கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சிறுகதை: நேர்முகம் நேர்முகத் தேர்வுக்குத் தயா ராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி சீவி சடை போட் டுக்கொண்டால் என்ன!’’ - ஆதங்கத் துடன் நான் கேட்க, ‘‘அம்மா! என்னை பெண் பார்க்கப்போகிறார்களா என்ன? எப்போதும்போல் இருந்தால் போதும்’’ என்றபடி கிளம்பினாள். ‘‘சாமியிடம் வேண்டிக்கொண் டாயா? அப்பா உன்னுடன் வரவேண் டாமா?’’ என்றேன். அவளோ, ‘‘சாமி கும்பிட்டாச்சு. நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாய். அப்பா கூடவே வந்தால் அங்கு உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்’’ என்று கூறிவிட்டு, டாட்டா காண்பித்து வெளியேறினாள். மென்பொருள் நிறுவனத்தின் நேர் முகத்தேர்வுக்கு அ…
-
- 0 replies
- 2.3k views
-
-
க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் ஏகாந்தன் ஃபிடெல் காஸ்ட்ரோ, தற்போதைய அதிபர் ராவ்ல் காஸ்ட்ரோவுடன் க்யூபா. லத்தீன் அமெரிக்காவில், கரீபியன் பகுதியில் ஒரு சிறு நாடு. ஸ்பானிஷ் மொழியில் கூபா. க்யூபன் என்பதாக தங்களை அந்நாட்டவர்கள் குபானோ (Cubano) என்று அழைத்துக்கொள்வார்கள். அவர்களின் கூப-ஸ்பானிஷில் அது `குவானோ` என்று ஒலிக்கும். கூபா என்றதும் மனதில் ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro), சே குவாரா (Che Guevera) என்றெல்லாம் உலகின் மகாபுரட்சிக்காரர்களின் பிம்பங்கள் பாயும், குறிப்பாக T-ஷர்ட்டுகளில் சே-யின் படத்தோடு அலைவதை வீரதீரச் செயல் எனக் கருதும் இந்திய இளைஞர்களுக்கு. ஓரளவு சமகால சரித்திரம் தெரிந்தோருக்கு, பனிப்போர் (Cold war) காலத்திய, அதாவது சோவியத் யூனியனின் …
-
- 1 reply
- 1.3k views
-
-
கை கொடுக்கும் கை நாயுடு காம்பவுன்டைக் கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது. "ஏய்... நாகு. அம்பி வந்திருக்கு பாரு...'' என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான். ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து. அது தனக்காக இல்லையோஅம்மாவுக்காக, அப்பாவுக்காக, சாமி அண்ணாவுக்காக என்…
-
- 0 replies
- 638 views
-
-
காதல் 2086 பயணி, ஓவியங்கள்: ஸ்யாம் சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது பாட்டியின் முகத்தின் மேல் தலையணையைப் போட்டு மூச்சு நிற்கும்படி அழுத்திப் பிடித்திருந்தான். சிவாவின் வீட்டு முன்னறையில், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்ட்ரெட்ச்சர் போன்ற படுக்கையில்தான் சிவாவின் பாட்டியைக் கிடத்தியிருந்தார்கள். அவர் மீது கறுப்பு நிறத்தில் ஒரு போர்வை போத்தியிருந்தது. அவளது கைகளும் கால்களும் அதற்காகவே செய்யப்பட்ட பட்டைகளால் கட்டப்பட்டிருந்தன. பாட்டியின் அசைவு நின்றிருந்தது. பாட்டியின் தலை பக்கத்தில் தலையணையைப் பிடித்தபடி சிவா நின்றிருந்தான். கால் பக்கத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை “நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க யாரோட அவ்வளவு சுவாரஸ்யமா போன்ல பேசிட்டு இருக்கீங்க?!” சுதா கேட்கிறாள். அதைப் பொருட்படுத்தாத அருண் போனில் நிதானமாக “நான் வீட்லதான் இருக்கேன். வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை...!” என்று பேசிவிட்டு போனைத் துண்டித்தான். “இப்ப சொல்லு. என்ன உன் பிரச்சினை?... எதுக்கு நீ இப்ப இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கே?” அருண், மனைவியிடம் கேட்டான். அதற்கு சுதா, “என்னால இனி இங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது. நான் இப்பவே எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போகப்போறேன். நீங்க நாம தனிக்க…
-
- 0 replies
- 563 views
-
-
21ஆம் நூற்றாண்டு சின்டரெல்லாவின் கதை சித்தியின் கொடுமைக்கு ஆளாவதும் பிறகு தேவதையின் துணையுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இளவரசரால் விரும்பப்படுவதும் நாம் அனைவரும் கேட்ட அதே சின்டரெல்லாதான்; ஆனால் அந்த சின்டரெல்லா தற்காலத்தில் அதாவது 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால் அவளின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்?! இதோ 21ஆம் நூற்றாண்டுசின்டரெல்லாவின் கதை. சின்டரெல்லாவின் தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். அதனால் சின்டரெல்லா யாருக்கும் தெரியாமல் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களை தொடர்பு கொண்டிருந்தாள். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டே முகநூலில் தனது கவனத்தை செலுத்தி வந்தாள் சின்டரெல்லா; அப்பொழுதுதான் முகநூல…
-
- 0 replies
- 773 views
-
-
மைக்ரோ கதை தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர். மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான். "என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும், "என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடித…
-
- 0 replies
- 818 views
-
-
சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்ப…
-
- 4 replies
