Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 2024 மகளிர் பிரீமியர் லீக்: ஏலம் டிசம்பரில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக நடத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடியது. ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://th…

  2. Published By: DIGITAL DESK 3 25 NOV, 2023 | 12:04 PM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது. அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்ப…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்திரசேகர் லூத்ரா பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை, நவம்பர் 23) நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்ற அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். ஹர்திக் பாண்டியா இல்லாததால், அணியின் தலைமை பொறுப்பு சூர்ய குமா…

  4. நடுநிலையான உலகக்கிண்ண மைதானம் தேவை - பாகிஸ்தான் Published By: NANTHINI 13 MAY, 2023 | 10:18 AM (நெவில் அன்தனி) செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தமது பரம வைரிகள் பாகிஸ்தானுக்கு வருகை தர மறுத்தால், தமது அணியின் உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடான இந்தியாவுக்கு வெளியே நடுநிலையான விளையாட்டரங்குகளில் நடத்த வெண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் கோரியுள்ளார். அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்காக அட்டவணை, மைதானங்கள் ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிடத் தவறியுள்ளது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட…

  5. 10 NOV, 2023 | 09:06 PM ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது. குறிப்பாக இலங்கை கிரிக்கெட் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருப்பது போன்றவை மீறப்பட்டுள்ளன. இடைநிறுத்தத…

  6. 22 NOV, 2023 | 08:14 PM (ஜே.ஜி.ஸ்டீபன்) பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது. இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. …

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றான ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்? விரிவாகப் பார்க்கலாம். ஸ்டாப் கிளாக் விதிமுறை ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. கோப்பையை வெல்லாவிடினும், இந்தியா தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டித் தொடர் ஆடுகளத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வலிமையை வெளிப்படுத்திய அதே சமயம், கிரிக்கெட் குடும்பத்திற்குள் உள்ள சில முறிவுகளையும் உரசல்களையும் வெளியே கொண்டுவந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்வதெனில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இதனால் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் அண்டை நாடுகள…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் நெஜி பதவி, பிபிசி செய்தியாளர் 21 நவம்பர் 2023 மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் கனவு கனவாகவே முடிந்துள்ளது. போட்டி முழுவதும் சிங்க மனதுடன் விளையாடிய இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் முன் ஆதரவற்ற நிலையில் காணப்பட்டது. இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. போட்டி முடிந்ததும், ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் சோகமான முகத்துடன் படிக்கட்டுகளில் ஏறி டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பிக் க…

  10. Published By: VISHNU 17 NOV, 2023 | 11:05 AM (எம். எம். சில்வெஸ்டர் ) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த எஸ். மிதுன் ராஜ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 34ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்றைய தினம் சாம்பிரதாய பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிறு வரை நடைபெறவுள்ள இப்போட்டி விழாவில் நாடு முழுவதிலிருந்தும் 15 வயது முதல் 29 வயது வரையான 3000 க்கும் அதிகமான வீ…

  11. பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட் விற்கப்பட்டது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகமத்தின் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோருவது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியின்ற…

  12. இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம். இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்த இடைக்கால குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க, ஐரங்கனி பெரேரா, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, பட்டய கண…

  13. 06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…

  14. 31 OCT, 2023 | 10:41 AM 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்களுமாக 60 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி 8 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் இடம்பெற்ற உலகக் கி…

  15. இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார். இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார். R Tamilmirror Online || பெர்ஸி அபேசேகர காலமானார்

  16. தென்னாப்ப்ரிக்காவின் குவிண்டன் டி காக் உலகின் தலைசிறந்த ஒருநாள், டி-20 மட்டையாளர்களில் ஒருவர். இந்த 2023 உலகக்கோப்பையில் அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அளித்திருக்கிறார். மிகச்சிறந்த ஆட்டநிலையில் உள்ள அவர் இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடி, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமையை காரணங்களாக அவர் குறிப்பிட்டாலும் உலக அளவில் நடக்கும் டி-20 தனியார் ஆட்டத்தொடர்களில் ஆடும் விருப்பமும், அதனால் கிடைக்கும் பெருஞ்செல்வமும் ஏற்படும் நேரமின்மையுமே இந்த துரித ஓய்வுக்கு நிஜக்காரணம் என்பது வெளிப்படையானது. ஏற்கனவே இந்த டி-20 கூட்டநெரிசலில் மே.இ அணியின் கணிசமான நட்சத்திர வீரர்கள் தம் நாட்டுக்காக ஆடுவதில்ல என முடிவெடுத்ததில் அந…

  17. உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன Published By: VISHNU 12 OCT, 2023 | 07:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன. டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த…

  18. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி, கத்தார் மாஸ்டர்ஸ் 2023 போட்டியில் தோற்கடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு விளையாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், அஜர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா…

  19. ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட். 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது. குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. 141-வது சர்வதேச ஒலிம்பிக்…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், அபய் குமார் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டி…

  21. பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது 06 NOV, 2022 | 07:04 AM இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்…

  22. 04 OCT, 2023 | 10:25 AM ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந் 28 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/166031

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஷகீல் அக்தர் பதவி, பிபிசி உருது.காம், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் நிறுவனமான ‘ட்ரீம் 11’க்கு வருமான வரித்துறை சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை வரியைக் கோரி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸை எதிர்த்து 'ட்ரீம் 11' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. வரி நோட்டீஸ் வந்ததை அடுத்து, 'ட்ரீம் 11' நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிந்தன. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேஸினோ போன்றவற்றுக்கு இந்திய அரசு 28 சதவிகித வரி விதிக்கிறது என்பது நினைவில் கொ…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …

  25. பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER படக்குறிப்பு, “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.” - இது தான் தனது தாரக மந்திரம் என்கிறார் பவானி தேவி. 2 மணி நேரங்களுக்கு முன்னர் “வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்” தான் சோர்வடையும் போதெல்லாம் இந்த சொற்களை உச்சரித்து உற்சாகமடைவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். வாள்வீச்சு விளையாட்டில் இந்தியாவின் பெயரை, பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவர் தற்போத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.