கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! இரு வார சிறுகதை கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால், கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா..? மதுரை அருகே திருமங்கலத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர் சாமியப்பன். டாக்டர் என்றால்... மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடுபவர் அல்ல. ஊசிக்கும், இவருக்கும் ஊசிமுனையளவு கூட சம்பந்தமில்லை. இவர் விஞ்ஞான விஷயங்களில் எக்கச்சக்கமாய் ஆராய்ச்சி செய்து, தலையெல்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெற்றதும்... கற்றதும்... சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்) திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
டிஜிட்டல் டிராவல்! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லலாம்; பைக்கில், பஸ்ஸில், விமானத்தில், கப்பலில் என்று பயணிக்கலாம். செல்லும் விதம் மற்றும் தூரத்திற்குத் தகுந்தவாறு பயண நேரம் மாறுபடும். இந்த பயண நேரத்தை மிச்சப்படுத்தவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக, நொடியில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பயணம் செய்வதை சாத்தியமாக்கும் அற்புதக் கண்டுபிடிப்பாக அது பேசப்பட்டது. ஒரு கேமராவும், கொஞ்சம் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் சேர்த்து அந்தக் கண்டுபிடிப்பு உருவாகியிருந்தது. ‘டிஜிட்டல் டிராவலிங்’ என்பது இந்தக் கண்டுபிடிப்பு! அவர்களிடம் இருக்கும் ஒரு விசேஷ கேமராவால், பயணம் செய்யும் நபரையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பார்கள், அவ்வளவுதான்! அவ்வளவ…
-
- 0 replies
- 1k views
-
-
குசலா எங்கே? உ மாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை பழக்கம் ‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…
-
- 1 reply
- 1.6k views
-
-
மனைவியின் நண்பன்! இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள். 'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான். துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான். 'ஓகே...' என்று பதில் அனுப்பினாள். உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது. ''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான…
-
- 1 reply
- 6.1k views
-
-
ஒரு நிமிடக் கதை யாரோ அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். ‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங் கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள். ‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மா…
-
- 1 reply
- 725 views
-
-
அதிர்ஷ்டம் ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத் தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன். ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார். ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன். ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என்…
-
- 1 reply
- 1k views
-
-
ஏமாற்றம் தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டான். ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய், மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா. கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக. அன்று மாலை... சீனு …
-
- 1 reply
- 1.3k views
-
-
பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…
-
- 0 replies
- 922 views
-
-
ஏ.டி.எம் இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன் மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான். ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின் கண்ணில…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொழுதுபோக்கு இனி பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தாமச, ராட்சஸ குணங்களைத் தூண்டும் உறைப்பு, புளிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். ஞானிகள் எல்லோரும் இந்திரியங்களை அடக்கி ஆளச் சொல்கிறார்கள். எனவே, இறுதி நிலையான பேரின்பத்தை அடைவதற்கு மனதை... & இதற்கு மேல் ஹரியால் சபதங்களை மேற்கொள்ள முடியவில்லை. மனதுள் துக்கம் பரவியது. தான் சிக்கியிருப்பது எப்பேர்பட்ட பொறி. விஷயம் வெளியே தெரிந்துவிட்டால் மானம், மரியாதை எல்லாம் கடந்தகால விஷயங்களாகிவிடும். பயத்தினாலும் கவலையாலும் அவனது உடல் …
-
- 1 reply
- 1.4k views
-
-
