கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பயிற்சி ‘‘ஏண்டா ஆறுமுகம்... உன் மேல நம்ம முதலாளி நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர்கிட்ட உன் மகன் சோமுவுக்கு டிரைவர் வேலை கேட்டா நிச்சயம் தருவார். நல்ல வருமானம் கிடைக்கும். அதை விட்டுட்டு வேற ஒரு கம்பெனியில அவனை நைட் வாட்ச்மேன் வேலைக்கு விட்டிருக்கியே... இது நல்லாவா இருக்கு?’’ என்றார் நண்பர் சம்பத்.ஆறுமுகம் அர்த்தப் புன்னகை பூத்தார்.‘‘நம்ம கம்பெனி பஸ் எல்லாமே மதுரை, திருச்சி, கோவைன்னு நைட் சர்வீஸ்தான் ஓடுது. என் மகன் சோமு நல்லாத்தான் வண்டி ஓட்டுறான். ஆனா, ராத்திரி பயணத்துல வண்டி ஓட்ட நம்மை மாதிரி பயிற்சியும் பக்குவமும் தேவை. ஒரு வருஷம் இந்த வாட்ச்மேன் வேலையைப் பார்த்தா என் மகனுக்கு ராத்திரி கண் விழிக்கிற பயிற்சி வந்துடும். அப்புறம் அவன் நம்ம கம்பென…
-
- 1 reply
- 1.1k views
-
-
திட்டம் ‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது. ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தட்சணை பலரும் முகம் சுளித்தனர்.‘‘ஏண்டி பங்கஜம், குருக்கள் நல்லா வசதியாத்தானே இருக்கார். அவர் ஒரே பையன் அமெரிக்காவுல செட்டில் ஆகியிருக்கான். மாசா மாசம் பணம் அனுப்பிடறான். அப்படி இருந்தும் அல்பமா தட்சணையை இப்படி அல்பமா வாய்விட்டுக் கேட்கறது நல்லாவா இருக்கு?’’ எனக் கேட்டாள் கல்யாணி. ‘‘அடிப் போடி, ‘காசேதான் கடவுளடா’ ஆசாமி அவரு. கோயில் நடை சாத்தற நேரம்... சீக்கிரம் பிராகாரம் சுத்திட்டு கிளம்பலாம்!’’ என்றாள் பங்கஜம். சுற்றிய பின் இருவரும் ஓரமாய் உட்கார்ந்தனர்.அப்பொழுது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோயிலுக்குள் நுழைந்து, ‘‘சாமி...’’ என அந்த குருக்களை அணுகி, கொஞ்சம் தயங்கி நின்றான். கேட்டுக் கேட்டு வாங்கிய மொத்த தட்சணை பணத்தையும் அள்ளி அவனிடம் கொடுத்த குருக்கள், ‘‘க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜான்சிராணியை பின்தொடரும் காதல் காந்திமதி காற்றில் சிக்கிய பலூன் போல் வெடவெடத்தாள். உள்ளங்கைகள் பிசுபிசுத்திருந்தன. பிடி கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கிய கால்களின் கனம் அவளைக் கீழ் நோக்கி இழுப்பது போலிருந்தது. ‘‘காந்தி பயமா இருந்தா கண்ண மூடிக்கோ. ரொம்ப பயமா இருந்தா வாயத் தொறந்து கத்திருடி. எல்லாரும் அப்படித்தான் சத்தம் போடுவாவோ!” என்றாள் அருகில் அமர்ந்திருந்த ராதா. காந்திமதி கண்களை மூடிப் பார்த்தாள். தலை மட்டும் தனியாகச் சுழன்றது. உடனேயே கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டாள். ராட்சத ராட்டினத்தின் ஒவ்வொரு இருக்கையும் மெதுவாக நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. காந்திமதி அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்குச் சென்றது. அங்கிருந்து மொத்த பொருட்காட்சியும் சிறிதெனப்பட்டது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…
-
- 0 replies
- 3.9k views
-
-
பிரபல ரவுடி 'குரங்கு குமார்': வளர்ச்சியும் & வீழ்ச்சியும் | செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார்
-
- 1 reply
- 4.9k views
-
-
அப்பா ‘‘பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...’’ கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி. அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘அப்பாவால இப்ப வரமுடியாது செல்லம்... அம்மாவை கூட்டிட்டு போ’’ தொய்வான குரலில் கதிரவன் சொல்லச் சொல்ல அணுகுண்டின் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு கதற…
-
- 0 replies
- 1.8k views
-
-
வெண்டி மாப்பிள்ளை சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில் வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…
-
- 0 replies
- 3.3k views
-
-
சகோதரர்கள் செய்த கொடூரம்! பார்வதி ஷா வழக்கு! | பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? தொடரும்...
