விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
’’ வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவது கடினம்’’ குக் December 13, 2015 இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி வெற்றி பெறுவது மிகக்கடினம் என இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 26ந் திகதி (பாக்சிங் டே) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (3 நாள் ஆட்டம்) விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (15ந் திகதி) ஆரம்பமாகின்றது. எங்களுடைய சிறந்த விளையாடும் லெவன் அணி எது என்று இன்னும் எங்களுக்கு…
-
- 0 replies
- 572 views
-
-
முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்ற…
-
- 0 replies
- 571 views
-
-
கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார By Mohamed Azarudeen - இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. நான்கு நாட்கள் …
-
- 0 replies
- 571 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார். இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார். R Tamilmirror Online || பெர்ஸி அபேசேகர காலமானார்
-
- 0 replies
- 571 views
-
-
இதுதான் உலகம்: குக் வேதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்காத நிலையில் அலாஸ்டர் குக், தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டதால் வருத்தமும் வெறுப்பும் அடைந்துள்ளேன். சிலநேரங்களில் இப்படி நடக்கும். இதுதான் உலகம். இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். இங்கிலாந்து அணி வீரர்களுக்கு என் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். ஜனவரி 2016 வரை இங்கிலாந்து அணி 17 டெஸ்டுகளில் ஆடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை. இந்தத் தொடர்களில் நன்றாக விளையாடி மீண்டும் கிரிக்கெட்டை விரும்ப ஆரம்பி…
-
- 0 replies
- 571 views
-
-
பார்ஸிலோனா ரசிகர்களால் சூழப்பட்ட சுவாரெஸ் 2014-07-21 18:45:33 உருகுவேயின் சர்ச்சைக்குரிய கால்பந்தாட்ட நட்சத்திரமான லூயிஸ் சுவாரெஸும் அவரின் மனைவியும் ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரில் ரசிகர்களால் சுற்றிவளைக்கப்பட்டதால் சங்கடத்துக்குள்ளாகினர். இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வந்த சுவாரெஸ் தற்போது பார்ஸிலோனா கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் பார்ஸிலோனா நகருக்கு தனது மனைவி சோபியாவுடன் சென்ற லூயிஸ் சுவரெஸ் சென்றபோது ரசிகர்கள் பலரால் சுற்றிவளைக்கப்பட்டார். அங்கிருந்து நழுவிச்செல்வதற்கு சுவாரெஸும் அவரின் மனைவியும் பெரும்பாடு பட்டனர். பார்ஸிலோ அணி வீரரான ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸியின் பெயர் பொறித்த அங்கியொன்றை அணிந்திருந்த ரசிகருக்கு சுவாரெஸ் 'ஆட்…
-
- 1 reply
- 571 views
-
-
வடக்கின் தாரகை வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்க்கர்
-
- 0 replies
- 571 views
-
-
கராத்தே போட்டியில் வேலணை மத்தி மாணவன் 2 ஆம் இடம் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதற்காக கல்வித்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கராத்தே சுற்றுப்போட்டியில் 2015 ஆண்டுக்கான வடமாகாண போட்டிகள் வவுனியா சி.சி.ரி.என்.எஸ். பாடசாலையில் அண்மையில் நடைபெற்றது. யாழ்மாவட்டம் சார்பாக வேலணை மத்திய கல்லூரி மாணவனும் கராத்தே பயிற்றுவிப்பாளர் “சென்சேய்” முருகானந்தனின் சீடனுமான முருகானந்தன் முரளி 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான “குமித்தே” கராத்தே போட்டியில் பங்குகொண்டு 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். தீவக கல்வி வலய மாணவன் ஒருவர் முதற்தடவையாக பதக்கம் ஒன்றை வட மாகாண போட்டியில் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.virak…
-
- 6 replies
- 571 views
-
-
’’ அனைவருக்கும் நன்றி ’’ கெய்ல் January 21, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தன்னை விமர்சனம் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஷ் தொடரில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த கிறிஸ் கெய்ல் அங்கு தனது ஆட்டங்கள் முடிந்ததைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். சமீபத்தில் அவர் பெண் செய்தியாளரிடம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதனால் அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் இயான் சேப்பல், கெய்லை யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவருக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று அதிகமாகவே கொந்தளித்தார்.…
-
- 0 replies
- 571 views
-
-
நாக்அவுட் நாயகன் முகமது அலி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலியின் பிறந்த தினம் இன்று. தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் முகமது அலி, அடிப்படையில் அமைதியை விரும்புவர். வியட்நாம் போரை எதிர்த்ததற்காக தடை செய்யப்பட்டாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாதவர். மருத்துவர்களே கைவிட்டாலும் தனது மனோபலத்தால் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் நடந்த சில ருசிகர சம்பவங்கள் இங்கே சைக்கிள் திருடனால் குத்துச்சண்டை வீரராக மாறியவர் 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக…
-
- 0 replies
- 571 views
-
-
அது வதந்தி நம்ப வேண்டாம் பாகிஸ் தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் குறித்து சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவியுள்ளன. பயிற்சியாளருடனான மோதலால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் ‘கடவுளின் அருளால் நான் நலமுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு …
-
- 0 replies
- 570 views
-
-
என் அணிக்கு இவர் கட்டாயம் வேண்டும்… அடம் பிடிக்கும் விராட் கோஹ்லி..! இந்திய அணியில் தற்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திற்கும் தலைமையேற்றுள்ளார் விராட் கோஹ்லி. இவர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. டி 20 தொடரில் முதல் முறையாக தலைவர் பதவியை வகித்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் கோஹ்லி. இந்திய அணிக்கு தலைவராக உள்ள கோஹ்லி, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தலைவராக உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு நடத்தப்படும் ஐபி…
