விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…
-
- 0 replies
- 468 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/1563161736296-1-715x450.jpg சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம் ஓர் அணி ந…
-
- 0 replies
- 468 views
-
-
ரூ.60 லட்சத்துக்கு விலை போன பிராட்மேன் சட்டை! சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் விளையாட்டின்போது அணிந்த சட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை 60 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 1936–37ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் பிராட்மேன் பயன்படுத்தி இருந்த மேல் சட்டைதான் அது. தற்போது அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=52117
-
- 0 replies
- 467 views
-
-
உலகக் கிண்ணத்தை நடத்துகிறது வட அமெரிக்கா 2026ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் நடாத்துவதற்கு, மொராக்கோவைத் தோற்கடித்து தெரிவாகியுள்ளன. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/உலகக்-கிண்ணத்தை-நடத்துகிறது-வட-அமெரிக்கா/44-217678
-
- 1 reply
- 467 views
-
-
ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ் உலகக்கிண்ண அதிரடி இரட்டைக் கோல் வீரர் ஜேர்மனியின் டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் கிளப் அணிக்காக 6 ஆண்டுகாலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேயர்ன்மியூனிச் அணிக்காக விளையாடி வந்த நிலையிலேயே அவருக்கு இப்புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பிரேஸிலில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கிண்ண தொடரில் பிரேஸில் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் 24 வயதான குரூஸ் இரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்களைப்போட்டு அதிரவைத்தார். அப்போட்டியில் ஜேர்மனிஇ பிரேஸிலை 7–-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டிருந்தது. இந்நிலையிலேயே உலகக்கிண்ண தொடரின் குரூஸின் சிறப்பான திறமை வெளிப்பாடு காரணமாக ரியல் மெ…
-
- 2 replies
- 467 views
-
-
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295984
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி 6 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் ம…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-
-
தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…
-
- 0 replies
- 467 views
-
-
கடைசி 5 ஆண்டுகளில் 90 வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்: ரஷித் லடீப் சாடல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சன மழை பொழிந்துள்ளனர். முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரஷீத் லடீஃப் கூறும் போது, “கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இதைவிட மோசமனது நாம் அவர்களை நல்ல நிலையில் ஆடுவதற்கான கால அவகாசத்தையும் கொடுக்கவில்லை என்பதே. தொடக்க ஆட்ட ஜோடிகளில் 19 வேறுபட்ட சேர்க்கையை முயற்சி செய்துள்ளோம். பந்துவீச்சில் கேட்கவே வேண்டாம்.. நிறைய வீச்சாளர்கள் வந்தார்கள்.. சென்றார்கள்..இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி நிலைபெறவில்லை” என்றார். …
-
- 0 replies
- 467 views
-
-
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது. கழக கால்பந்தாட்ட தொடர்களில் ஒட்டுமொத்த வரலாற்றில் 10 000 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் 10 ஆயிரமாவது கோலை போட்ட பெருமையை பெற்றார் மெஸ்ஸி. சமீபத்தல் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலானது கழக கால்பந்தாட்ட வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலா அமைந்தது. லாலிகா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வரலாற்றில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார். இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஜேர்…
-
- 0 replies
- 467 views
-
-
1983ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு குடிதான் காரணம்: ராட்னி ஹாக் ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 31 ஆண்டுகள் கழித்து தோல்வி கண்டது. அதாவது 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட பிறகு நேற்று மீண்டும் தோல்வி கண்டது. இந்தத் தோல்விகளை அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் மீது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு முதல் நாள் இரவு கடுமையாக, கேன் கேனாக குடித்ததே காரணம் என்று அந்த அணியில் இடம்பெற்றிருந்த ராட்னி ஹாக் தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைய…
-
- 0 replies
- 467 views
-
-
சச்சின் சாதனைகளை கோலி தாண்டுவாரா? புள்ளிவிவரங்கள் சொல்லும் கணிப்புகள்! இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.…
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்க ஓபன் ; பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரிட்டிஷ் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நியோர்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் கீரிஸின் மரியா சக்காரியை எதிர்கொண்டார் எம்மா ரடுகானு. இந்த ஆட்டத்தில் எம்மா ரடுகானு, 6-1 6-4 என்ற கணக்கில் மரியா சக்காரியை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 44 ஆண்டுகளின் பின்னர் ஒரு பெரிய தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பிரிட்டிஸ் பெண் இவர் ஆவார். இதேவேளை அமெரிக்க ஓபன் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் …
