விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7845 topics in this forum
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் சதத்தைப் பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஹமத் ஷா நிகழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதே ரஹ்மத் ஷா ஆப்கானிஸ்தானின் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்தாடியது. அதன்பிறகு தனது இரண்டாவது போட்டியாக தற்போது பங்களாதேஷ் அணியுடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றது. பங்களாதேஷில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதி…
-
- 0 replies
- 400 views
-
-
புடினின் படத்துடனான ரி-சர்ட்டால் வெடித்தது சர்ச்சை February 19, 2016 துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கெதிரான போட்டியின்போது, ரஷ்ய கால்பந்து அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியின் பின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் ரி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படத்துடன் தான் அணிந்திருந்த ரி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் பனிப்போர் நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்துடன் கூடிய ரி-சர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஜ.எஸ் தீவிரவாதிகளுக…
-
- 0 replies
- 461 views
-
-
ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில் கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணி சம்பியனானது. ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மியாமி கார்டின்ஸில் நேற்று அதிகாலை நடைபெற்ற குறித்த 54ஆவது சுப்பர் போலில், தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் அணியும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணியும் மோதின. இந்நிலையில், மூன்றாவது காற்பகுதி முடிவில் 20-10 என்ற புள்ளிகள் கணக்கில் சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் முன்னிலையில் காணப்பட்டிருந்தபோதும், …
-
- 0 replies
- 692 views
-
-
இலங்கையுடன் மோதப் போகும் ஆஸி அணி இதுதான் ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26-ம் திகதி தொடங்குகிறது. இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்…
-
- 0 replies
- 301 views
-
-
வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா சாப்பல்-ஹேட்லி ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி. | படம்: ஏஎப்பி. மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. …
-
- 0 replies
- 233 views
-
-
கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார். 6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத…
-
- 0 replies
- 320 views
-
-
39 சிக்ஸ், 14 பவுண்டரியுடன் டி20 போட்டியி்ல முச்சதம் விளாசிய டெல்லி வீரர் டி20 கிரிக்கெட் போட்டியில் 39 சிக்சர்களுடன் முச்சதம் அடித்து டெல்லி பேட்ஸ்மேன் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். டெல்லியில் கிளப் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் - பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரி…
-
- 0 replies
- 429 views
-
-
தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில், ரோஞ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் டி20 மற்றும் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட…
-
- 0 replies
- 344 views
-
-
ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை ஆர். அபிலாஷ் லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம். 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே…
-
- 0 replies
- 465 views
-
-
பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார். லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடி…
-
- 0 replies
- 279 views
-
-
சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி Tamil சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப வ…
-
- 0 replies
- 525 views
-
-
சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…
-
- 0 replies
- 277 views
-
-
உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி சாதனை படைத்தார் க்ளோஸ். 1990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு …
-
- 0 replies
- 511 views
-
-
சகோதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை பாக்.கிரிக்கெட் சபை சீரழிக்கின்றது : கம்ரான் அக்மல் சசோதரனுக்கு விக்கெட் காப்பளர் பணியைக் கொடுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும் நிர்வாகிகளும் சீரழிக்கின்றனரென கம்ரான் அக்மல் குற்றம் சாட்டியுள்ளார். கம்ரான் அக்மல் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வாளர்கள் தனது சகோதரர் மற்றும் அணியில் நடு வரிசை துடுப்பாட்டக்காரராக உள்ள உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்ரான் அக்மல் தெரிவிக்கையில், ஒருநாள் ம…
-
- 0 replies
- 698 views
-
-
புது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்' இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கில…
-
- 0 replies
- 566 views
-
-
நெதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்கள்; பாகிஸ்தானை 360 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா 18 DEC, 2023 | 01:12 PM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நான்கு நாட்களில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 360 ஓட்டங்களால் அமோக வெற்றியிட்டியது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடராகவும் அமையும் இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொண்டது. முதலாவது இன்னிங்ஸில் டேவிட் வோர்னர் குவித்த சதம், மிச்செல் மார்ஷ் 2 இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், 2ஆவது இன்னிங்ஸில் உஸ்மான் …
