விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
உலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரரென ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் நிரூபித்தார். ரியோவில் இன்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் 19.78 செக்கனில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் உசைன் போல்ட் பெறும் 3 ஆவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது Virakesari
-
- 3 replies
- 570 views
-
-
நெய்மரின் அதிவேக கோல் சாதனையுடன் இறுதியில் பிரேசில் வெற்றியை கொண்டாடு பிரேசில் வீரர் நெய்மர் (மஞ்சள் ஆடை) | படம்: ஏ.பி. ரியோ ஒலிம்பிக் போட்டி கால்பந்தாட்டத்தில் ஹோண்டூராஸ் அணியை பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் மூலம் இறுதியில் ஜெர்மனியைச் சந்திக்கிறது. 2014 உலகக்கோப்பையில் 7-1 என்ற கோல் கணக்கில் தங்கள் சொந்த மண்ணில் தங்களை மண்ணைக் கவ்வ வைத்து அழவிட்ட ஜெர்மனியை வீழ்த்த இன்னொரு சந்தர்ப்பம் பிரேசில் அணிக்குக் கிடைத்துள்ளது. சனிக்கிழமையன்று பிரேசில்-ஜெர்மனி இறுதி நடைபெறுகிறது. நெய்மர் ஆட்டம் தொடங்கி 15-வது விநாடியில் கோல் அடித்து அதிவேக தொடக்க கோலுக்கான ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியதோடி மே…
-
- 0 replies
- 403 views
-
-
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் முறையாக ஜமைக்காவுக்கு தங்கம் ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் தங்கப் பதக்கம் வென்றார். 22 வயதான ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்கா பதக்க மேடையை தவறவிடுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டின் தேவோன் ஆலன் 5-வது இ…
-
- 0 replies
- 310 views
-
-
எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்கிறேன்: ரியோவில் சாக்ஷி மகிழ்ச்சி பதக்கத்துடன் சாக்ஷி மாலிக் | படம்: ஏஎஃப்பி '12 ஆண்டு உழைப்பின் பலன்' ரியோவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் மகிழ்ச்சி "ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!" ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்…
-
- 1 reply
- 343 views
-
-
200 மீ ஓட்டம் இறுதியில் உசைன் போல்ட்: அமெரிக்க வீரர் காட்லின் அதிர்ச்சி வெளியேற்றம் வெற்றியைக் கொண்டாடும் உசைன் போல்ட் | படம்: ஏஎஃப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தோற்று வெளியேறினார். 3 அரையிறுதிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிக்குத் தகுதி பெறுவார்கள். உசைன் போல்ட் அனாயசமாக முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார், அதாவது 19.78 விநாடிகளில் 200 மீ இலக்கை கடந்தார் உசைன் போல்ட், இவருக்கு அடுத்தபடியாக நெருக்கமாக வந்த கனடாவின் டி கிராஸ் 19.80 விநா…
-
- 0 replies
- 329 views
-
-
ஆட்டத்தின் ஒவ்வொரு துறையிலும் தோற்கடிக்கப்பட்டோம்: ஸ்மித் கடும் ஏமாற்றம் லங்கைக்கு எதிராக முதன் முதலாக ஒயிட்வாஷ் வாங்கிய கேப்டன் என்ற எதிர்மறைச் சாதனைக்குரியவரான ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், தோல்வி குறித்து கடுமையாக ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். “எப்படி இவ்வாறு நிகழ்ந்தது என்பதை புரிந்து கொள்ள உண்மையில் கடினமாக உள்ளது. மீண்டும் ஒரு கடினமான தொடரை எதிர்கொண்டோம், துணைக்கண்டத்தில் தொடர்ச்சியான 3 ஒயிட்வாஷ் தோல்விகள்! நாங்கள் தொட்டது எதுவும் துலங்கவில்லை. பேட்ஸ்மென் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை. ஸ்பின் பவுலர்களின் நிலையும் அதுதான். வேகப்பந்து வீச்சாளர்களை நான் குறை கூற மாட்டேன். குறிப்பாக ஸ்டார்க் உண்மையில் தன்னை அர்ப்பணித்து வீசினார். பேட்டிங்கு, ஸ்பின் …
-
- 0 replies
- 248 views
-
-
பிரேசில் ரசிகர்களின் கலாய்ப்பு கூச்சலால் தங்கம் இழந்த பிரான்ஸ் வீரர் பதக்க மேடையில் கண்ணீர்! பிரேசில் ரசிகர்களின் கேலிக்கூச்சல் பதக்க மேடை வர தொடர வெடித்து வரும் அழுகையை அடக்க முயலும் பிரான்ஸ் போல்வால்ட் வீரர் ரெனோ லாவினெலி. | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்…
-
- 0 replies
- 367 views
-
-
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்... சாதித்த சாக்ஷி மாலிக்! ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய ஆரவாரம் இந்தியாவில் குறைந்த நேரத்தில், புதிதாய் ஒரு நம்பிக்கை பிறந்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பி.வி.சிந்து பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு, இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர், மல்ய…
-
- 0 replies
- 409 views
-
-
போல்வால்ட்டில் பிரேசில் வீரர் சாதனை போல்வால்ட் பந்தயத்தில் சாதனை படைத்த பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா. படம்: ராய்ட்டர்ஸ். ஆடவருக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் தியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாகவும் இருந்து வந்தது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் …
-
- 0 replies
- 313 views
-
-
ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் காலிறுதிப் போட்டியில் சிந்து | படம்: ஏஎப்பி உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக…
-
- 0 replies
- 355 views
-
-
பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…
-
- 0 replies
- 330 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகள் ஒயிட்வாஷ் தொடரின் நாயகன் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி. 33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இல…
-
- 0 replies
- 309 views
-
-
23 தங்கம் வென்ற பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மைக்கேல் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் இந்தப் ஒலிம்பிக் போட்டியோடு 23 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளார். 2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார் பெல்ப்ஸ். இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்துள்…
-
- 0 replies
- 374 views
-
-
