Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி - 253 மற்றும் 132 ஓட்டங்கள் இலங்கை அணி - 204 மற்றும் 345/9 ஓட்டங்கள் இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! (adaderana.lk)

    • 0 replies
    • 360 views
  2. பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10 கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அது…

  3. துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கினார் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார். இந்திய அணியின்…

  4. நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டு…

  5. உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!! ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. கோல் அடிக்காமலே.... ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கூடுதல் நேரம் இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார். …

  6. 52ஆவது சுப்பர் போல்: வென்றது பிலடெல்பியா ஈகிள்ஸ் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில், கடந்தாண்டுக்கான பருவகாலத்துக்கான போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணி வென்றது. தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான நியூ இங்க்லன்ட் பற்ரியொட்ஸ் அணியும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மினியோஸ்டா மினியோபோலிஸுள்ள ஐக்கிய அமெரிக்க பாங்க் அரங்கத்தில் மோதின. சுப்பர் போலின் 52ஆவது பருவகாலமாக அமைந்த இப்போட்டியில் பிலடெல்பியா ஈகிள்ஸ் அணியும் வலிந்த தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்ட…

  7. மியாமி டென்னிஸ் - ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெட…

  8. பிரமிக்க வைத்த போல்ட்டின் கேட்சை முறியடிக்கும் கேட்சை எடுப்பேன்: புகழாரத்துடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் உறுதி ஏ.பி.டிவில்லியர்ஸ். - படம். | கே.முரளிகுமார். ஆர்சிபி அணிக்காக அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை புரட்டி எடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இதே போட்டியில் முக்கியக் கட்டத்தில் விராட் கோலியை வெளியேற்ற பவுண்டரி அருகே இன்னமும் கூட நம்ப முடியாத பிரமிக்க வைத்த கேட்சைப் பிடித்த டிரெண்ட் போல்ட்டின் முயற்சியை முறியடிக்கும் கேட்சுக்குச் செல்வேன் என்று கூறுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பீல்டிங்கைப் பற்றி முதன் முதலில் ஒரு வீரர் பேசுகிறார், அதுவும் அந்தக் கேட்சை முறியடிப்பேன் என்று கூறும் ஒரு ஆளுமை ஏ.ப…

  9. தமிழ் பெண் ஷெபானி அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனானது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர். எப்படி சாத்தியமானது இந்த பயணம் என்பதை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். Image captionஷெபானி பாஸ்கர் 2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அம…

  10. வியாஸ்காந்தின் சிறப்பாட்டத்தோடு மாவட்ட கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்திய 17 வயதின் கீழ்ப்பட்ட யாழ் மாவட்டத்தின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சென். ஜோன்ஸ் கல்லூரியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் செயற்படும் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றிருந்தது. …

  11. பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமேக்காவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்திடம் அடுத்தடுத்து படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மர்மமான முறையில் இறந்தார். ஜமேக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் இரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் …

  12. சங்கக்காரவின் திறமை இலங்கைக்கு கைகொடுக்கும் : முன்னாள் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான சங்­கக்­கா­ரவின் திற­மை­யானது உல­கக்­கிண்ணப் போட்­டி­களில் இலங்கை அணிக்கு கைகொ­டுக்கும் என மேற்­கிந்தி யத்தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்­ப­வா­னான விவியன் ரிச்சர்ட்ஸ் கூறி­யுள்ளார். சமீ­பத்­திய அடுத்­த­டுத்த தோல்­வி­களால் உல­கக்­கிண்ணப் போட்­டி­க­ளுக்கு தயா­ரா­வதில் இலங்கை அணிக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இலங்கை அணியை தயார் செய்­வதில் முழு மகிழ்ச்சி இல்லை என தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெய­சூ­ரி­யவும் கவ லை தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லை­யி­லேயே விவி யன் ரிச்சர்ட்ஸ் மேற்­கண்ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும்தெரி…

  13. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஸா ஹசன் கைது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ராஸா ஹசன், நாகரிகமற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாத்தில், மதுபான விருந்துபசாரம் ஒன்று நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், ராஸா ஹசனையும் மேலும் 22 பேரையும் கையும் மெய்யுமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். பாகிஸ்தானில் மதுபானம் அருந்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரசம், சாராயம் ஆகியவற்றை பருகுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அந்நாட்டு, அரசியல் யாப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறி…

  14. வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தா…

  15. கைமாறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் கிங் பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வசம் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பேரால் விரும்பக்கூடிய விளை யாட்டாக உள்ளது. எனவே, ஐபிஎல் அணியை வாங்க முடிவெடுத் துள்ளோம். ஆனால், எந்த அணி என்பதைச் சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த அணி பெங்களூரு அணியா எனக் கேட்டதற்கு, அதை மறுக் கவோ, ஆமோதிக்கவோ இல்லை. “அது அவர்களைப் (ஆர்சிபி) பொறுத்தது” என்றார். http://tamil.thehindu.com/sports/கைமாறுகிறது-ராயல்-சேலஞ்சர்ஸ்/article7382133.ece

