விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்: பிடிஐ. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்சமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவிக்கும் போது, “இன்சமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக இன்சமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்று வரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் எடுக்க…
-
- 4 replies
- 388 views
-
-
விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை" 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
-
- 0 replies
- 442 views
-
-
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை வென்றது பிரிட்டன் உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. வெற்றிக் களிப்பில் பிரிட்டிஷ் அணியினர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணி பெல்ஜியத்தை வென்றது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில் பேசு…
-
- 0 replies
- 1k views
-
-
மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…
-
-
- 3 replies
- 528 views
- 1 follower
-
-
கெயிலுக்கு பொண்டிங் கண்டனம் January 13, 2016 கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் நிரூபருடன் தகார வார்த்தையில் ஈடுபட்ட கெயில் தற்பொழுது மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ஓட்டத்தை பெறுவதுக்கு ஓடமறுத்து நின்றமையே அந்தச் சர்ச்சை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணி சிட்னி தண்டரை எதிர்த்து நேற்றுமுன்தினம் விளையாடியது. இதில் மெல்பேர்ன் ரெனேகட்ஸ் அணியின் சார்பாக கெயில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் ரொம் கூப்பரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்போது கெயில் ஒரு ஓட்டத்தைப் பெற (சிங்கிள்) விருப்பம் இல்லாமல் இருந்தார். 8 முதல் 10 வரையான வாய்ப்புக்களை கெயில் வீணடித்தார். பொதுவா…
-
- 0 replies
- 483 views
-
-
பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் அபார பந்துவீச்சின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அண்டன் அபிஷேக் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல். http://www.thepapare.com/video-jaffna-st-johns-college-fast-bowler-anton-abishek-interview-tamil/
-
- 0 replies
- 587 views
-
-
2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் சன்ரைசர்ஸ்; அணியின் தலைமை பொறுப்பிலிருந்து நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு டேவிட் வோர்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஹைதராபாத் அணியின் தலைவராக வில்லியம்சனே நீடித்திருக்கவேண்டும் என பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேன் வில்லியம்சன் என்ன தவறு செய்தார் என யாராவது தெரிவிக்க முடியுமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது கேலிக்குரிய விடயம் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். தலைமைப்பதவிக்கு கேனே வோர்னரை விட பொருத்தமான…
-
- 0 replies
- 482 views
-
-
மே. தீவுகளை வெல்லுமா இலங்கை? இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் …
-
- 0 replies
- 639 views
-
-
'2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நடந்தது என்ன?' சுயசரிதையில் டி வில்லியர்ஸின் ஃப்ரீ ஹிட் ஒருமுறை இயக்குநர் சிகரம் பாலசந்தர், ரஜினியிடம் சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா என கேட்டார். அதற்கு ரஜினி ‘நான் மகாத்மா காந்தி சுயசரிதை படிச்சிருக்கேன். சுயசரிதைன்னா உண்மை இருக்கனும். உண்மையை எழுதுனா பல பேரோட பகையை சம்பாதிக்க வேண்டி இருக்கும். ஸோ.. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை’ என பதிலளித்திருப்பார். ரஜினி சொல்வது போல, சுயசரிதை என்பது சுயதம்பட்டமாக இல்லாமல், உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும்படி இருக்க வேண்டும். இல்லையேல் பெரிதாகப் பேசப்படாது. எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’, கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’, கண்ணதாசனின் ‘வனவாசம்’ இந்த மூன்று சுயசரிதையில் எது பெஸ்ட…
-
- 0 replies
- 482 views
-
-
ரியோ 2016 பராலிம்பிக் விளையாட்டு விழா இன்று ஆரம்பம்; மீட்பர் கிறிஸ்து அடிவாரத்தில் பிரமாண்டமான சமாதானக் கொடி 2016-09-07 09:50:25 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31ஆவது அத்தியாயத்தை கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவேற்றிய பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ, மாற்றுத் திறனாளிகளுக்கான 15 ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவை இன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவுடன் ஆரம்பிக்கின்றது. பிரேஸில் தேசத்தின் பண்பாடுகள் உலகம் முழுவதும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் கொண்டாட்டங்களுடன் மிகச் சிறப்பான பராலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ரியோ 2016 ஏற்பாட்டுக் குழுவினர் உறுதிபூண்டுள்ளனர். …
-
- 0 replies
- 340 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 441 views
-
-
மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன நியமனம் 2016-11-18 20:31:34 எதிர்வரும் இண்டியன் பிறீமியர் லீக் 2017 சுற்றுப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்குமுன் முன் மும்பை இண்டியன்ஸ் பயிற்றுநராக பதவி வகித்த, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20756#sthash.PFbkh…
-
- 1 reply
- 346 views
-
-
2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந…
-
- 1 reply
- 286 views
-
-
டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் சாதிப்பது கடினம்: கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பு போல் டெஸ்ட் போட்டியில் சாதிப்பது கடினம் என்று முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது சாதிப்பது கடினம். தற்போது இளம் வீரர்கள் 20 ஓ…
-
- 0 replies
- 430 views
-
-
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்ட…
-
- 1 reply
- 418 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பே…
-
- 0 replies
- 386 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்போருக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கொவிட்-19 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான “playbooks” என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வருகை தரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஜப்பானில் முதல் மூன்று நாட்களுக்கு தினமும் சோதிக்கப்படுவார்கள். டோக்கியோவை அடைந்த பின்னர் முதல் இரண்டு வாரங்களுக்கு மற்ற விளையாட்டு அதிகாரிகளுடன் சாப்பிட அவர்களுக்கு அனுமதி இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்ட…
-
- 0 replies
- 493 views
-
-
2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி 2021 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆஷ்லீ பார்டி, கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 6-3 6-7 (4-7) 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார…
-
- 0 replies
- 524 views
-
-
சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…
-
- 0 replies
- 334 views
-
-
குத்துச்சண்டையில் வரலாற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தினரால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 48 ஆவது டி.பி ஜெயா ஞாபகார்த்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி நான்கு தங்க பதக்கங்களை கைப்பற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது. நாடு பூராகவும் 48 பாடசாலைகளை சேர்ந்த 267 வீரர்கள் பங்குபற்றிய 16 பிரிவுகளைக் கொண்ட இந்த தேசிய போட்டித்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் குத்துச்சண்டை திடலில் இடம்பெற்றுவந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த ப…
-
- 2 replies
- 431 views
-
-
மெத்தியூஸை துரத்தும் உபாதை பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24694
-
- 0 replies
- 301 views
-
-
டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின. லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்க…
-
- 0 replies
- 482 views
-
-
விராட் கோலி கொஞ்சம் ஓவர்தான்... தோனி கிரேட் லீடர், வின்னர்: ஸ்டீவ் வாஹ் கருத்து கோலி, தோனி. - கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷ நடத்தை கொஞ்சம் ஓவர்தான், ஆனால் அப்படித்தான் வளர முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார். தான் கேப்டனாக இருந்த காலத்தில் பொய் கூறியாவது டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்ற ஸ்டீவ் வாஹின் கொள்கைகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி மகிழ்ந்தன. பிரையன் லாராவுக்கு தரையில் பட்டுக் கேட்ச் எடுத்து உண்மையான கேட்ச்தான் என்று சாதித்தார் ஸ்டீவ் வ…
-
- 0 replies
- 326 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். …
-
- 1 reply
- 355 views
-