ஹாக்கி: பெல்ஜியத்திடம் காலிறுதியில் இந்தியா தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்தது பெல்ஜியத்துடனான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய சோகத்தில் இந்திய வீரர்கள் | படம்: ஏ.பி. ஹாக்கியில் வெண்கலமாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது, காலிறுதியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது. முதலில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார், ஆனால் பெல்ஜித்தின் செபாஸ்டியன் டாக்கியர் 2 கோல்களை அடிக்க பெல்ஜியம் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி சமன் செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, கடைசி கவுன்ட்டர் அட்டாக்கில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் 3-வது கோலை அடித்து இந்திய வாய்ப்புக்கு ‘சீல்’ வைத்தார். …
-
- 0 replies
- 447 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பெற தகுதியானதே: மிஸ்பா உல் ஹக் Updated: August 15, 2016 17:17 IST | ஏ.எஃப்.பி கோப்புப் படம்: ஏ.பி. ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-2 என்று பாகிஸ்தான் சமன் செய்ததையடுத்து தன் அணி முதலிடம் பெற தகுதி வாய்ந்ததே என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை இலங்கை 2-0 என்று வீழ்த்துவதும், மே.இ.தீவுகள் இந்தியாவுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியை டிரா செய்வதும் நிகழ்ந்தால் பாகிஸ்தான் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். இதுவரை 2-ம் இடமே அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி பிடித்துள்ளது. இந்நில…
-
- 0 replies
- 319 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை ஈ ஷிவுக்கு, அதே நாட்டை சேர்ந்த “டைவிங்” வீரர் குயின் கை பதக்க மேடையில் வைத்து திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இரத்தினத்திலான மோதிரம் ஒன்றை ஈ ஷிவுக்கு அணிவித்து தனது திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இதனை ஈ ஷிவும் ஏற்றுக்கொண்டு தனது விருப்பத்தினையும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/othersp…
-
- 0 replies
- 493 views
-
-
இறுதிச் சுற்றில் இந்திய இதயங்களை வென்ற தீபா கர்மகர்! ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மகர் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தருவார் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார் தீபா. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபா பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் இறுதியில் தீபா கர்மகர் நான்காம் இடம் பிடித்தார். உலக ஜிம்னாஸ்டிக்ஸில் டாப் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்(தங்கம்) களத்தில் இருக்கும்போது நான்காம் இடம் பிடித்தது மிகப்பெரிய விஷயம். ஒட்டு மொத்த தேசமும் இவரது சாதனை பாரட்டியது. இறுதி போட்டியில் அவர் …
-
- 0 replies
- 372 views
-
-
ஒலிம்பிக்கில் “மூன்று - மூன்று” வரலாற்றுச் சாதனையை நெருங்கும் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார். இந்த வெற்றியானது, ஒலிம்பிக்கில் ”மூன்று - மூன்று” அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனைக்கு நெருக்கமாக அ…
-
- 0 replies
- 279 views
-
-
உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் 3 ஆவது முறையாக தங்கம் வென்றார் உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார். http://www.virakesari.lk/article/10205
-
- 2 replies
- 401 views
-
-
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை எளிதாக கடந்து கொண்டு வந்தார். 10 ஆயிரம் மீட்டரை நெருங்கும்போது திடீரென கால் தடுமாறி கிழே விழுந்தார். மற்ற வீரர்கள் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர். கிழே விழுந்ததால் வெற்றி பறிபோகி விடுமோ? என்று அஞ்சமால் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடினார். இறுதியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கீழே விழுந்த பிறகு தனது முயற்சியால் வெற்றி பெற்ற மொ பராக் பிரட்டன் நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்…
-
- 2 replies
- 592 views
-
-
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி இழந்தது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-2, 2-6, 3-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ராஜிவ் ராம் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் சானியா, போபண்ணா ஜோடி, செக்குடியரசின் லுாசி, ஸ்டெபானக் ஜோடியை எதிர்கொண்டது. துவக்கம் முதல் ஏமாற்றிய சானியா, போபண்ணா ஜோடி 1-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை…
-
- 0 replies
- 365 views
-
-
எலைன் தாம்சன் தடகள விளையாட்டு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் விரைவோட்ட வீராங்கனை எலைன் தாம்சன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஷெல்லி-அன் கிராசர்-பியேசி மூன்றாவது தங்கப்பதக்கத்தை வெல்லும் நோக்கில் ஓடிய சக நாட்டு வீராங்கனை ஷெல்லி-அன் கிராசர்-பியேசி இப்போட்டியில் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது. மோ ஃபாக் கீழே விழுந்தாலும் மீண்டு ஓடிய பிரிட்டன் ஓட்டப்பந்தைய வீரர் மோ ஃபாக், 10 ஆயிரம் மீட்டர் ஆடவர் ஓட்டப்போட்டியில் இந்த முறையும் முதலிடத்தை தங்க வைத்துள்ளார். மிதிவண்டி மற்றும் படகு சவாரி போன்ற போட்டிகளிலும் பிரிட்டனுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மோனிகா புயுக் மோனிகா புயுக் என…
-
- 0 replies
- 738 views
-
-
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை 1000 தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிற…
-
- 0 replies
- 454 views
-
-
ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரரின் கால் முறிவு: அதிர்ச்சி வீடியோ. ரியோ: ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரரின் கால் முறிந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் ஒருவரின் கால் முறிந்து பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. - தற்ஸ் தமிழ் -
-
- 0 replies
- 278 views
-
-
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. ப…
-
- 0 replies
- 534 views
-