கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள் கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் நிறைய பூ வைத்திருந்தாள். தெருவி…
-
- 0 replies
- 5.1k views
-
-
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்ட படி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கிடத்தினார். வாய…
-
- 0 replies
- 589 views
-
-
மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்! ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
அப்பா! - சிறுகதை விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள். “என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?” “அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.” அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை. எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது. “நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...” “எதுக்கு இப்…
-
- 0 replies
- 6.7k views
-
-
க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் ஏகாந்தன் ஃபிடெல் காஸ்ட்ரோ, தற்போதைய அதிபர் ராவ்ல் காஸ்ட்ரோவுடன் க்யூபா. லத்தீன் அமெரிக்காவில், கரீபியன் பகுதியில் ஒரு சிறு நாடு. ஸ்பானிஷ் மொழியில் கூபா. க்யூபன் என்பதாக தங்களை அந்நாட்டவர்கள் குபானோ (Cubano) என்று அழைத்துக்கொள்வார்கள். அவர்களின் கூப-ஸ்பானிஷில் அது `குவானோ` என்று ஒலிக்கும். கூபா என்றதும் மனதில் ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro), சே குவாரா (Che Guevera) என்றெல்லாம் உலகின் மகாபுரட்சிக்காரர்களின் பிம்பங்கள் பாயும், குறிப்பாக T-ஷர்ட்டுகளில் சே-யின் படத்தோடு அலைவதை வீரதீரச் செயல் எனக் கருதும் இந்திய இளைஞர்களுக்கு. ஓரளவு சமகால சரித்திரம் தெரிந்தோருக்கு, பனிப்போர் (Cold war) காலத்திய, அதாவது சோவியத் யூனியனின் …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: மாமியார் சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே? ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்? சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்... “என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால ம…
-
- 0 replies
- 1k views
-
-
நிலவிற்குத் தெரியும் தங்கமணி கண்முழித்துப் பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்திலில்லை .அவன் பாத்ரூமில் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.ஆனால் அமைதி கனமாக இருந்தது;முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை.தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப் படியின் முகப்புக்கதவும் திறந்துகிடந்தது.கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்.;மூச்சிறைத்தது அவள் திணறினாள்.. பழைய மரமாடிப்படி சத்தம் ஏற்படுத்தியது.பெரியதாத்தா விழித்துக்கொண் டார். “தங்கமணி..’ மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார். “அவர் அறையில் இல்லை…”தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது. வீடு முழுவத…
-
- 0 replies
- 532 views
-
-
அனாதை பிணம் பணம் மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை. இரண்டுபேர் கர்ச்சீப்பிலும், துண்டிலும் சுற்றிக் கூடியிருப்பவர்களிடம் ஏந்திக் கொண்டிருந்தனர். ஏந்திக் கொண்டிருந்தனர். “அனாதைப் பொணமுங்கோ... தர்மம் செய்ங்க. அடக்கம் செய்யணும்...” மக்களிடம் தயாள குணம் இன்னும் இருந்ததால்... கைக்குட்டை காசுக்குட்டையாகிக் கொண்டிருந்தது. மாலை மடிந்தது. பண்பாடு கருதி, செத்துப் போன மாலைக்காக கறுப்புப் போர்வை போர்த்திக்கொண்டு துக்கம் அனுஷ்டித்தது இரவு. ராஜனும் முத்துவும் காசுகளை எண்ணினார்கள். “ஐம்பத்தேழு ரூபா” …
-
- 0 replies
- 564 views
-
-
ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு ‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ - ரம்யா அங்கலாய்க்க... ‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும் இப்பத்தானே கொட்டிக்கிட்டோம்! ச்சே...வடை போச்சே..!’’ என வடிவேலு குரலில் புலம்பிய சுமி, ‘‘ஹூம்... நம்ம கவுரிக்குதான் கொடுப்பினை! கூப்பிட்டு கொடுத்திடு’’ என்றாள். உடனே கவுரியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள் ரம்யா. ‘‘அடடா, இப்பதான் சாப்பிட்டேன்மா! வேணா நம்ம வாட்ச்மேனுக்கு கொடுத்திடலாம்மா’’ என கவுரி சொல்ல... ‘‘சர…
