விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் 10 பதங்கங்களை ஊர்காவற்றுறை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சுவீகரித்தள்ளது. வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. இதில் 3 முதலிடங்களையும், 4 இரண்டாமிடங்களையும், 3 மூன்றாமிடங்களையும், 5 நான்காமிடங்களையும் குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேசிய மட்ட நீச்சல் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். https://thinakkural.lk/article/271004
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 646 views
-
-
விராட் கோலிக்கு எச்சரிக்கை இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் எதிருவரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . 10 ஆண்டுகளாக ஐசிசி கிண்ணத்தை வெல்லாத இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையி…
-
- 1 reply
- 406 views
-
-
2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஆரம்பம் Published By: SETHU 20 JUL, 2023 | 06:30 AM (ஆர்.சேதுராமன்) 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமாகின்றது. சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் 9ஆவது தடவையாக நடத்தும் இப்போட்டிகளை அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடைபெறவுள்ளது. இம்முறை முதல் தடவையாக 32 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இதற்கு முன் அதிகபட்சமாக 24 அணிகளே பங்குபற்றின. முதலாவது போட்டியில் நியூஸிலாந்து…
-
- 85 replies
- 6.7k views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 04:36 PM இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனது ஒய்வை அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். பல வருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன், சர்வதேச போட்டிகளில்…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 – ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது. கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார். ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளிய…
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…
-
- 5 replies
- 321 views
- 1 follower
-
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் ஜெமெய்க்காவிடம் இலங்கை பெருந்தோல்வி 29 JUL, 2023 | 01:56 PM (நெவில் அன்தனி) கேப் டவுன் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கு 2இல் வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற ஜெமெய்க்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் 25 - 105 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை பெருந் தோல்வி அடைந்தது. அத்துடன் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டிகளில் 100 கோல்களுக்கு மேல் புகுத்திய முதலாவது அணி என்ற பெருமையை ஜெமெய்க்கா பெற்றுக்கொண்டது. உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் ஒரு போட்டியில் ஜெமெய்க்கா 100 கோல்களைப் போட்டது இது இரண்டாவது சந்தர்ப்பம் ஆகும். அத்துடன் முழு உலகக் கிண்ண வரலாற்றிலும் ஓர் அணி 100 கோல்களுக…
-
- 10 replies
- 523 views
- 1 follower
-
-
இறுதிச்சுற்று நோக்கி தமிழீழ அணி / CONIFA Asia Cup 2023
-
- 0 replies
- 708 views
-
-
ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து 17 JUN, 2023 | 06:23 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 3ஆவது அத்தியாயத்தின் அங்குரார்ப்பண போட்டியாகவும் அமைந்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. நொட்டிங்ஹாமில்…
-
- 23 replies
- 1.2k views
- 1 follower
-
-
காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் adminJuly 31, 2023 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியை 02:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. இப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இலுப்பக்கடவை மகா வி…
-
- 0 replies
- 311 views
-
-
முதலாவது டெஸ்டில் இலங்கையை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான் Published By: VISHNU 20 JUL, 2023 | 01:09 PM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சிக்கான தனது முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக ஆரம்பிப்போம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலு…
-
- 5 replies
- 455 views
- 1 follower
-
-
முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா - அஸ்வின் அரிய சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெளிநாடுகளில் சிறப்பான பந்துவீச்சு, 5 விக்கெட் வீழ்த்தியது, 700 விக்கெட்டுகளைக் கடந்தது என அஸ்வின் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார். அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் டோமினிகாவில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அற்புதமாகப் பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரின் டெஸ்ட் …
-
- 8 replies
- 927 views
- 1 follower
-
-
Published By: SETHU 17 JUL, 2023 | 10:24 AM விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில்அல்காரஸ் தோற்கடித்தார். 20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். 36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார். …
-
- 10 replies
- 593 views
- 1 follower
-
-
மூன்றாவது முறையாக தங்கம் வென்றது வடக்கு அணி ! நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் வடக்கு மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய சம்பியனாகியகியதுடன் தேசிய பொது விளையாட்டு நிகழ்வில் உதைபந்தாட்டத்தில் மூன்றாவது தங்கத்தினை தனதாக்கியிருக்கிறது. வடக்கு அணி சார்பில் தேசிய வீரரும் குருநகர் பாடும்மீன் கழக வீரருமான கீதன் இரு கோலினையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதுடன் கீதன் இத் தொடரில் 4 கோல்களை வடக்கு மாகாண அணிசார்பில் அடித்ததுடன், அக் கோல்கள் அரைய…
-
- 0 replies
- 218 views
-
-
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 01 JUL, 2023 | 10:29 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கே. பரேஷித் குவித்த அரைச் சதம், ரீ. கஜநாத், கே. தரணிசன், எஸ். பரத்வாசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன முதல் நாள் ஆட்டத்தில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்த உதவின. கொழும்பு இந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 183 ஓட்டங்களுக்கு பதிலளித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. பலோ ஒன் முறையில் …
-
- 1 reply
- 678 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 10:22 PM (நெவில் அன்தனி) இந்த மாணவி கொட்டிலில் வாழ்ந்துவருபவர். வீட்டுப் பாடங்களை, மீட்டல்களை வீதி விளக்கு வெளிச்சத்திலேயே நிறைவேற்றிவருகிறார். அல்லது வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் கற்றுவருறார். இத்தனை குறைகளுக்கு மத்தியிலும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் தங்கப் பதுமையாக வலம்வருகிறார். அண்மைக்காலமாக ஐபிஎல்லில் அசத்தியவர்கள் சிலரைப்பற்றி உள்நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டுவந்த நிலையில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் அசத்திவரும் நம் நாட்டின் அதுவும் நம் இனத்தவரின் சோகக் கதையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது பொருத்த…
-
- 5 replies
- 759 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 04 JUN, 2023 | 11:16 AM இலங்கை ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது. பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த வேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்ப…
-
- 4 replies
- 399 views
- 1 follower
-
-
Novak Djokovic ன் 23 ஆவது பிரான்ஸ் கிண்ணத்தை வென்றார்.
-
- 2 replies
- 382 views
-
-
Published By: VISHNU 26 MAY, 2023 | 03:50 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு 48 கோடியே 37 இலட்சத்து 31,040 பணப்பரிசாக கிடைக்கவுள்ளது. அப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இந்தந் தொகையில் சரிபாதி பணப்பரிசு (241,865,520 ரூபா) கிடைக்கும். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய 9 அணிகளுக்கும் மொத்தமாக (3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 114 கோடியே 88 இலட்சத்து 61,220 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும். இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நியூஸிலாந்துடன் 2…
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை 02 JUN, 2023 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது. ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இலங்கையினால் நிர்ணயிக்…
-
- 5 replies
- 472 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 JUN, 2023 | 03:15 PM (நெவில் அன்தனி) லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடந்து முடிந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புகழ்பெற்ற சகலதுறை ஆட்டக்காரராக இருந்தும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்ற போதிலும், துடுப்பாட்டம், பந்துவீச்சில் ஈடுபடாமலும் விக்கெட் காப்பாளராக செயற்படாமலும் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த முதலாவத…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்! டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. https://thinakkural.lk/article/229868
-
- 177 replies
- 11.4k views
- 1 follower
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…
-
- 0 replies
- 505 views
-