விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஆசிய கோப்பை 2023: போட்டிகள், இடங்கள் தொடர்பில் அறிவிப்பு ஆசிய கோப்பை 2023 ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 13 ஒருநாள் போட்டிகளில் நடைபெறவுள்ளன. நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படுகின்றது. 2023 பதிப்பு இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறு…
-
- 40 replies
- 2.6k views
- 1 follower
-
-
மெத்தியூஸ் இல்லாத ஒருநாள் அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…
-
- 1 reply
- 707 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 413 views
-
-
இந்தியா, தென் ஆப்ரிக்கா: சென்னையில் மோதல் கோல்கட்டா: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி நேற்று அறிவித்தது. இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்…
-
- 0 replies
- 429 views
-
-
கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெல்லிங்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. விராட்கோலி இல்லாத அணி 4-வது போட்டியில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குண…
-
- 1 reply
- 828 views
-
-
உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…
-
- 0 replies
- 203 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு வீரரை கடன் கொடுத்த இந்தியா...இதுவல்லவோ விளையாட்டு உணர்வு! பொதுவாக சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில்தான் எதிரணி வீரர்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக பீல்டிங் செய்வார்கள். தற்போது ஆள்பற்றாக்குறை காரணமாக சர்வதேச போட்டியிலும் மாற்று அணி வீரர் பீல்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகம் சென்று உணவருந்தியுள்ளனர். உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட வீரர்கள் சென்னை அப்பல்லோ மருத்த…
-
- 0 replies
- 882 views
-
-
யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. முதலாவது போட்டியாக கரம் போட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ். இராணுவ நீதிமன்ற மைதானத்திலும், கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ். குருநகர் பாடுமீ ன் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென். அன்டனி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி நாயன்மார்க்கட்டு பாரதி வ…
-
- 0 replies
- 351 views
-
-
வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பயிற்சியாளர் பதவியைத் துறந்தேன்: ஜாவேத் மியாண்டட் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜாவேத் மியாண்டட். | கோப்புப் படம். 1999-ம் ஆண்டு தான் பயிற்சியாளர் பொறுப்பை உதறியதற்குக் காரணம் சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டு வேண்டுமென்றே சரியாக ஆடாததே என்று ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார். "நான் இது பற்றி அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கலீத் மெஹ்மூதிடம் தெரிவித்தேன், உடனே நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்து விடும் என்றேன். பயிற்சியாளராகத் தொடர எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை, இதனால் பதவியை உதறினேன். 1999-ம் ஆண்டில் சூதாட்ட அச்சு…
-
- 0 replies
- 283 views
-
-
சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 240…
-
- 0 replies
- 489 views
-
-
எலைட் சம்பியன்ஷிப்’ என்ற புதிய பெயரில் மூவகை முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் முதல் தர கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் மூவகை ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எலைட் சம்பியன்ஷிப் போட்டிகள் என அழைக்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின்போது இந்தத் தகவலை இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். கொழும்பை பிரதான இடமாகக் கொண்டு விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டுத்துறை நாட்டின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் …
-
- 0 replies
- 315 views
-
-
ஹாக்கி: ஒலிம்பிக் கனவு தகர்ந்தது Monday, 10 March, 2008 09:59 AM . சான்டியாகோ, மார்ச். 10: சான்டியாகோவில் நடை பெற்ற உலக ஹாக்கி தகுதி சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. . இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியின் கனவு தகர்ந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 1928 ஆம் ஆண்டு முதல் ஹாக்கியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்க பதக்கம் வென்று உலகின் வலுவான ஹாக்கி அணியாக முன்னிலை பெற்று விளங்கி வந்துள்ளது. இந்தநிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி…
-
- 0 replies
- 932 views
-
-
பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல் ஹர்ஷா போக்ளே | படம்: பாக்ய பிரகாஷ் தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் த…
-
- 2 replies
- 553 views
-
-
செய்தித் துளிகள் பிரிமியர் பாட்மிண்டன் லீக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லி ஏஸர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ----------------------------------------------------- டி 20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். ஆஸி. தொடரில் 6 அல்லது 7வது இடத்தில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தோனி தெரிவித்துள்ளார். ----------------------------------------------------- பாதுகாப்பு காரணம் கருதி வரும் 27ம் தேதி வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்டோருக்கான உலககோப்பையை ஆஸி. அணி புறக்கணித்துள்ளது. …
-
- 0 replies
- 602 views
-
-
”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…
-
- 0 replies
- 374 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : ரியல்மாட்ரிட்டிடம் ரோமா வீழ்ந்தது! சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோம் நகரில் நடந்த 2வது லெக் ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64வது நிமிடத்தில் ரெனால்டோவும் 68வது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது. பார்சிலோனா புதிய மைதானம் இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்ட முடிவு செய்துள்ளது. தற்போது உலகின…
-
- 0 replies
- 314 views
-
-
கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார By Mohamed Azarudeen - இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. நான்கு நாட்கள் …
-
- 0 replies
- 571 views
-
-
டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா By Akeel Shihab ICC தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிக…
-
- 0 replies
- 705 views
-
-
கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இவ்வாண்டு மிகவும் அற்புதமான ஆண்டு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் ரன் மழையாகப் பொழிந்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றார். இப்போது ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமே வைத்துள்ளார். ஆனால் இந்த வாரம், ஏனோ தெரியவில்லை கோலிக்கு பிரச்சனைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் கேப்டன் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இணை உரிமையாளராக உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியான கோவா அணிக்கு தற்போது 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரிதும…
-
- 0 replies
- 494 views
-
-
சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த அலிஸ்டர் குக் படம்: ராய்ட்டர்ஸ்/ இந்து ஆர்கைவ்ஸ். தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 123 டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 268 views
-
-
போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது. முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது. இதற்…
-
- 0 replies
- 304 views
-
-
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரநிலையில் மீண்டும் முதலாமிடத்தில் அஷ்வின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐ. சி. சி. பந்துவீச்சாளர் தரநிலையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததன் மூலம் முதலாம் இடத்தை முதல் தடவையாக அடைந்த பாகிஸ்தானின் யாசிர் ஷா ஐந்தாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவர் ஓல்ட் ட்ரஃபோர்டில் நடைபெற்ற இ…
-
- 0 replies
- 377 views
-
-
பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள்: காதல் களமானது ஒலிம்பிக் மைதானம் ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார். …
-
- 1 reply
- 430 views
-
-
இலங்கை முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இந்தப் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெறுகிறது. குறித்த போட்டியில் இலங்கை அணியின் புதிய தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார். http://tamil.adaderana.lk/news.php?nid=84871
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள இலங்கை – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது. சர்வதேச ஒருநாள் தரநிலை வரிசையில் 6 ஆம் இடத்திலிருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்திலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 11 ஆம் இடத்திலிருக்கும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இந்தத் தொடரில் தோல்விக…
-
- 28 replies
- 1.2k views
-