-
- 0 replies
- 364 views
-
-
காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள் தண்டு மாரியம்மன் கோயில். ஆடி வெள்ளிக் கிழமை. பெண்கள் கூட்டம் எழுபது சதவீதமும், ஆண்கள் கூட்டம் முப்பது சதவீதமும் கோயில் முழுக்க பரவியிருந்தார்கள். கோபுர உச்சியில் இருந்த ஒலிப்பெருக்கி கந்தர் சஷ்டியைப் பாடிக் கொண்டிருக்க நான் உள்ளே நுழைந்தேன். என்னுடைய தேய்ந்து போன ஹவாய் செருப்புகளை ‘பாதணி காப்பகம்’ என்று போர்டு எழுதி தொங்க விட்டிருந்த செருப்பு ஸ்டாலில் விட்டு விட்டு தகர டோக்கனை வாங்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. குழந்தைகள் அணியும் புத்தம் புதிய சிவப்பு வண்ண ஷூக்கள். செருப்பு ஸ்டாலின் மர ஸ்டாண்டில் வைக்கப்பட்ட…
-
- 0 replies
- 364 views
-
-
என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள் வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் ஓ அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஓ ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்…
-
- 4 replies
- 2k views
-
-
திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை ஜப்பானியச் சிறுகதை மூலம் : ஜினிசிரோ தனிஜகி ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 – 1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர். திருடன் பல வரு…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஆகாசப் பூ - சிறுகதை பிரபஞ்சன், ஓவியங்கள்: ஸ்யாம் அவள் புரண்டு படுத்தாள். இப்போது எல்லாம் இப்படி அடிக்கடி புரண்டு புரண்டு படுத்து, அறுந்துபோகும் உறக்கத்தின் இழையைத் துரத்திச்சென்று விடியும் வரை அவஸ்தைப்பட வேண்டியிருந்தது அவளுக்கு. மூன்று மூன்றரை மணிக்கு, இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். காதுகளுக்கு அருகில், விளங்காத சத்தங்கள், மொழிச்சொற்கள், யாரோ பக்கத்தில் இருந்துகொண்டு பேசுவதுபோல. என்ன பேசுகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை. ஏறக்குறைய உறக்கத்தில் ஆழ்ந்தாள். உலகம் விடிந்துகொண்டிருந்தது; சத்தமாகத் தெரிந்தது. பால் வெளிச்சம் படரும்போது, தோட்டத்து மரங்களில் இருந்து பறவைகள் பேசத் தொடங்கிவிடும். உணவுவிடுதிக்குக் கறந்து தர மாடுகள் நடக்கும் ஓசை, பால…
-
- 0 replies
- 2.1k views
-
-
தினம் - (சிறுகதை) - முருகபூபதி . " கழுத்தில் சயனைற் குப்பி, கரத்தில் ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன், இப்போது எதுவுமே இல்லாமல் காற்றுப்போல் அலைகிறான்." சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத் தயாராகிறது. இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட அழகிய காருக்குப்பின்னால் தத்தம் கார்களில் அணிவகுத்து வருவார்கள். மயானத்திற்குச்சென்றபின…
-
- 3 replies
- 670 views
-
-
மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்' கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது. கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ் அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் ரகு. அந்தக் கம்பெனியின் அதே அக்கவுண்ட் பிரிவில்தான் அவனுடைய அப்பாவும் வேலை பார்த்து ரிடையர் ஆனார். அவர் காலத்திலேயே இந்த எஃகு மேசை நாற்காலிகள், ஃபைலிங்க் காபினெட்டுகள் ஆகியவை வந்துவிட்டன. கால்குலேட்டிங் மெஷின்கள் வந்துவிட்டன. இன்டர்காம் வந்து விட்டது. சென்ட்ரல் ஏர் கன்டிஷினிங் கூட. ஆனால் ஒன்று அவர் காலத்தில் கிடையாது. புடவையுடுத்திய பெண்கள். அப்போதெல்லாம் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் தான் ஆபிஸ் வேலைகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு மூன்று பேர் அந்தக் கம்பெனியிலும் இருந்த…
-
- 0 replies
- 767 views
-
-
அவர்கள் வித்தியாசமானவர்கள்! உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது. தன்னிடமிருந்து அவ்வார்த்தைகள் எவ்வாறு வெளிப்பட்டன என்று யோசித்துப் பார்த்தாள். நிறைய அம்மாதிரிப் பெண்களைப் பற்றி ஒரு சூழலில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் பெண்களைப் பற்றி தமிழில் உஷா நிறையவே படித்திருந்தாள். அந்தப் படிப்பு அவளுக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்று துயரம் அடையும் பெண்கள் பால் இரக்கமும், பச்சாதாபமும் கொள்ள வைத்திருந்தது. அதுவே அவளையும் அறியாமல் அவர்களைப் பற்றி இன்னும் நெருக்கமாகப் பழகி ஒ…
