விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் இன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கை கிரிக்கெட்டு அணி மீது கடந்த 2009-03-3 ஆம் திகதியன்று பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை…
-
- 0 replies
- 544 views
-
-
தோல்வியின் விரக்தி: தலைநகர் பரிஸில் வாகனங்கள் பி.எஸ்.ஜி. இரசிகர்களால் எரிப்பு! சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிரான்ஸின் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, தோல்வியடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத இரசிகர்கள், தலைநகர் பரிஸில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். டா லூஸ் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், தலைநகரில் இப்போட்டியைக் காணுவதற்கு ஒன…
-
- 2 replies
- 544 views
-
-
பட மூலாதாரம்,RAMESH BABU படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை …
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான இங்கிலாந்து பெண்! டெர்பிசெயரைச் சார்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பான சாவ்லி அன்ட் லாங் ஈடன் ஆண்கள் கிரிக்கெட் அணி, ராச்செல் ஹோப்கின்ஸ் என்ற பெண்ணை தனது இரண்டாம் தர அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதன் மூலம், 250 ஆண்டு கால டெர்பிசெயர் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் அணியை வழிநடத்தப்போகும் முதல் பெண் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ள ஹோப்கின்ஸ், வெற்றிக்குப் பாலினம் ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபித்துள்ளார். இதுவரை ஆண்கள் அணியை மிகவும் சொற்ப பெண்கள் மட்டுமே வழிநடத்தியுள்ளனர். அந்தப் பெருமை தற்போது ஹோப்கின்சுக்கும் கிடைத்துள்ளது. கிரிக்கெட்டில் ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டாலும…
-
- 0 replies
- 544 views
-
-
தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியுடனான ஒரு போட்டியைக் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இந்த குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும் உள்வாங்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத நிலையிலேயே சந்திமால் T-20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். இறுதியாக, கடந்த வருடம் இந்தியாவுடனான T-20 போட்டியில் விளையாடிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபாதை காரணமாக தொடர்ந்து இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான T-20 தொடர் மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடர் என்பவற்றில்…
-
- 0 replies
- 544 views
-
-
கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் செஸ் விளையாட்டு மாறிப் போச்சு - விஸ்வநாதன் ஆனந்த் . சென்னை : தமிழகத்தை சேர்ந்தவரும், ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கணினி வந்த பின் செஸ் விளையாட்டு மாறியதை பற்றி பேசி உள்ளார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் செஸ் விளையாட்டைப் பற்றி பகிர்ந்து கொண்டார். செஸ் விளையாட்டின் அணுகுமுறை, அதனால் ஏற்படும் அழுத்தம், தான் ஓய்வு பெறலாம் என நினைத்த போது தான் பெற்ற முக்கிய வெற்றி என பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். என் அண்ணன், அக்கா செஸ் ஆடும் போது எனக்கு ஆறு வயது. அப்போது நான் என் அம்மாவிடம் எனக்கும் செஸ் கற்றுத் தருமாறு கேட்டேன். திடீ…
-
- 0 replies
- 544 views
-
-
சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…
-
- 0 replies
- 544 views
-
-
மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரின் ஓய்வு இலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் தனது இறுதி டெஸ்ட் போட்டியை தற்போழுது காலி மைதானத்தில் விளையாடிவருகிறார். காலி கிரிகெட் மைதானத்தில் தனது முதலாவது டெஸ்ட் போட்டிகளை ஆரம்பித்த அவர். அதே மைதானத்தில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் ஹேரத்தின் வருகை இலங்கை அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. என்றாலும் தற்போது 40 வயதைக் கடந்துள்ள ஹேரத் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இடம்பெற்ற 3 டெஸ்ட் தொடர்களினும் முழுமையாக விளையாடவில்லை. இன்று தனது இறு…
-
- 0 replies
- 544 views
-
-
