கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
தமயந்தியைத் தேடுகிறேன். அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை . யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகள…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் ஃபிகராம் ஃபீகர்! ப் ளஸ் டூ படிக்கிற தன் மகன் சுரேஷ§க்கு டெர்ம் ஃபீஸ் கட்டிவிட்டு வெளியே வந்தார் பாஸ்கரன். மாணவி கள் மார்போடு ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
வேலைக்காரி – சிறுகதை அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன். `இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன். `எந்த ஊர…
-
- 2 replies
- 15.8k views
-
-
ஆபரேஷன் புலி - சிறுகதை மூன்று காரணங்களுக்காக, எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவது என நாங்கள் முடிவெடுத்தோம். ஒன்று, புலி எந்த நேரமும் முழு போதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே இருப்பது. இரண்டு, புலி முழு போதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது. மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பறை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு, தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்வது. இது அப்பட்டமான ரெளடித்தனம்; பகல் கொள்ளை. எங்கள் தெரு, பேருந்துநிலையத்…
-
- 0 replies
- 2.6k views
-
-
இல் அறம் வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் ப…
-
- 4 replies
- 2.5k views
-
-
சாமர்த்தியம் ‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான். பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’ ‘‘இல்லடி... இது அவருக்கான அளவு.…
-
- 1 reply
- 1.7k views
-
-
சுவருக்குள்ளே மறையும் படுக்கை! சுவருக்குள்ளே மறையும் படுக்கை! அ.முத்துலிங்கம் எ ல்லாமே விசித்திரமாக இருந்தது. கனடா விமான நிலையத்தில் அவரை அழைத்துப் போக மகன் வரவில்லை; மருமகள்தான் வந்திருந்தாள். மகன் வராததற்கு அவள் சொன்ன காரணமும் நம்ப முடியாததாக இருந்தது.கம்பெனி விஷயமாக அவசரமாக அடுத்த மாநிலம் போக வேண்டி இருந்ததாம். நாளை காலை வந்துவிடுவானாம். …
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் "சொல்லச் சொல்ல இனிக்குதடா - முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை...' அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்த பாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். "முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று...'' "வாங்க சார் !''- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. "என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?'' ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கயிறு! இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. தேனீர் கடையில் உட்கார்ந்திருந்த இருவர், அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து எழுந்து, நடந்தான், ரகு. அவர்களும் அவனை பின் தொடர்ந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல், எதிரே இருந்த பெட்டிக் கடையில், பீடி வாங்கி பற்ற வைத்தபடி, கடைக்காரரிடம் பத்மினிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
மூன்றாம் திருநாள்! மூன்றாம் திருநாள்! சி.முருகேஷ் பாபு ‘‘அ வனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்…
-
- 1 reply
- 1k views
-
-
நான்காம் தோட்டா - சிறுகதை “பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை. டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி. ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி க…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.1k views
-
-
திருக்கார்த்தியல் - சிறுகதை இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது. செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம்,…
-
- 0 replies
- 2.9k views
-
-
கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! ம.காமுத்துரை ‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாச…
-
- 1 reply
- 915 views
-
-
. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு ப…
-
- 0 replies
- 923 views
-
-
அந்திமத் தேடல் செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. என்னுடைய வயது, அனுபவம், தேசாந்திரியாக ஊர் சுற்றியது, மழை, வெள்ளம், நெருப்பு...இப்படி இயற்கையை மூர்க்கமாக எதிர் கொண்ட போதெல்லாம் கூட, இறப்பு என்னைத் தழுவி விடுமோ என நான் எப்போதும் அஞ்சியதில்லை. கேவலம், பசியால் செத்து விடுவோமோ...? பசியின் கோரத்தால் குடல் மேலெழுந்து, மூச்சே கழுத்தை நெறிக்கிறது. என்னுடைய வயசு என்ன இருக்கும்? தோற்றத்தைக் கொண்டு கணிப்பவர்கள் எனக்கு 70, 80 வயது இருக்கும் எனச் சொல்வார்கள். வயிறு என்று ஒன்று இருந்தால்தானே பசி எடுப்பதில் நியாயமிருக்கும்?! கடைசியாக எப்போது, என்ன சாப்பிட்டேன…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பயம்! பு றப்படும்போதுதான் கடிகாரத்தைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு இனிய உதயம்! – சிறுகதை ''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?'' ''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.'' ''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?'' ''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.'' ''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...'' ''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம…
-
- 1 reply
- 2.2k views
-
-
சுமித்ரா - சிறுகதை மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் மனசுக்குள்ளயே படிச்சி பாடத்தைப் புடிச்சி வச்சிக்கத் தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டே இரண்டாவது மகளின் - வாணிக்கு நேர் மூத்தவளின் - கூந்தலில் ஈருளியைவிட்டு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசம். “வயசுக்கு வந்து ஆறேழு வருஷம் ஆச்சு...…
-
- 0 replies
- 3.1k views
-
-
காத்திருப்பு தமிழ்நதி ஓவியம் : ஜீவா புகைப்படங்கள் ; அனாமிகா வெயில் எரிக்கும் ஜூலை மாதத்தின் பின்மதியப் பொழுதொன்றில், அப்போதுதான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சாப்பிடவென்று குசினிக்குள் அமர்ந்த கோகுலனை, அம்மாவிடமிருந்து பிரித்து ஜீப்பினுள் இராணுவம் எறிந்தபோது அவனுக்கு வயது பதினேழு. உள்ளங்கைக் குழி கொள்ளுமளவு எண்ணெய் வைத்து வாரினாலும் அடங்காத அடர்ந்த தலைமயிரில் ஒருவனும் கால்களில் இருவருமாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் எறிந்தார்கள். அப்போது கோகுலனின் அப்பா வயலுக்குப் போயிருந்தார். கதறியபடி ஜீப்பினருகில் ஓடிச்சென்ற ஞானம்மாவை ஒருவன் ஓங்கி அறைந்தான். உலர்ந்த சருகொன்று கிளையிலிருந்து மண்ணில் வீழ்வதென அவர் ஓசையெழுப்பாது புழுதியில் சரிந்தார். ஜீப்பின…
-
- 0 replies
- 2k views
-
-
குதிரை வண்டி! சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் - பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பய…
-
- 1 reply
- 1.5k views
-
-
முப்பது லட்சம்! புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை முறை கேட்ப...'' என்றவன், ''நீ இங்கேயே இரு... நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,'' என்றான். அவன் கூறுவது சரியென்று படவே, ''சரி சரி... அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,'' என்றாள், சிரித்தபடி! அவள்…
-
- 1 reply
- 702 views
-
-
பால்ய பொழுதொன்றில் - குலசிங்கம் வசீகரன் பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன…
-
- 4 replies
- 1.7k views
-
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 829 views
-