-
- 1 reply
- 706 views
-
-
இமயமலை பஸ் டிக்கெட் - சிறுகதை சிறுகதை எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது, அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. சங்கரன் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த நீரை அள்ளி முகம் கழுவியபோது ஊரில் இருந்து கும்பலாக பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கூடைகளைத் தங்களது கக்கத்தில் இடுக்கியபடி நடந்துவருவதை சங்கரன் பார்த்தான். கோழிக்கொண்டைப் பூக்களும் செவ்வந்தியும் தோட்டத்தில் மலர்ந்து விட்டது. பூ எடுக்க கூலியாட்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பின்பாக இரண்டு எருமைகள் அசைந்து அச…
-
- 0 replies
- 2.9k views
-
-
அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள். …
-
- 1 reply
- 761 views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 693 views
-
-
மான்டேஜ் மனசு 12: காதல் கடத்தும் அழகிய தீ! ஃபேஸ்புக்கை திறந்தால் இன்று மணிகண்டன் பிறந்த நாள் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது. அப்புறம் வாழ்த்தலாம் என்று நினைத்து மறந்துபோகும் மோசமான வியாதி எனக்கும் இருப்பதால் உடனே செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இரவு விருந்துக்கு கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று சொல்லிவிட்டான். தம்பி பேச்சுக்கு மறு பேச்சா? கிளம்பத் தயாரானேன். அண்ணா சாலையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல எப்படியும் அரை மணிநேரம் ஆகுமே. அதுவும் 18k பஸ் தயவு பண்ணி தரிசனம் கொடுத்தால்தான் உண்டு. இந்த இடைவெளியில் உங்களுக்கு மணி - சரண்யாவை அறிமுகப்படுத்திவிடுகிறேன். தமிழ் சினிமாவின் லட்சத்து …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: கருணை வசந்தி, மாலா இருவரும் அலுவலக தோழிகள். வெவ் வேறு இடத்தில் இருந்து தினமும் மின்சார ரயில் பிடித்து ஒரே அலுவலகம் செல்ப வர்கள். வசந்தி நல்ல நிறமாக, நாகரிகமாக இருப்பவள். மாலா மாநிறம்தான். வசந்தி மாடர்னாக உடை உடுத்துவதுடன், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளில் கவனம் செலுத்துபவள். அளவாக சாப்பிட்டு உடலை ஒல்லியாக வைத்திருப்பாள். ரயிலில் ஏறிய நிமிடம் முதல், டிவியில் அல்லது புத்தகத்தில் படித்த அழகு குறிப்பை பற்றி விலாவாரியாக சொல்லிக்கொண்டு வருவாள். மாலாவுக்கு போர் அடிக்கும். இருந்தாலும் பேசாமல் வருவாள். அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. ரயில் நிலைய மேம்பாலத்தை தாண்டி …
-
- 0 replies
- 2.1k views
-
-
கதலி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: ஸ்யாம் சாதுலாலின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவரது வலது இமையை அவன் பார்க்க முயற்சிசெய்தான். சாதுலாலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் தெரிவது, அவருடைய வலது இமையும் அதன் மேல் இருக்கும் மருவும்தான். சாதுலாலுக்கு பிறவியிலே வலது கண் இமைக்கு மேலாக மரு ஒன்று இருந்தது, அவருடைய அழகுக்குக் காரணமாக அமைந்தது. வயதான காலத்தில் அந்த மரு, பழுத்தக் கனி ஒன்று மரத்தின் கிளையில் இருந்து தொங்கிக்கொண்டிருப்பதுபோல, அவருடைய இமையில் இருந்து பூமியைப் பார்த்தபடி அல்லது சாதுலாலின் பெருவிரலைப் பார்த்து தலை குனிந்திருப்பதை, அவன் இரண்டு முறை பார்த்திருக்கிறான். ஹரிக்கு இரண்டு முறை சாதுலாலை அருகே சென்று…
-
- 3 replies
- 3.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: இழப்பு அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. “ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!” “ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். “எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே” என்றாள் வாணி. “நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் …
-
- 3 replies
- 984 views
-
-
பீஃப் பிரியாணி சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன் ஆனான். “என்னய்யா இது... நல்லா வாயில வருது. எதுனாச்சும் ஒண்ணுத்துலயா…
-
- 1 reply
- 2.1k views
-