Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆசிய கோப்பை 2023: போட்டிகள், இடங்கள் தொடர்பில் அறிவிப்பு ஆசிய கோப்பை 2023 ஒகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 13 ஒருநாள் போட்டிகளில் நடைபெறவுள்ளன. நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படுகின்றது. 2023 பதிப்பு இரண்டு குழுக்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்குத் தகுதி பெறும். சூப்பர் ஃபோர் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறு…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை” எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின் வாசனை கூட இல்லாமல் வந்த இந்த வார்த்தை, இந்திய அணி 8-வதுமுறையாக ஆசியக் கோப்பையை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசியதாகும். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை ஒரு தரப்பாக மாற்றி, இலங்கை அணியை தனது பந்து…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. கபில்தேவ் தலைமையிலான இந…

  4. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273303

  5. 14 SEP, 2023 | 10:13 AM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி 91ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்பநாளான புதன்கிழமை (13) 4 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் சாதனைகள் நிலைநாட்டியது குறிப்பிடத்தக்க விடயமாகும். சிறுவர்கள் பிரிவில் 3 புதிய சாதனைகளும் சிறுமிகள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ரி. மெண்டிஸ…

  6. Published By: RAJEEBAN 13 SEP, 2023 | 12:03 PM பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இலங்கையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வீரர் ஒருவர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி டுனித் வெல்லாலகே என்ற இளம் வீரரைகண்டுபிடித்துள்ளதுபோல சாருஜன் சண்முகநாதனும் இலங்கையின் எதிர்கால வீரர் என வக்கார் யூனுஸ்தெரிவித்துள்ளார். வெல்லாலகே எவ்வளவு திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட வீரர் எதிர்காலத்திற்கான ஒருவர் என தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் இலங்கையில் திறமைக்கு என்றும் குறைவில்லை. இந்த சிறிய ச…

  7. ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ்(46) தான் பதவி விலகப் போவதில்லை என்று ஒரு பக்கம் அடம் பிடித்துக் கொண்டிருக்க மறு புறம் அவரது தாயார், தனது மகனுக்கு எதிரான ‘இரத்த வேட்டையை நிறுத்துங்கள், நடந்த சம்பவத்தின் உண்மையைச் சொல்ல ஜெனிபர் ஹெர்மோசோவை அழைத்து வாருங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து தேவாலயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். மகளிருக்கான உலகக் கால் பந்து விளையாட்டுப் போட்டியில் (20.08.2023) ஸ்பெயின் அணி, இங்கிலாந்து அணியை 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டின் கால் பந்தாட்டத் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ், ஆட்ட வீராங்கனையான ஜெனிபர் ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டிருந…

  8. ”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இன்று வரை சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்வதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார். நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந…

  9. 07 SEP, 2023 | 10:16 AM இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் முதல் தடவையாக இங்கிலாந்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தத…

  10. சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…

  11. பட மூலாதாரம்,FIDE 21 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிடே உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். அரையிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை டைபிரேக்கர் ஆட்டத்தில் அவர் வீழ்த்தினார். பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதுகிறார். அரையிறுதியில் பிரக்ஞானந்தா அசத்தல் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2…

  12. அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இந்தப் பழுதூக்கும் போட்டி இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றதோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில், 110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார். https://thinakkural.lk/article/271007

  13. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் 10 பதங்கங்களை ஊர்காவற்றுறை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சுவீகரித்தள்ளது. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. இதில் 3 முதலிடங்களையும், 4 இரண்டாமிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும், 5 நான்காமிடங்களையும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். https://thinakkural.lk/article/271004

  14. விராட் கோலிக்கு எச்சரிக்கை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் எதிருவரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . 10 ஆண்டுகளாக ஐசிசி கிண்ணத்தை வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையி…

  15. 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம் ஆரம்பம் Published By: SETHU 20 JUL, 2023 | 06:30 AM (ஆர்.சேது­ராமன்) 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­­கின்­றது. சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் 9ஆவது தட­வை­யாக நடத்தும் இப்­போட்­டி­களை அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்­து­கின்­றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை முதல் தட­வை­யாக 32 அணிகள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. இதற்­கு முன் அதி­க­பட்­ச­மாக 24 அணி­களே பங்­கு­பற்­றின. முத­லா­வது போட்­டியில் நியூ­ஸி­லாந்து…

  16. 07 AUG, 2023 | 04:36 PM இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனது ஒய்வை அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். பல வருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன், சர்வதேச போட்டிகளில்…

  17. கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 – ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது. கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார். ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளிய…

  18. இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…

  19. உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஜெமெய்க்காவிடம் இலங்கை பெருந்தோல்வி 29 JUL, 2023 | 01:56 PM (நெவில் அன்தனி) கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கு 2இல் வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற ஜெமெய்க்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் 25 - 105 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை பெருந் தோல்வி அடைந்தது. அத்துடன் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டிகளில் 100 கோல்களுக்கு மேல் புகுத்திய முதலாவது அணி என்ற பெருமையை ஜெமெய்க்கா பெற்றுக்கொண்டது. உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் ஜெமெய்க்கா 100 கோல்களைப் போட்டது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். அத்துடன் முழு உலகக் கிண்ண வரலாற்றிலும் ஓர் அணி 100 கோல்களுக…

  20. இறுதிச்சுற்று நோக்கி தமிழீழ அணி / CONIFA Asia Cup 2023

    • 0 replies
    • 697 views
  21. ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து 17 JUN, 2023 | 06:23 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 3ஆவது அத்தியாயத்தின் அங்குரார்ப்பண போட்டியாகவும் அமைந்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. நொட்டிங்ஹாமில்…

  22. காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் adminJuly 31, 2023 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியை 02:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. இப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இலுப்பக்கடவை மகா வி…

  23. முதலாவது டெஸ்டில் இலங்கையை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான் Published By: VISHNU 20 JUL, 2023 | 01:09 PM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சிக்கான தனது முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக ஆரம்பிப்போம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலு…

  24. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா - அஸ்வின் அரிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெளிநாடுகளில் சிறப்பான பந்துவீச்சு, 5 விக்கெட் வீழ்த்தியது, 700 விக்கெட்டுகளைக் கடந்தது என அஸ்வின் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார். அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் டோமினிகாவில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அற்புதமாகப் பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரின் டெஸ்ட் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.