விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
-
- 29 replies
- 2.7k views
-
-
மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர். ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்…
-
- 25 replies
- 1.4k views
-
-
தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்… தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் அன்பு மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார். காவியன் https://thinakkural.lk/article/213996
-
- 1 reply
- 734 views
- 1 follower
-
-
கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார். ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன. அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பய…
-
- 0 replies
- 523 views
-
-
1983ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு குடிதான் காரணம்: ராட்னி ஹாக் ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 31 ஆண்டுகள் கழித்து தோல்வி கண்டது. அதாவது 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட பிறகு நேற்று மீண்டும் தோல்வி கண்டது. இந்தத் தோல்விகளை அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் மீது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு முதல் நாள் இரவு கடுமையாக, கேன் கேனாக குடித்ததே காரணம் என்று அந்த அணியில் இடம்பெற்றிருந்த ராட்னி ஹாக் தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைய…
-
- 0 replies
- 467 views
-
-
இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார். "இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன்,…
-
- 0 replies
- 452 views
-
-
சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…
-
- 0 replies
- 454 views
-
-
அட மிஸ்டர். கூல் கூட சண்டைக்கு போயிருக்காருப்பா...! ( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் தோனிக்கு 'கூல் கேப்ட' என்ற செல்லப் பெயர் உண்டு.ஆனால் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உண்மையிலேயே மிக கூலான மனிதர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜென்டிலாக பல விஷயங்களில் நடந்து கொண்ட நிஜ கிரிக்கெட்டர். ஆனால் இவர் கூட ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரரருடன் சண்டைக்கு போன வரலாறும் உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோகைப் அக்தருடன் ராகுல் டிராவிட் கோபத்தில் சண்டைக்கு போன வீடியோ காட்சி இது. இருவருக்கும் வாக்குவாதம் நடந…
-
- 0 replies
- 324 views
-
-
என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டோணி கூறியுள்ளதாவத…
-
- 4 replies
- 460 views
-
-
''அர்ஜென்டினாவுக்காக மெஸ்சி விளையாடக் கூடாது'' !-சக வீரர் கருத்தால் சர்ச்சை தாய்நாட்டுக்காக சோபிக்க முடியாத மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக இனிமேல் விளையாடக் கூடாது என்று சக வீரர் கார்லெஸ் டவெஸ் விமர்சித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது ஜொலிக்கும் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் போது மட்டும் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அண்மையில் முடிவடைந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம்அர்ஜென்டினா தோல்வி கண்ட போதும் இந்த விமர்சனம் எழுந்தது. அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, அர்ஜென்டினா அணியின் தற்போதைய பயிற்சியாளர் மார்ட்டினோ ஆகியோரும் கூட தேசிய அணிக்காக விளையாடும் போது மெ…
-
- 0 replies
- 796 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சண்டிக்க ஹத்துறுசிங்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் பதவி காலத்தை நீடிக்காது இருப்பதற்கு நிறைவேற்று குழுவில் தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான போட்டிகளின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முழு பயிற்சியாளர்களையும் நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, ஸ்ரீலங்கா கிரிக்…
-
- 0 replies
- 403 views
-
-
சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில், சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி…
-
- 0 replies
- 445 views
-
-
தேசிய கீதத்தின் போது அநாகரீகமாக நடந்த அவுஸ்திரேலிய வீரர் February 11, 2016 அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தேசிய கீதம் பாட அவுஸ்திரேலிய வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அப்போது சக வீரர் ஆடம் சம்பாவின் இடுப்பில் கை வைத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டார். இது அங்கிருந்த கமெராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்த காவாஜா, ”ஹா..ஹா.. எனது பின் பக்கம் க…
-
- 0 replies
- 324 views
-
-
டி20 போட்டிகளுக்கு அறிமுகமாகும் புதிய சுப்பர் ஓவர் விதிமுறைகள் By Mohammed Rishad - சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இங்கிலாந்தில் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் அணிகள் பெற்ற பௌண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐ.சி.சி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப…
