Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …

  2. ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 1 என்று அயர்லாந்து அணி சமநிலை செய்துள்ளது. இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணி தமது 100 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தது விஷேட அம்சமாகும். அத்தோடு தமது அணி விளையாடிய முதல் 100 போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் நபி படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முத…

  3. அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 107 ஆண்டுகள் பழமையான கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. சரி தற்போது இத்தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்… ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியில். செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொண்டார். இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்க…

  4. இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட், 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட், குர்ணல் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைதொடர…

  5. ஒரு 'சேம்சைட்' கோலும் 6 தோட்டாக்களும்...! கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. கொலம்பியா அணிதான் கோப்பையை வெல்லும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கணித்திருந்தார். அதற்கேற்றார் போல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. கார்லெஸ் வால்டராமா,ஃபாஸ்டினோ அஸ்பெரிலா,லூயீஸ் ஹெரைரா என உலகின் நட்சத்திர வீரர்கள் கொலம்பிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை கொலம்பிய அணி கோப்பையை வெல்லவில்லையென்றால் இனிமேல் எப்போதும் வெல்லாது என்றும் பத்திரிகைகள் கூறின. கொலம்பிய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் போட்டியை நடத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ருமேனியா என அவ்வளவா…

  6. இறுதி நேரப் பரபரப்பில் அசத்தலாக ஆடி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி. March 17, 2019 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் இழைத்த தவறுகளால் வெற்றியைத் தவறவிட்டது. 221 என்ற இலக்கை மத்திய கல்லூரி நிர்ணயிக்க, 48 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியைச் சுவைத்தது சென்.ஜோன்ஸ் கல்லூரி. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 17ஆவது ஒரு நாள் ஆட்டம், சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. துட…

  7. சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல். ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இண்­டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­ன­போது இர­சி­கர்கள் மத்­தியில் அதற்கு இருந்த மவுசே வேறு. விறு­வி­றுப்­பையும் பர­ப­ரப்­பையும் இர­சி­கர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தி ஆட்டம் கொண்­டாட்­டங்­களில் மிதக்­க­வைத்த இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் வரு­டத்­திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உல­கையும் தன் பால் ஈர்த்து நின்­றது. இதன் பல­னாக அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளிலும் பல்­வேறு பெயர்­களில் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகி பிர­பல்யம் அடைந்­துள்…

  8. ஆண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணியை எதிர்த்து வவுனியா பிரதேசசெயலக அணி மோதியது. பெண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதே…

  9. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல் அணி! யு.இ.ஏ.எப். நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்திற்காக முதல் முறையாக ஆரம்பமான இத்தொடரிலேயே போர்த்துக்கல் அணி சாதித்துள்ளது. 55 நாட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், போர்த்துக்கல் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. போர்த்துக்கலின் எஸ்டாடியோ டூ ட்ராகோ விளையாடட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளு…

  10. டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு! டென்னிஸ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளின் விபரத்தை தற்போது பார்க்கலாம், இந்த தரவரிசைப் பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, முதலிடத்திற்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார். …

  11. Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தத…

  12. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.. இதன் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக இன்­ஸமாம் அறி­வித்­துள்ளார். இந்­தி­யாவில் அண்­மையில் நடை­பெற்ற உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் சுப்பர் 10 சுற்­றுக்கு ஆப்­கா­னிஸ்­தானை இன்­ஸமாம் முன்­னேற்­றி­யி­ருந்தார். அப் போட்­டியில் சம்­பி­ய­னான மேற்­கிந்­தியத் தீவு­களை கடைசி லீக் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் வெற்­றி­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ் வருட இறு…

  13. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு,பி, சரவணமுத்து மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் ப…

  14. பயிற்சி போட்டி; இந்தியா 338 ரன்கள் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், 22ம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி “டிரா’ ஆனது. சென்னையில் துவங்கிய (3 நாட்கள்)இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா “ஏ’, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இந்தியா “ஏ’ அணி கேப்டன் காம்பிர் “பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்திய “ஏ’ அணிக்கு கேப்டன் காம்பிர், ஜிவன்ஜோத் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜிவன்ஜோத் சிங் 24 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் காம்பிர், தனது சிறப்…

  15. அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…

    • 0 replies
    • 1.2k views
  16. உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் போட்டியில் கார்ல்சென்-செர்ஜி கர்ஜாகின் மோதிய காட்சி. நியூயார்க் : மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின், …

  17. இந்திய அணிக்கு அபராதம்! அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது. …

    • 0 replies
    • 586 views
  18. ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட் இந்த ஆண்டு தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற நான் எடுத்த முடிவால் எனக்கு ஒரு கவலையும் இல்லை . காரணம் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டேன் என்கிறார் உசைன் போல்ட் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் இடம்பெறவுள்ள தடகள சம்பியன் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் , தான் ஓய்வு பெறப்போகிறேன் என்பதைத் தீர்மானமாக அறிவித்துள்ளார் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரான இந்த அற்புத வீரர். மொனாக்கோவில் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவர் கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் . முன்னாள் சிறந்த தடகள வீரரான மிச்சேல் ஜோன்சனை இதே கேள்வியை நான் முன்பு கேட்டிருந்தேன் . …

  19. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கூட்டம் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் தலைவர் நா . நவரத்தினராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு நடை பெற்றது . இந்தக் கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் றஞ்சித றொட்றிக்கோ செயற்பாட்டு முகாமையாளர் அனுரடிசில்வா மற்றும் குருணாகல் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொருளாளர் கே . சத்தியராஜ் உட்பட மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்குக்கு உட்படட் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் . யாழ் நிருபர் . http://www.ttnnews.com/othernews/5655-2013-12-13-13-24-16

  20. பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல் அ-அ+ பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpoo இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்விய…

  21. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர் அ-அ+ குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு…

  22. டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி சதமெடுத்த ராஸ் டெய்லர். - படம். | ஏ.எஃப்.பி. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்க…

  23. சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட டென்னிஸ் ஆடுகளம் Your browser does not support iframes. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தி…

  24. ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: டில்சான் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ண டில்சான் தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று கொழும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது தொடரை 5-2 என கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 101 ஓட்டங்களை பெற்ற டில்சான் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த டில்சான் தனது ஓய்வு குறித்து கருத்து கருத்து தெரிவிக்கையில். இந…

  25. அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ் 27-12-2014 அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.