-
- 0 replies
- 570 views
-
-
லூயிஸ் சுவாரஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார். எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது. ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார். சுவாரஸும், ச்சீலீனியும் இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெ…
-
- 2 replies
- 570 views
-
-
X IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே? இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்; ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் – சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார…
-
- 0 replies
- 570 views
-
-
நியூஸி. கிரிக்கெட் நேரலையை 'மறந்த' இந்திய டிவி சேனல்கள்! நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம். கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வத…
-
- 0 replies
- 570 views
-
-
தோல்வியடையாத முதல் 10 டெஸ்ட் போட்டிகள்: ஆஸி. கேப்டன் ஸ்மித்தின் சாதனைத் துளிகள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். | கெட்டி இமேஜஸ். நியூஸிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் கேப்டன்சியில் 10 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகளைப் பெற்றதோடு 4 டிராக்களை செய்துள்ளது. இதன் மூலம் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய கேப்டன்களில் ஸ்மித் 2-ம் இடத்தில் உள்ளார். 95 ஆண்டுகளுக்கு முன்பாக வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் தன் கேப்டன்சியில் 8 வெற்றிகளையும…
-
- 0 replies
- 570 views
-
-
பல் இல்லாத சிங்கம் போல டி வில்லியர்ஸ் இல்லாத தென்ஆப்ரிக்கா திணறல் ! வங்கதேச அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிர்பூரில் நடந்த இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் விதிக்கப்பட்ட தடை காரணமாக தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. ஏற்கனவே அவருக்கு விடுப்பளிக்கப்பட்டு நாடு திரும்பி விட்ட நிலையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேசத்தை மிர்பூரில் எதிர்கொண்டது. பகலிரவு போட்டியான இதில், டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி கேப்டன் ஹாசிம் ஆம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 2 ரன்னில் அவுட் ஆனார். 22 ரன்னில் ஆம்லா வெளியேறினார். டுப்லெசிஸ் மட்டும் ஓரளவுக்கு சமாளித்து 44 ரன்கள் எடுத்தார். ரூசவ் 4, மில்லர்…
-
- 6 replies
- 570 views
-
-
வரலாறு படைத்தார் பயஸ்: ஆஸி., ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியது. இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது. நேற்று நடந்த பைனலில் பயஸ் ஜோடி, மீண்டும் "நம்பர்-1' ஜோடி…
-
- 0 replies
- 570 views
-
-
கவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்ககாரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின. Surrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீ…
-
- 3 replies
- 570 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ இலங்கையின் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பளர்களான கிரிஸ்புரோ குழுமம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ள வீராங்கனை மில்கா டி சில்வாவிற்கு தமது அனலான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான உடற்தகுதியை அவர் அடைந்துள்ளதால், சர்வதேச ஜிம்னாஸ்டிக் மாநாட்டினால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும். இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது இலங்கை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக மில்கா டி சில்வா உள்ளார். 18 வயதான மில்கா…
-
- 0 replies
- 570 views
-
-
விசில் போடு: இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுர…
-
- 2 replies
- 570 views
-
-
’’மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சொந்த நாட்டுக்கு விளையாடாதது கவலை’’ கிளார்க் December 21, 2015 அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இல்லாமல் திணறி வரும் நிலையில், அந் நாட்டு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுவது ஏமாற்றம் அளிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணி தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். தற்போது, மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.இந் நிலையில், ஹோபர்ட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. …
-
- 0 replies
- 570 views
-
-
ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்: அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும், முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்…
-
- 0 replies
- 570 views
-
-
வேர்ணன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்திய காட்சி ஒளிபரப்பப்படுவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2014-07-22 12:04:55 தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வேர்னன் ஃபிலாண்டர் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பான வீடியோ காட்சியை, அச்சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின்பின் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 3 ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட காட்சியை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பாளர்களான டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தென் ஆபிரிக்க அணி அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் குறித்து தென் ஆபிரிக்க அணி எவ்வித கருத்தையும் வெளியிட மறுத்துவ…
-
- 1 reply
- 570 views
-
-
அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…
-
- 0 replies
- 570 views
-