-
- 1 reply
- 3.6k views
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
ஒரு எலிய காதல் கதை கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்த வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த வேலை போய்விட, ராமச்சந்திரனுக்கு இது ராசி இல்லாத வீடு என்று பட்டது. ஆனால், இந்த வீட்டை விட்டால், நேரே மெரினா பீச…
-
- 0 replies
- 3.3k views
-
-
நிபந்தனை ‘‘இந்த வீட்டு லொகேஷனுக்கும் இருக்கிற வசதிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய்கூட வாடகை கொடுக்கலாம். சுவற்றில் ஆணி அடிக்கிற பழக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. நானும் என் மனைவியும் வேலைக்குப் போறதால, குழாய்த் தண்ணீர் அதிகம் செலவாகாது. கரென்ட் யூனிட்டுக்கு நீங்க இரண்டு ரூபாய் அதிகமா வசூலிச்சுக்கலாம். எங்க உறவுக்காரங்க யாரும் இங்க வந்து தங்கமாட்டாங்க. லேட் நைட் வந்து பெல் அடிக்கிற பழக்கமே எங்களுக்கு இல்ல. ஓகேன்னா, இப்பவே ஒரு வருஷ அட்வான்ஸை கொடுத்துடறேன்!’’ - வீட்டுக்காரர் கோபாலிடம் சொல்லி முடித்தான் பாலு.மனைவி காட்டிய சைகையைப் புரிந்துகொண்டு, யோசித்து பதில் சொல்வதாகச் சொல்லி பாலுவை…
-
- 0 replies
- 1k views
-
-
தந்திரம் ‘‘மாப்பிள்ளையோட லேட்டஸ்ட் தனி போட்டோ இல்லையாம். ஃபிரண்ட்ஸோட இருக்கிற குரூப் போட்டோதான் இருக்காம். கொடுத்தாங்க. இதுல நடுவில இருக்கிறவர்தான் மாப்பிள்ளை... ஓகேயானு சொல்லுங்க!’’ என்று தரகர் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்தார் வெங்கட். நண்பர்கள் மத்தியில் பார்க்கிறார் போல் இருந்தார் மாப்பிள்ளை. ஓகே சொல்லி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளேயிருந்து ‘விர்’ரென வந்த ஜா போட்டோவை வெடுக்கெனப் பிடுங்கிப் பார்த்தாள். அவள் உதடு பிதுங்கியது. ‘‘இது ஒரு தந்திரம் டாட்! ரொம்ப குள்ளமா வத்தலும் தொத்தலுமா கன்னம் ஒட்டி இருக்கிறவங்க மத்தியில நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா, சுமார் மூஞ்சி குமாருகூட பார்க்கிறாப்புலதான் தெரிவான்! அதான் தனி போட்டோ தராம, இப்பிடி ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…
-
- 0 replies
- 899 views
-
-
கட்சிக்காரன் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய் தடவி தலை சீவினார். தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் துண்டைத் தேடினார். இல்லை. அடுத்தடுத்த இடங்களில் தேடினார். துண்டு கிடைக்கவில்லை. மீனாட்சியின் துணிகளுக்கிடையே கிடந்த இரண்டு துண்டுகள் அழுக்காக இருந்தன. அதை எடுத்துக் கோபத்தில் எறிந்துவிட்டு வந்து மீண்டும் தன்னுடைய துணிகள் இருந்த இடத்தில் தேடினார். இருந்த சால்வைகளும் உருப்படியாக இல்லை. உடம்பு சரியில்லாத நிலையில் படுத்திருந்த மீனாட்சி “என்னாத்தத் தேடுறீங்க?” என்று கேட்டாள். “துண்டு.” “வேட்டி சட்டதான் போட்ட…
-
- 0 replies
- 2.6k views
-
-
2 ஆண்டுகளில் 9 கொலைகள்! விஷ ஊசி வழக்கு! தொடரும்
-
- 1 reply
- 1.9k views
-
-
துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…
-
- 0 replies
- 2.1k views
-
-
‘என் பெயர் அகதி!’ - வலிகளைச் சுமந்தலையும் தமிழ்நதியின் சிறுகதை #WorldRefugeeDay வி.எஸ்.சரவணன் ஜூன் 20: உலக அகதிகள் நாள். ஆப்பிரிக்காவில் ஜூன் 20 அன்று அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அந்த நாளையே ஐ.நா அவை உலக அகதிகள் தினமாக அறிவித்தது. தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு ஒருவர் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு ஒப்பான துயர் வேறில்லை. அதுவும் போரால் தம் உறவுகளைப் பிரிந்து, கிடைக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழல் கொடுமையானது. ஆனால், உலகின் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அந்த வலியை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள வைக்கச் செய்பவை கலைப் படைப்புக…
-
- 0 replies
- 1.4k views
-
-
குலசாமியைக் கொன்றவன் சிறுகதை: கணேசகுமாரன்ஓவியங்கள்: ஸ்யாம் திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை 'கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு 'க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி 'கி’ இடைவெளி 'ரா’ இடைவெளி 'ம’ இடைவெளி 'ம்’... அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்ட…
-
- 0 replies
- 3.3k views
-
-
டேஸ்ட் இதுவரை நன்றாக வியாபாரம் நடந்துகொண்டு இருந்த ஸ்வீட் ஸ்டால், திடீரென சரிவு நிலைக்கு வந்தது எப்படி எனக் குழம்பினார் ஆறுமுகம்.பல வருடங்களாக அங்கே மாஸ்டராக இருப்பவர் மாசிலாமணிதான். ஒரே ஆள். அவரது கைப்பக்குவம்தான் கடையின் வியாபார வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. இப்பொழுதும் அவர்தான் மாஸ்டர். ஆனால் முன்பு இருந்த ஓட்டம், இப்போது இல்லை. இதை மகன் சந்துருவிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, ‘‘நீங்க வீட்ல இருங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்!’’ என்றான்.அதே மாஸ்டர்தான். ஒரே மாதம்தான். பழைய வியாபாரத்தைவிட அதிகமாகவே கொண்டு வந்துவிட்டான் சந்துரு. ஆறுமுகம் தன் மகனிடம் காரணத்தை கேட்டார். ‘‘அப்பா, நான் மாஸ்டர்கிட்ட பேசினேன். அவருக்கு இப்ப சுகர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்துத் தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய்க் கிடந்தது. கண்களில் கறுப்புக்கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவதுபோல வட்டமான ஒரு கொண்டை. கல்வீட்டுக்காரர் மக…
-
- 1 reply
- 910 views
-
-
பலி அனோஜன் பாலகிருஷ்ணன் ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும். குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் க…
-
- 0 replies
- 1k views
-