-
- 2 replies
- 467 views
- 1 follower
-
-
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை: தேதிகளை முடிவு செய்ய கூட்டம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள். தொடக்கம் முதலே கத்தார் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது. கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படு…
-
- 0 replies
- 467 views
-
-
[size=3] உலகக் கோப்பை T - 20 பாக் - குடன் மோதி இலங்கை வெற்றி - ரொம்ப சந்தோசப்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்..? ஈழதேசம் பார்வையில்..![/size] [size=3] என்ன நடந்தது..? என்ன மாயம் நடந்தது என்று கிரிக்கெட் விளையாட்டை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தான் இந்த கேள்வி. இந்திய அணி எவ்வாறு தோற்றது..? நமது கணிப்புப்படி அல்ல பெரும் பெரும் கார்ப்பரேட்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு பிரகாரம் இந்தியாவும் இலங்கையும் பைனலில் விளையாடி, கப்பை இலங்கை அணி வெல்ல வேண்டும் என்பது தான் முடிவு. இந்த முடிவில் ஏன் திடீர் மாற்றம் ஏற்பட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இந்திய அணியை அரை இறுதி களத்தை விட்டு வெளியே தள்ளியது. திரை மறைவு பேரங்களில் பாகிஸ்தான் க்ரூப் பணியவில்லை, அதாவது தொகையை கூட கே…
-
- 0 replies
- 467 views
-
-
பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு, மெஸ்சி வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவரை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, சுவாரஸ் மற்றும் நெய்மர் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது. மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணி…
-
- 2 replies
- 467 views
-
-
மனைவி சொன்னால் ஓய்வு பெறுவேன்: பெடரர் உங்களுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை’ என்று மனைவி எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் (ஓய்வு) கொள்கிறேன் என்று சொல்லி விடுவேன் என்று பெடரர் கூறியுள்ளார். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்து ஜாம்பவான் 35 வயதான ரோஜர் பெடரர் அளித்த பேட்டியில், ‘எனது மனைவி மிர்கா தான் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். அவர் இல்லாவிட்ட…
-
- 0 replies
- 467 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் டோனி,ரெய்னா 11-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி,ரெய்னா களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சென்னை: 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் ஆகிய 2 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குஜராத் லயன்ஸ், ரைசிங்புனே ஆகிய அணிகளின் ஒப்பந்தம் முடிகிறது. …
-
- 1 reply
- 466 views
-
-
எப்போதும் வலியில் இருப்பவர் போல் தோன்றுகிறார் டன்கன் பிளெட்சர்: பாய்காட் கருத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு ரவி சாஸ்திரியை அணி இயக்குனராக நியமித்ததைப் பாராட்டிய ஜெஃப் பாய்காட், பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது கேலி விமர்சனத்தைத் தொடுத்துள்ளார். "நான் டன்கன் பிளெட்சரை ஒரு போதும் பெரிய அளவுக்கு ஆதரிப்பவன் அல்ல. மனிதருக்கு சிரிக்கவே தெரியாது. முசுட்டுத் தோற்றம் உடையவராக இருக்கிறார். எப்போதும் வலியில் இருப்பவர் போலவே அவர் இருக்கிறார். மனிதர், தான் நேசிக்கும் வேலையைச் செய்வதற்கு நிறைய பணம் அளிக்கப்படுகிறது, ஆகவே கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு ஆகியவை தேவை. அவரது முசுட்டுத்தனம் நிச்சயம் இந்திய அணியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது என்று நான் நம்புகிறே…
-
- 0 replies
- 466 views
-
-
ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
உலகக் கிண்ணப் போட்டிகளில் 48 நாடுகள்; பீபா வாக்கெடுப்பு இன்று இன்னும் ஒன்பது வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48ஆக உயர்த்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம் (பீபா FIFA) திட்டமிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனொ பெரும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். இந் நிலையில் சூரிச்சில் இன்று கூடும் பீபா பிரதிநிதிகள் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா என்பது குறித்து நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந…
-
- 1 reply
- 466 views
-
-
பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…
-
- 0 replies
- 466 views
-
-
மே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிர…
-
- 0 replies
- 466 views
-
-
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ந…
-
- 0 replies
- 466 views
-
-
உலக கோப்பை கிளப் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் ஜப்பானில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. யோகஹமா : கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)-கிளப் அமெரிக்கா அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிலப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் …
-
- 0 replies
- 466 views
-