எங்க ஊர் -கலைச்செல்வி ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ‘‘நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ் பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்...’’ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரப் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…
-
- 1 reply
- 3.7k views
-
-
காட்டில் ஒரு மான் அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
கவனம் வங்கியில் ரொம்பவே கூட்டம்... நெரிசல் குறையட்டும் என்று ஓரமாக நின்ற மைதிலியை நெருங்கினார் ஒரு டிப் டாப் ஆசாமி. ‘‘என் மூக்குக் கண்ணாடியை கார்ல விட்டுட்டு வந்துட்டேன்... கொஞ்சம் இந்த சலானை பூர்த்தி செய்து தர முடியுமா?’’ என பணிவாகக் கேட்டார். ‘‘சாரி சார்! நான் பேங்க்ல பணம் கட்ட வந்திருக்கேன். இப்ப உங்களுக்காக செலான் எழுதிக்கிட்டிருந்தா என் கவனம் சிதறும். அதைப் பயன்படுத்தி யாராவது பணத்தை அடிச்சிடலாம். மன்னிச்சிடுங்க... என்னால முடியாது!’’ - உறுதியான குரலில் மறுத்தாள். மறுநாள்... இன்டர்வியூ ஹால்... தன்னுடைய முறை வந்தவுடன் உள்ளே நுழைந்த மைதிலி, வங்கியில் சந்தித்த அதே டிப் டாப் ஆசாமி இன்டர்வியூ குழுவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். நிச்சயம் தனக்கு வேலை …
-
- 0 replies
- 1.6k views
-
-
முதலிரவு கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின் காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா! ‘‘வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?’’ கலாவுக்குப் புரியவில்லை!‘‘இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!’’ - கலா சொல்ல, ‘‘சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?’’ எனக் கேட்டான் சிவா. ‘‘உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்... அப்புறம்...’’ - தொடர்ந்த கலாவைத் தடுத்தான் சிவா. ‘‘என்கிட்ட உண்மையா இருக்கச் சொல்லலியா?’’ ‘‘சொன்னாங்க. எப்பவும் உங்ககிட்ட உண்மையச் சொல்லணும்னு...’’ ‘‘உண்மையச் சொல்றதில்ல... உண்மைய…
-
- 4 replies
- 5.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: தடுமாற்றம் சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாயகி - சிறுகதை ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம் டிப்பியை ஸ்டீபன் அண்ணன் ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ``சாதி நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது. `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு வ…
-
- 1 reply
- 3.2k views
-
-
கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க! - சூர்யபுத்திரன் அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்! காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது. அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியத…
-
- 1 reply
- 2.6k views
-
-
அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.
-
- 0 replies
- 869 views
-
-
பாடம் ‘‘எதிர் வீட்டுல இருக்கறவங்க நம்மகிட்ட தாயா புள்ளையா பழகுறாங்க. அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்கலாமா?’’ - மனைவி கடுகடுத்தாள். ‘‘விஷயத்தைச் சொல்லு?’’ ‘‘அவங்க பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்துக்கிட்டு வந்தானாம். ‘புதுப் பூட்டு வாங்கி சைக்கிளை சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போ’ன்னு கறாரா சொன்னீங்களாமே! வேலைக்குப் போகாத பையன்கிட்ட பணம் ஏது? வீட்ல காசு வாங்கி புதுப் பூட்டு போட்டிருக்கான். அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே சொல்லி வருத்தப்பட்டாங்க...’’ ‘‘அப்படியா? நான் போய் மன்னிப்புக் கேட்டு வர்றேன்’’ எனக் கிளம்பினேன். ‘‘வாங்க சார்’…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாட்டன்.. மாட்டன்.. பிரின்ட்.. அடிக்கமாட்டன்.. என்று அடம்பிடிக்கிறான்.. என்னடா இவனுக்கு பிரச்சனை. ஒருவேளை 8 வருசப் பழசாகிட்டான்.. எறிய வேண்டிய கேஸ் ஆகிட்டானோ.. மனசுக்குள் ஒரு எண்ணம். ச்சா.. இவ்வளவு காலம்.. எத்தனையோ வின்டோஸ்களை கண்டு கடந்தும் வேலை செய்யுறவனுக்கு என்னாச்சு.... பிடிச்சு பிடரியில் தட்டினன்.. அஃறிணையாயினும்.. அவன் செய்த சேவைக்கு.. அவனை பிடரியில் தட்டினது.. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது. திரும்ப திரும்ப.. பிழை உன்னிலை தான்.. பரிசோதித்துத் துலையடா.. என்ற கணக்கா அவனும்.. எரர் சம்கிக்கை காட்டுக் கொண்டே இருந்தான்.. சரிதான் என்ன தான் நடந்து என்று.. உள்ள திறந்து பார்த்தால்.. உள்ளுறுப்புகள் எல்லாம் நல்லாக் கிடக்கு.. என்ன …
-
- 8 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் http://www.vikatan.com
-
- 0 replies
- 888 views
-