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் January 20, 2019 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலப் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்ற நிலையில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை எதிர்த்து விளையாடிய முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றில் நுழைந்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் வீனஸ்…
-
- 0 replies
- 480 views
-
-
நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா? நல்ல பந்து வீச்சாளர்களா?: தோனி வேகப்பந்து வீச்சாளர்கள் மீது தோனி சாடல். | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு எதிராக 1-2 என்று ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, ஆட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். நேற்றைய ஆறுதல் வெற்றி குறித்து தோனி, கூறும் போது, “ரன்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், இந்தப் போட்டியில் ரன்கள் குவித்தோம். நமது பவுலர்களுக்கு கூடுதலாக 10-15 ரன்களைக்கான சவுகரியம் அளிக்கும் போது ஆட்டம் சுவாரசியமாகிறது. சில வேளைகளில் இத்தகைய, பந்துகள் மெத…
-
- 0 replies
- 331 views
-
-
டோனி பாய்ச்சல் . Monday, 25 February, 2008 10:59 AM . சிட்னி, பிப்.25: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு முன்னணி ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாததே காரணம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். . சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அந்த அணி முதலில் ஆடி 317 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காம்பீர் அதிரடியாக ஆடி 113 ரன்களை குவித்தார். உத்தப்பா அரை சதம் அடித்தார். இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் எனும் நிலையில் தடுமாறிய நிலையில் இந்த வீரர்கள் அபாரமாக ஆடி வெற்றிக்காக போராடினர். …
-
- 0 replies
- 886 views
-
-
’’கடுமையாக திட்டுவார் ரணதுங்கா அதனால் நான் அழுவேன்’’ சமிந்த வாஸ் January 04, 2016 இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா தலைமையில் உலகக்கிண்ணம் வென்று வரலாறு படைத்தது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தான் ரணதுங்காவின் துருப்பு சீட்டாக இருந்தார். வாஸ் கூறுகையில், “1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிவிரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும் தான் எனது முக்கிய பணியாக கொடுக்கப்பட்டது” என்றார். அவர் மேலும் கூறுகையில், ”நான் ரணதுங்கா…
-
- 0 replies
- 570 views
-
-
ஹபீஸுக்கு பந்துவீச தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொஹமட் ஹபீஸுக்கு ஒருவருட காலம் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. விதிமுறைகளை மீறி ஹபீஸ் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்தே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள சுப்பர் லீக் போட்டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது தொடர்பாக ஐ.சி.சி. முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டின் ஆரம்ப கட்ட அவதானிப்புகளில் ஹபீஸின் பந்துவீச்சில் தவறுகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த தீர்…
-
- 0 replies
- 810 views
-
-
உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த By Mohamed Azarudeen - ©ICC இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்தது. இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் இளையோர் அணி, இந்திய இளையோர் அணியை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடரின் சிறந்த பதினொருவர் அணி, ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 640 views
-
-
எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு Leftin May 2, 2020 எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு2020-05-02T09:21:45+00:00விளையாட்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளின் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது. தவிர பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கவும், இதற்குப் பதில் வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ஆஸ்திரேலிய வ…
-
- 0 replies
- 729 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும்! டெஸ்ட் போட்டி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கவாஸ்கர், டிராவிட், சச்சின், லாரா, பிராட்மேன், காலிஸ், வார்னே, அம்புரோஸ், இங்கிலாந்தின் ஸ்விங் பிட்ச்கள், ஆளுயர பவுன்சர் ஆகும் பெர்த் பிட்சுக்கள், சூழலில் கலங்கடிக்கும் நாக்பூர் வகையறா பிட்ச்கள் இதெல்லாம்தானே..! இதையும் தாண்டி பலருக்கும் டெஸ்ட் போட்டி என்றால் சட்டென தோன்றுவது 'டிரா' என்பதுதான். 'டெஸ்ட் போட்டிகள் என்றால், வீரர்கள் எல்லாரும் டொக்கு வைத்துக்கொண்டே இருப்பார்கள், ரிசல்ட் கிடைக்காது' என ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் அலுத்துக்கொள்வாரக்ள். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வெவ்வேறான பார்வை இருக்கும…
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சி மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற நேற்றைய தினம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான 06 நாள் பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த உள்ளக பயிற்சி நிலையமானது, இலங்கை கிரிக்கெட் சபையின் கனவுத்திட்டங்களுள் ஒன்றான நாடு தழுவிய ரீதியில் வீரர்களின் த…
-
- 0 replies
- 353 views
-