விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்திய உள் நாட்டு கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் அங்கீகாரமும் ஈழத்துக் கிரிக்கெட் அணியும் வினையூக்கி பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் (ICC) விதிகளின் படி, அதன் துணை / இணை உறுப்பினராக , ஒரு நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வாரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . கிரிக்கெட்டிற்காக ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டு வாரியமாகவோ கிரிக்கெட் கட்டுமானம் சரியாக அமைந்து, புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்கும் வாரியமாகக் கூட இருக்கலாம். (may be from a country, or countries associated for cricket purposes, or a geographical area where cricket is firmly established and organised.) இந்த வாரியங்களின் சார்பில் அணிகள் , ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும். எடுத்துக்காட்டாக , மேற்கிந்திய தீவு…
-
- 0 replies
- 370 views
-
-
பந்து வீச்சு ஜாம்பவான்கள் ஸ்டெயின், முரளீதரன் சாதனையுடன் இணைந்தார் சாஹிப் அல்ஹசன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார் அல்ஹசன். வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்…
-
- 0 replies
- 328 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 05 இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைத்த விராத் கோஹ்லி, இலங்கை ஒரு நாள் அணியின் 22ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் 2018 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் குழு நிலை அணிகளின் விபரங்கள் உள்ளிட்டவை இந்தவார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கவுள்ளது.
-
- 0 replies
- 216 views
-
-
ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா? இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டை துதிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் காணப்படுகின்றனர். பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டைப்போல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து வீரர்கள் உட்பட கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பலவீரர்கள் (ஐ.பி.எல்) எனப்படும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி கோடானு கோடி இந்திய ரூபாக்களை அள்ளிச் செல்கின்றனர். முன்னொரு காலத்தில் இங்கிலாந்து சென்ற…
-
- 0 replies
- 436 views
-
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம் Image Courtesy- PTV 2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று (9) இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) நிர்வாக கூட்டத்தினை அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பாரிய விளையாட்டுத் தொடர் ஒன்று நடைபெறும் போது அத்தொடருக்காக விஷேட வரிவிலக்கு வழங்கப்படும். இப்படியான சலுகை ஒன்றை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்திருந்தது. எனினும், இதுவரையில் அப்படியான ஒரு வர…
-
- 0 replies
- 226 views
-
-
சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! யாழ்ப்பாண கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. …
-
- 0 replies
- 452 views
-
-
மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத் பவாரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விட்டது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் கோப்பையை பரிசாக வழங்கினார். கோப்பையைப்…
-
- 0 replies
- 968 views
-
-
தோனியை விலகச் சொல்ல மாட்டேன்: சீனிவாசன் திட்டவட்டம் தோனியை நான் ஏன் விலகச் சொல்ல வேண்டும் என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வகித்து வரும் தோனியை நான் ஏன் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபில் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் சீனிவாசன், தோனி ஆகியோரது ‘முரண்பட்ட இரட்டை நலன்கள்’ குறித்து கேள்வி எழுப்பியது. மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக முடிவுகளை எடுப்பவர் யார்? நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீனிவாசன் குடும்பத்தினருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்…
-
- 0 replies
- 402 views
-
-
தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் …
-
- 0 replies
- 435 views
-
-
அதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 2015 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைகிறார் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே. இவரின் முதல் உலகக் கோப்பைப் போட்டி 1999. பாகிஸ்தானின் சயீத் அப்ரிடிக்கும் இது 5-வது உலகக் கோப்பைத் தொடர். இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல் உலகக் கோப்பைத் தொடர். அதிக உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் முதலில் பெற்றார். கடந்த 1975-ம் ஆண்டு தொடரில் அறிமுகமான மியான்தத், முதல் 6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று, அதிக உலகக்கோப்பைத் தொ…
-
- 0 replies
- 553 views
-
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் அவுஸ்ரேலிய அணி 179 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட…
-
- 0 replies
- 324 views
-
-
இரண்டு மாதங்களில் ஐந்து முறை சதமடிக்கும் வாய்ப்பையிழந்த சச்சின் [27 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த இரு மாதங்களுக்குள் ஐந்து முறை சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதில் 3 முறை நடுவர்களின் தவறான தீர்ப்பால் இந்த வாய்ப்பை இழந்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் பிரிஸ்டலில் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, நடுவரின் அவசர முடிவால் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட சச்சின். சிரித்துக் கொண்டே பெவிலியன் திரும்பினார். இது குறித்து சச்சின் கூறுகையில்; கடந்த இரண்டு மாதங்களுக்குள் நா…
-
- 0 replies
- 912 views
-
-
வங்கதேசத்தில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள்! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு மேலே 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, கேமரா மூலம், பயிற்சிமுறைகளை படம் பிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வங்க தேசத்தில் அனுமதியில்லாமல் இது போன்று ட்ரோன் பறக்க விட தடையிருக்கும் நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் போனது. உடனடியாக அவர்கள் ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ட்ரோன் இறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