- 9.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: விழுதுகள் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆ…
-
- 0 replies
- 724 views
-
-
பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள். ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள். சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது…
-
- 2 replies
- 1.2k views
-
-
மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால…
-
- 0 replies
- 1.8k views
-
-
இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm "ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா..." என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த "பயமற்றவள்". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், நிர்பயா பாலியல் வன்ப…
-
- 0 replies
- 759 views
-
-
நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…
-
- 0 replies
- 577 views
-
-
மீன் - சிறுகதை பவா செல்லதுரை - ஓவியங்கள்: ஸ்யாம் பவுல் வாத்தியாரை, `வாத்தியார்' என அவரே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஓர் ஒல்லிக்குச்சி உடம்பும், முழங்காலுக்குமேல் தூக்கிக் கட்டிய கட்டம் போட்ட லுங்கியும், கைவைத்த வெள்ளை பனியனுமாகத்தான் எப்போதும் திரிவார். இவர் ஸ்கூலுக்கு எப்போது போவார், அப்போதாவது உடைமாற்றிக்கொள்வாரா... என்பது எல்லாம் மாயவித்தைகள்போல மறைந்துவிடும். முனிசிபல் பாய்ஸ் ஹைஸ்கூலில், பத்தாவதுக்கு மாறியபோதுதான் பவுல் வாத்தியாரின் நீளமான அந்தத் தூண்டிலில் நானும் மாட்டிக்கொண்டேன். என் வீட்டில் இருந்து நடை தூரத்தில்தான் எல்லுக்குட்டை இருந்தது. அதை சிலர் `குளம்' என்றும் தப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். எப்போதும் பாசி படர…
-
- 0 replies
- 3.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக…
-
- 0 replies
- 653 views
-
-
ஒரு நிமிடக் கதை - பயம் அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார். அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான். இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன்…
-
- 2 replies
- 838 views
-
-
அடேலினா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம் ஆல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின். கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் - ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’. அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன் இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
செவத்தகன்னி - சிறுகதை சிறுகதை:சிவக்குமார் முத்தய்யா, ஓவியங்கள்: ஸ்யாம் காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெள்ள ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாகக் கொட்டித்தீர்த்த வெயில் குறைந்து, தெற்கே இருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் எனக் கிளம்பியிருந்தாள். முக்கூட்டுக்கும் ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம். இதைக் கடந்துதான் டவுனுக்குப் போக வேண்டும் என்பதால், முக்கூட்டில் இருந்துதான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து, 20 மைல் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு…
-
- 0 replies
- 3.4k views
-
-
என்னையே நானறியேன் பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚ '' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் களனியின் உடலத்தங்கன் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்த…
-
- 0 replies
- 1.9k views
-
-
என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள் வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் ஓ அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஓ ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்…
-
- 4 replies
- 1.9k views
-
-
மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாடைக்காற்று வாடைக்காற்று நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/167/16603/16603.pdf நந்திக்கடல் நந்திக்கடல் நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/172/17152/17152.pdf
-
- 2 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவிலிருந்து வந்த அத்தான் - லட்சுமி ராஜரத்தினம் ’நாளைக் காலையில் நாம் கொடைக்கானல் கிளம்புகிறோம்; தயாராக இரு.’ ‘உண்மையாகவா?’ இதழ்களை சற்றே விரித்துக் கண்கள் மலர அவளிடம் வசந்தி கேட்டாள். மகிழ்ச்சியில் அவன் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். இரவின் உறக்கம் அவளைக் கொடை ஹில்லின் நினைவுடனேயே தழுவுகிறது. ’என்ன இப்பொழுதே இப்படி நடுங்குகிறாயே? இந்த ஸீஸனில் அவ்வளவு குளிர் கிடையாது. இது செகண்ட் ஸீஸன்..’ ப்ரெஞ்ச் ஸீசன் என்று பெயர்.’ கொடைக்கானல் மலையின் ‘ரிசர்வ்’ செய்யப்பட்ட அறையில் இருவரும் தங்கி இருந்தார்கள். அவளுடன் பேசும் பொழுது, அவளுக்குத் தெரிந்த ஒன்றை விளக்கும் பெருமை அவனிடம் பொங்கி வழிந்தது. எதையும் ச…
-
- 0 replies
- 1k views
-