Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள். வணக்கம் கள உறவுகளே. செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக இருக்கும் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகளையும் ஓட்ட விபரங்களையும் இந்தப் பகுதியில் பேசிக் கொள்வோமா?

  2. இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையை சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. இலங்கையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகளும், திசரா பெரேரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த தடுமாற்றம் கடைசிவரை நீடித்தது…

  3. 20 ஆண்டுகள் ஆடிய பெரிய ‘தலைகள்’ சாதிக்காததை கோலி தலைமையில் சாதிக்கிறோம்: ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் சாஸ்திரி. - படம்.| ஏ.பி. பழைய அணியில் மிகப்பெரிய பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் ஆடிய இந்திய அணியினால் இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை, கோலி தலைமையிலான இந்த அணியே இதனைச் சாதித்துள்ளது என்று ரவி சாஸ்திரி பட்டவர்த்தனமாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: இந்த இந்திய அணியில் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் 2 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர். இப்போது இவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இதற்கு முந்தைய இந்திய அணியும், மிகப…

  4. 20 இன் கீழ் பீபா மகளிர் கால்­பந்­தாட்டம்; வட கொரியா உலக சம்­பியன் 2016-12-05 09:51:44 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பீபா (FIFA) உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் வட கொரிய மகளிர் அணி சம்­பி­ய­னா­னது. பிரான்ஸ் இரண்டாம் இடத்­தையும் ஜப்பான் மூன்றாம் இடத்­தையும் பெற்­றன. பப்­புவா நியூ கினியில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் பிரான்ஸை எதிர்த்­தாடி வட கொரியா 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்­றி­பெற்று உலகக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது. 20 வய­துக்­குட்­பட்ட மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் 10 வரு­டங்­களின் பின்னர் இரண்­டா­வது தட­வை­யாக வட கொரியா சம்­பி­ய­னா­…

  5. 20 இருபது இந்திய தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்க இல்லை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டித் தொடரிலும் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி இந்திய இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இப்போட்டியில்,நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,லசித் மலிங்கவுக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ஜீவன் மெண்டிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் வாரியம் கூறியுள்ளது.இதுவரை 68 போட்டிகளி…

  6. 20 ஓவர் உலக கோப்பையில் டி.ஆர்.எஸ், ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர்: ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்துவது மற்றும் ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என்று ஐ.சி.சி.யின் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு…

  7. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது [07 - July - 2008] சிம்பாப்வே பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலக சிம்பாப்வே ஒப்புக்கொண்டது. அதேசமயம், ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தில் தொடர்ந்துமிருக்கும். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் துண்டித்தன. சமீபத்தில் சர்ச்சைக்குரிய மறுதேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் சிம்பாப்வே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். முகாபே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இங்கிலாந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 20…

    • 0 replies
    • 725 views
  8. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்! மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்ற…

  9. 20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் …

  10. 20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். ஐதராபாத்: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128…

  11. 20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? - கேப்டன் கோலி பதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:- இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந…

    • 0 replies
    • 297 views
  12. 20 ஓவர் போட்டிக்காக டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள்: முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ் ஆதங்கம் 20 ஓவர் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக பல வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக மேற்கிந்தியத்தீவுகளை சேர்ந்த முன்னாள் வீரர் சர் கேரி சோபர்ஸ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். சோபர்ஸ், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டரில் ஒருவர், கிரிக்கெட் உலகில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தொடர்ந்து விளாசி முதல் வீரரும் கேரி சோபர்ஸ் தான். இப்போது 78 வயதாகும் அவர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்பாக இணையதளத்தில் மேலும் கூறியுள்ளது: இப்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் போட்டி என்பது கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு, பல வீரர்கள் விரைவாகவே …

  13. 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்! 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக். கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. இதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றி…

  14. 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு October 27, 2018 மேற்கிந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய முன்னாள் அணித் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . எனினும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி முழுமையாக முழுமையாக ஓய்வு பெறவில்லை எனவும் தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத், விளக்கம் அளித்துள்ளார். தோனி 93 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/100859/