ஜேம்ஸ் ஃபாக்னரை மது மீட்பு மையத்துக்கு அனுப்ப கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு! குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னருக்கு 4 போட்டிகளில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. கடந்த ஜுலை 2ஆம் தேதி சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஃபாக்னர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனால் ஒரு நாள் இரவு முழுவதும் போலீஸ் நிலையத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த வழக்கில் மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் இந்த மாத இறுதியில் ஜேம்ஸ் ஃபாக்னர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அ…
-
- 0 replies
- 352 views
-
-
தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் போட்டி மழையால் கைவிடப்பட்டது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 15 ஆவது லீக் போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியில் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. இதில் தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்ட…
-
- 0 replies
- 419 views
-
-
படமாக வெளியாகவிருக்கிறது உலகப் புகழ் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை. உலக புகழ் பெற்ற போர்த்துகீச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு, மிக விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக பெரிய திரையில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்பு இதே போல் ட்மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோருக்கு சினிமாப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்று FIFA விருதுகளை வென்ற ஒரே போர்த்துகீச கால்பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய ரொனால்டோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வீடியோக்கள் என முழுமையான படமாக வெளியாகவிருக்கிறது,அவரது படத்திற்கான 2 நிமிட ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரொனால்டோ தனது வெற்றியின் பின்னணியில் உள்ள தன…
-
- 0 replies
- 310 views
-
-
தங்கப்பந்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் இந்த ஆண்டுக்கான பல்லான் டி. ஆர் விருதுக்கு (தங்கப்பந்து) ரியல்மாட்ரிட் அணியின் ரொனால்டோ, பார்சிலோனா வீரர் மெஸ்ஸி உள்ளிட்ட 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கால்பந்து வீரருக்கு 'பல்லான் டி ஆர்' விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதை ரொனால்டோ பெற்றார். இந்த ஆண்டுக்கான விருதுக்கு 23 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட இந்த 23 வீரர்களில் இருந்து ரசிகர்கள் இ பிபா இணையத்தளத்தில் ஒன்லைன் மூலம் வாக்களிப்பார்கள். இதில் முதல் 3 இடங்களை பெறுபவர்களில் இரு…
-
- 0 replies
- 315 views
-
-
மகேந்திர சிங் தோனியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், அவருக்கு அடுத்ததாக இருக்கும் ரிஷாத் பந்தின் வளர்ச்சி மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகக் கிண்ண போட்டிக்கு முன்பாக தோனியின் துடுப்பாட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் துடுப்பாட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே நடந்துவரும் இருபதுக்கு 20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்…
-
- 0 replies
- 651 views
-
-
முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டின் 5 வது நாளில் இந்த சாதனையை நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஞாயிற்றுக்கிழமை 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார். 33 வயதான ஆஃப்-ஸ்பின்னர் கடைசியாக 2018 டிசம்பரில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் விளையாடும் லெவன் போட்டியை தவறிவிட்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த…
-
- 0 replies
- 701 views
-
-
இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4) பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை வென்றால் எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பத்து முறை மோதியுள்ளன. பத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது. உலகக் கோப்பை என்றாலே இந்தியாவிடம், பாகிஸ்தான் தோற்றுவிடும் என மக்கள் எண்ணுகிறார்கள், இதுவரை ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக, " இந்த உலகக்கோப்பையில் இந்தியாவையும் வெல்வோம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று சாம்பியனும் ஆவோம்" என சூளுரைத்து இந்…
-
- 0 replies
- 1k views
-
-
02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிர…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
ஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஹாங்காங் பிளிட்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் ஆடவுள்ளார். 2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் பெயர் இதுவரை பெரிதாக தடம்பதியவில்லை. இந்நிலையில் எங்கிர…
-
- 0 replies
- 435 views
-
-
டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா? தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி…
-
- 0 replies
- 557 views
-
-
கொஸ்டாவின் கோலினால் வென்று முதலிடத்துக்குச் சென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில், மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்த செல்சி, தாம் பிறீமியர் லீக் சம்பியன்களான 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் முதற்தடவையாக, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தது. சாதாரணமாக போட்டியை ஆரம்பித்த செல்சி, நேரம் செல்லச் செல்ல தமது ஆட்டத்தை வேகப்படுத்தியதுடன், போட்டியின் 41ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்ற கோலின் மூலம் இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து கோல் பெறும் வாய்ப்…
-
- 0 replies
- 254 views
-
-
“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” - யுவராஜ் சிங்கை வஜ்ரமாக்கிய அந்த திமிர்! ஆறு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்ச் அது. 2011 உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணியில் எல்லோரும் திணற, தனி ஆளாக சதமடித்து, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வாங்கினார் யுவராஜ். பெரும் மகிழ்ச்சியோடு உறங்கச்சென்ற யுவராஜுக்கு அந்த இரவு அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. நள்ளிரவு திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்; சில நிமிடங்களில் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட, அடுத்த அரைமணிநேரத்திலேயே பிரச்னை முடிவுக்கு வந்தது. தனக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய பி…
-
- 0 replies
- 824 views
-