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். "நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள். வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள். "ரயில் எப்ப வரும்?'' "வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்'' இத்தகைய …
-
- 0 replies
- 666 views
-
-
முகம் - போகன் சங்கர் நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான். “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’ “சூலி வாதைன்னா?” “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.” “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர். “யார் கொன்னது?” “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...” “எப்போ ந…
-
- 1 reply
- 1.9k views
-
-
துபாய் ரிட்டர்ன் அதிகாலை வந்த குறுஞ்சேதி. “மச்சி இன்று துபாயிலிருந்து சென்னை வருகிறேன். மாலை 8 மணிக்கு வந்துருவேன்...” படித்தபின் அதற்கேற்றவாறு எல்லா வேலைகளையும் முன்னதாக முடித்துவிட்டு மதிய அலைச்சலுக்குப்பின் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு மாலை 6 மணிக்கு எழுந்து பார்க்கையில் 7 மிஸ்டு கால்கள். பெரும்பாலும் அறிமுகமில்லாத எண்களின் கால்களை எடுப்பதில்லை. சரமாரியான மார்க்கெட்டிங் கால்கள் தொந்தரவின் உச்சம். தெரிந்த எண்களுக்கு மட்டும் பதிலளித்து பேசிவிட்டு குமரகம் டீக்கடையில் தஞ்சம். நான்கு ரோடும் வெட்டிக்கொள்ளும் கார்னர் அது. ஹாரன் சத்தங்கள் நொடிக்கொரு முறை காதைப் பிளக்கும். இருந்தாலும் பீட்டர் அண்ணனின் ஸ்ட்ராங்கான இஞ்சி டீக்காக எதையும் பொறுத்துக் …
-
- 2 replies
- 949 views
-
-
தாண்டி வா பெண்ணே! வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின. ''வேலை முடிஞ்சுதா கல்பனா?'' அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான். ''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள். ''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.'' ''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'…
-
- 1 reply
- 887 views
-
-
லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு! விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கு…
-
- 7 replies
- 2.7k views
-