'ஸ்பெஷல் ஒன் ' அதிரடி நீக்கம் : செல்சியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் மொரின்ஹோ! பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான செல்சி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து, நேற்று ஜோஸ் மொரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான தோல்விகள் மோரின்ஹோ நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. நடப்பு சாம்பியனான செல்சி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. யார் இந்த மொரின்ஹோ ? உலகின் முன்னணி கால்பந்து பயிற்சியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் தன்னைத் தானே ‘ஸ்பெஷல் ஒன்’ என்று கூறிக்கொள்வார். போர்ச்சுகலைச் சேர்ந்த இந்த மொரின்ஹோ கால்பந்தை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் நேசித்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம்தான். அம்பியாய் இருக்கும் அணிகளை அந்நியனாக…
-
- 0 replies
- 543 views
-
-
அறிமுக வருடத்திலேயே அபாரம் காண்பிக்கும் புனித பத்திரிசியார் வீரர்கள் இலங்கை கால்பந்தில் அதிக ரசிகர்களையும், அது போன்றே மிகப் பெரிய அளவிலான கால்பந்து பிரியர்களையும் கொண்ட பிரதேசமாக உள்ள யாழ்ப்பாணம், தற்பொழுது தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பல கால்பந்து வீரர்களை தன்னிடம் இருந்து தேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், நீண்ட கால கால்பந்து வரலாற்றைக் கொண்ட யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியும் தேசிய மட்டத்தில் தமது நாமத்தை வெளிப்படுத்தும் ஒரு கல்லூரியாக மாற்றம் பெற்று வருகின்றது. தன்னகத்தே கொண்டுள்ள திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலமே இன்று இக்கல்லூரி இந்த அளவு பிரபலம் கண்டுள்ளது. …
-
- 0 replies
- 543 views
-
-
பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…
-
- 0 replies
- 543 views
-
-
அமெரிக்க டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக ஜப்பானிய வீராங்கனை தகுதி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட ஜப்பானிய வீராங்கனை நயோமி ஒஸாகா தகுதிபெற்றுள்ளார். கடந்தாண்டு இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்த அமெரிக்க வீராங்கனை மடிஸன் கீஸுக்கு எதிராக அமெரிக்க நேரப்படி நேற்றையதினம் பின்னிரவுவேளையிலும் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் நயோமி ஒஸாகா 6ற்கு 2 6ற்கு 4 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். 20வயதுடைய ஒஸாகா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தனது விருப்பத்திற்குரிய வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்ளவுள்ளார். முன்னதாக செரீனா அரையிறுதி…
-
- 0 replies
- 543 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 543 views
-
-
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. ப…
-
- 0 replies
- 543 views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். இவர் 29 கி.மீ. போட்டி தூரத்தை சைக்கிளில் 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]வரும் 11ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ள கிறிஸ்டினுக்கு, 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வென்ற கிறிஸ்டின், சைக்கிள் …
-
- 1 reply
- 543 views
-
-
'அதுதான் கிரிக்கெட்' - பங்கஜ் சிங் விரக்தியில் தெளிவு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகப் பெயர் பெற்று போராடி இந்திய அணிக்குள் நுழைந்த ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அருமையாக வீசியும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதுதான் அறிமுக பவுலர் ஒருவரின் முதல் டெஸ்ட்டின் மோசமான பந்து வீச்சு என்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 1.98மீ உயரமுடைய நல்ல உடற்கட்டு கொண்ட இந்த வேகப்பந்து வீச்சாளர் பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு விளையாட முடியவில்லையெனில் நான் இனி ராஜஸ்தானுக்கும் ஆடப்போவதில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல, நிறைய சம்பாதித்து விட்டேன், கிரிக்கெட் எனது மூச்சு, இந்தியாவுக்கு விளையாடாமல் எனது கனவு சிதைந்து போய்விடும். என்று கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு…
-
- 0 replies
- 543 views
-
-
மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இழந்துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறாமையே அவர் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு கடந்த மாதம் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சீரான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே மலிங்கவை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 க…
-
- 0 replies
- 543 views
-
-
ஜெயவர்தனா அசத்தல் சதம் ஜூலை 24, 2014. கொழும்பு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஜெயவர்தனா சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று கொழும்புவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜெயவர்தனா சதம்: இலங்கை அணிக்கு தரங்கா (11) நிலைக்கவில்லை. குசல் சில்வா அரை சத (44) வாய்ப்பை இழந்தார். ஸ்டைன் வேகத்தில் சங்ககரா ‘டக்’ அவுட்டானார். பின் ஜெயவர்தனா, மாத்யூஸ் ஜோடி பொறுப்புணர்ந்து விளையாடியது. ஸ்டைன் பந்துவீச்சில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். சிறப்பா…
-
- 0 replies
- 543 views
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 10:47 AM 2027 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டின் பெண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஜேர்மனி நடத்தும் எனவும் சர்வதேச கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திய கத்தார். 2027 முதல் முதல் தடவையாக கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளது. தலைநகர் தோஹாவில் தற்போதுள்ள அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எ…
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்"…
-
- 3 replies
- 543 views
-
-
24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார். இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்ம…
-
- 5 replies
- 543 views
-
-
"தற்கொலை செய்ய நினைத்தேன்" - சுயசரிதையில் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் தோல்வி... இரண்டும் சேர்ந்து வதைக்க, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கெள்ள நினைத்ததாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பிராட் ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர். 1996-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவரால், ஷேன் வார்ன் புகழ் வெளிச்சத்துக்கு முன் பிரகாசிக்க முடியவில்லை. ஆனாலும், 2003 மற்றும் 2007 ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 2008-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் …
-
- 0 replies
- 543 views
-
-
லார்ட்ஸில் டி-சர்ட்டைக் கழற்றி சுழற்றியது தவறுதான்: கங்குலி 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்தை வென்ற பிறகு தனது சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. அப்போது அது ஒரு சர்ச்சையைக் கிளப்பினாலும் அதற்கு முந்தைய தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் பயணம் செய்து ஒருநாள் தொடரை சமன் செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளிண்டாப் தனது சட்டையை மைதானத்திலேயே கழற்றினார். பிளிண்டாஃபின் இந்தச் செயலுக்கு பதிலடியாக கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆக்ரோஷமாகச் சுழற்றியதாகவே அப்போது பார்க்கப்பட்டது. இந்நிலையில், "2002-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தை வென்ற பிறகு, நான் லார்ட்ஸ் மைதானத்தின் என டி-சர்டை கழற்றி ஆக்ரோஷமாக சுழற்றியது …
-
- 0 replies
- 543 views
-
-
சார்ஜாவில் 1991 ஒக்டோபர் 25 ஆம் நாள் நடந்த வில்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவிட்டின் அபாரமான பந்துவீச்சு! மேகதிக தகவல்களுக்கு: http://www.espncricinfo.com/ci/engine/current/match/65946.html
-
- 0 replies
- 542 views
-
-
'எம்.எஸ்.தோனி' படம் என் புகழ்பாடாமல் வாழ்க்கைப் பயணத்தையே பதிகிறது: தோனி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனி. | படம்: ஏ.பி, “எம்.எஸ்.தோனி-தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் என் புகழ்பாட எடுக்கப்பட்டதல்ல, எனது போராட்டங்கள், பயணங்கள் பற்றியதே என்று இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகும் இந்தத் திரைப்படத்தின் விளம்பர பரப்புதலுக்காக தன் மனைவி சாக்ஷி, படத் தயாரிப்பாளர் அருண் பாண்டே ஆகியோருடன் அமெரிக்கா சென்றுள்ளார் தோனி. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “நான் பாண்டேயிடம் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறினேன், என்னை உய…
-
- 1 reply
- 542 views
-