  16. டெஸ்ட் அணியில் எனது இடம் சற்றே சிக்கலில்தான் உள்ளது: ரோஹித் சர்மா ரோஹித் சர்மா. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் 2 சதங்களை அடித்த ரோஹித் சர்மா அதன் பிறகு 17 டெஸ்ட் இன்னின்ங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். 2012-ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சென்ற போது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் 5,0,0,4,4 ஆகும். மேலும் இந்திய அணி 5 பவுலர்களைக் கொண்டு ஆட முடிவெடுத்தால் ரோஹித் சர்மாவின் இடம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனாலும் விராட் கோலி கேப்டனான பிறகு 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்குப் பதிலாக 3-ம் நிலையில் ரோஹித்தை களமிறக்கி அழகு பார்த்தார் விராட் கோலி. இதில் ரோஹித்தின் ஸ்கோர் 53, 39, மற்றும் 6. இந்நிலையில் டெஸ்ட் இட…

  17. இனிமேல் ஓடப்போவதில்லை – உசைன் போல்ட் அதிரடி அறிவிப்பு உலகிலேயே நான்தான் அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை மீண்டும் சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று நிரூபித்தார் உசைன் போல்ட். அத்துடன் 200 மீ்ட்டர் மற்றும் 4 x 100 தொடர் ஓட்டத்திலும் தங்க பதக்கம் வென்றார். இந்த போட்டிக்கு முன் காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் உசைன் போல்ட். இதனால் அவர் மீண்டும் ஜொலிப்பாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால், திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இந்த ஆண்டு இதற்குமேல் ஓடமாட்டேன் என்று உசைன் போல்ட் கூறியுள்ளார். இதுகுறித்து உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘‘சமீபத்தில் மகிழ்ச்சியளித்த சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்ப…

  18. அணிக்கு மீண்டும் திரும்பியதை ஒருபோதும் மறக்க முடியாது: ஆட்டநாயகன் விருது வென்ற அல்பி மோர்கல் நெகிழ்ச்சி இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய அல்பி மோர்கலைப் (வலது) பாராட்டும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி. படம்: கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்ப தோடு, ஆட்டநாயகன் விருதை யும் வென்றிருக்கிறேன். இது எப்போதுமே என்னுடைய நினைவில் இருக்கும் என தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றி யது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்களை ம…

  19. நீச்சலில் கிமிக்கோவுக்கு இரண்டு தங்கங்கள், மெத்யூவுக்கு மேலும் ஒரு தங்கம் 2016-02-09 10:54:14 (குவா­ஹாத்­தி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்) இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்­று­வரும் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் நான்காம் நாளான நேற்­றைய தினம் மாலை 6.00 மணி­வரை இலங்­கைக்கு மேலும் 3 தங்கப் பதக்­கங்­களும் 4 வெள்ளிப் பதக்­கங்­களும் 8 வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன. நீச்சல் வீராங்­கனை கிமிக்கோ ரஹீம் பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மார்­தட்டு நீச்சல் போட்­டியை ஒரு நிமிடம் 03 செக்­கன்­களில் நிறைவு செய்தி தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான புதிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சு…

  20. இன்னிங்ஸ் அடிப்படையில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து ©ICC தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதல் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, தொடரை சமப்படுத்தியிருந்தன. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில்…

    • 0 replies
    • 625 views
  21. ஒழுங்கீனமாக நடந்துகொண்ட உமர் அக்மலுக்கு போட்டித் தடை ஏற்பட வாய்ப்பு By Mohammed Rishad PCB உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்த விரக்தியில் என் உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது என்று கூறுங்கள் என்று ஜெர்ஸியைக் களைந்து நின்ற உமர் அக்மலுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சினைகளால் தேசிய அணியில் விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த நிலையில், தற்போது அந்நாட்…

    • 0 replies
    • 699 views
  22. கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…

  23. பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க மறுத்ததை வசிம் அக்ரம் விமர்சிக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விண்ணப்பிக்க மறுத்ததையிட்டு வசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இதற்கான வாயில் திறக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் அது குறித்து கரிசணை காட்டாதது கவலை தருகின்றது என்றார் அக்ரம். தலைமைப் பயிற்றுநர் தேர்வுக்கான குறும்பட்டியலைத் தயார் செய்தவர்கள் குழாமில் வசிம் அக்ரமும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் பிரகாசிக்காததை அடுத்…

  24. பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹனிஃப் முகமது மரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நீண்ட இன்னிங்ஸை விளையாடிய வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஹனிஃப் முகமது கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 16 மணி நேரங்கள் விளையாடி 337 ரன்களை குவித்தார். ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஹனிஃப் முகமது, குழந்தை பருவத்தின் போதே கராச்சிக்கு சென்றுவிட்டார். 1952 இல், தன்னுடைய 17 வயதில், தான் பிறந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதல…

  25. லோக்கல், கலக்கல், செம தில்! அமர்க்களம் ஆரம்பம் #TNPL-T20 வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு, சங்கம் தியேட்டரில் சினிமா பார்த்து, பார்ட் டைம் தமிழனாகவே வலம் வந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன். தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி&20 தொடரை ப்ரமோட் செய்வதற்கான நிகழ்ச்சிகளில்தான் இந்த அமர்க்களம். பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ள லான்ஸ் க்ளூஸ்னர், மைக்கேல் பெவன், பிரட் லீ இனி தங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகின்றனரோ? ‘எதிரணியைச் சேர்ந்தவர் என்றாலும், களத்தில் சாதித்தால் ஆராதிப்பர் என்பதால் சென்னை ரசிகர்கள் மீது எனக்கு தனி பிரியம்’ என்றார் இந்திய ஒருநாள் அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.