-
- 0 replies
- 591 views
-
-
பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுதிரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், குழு 'A' யில் இந்திய அணியுடன் கலமிறங்கிய இலங்கை மகளிர் அணியை, 33 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணியின் கெப்டன் சாமரி 33 ஓட்டங்களை குவித்தார். தில்ஹரி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றார். இதே வேளை இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 114 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, 32…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
400மீ. ஓட்டத்தில் சாதனை அமெரிக்காவில் உள்ள லேவா நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கிரெனடாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தார். அவர் பந்தயத் தூரத்தை 44.08 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் அதிவேகத்தில் 400 மீட்டர் ஓட்டத் தூரத்தை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். http://www.virakesari.lk/article/5839
-
- 0 replies
- 540 views
-
-
ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். சாதனைப் படைத்துள்ள எரிக் துசீங்கிஸிமானா வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க …
-
- 0 replies
- 606 views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஞாயிறன்று ஆரம்பம் வருடாந்தம் நடத்தப்படும் மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளின் வரிசையில் இரண்டாவதாக இடம்பெறும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் ஞாயிறன்று ஆரம்பமாகி ஜூன் மாதம் 5ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது. இப் போட்டிக்கான மொத்த பணப்பரிசு 32, 017,500 ஸ்டேர்லிங் பவுண்ட்களாகும். ஒற்றையர் பிரிவில் சம்பியனாகும் ஆணுக் கும் பெண்ணுக்கும் தலா 2,000,000 ஸ்டேர்லிங் பவுண்டுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இரட்டையர், கலப்பு இரட்டையர், சக்கர இருக்கை டென்னிஸ் போட்டிகள் ஆகியவற்றுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படும். இப் போட்டிக…
-
- 3 replies
- 701 views
-
-
ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடர…
-
- 84 replies
- 9.7k views
-
-
ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333
-
- 0 replies
- 341 views
-
-
மத்திய கல்லூரி வெற்றியைத் தழுவியது யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடத்திய 20வயதுப்பிரிவு ஆண்களுக்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி சம்பியனானது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் மத்திய அணியை எதிர்த்து சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. முதல் பாதி முடிவில் 2:1 என்று மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மத்திய கல்லூரி மூன்றாவது கோலை பதிவு செய்து 3:1 என்ற கணக்கில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. http://onlineuthayan.com/sports/
-
- 0 replies
- 646 views
-
-
48 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ரியல் மாட்ரிட் 48 போட்டிகளில் தொடர்ந்து கோல்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது லா லிகா புகழ் ரியல் மாட்ரிட். லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்கு கடும் எதிரியாகத் திகழ்ந்து வருவது ரியல் மாட்ரிட். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பொறுப்பேற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாம்பியன்ஸ் லீக் முதல் அரையிறுதி (First Leg) போட்டியில் மான்செஸ்டர் அணிக்கெதிராக கோல்கள் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அதன்பின் அந்த அணி 34 வெற்றிகள், 11 …
-
- 0 replies
- 343 views
-
-
ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…
-
- 0 replies
- 351 views
-
-
ISWOTY - பலக் முதல் அவ்னி வரை: இந்தியாவின் மாற்றுத்திறனாளி பெண் வீராங்கனைகளின் முன்னேற்ற பயணம் வந்தனா தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி இந்திய மொழிகள் 24 மார்ச் 2022, 05:57 GMT முதல் பார்வையில், 19 வயதான பலக் கோலி எந்த ஒரு சாதாரண இளம் பெண்ணைப்போலவே தெரிகிறார். சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான - சமூக ஊடகங்களில் நிபுணராக திரையில் ஸ்க்ரோல் செய்யும் ஒரு பெண். ஆனால் பாட்மின்டன் மைதானத்தில் பலக்கைப் பார்க்காத வரையில் மட்டுமே உங்களின் இந்த என்ணம் இருக்கும். (பிபிசியின் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வாக்களிப்பு முடிந்தது. முடிவுகள் மார்ச் 28 அன்று அறிவிக்க…
-
- 1 reply
- 510 views
- 1 follower
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…
-
- 0 replies
- 185 views
-