    • 1 reply
    • 402 views
  15. 20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம் 24 நாடுகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளன. நியூஸிலாந்து, யுக்ரைன், ஐக்கிய அமெரிக்கா, மியன்மார் (குழு ஏ), ஆர்ஜென்டீனா, பனாமா, கானா, ஆஸ்திரியா (குழு பி), கத்தார், கொலம்பியா, போர்த்துகல், செனகல் (குழு சி), மெக்ஸிகோ, மாலி, உருகுவே, சேர்பியா (குழு டி), நைஜீரியா, பிறேஸில், வட கொரியா, ஹங்கேரி (குழு ஈ), ஜேர்மனி, ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், ஹொண்டுராஸ் (குழு எவ்.) ஆகிய 24 நாடுகள் ஆறு குழுக்களில் மோதவுள்ளன. நடப்பு சம்பியன் பிரான்ஸ் இப்போட்டிக ளுக்கு தகுதிபெறாதமை விசேட அம்சமாகும். லீக் சுற்றில் 36 போட் டிகள் நடைபெறவுள்ளன. லீக் சுற…

  16. 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்…

  17. 20 விக்கெட்டுகளை வீழ்த்த உங்கள் உதவி அவசியம்: ஹர்பஜனிடம் விராட் கோலி ஹர்பஜன் சிங். | கோப்புப் படம். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ள ஹர்பஜன் சிங், தான் அணிக்குள் வர ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மிகவும் விரும்பினர் என்று கூறியுள்ளார். பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நான் ஓய்வறைக்குள் நுழைந்த போது முற்றிலும் புதுமுகங்கள் காணப்பட்டன. இவ்வளவு புதிய வீரர்களுடன் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது. ஓய்வறையில் விராட் கோலி பேசும்போது, என்னைக் குறிப்பிட்டு, 'நீங்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்குத் தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்த உதவி புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சீசனில் நீங்கள் எங்களில் ஒரு…

  18. 20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான் இருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது. இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கா…

  19. 200 மில்லியன் யூரோ செலவில் லோட்ஸ் மைதானம் அபிவிருத்தி October 28, 2015 இங்கிலாந்து லோட்ஸ் கிரிக்கட் மைதானம் 200 மில்லியன் யூரோ செலவில் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய பரிமாணம் பெறவுள்ளது. உலகின் மிகப்பிரபலமான கிரிக்கட் மைதானமான இந்த லோட்ஸ் மைதானம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆ­ஸ் தொடரின் போது புதிய தோற்றத் துடன் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலன் அரங்கு, 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டேவன் அரங்கு இரண்டும் இடிக்கப்படவுள்ளது. மேலும் புதிய திட்டத்தில் இரு உணவகங்கள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கைகள் ஆகியன அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 30 ஆயிரத்து 530 பார்வையாளர்கள் உள்ளடக்கக் கூடியதாக இது அமையவு…

  20. 200 மீ ஓட்டம் இறுதியில் உசைன் போல்ட்: அமெரிக்க வீரர் காட்லின் அதிர்ச்சி வெளியேற்றம் வெற்றியைக் கொண்டாடும் உசைன் போல்ட் | படம்: ஏஎஃப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தோற்று வெளியேறினார். 3 அரையிறுதிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிக்குத் தகுதி பெறுவார்கள். உசைன் போல்ட் அனாயசமாக முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார், அதாவது 19.78 விநாடிகளில் 200 மீ இலக்கை கடந்தார் உசைன் போல்ட், இவருக்கு அடுத்தபடியாக நெருக்கமாக வந்த கனடாவின் டி கிராஸ் 19.80 விநா…

  21. 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் உலக சாதனை Published By: SETHU 10 MAR, 2023 | 04:50 PM பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய (backstroke) நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெய்லீ மெக்கோவ்ன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சிட்னியில் இன்று ஆரம்பமான நியூ சௌத் வேல்ஸ் மாநில பகிரங்க நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடங்கள், 03.14 விநாடிகளில் நீந்திய புதிய உலக சாதனையை கெய்லி மெக்கோவ்ன் நிலைநாட்டினார். அமெரிக்காவின் ரேகான் ஸ்மித் 2019 ஆம் ஆண்டு உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில் 2 நிமிடம் 03.35 விநாடிகளில் நீந்தியமையே இதுவரை உலக சாதனையாக இருந்தது. 21 வயதா…

  22. 2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள் கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆ…

  23. 2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி 2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி …

  24. 2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…

  25. 201 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 46 ஓட்டங்களையும், மஹெல ஜெயவர்த்தன 22 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வௌியேறினர். சமிந்த எரங்க ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களைப் பெ…

    • 14 replies
    • 784 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.