விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
ஒலிம்பிக் போட்டித் தொடரில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 21 வயதான Joseph Schooling பட்டர்பிளைய் 100 மீற்றர் நீச்சல் போட்டியில் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளார். சிங்கப்பூருக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸை, Joseph Schooling பெதோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ் இனி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134896/language/ta-IN/article.aspx …
-
- 1 reply
- 670 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அபார வெற்றி பெற்ற இலங்கை 2-0 என கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்தனர். இதனால் இந்தப் போட்டியில் மூலம் 2.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட இது அதிகமாகும். …
-
- 0 replies
- 333 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். பெண்கள் நீச்சல்: தங்கப்பதக்கத்தை வென்ற 2 வீராங்கனை ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் சிமோன் மானுவே, கனடா வீராங்கனை பென்னி ஜாலகஸ்கே இருவரும் பந்தய தூரத்தை சரியாக 52.70 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். இதனால் இருவருக்கும் முதல் இடம் வழங்கி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 2 பேர் தங்கம் வென்றதால் வெள்ளி பதக்கம் வழங்கப்படவில்லை. வெண்கல பதக்கத்தை சுவீடனை சேர்ந்த சாரா ஜோஸ்ரோம் வென்றார். இதேபோல், எப்போதாவது ஒருமுறை தான் ஒலிம்பிக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.s…
-
- 0 replies
- 365 views
-
-
ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில், பிரேசில் நாட்டைப் பற்றியும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா? ரியோ பெருமைகள் # பிரேசில் தமிழகத்தைப் போல 65 மடங்கு பெரியது. மிக முக்கியமான வளரும் நாடு. # தன்னுடைய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைக் காட்டிலும் ரியோ மிகவும் அற்புதமானது' என்று பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் ரியோ டி ஜெனிரோ பற்றிக் கூறியுள்ளார். # ரியோவில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடற்கரை இருக்கிறது. சார்லஸ் டார்வின் ரியோவைப் பற்றிக் கூறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். # 1815 முதல் 1821 வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்துள்ள ரியோ, போர்ச்சுகல் நாட்டுக்கும் தலைந…
-
- 1 reply
- 343 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி. முதல்பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக்கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி . கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் 'போடியம் 'ஏறியது கிடையாது. ஆனால் இந்…
-
- 2 replies
- 452 views
-
-
பிறீமியர் லீக்கை கைப்பற்றுவது யார்? - முருகவேல் சண்முகன் விளையாட்டுலகத்தில் ஒலிம்பிக் போட்டிகளே தற்போது பேசுபொருளாக இருக்கையிலும், இந்தவார விளையாட்டுலகின் தலையங்கமாக கால்பந்தாட்டமே இருந்தது. ஆம். உலக சாதனைத் தொகையாக 116 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட வீரர் போல் பொக்பா, இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ்ஸிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டமையே, ஒலிம்பிக்கை தாண்டி இவ்வார பேசுபொருளாக இருக்கின்றது. மேற்கூறப்பட்டுள்ள உலக சாதனைத் தொகைக்கு, சும்மா ஒன்றும் ஒன…
-
- 0 replies
- 320 views
-
-
அனல் பறக்கும் தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம் 1 2 வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு மற்றும் புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உல…
-
- 0 replies
- 501 views
-
-
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹனிஃப் முகமது மரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நீண்ட இன்னிங்ஸை விளையாடிய வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஹனிஃப் முகமது கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 16 மணி நேரங்கள் விளையாடி 337 ரன்களை குவித்தார். ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஹனிஃப் முகமது, குழந்தை பருவத்தின் போதே கராச்சிக்கு சென்றுவிட்டார். 1952 இல், தன்னுடைய 17 வயதில், தான் பிறந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதல…
-
- 0 replies
- 331 views
-
-
நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனீப் முகமது உயிர் பிழைத்த அதிசயம் பாகிஸ்தான் லெஜண்ட் ஹனீப் முகமது. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். 6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற்றது, இறந்து பிழைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் ஹனீப் முகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது, ஆனால் சரியாக 6 நிமிட மருத்துவ முயற்சிக்குப் பிறகு இருதயம் செயல்படத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வயது 81. கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 …
-
- 1 reply
- 621 views
-
-
ஒலிம்பிக்: களத்தில் மகள்... தவிப்பில் பெற்றோர்! - (வைரல் வீடியோ) “இப்படியெல்லாம் நிஜத்தில் ஜிம்னாஸ்டிக் செய்ய முடியுமா ?“ என நெட்டிசன் ஒருவர், வீடியோ ஒன்றை ஷேர் செய்ய. அந்த வீடியோவை ஒரே நாளில் 1.5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “பல ஆண்டுகளின் உழைப்பு இது. மில்லியன் முறை , மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். 14 வயதில் இருந்து இதற்கு பயிற்சி எடுக்கிறேன்” என அந்த ட்விட்டிற்கு ரிப்ளை செய்து இருக்கிறார் அந்த வீடியோவில் அசத்தியிருக்கும் வீராங்கனை. அவர், அலெக்ஸாண்ட்ரா ரைஸ்மான் . யூத - அமெரிக்கரான அலெக்ஸாண்ட்ரா , அமெரிக்காவிற்கு தங்கம் வென்ற மற்றொரு தங்கமகள். அவரது அணி, அவருக்கு சூட்டியிருக்கும் செல்ல…
-
- 0 replies
- 370 views
-
-
சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை இளையோர் மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிக்களுக்கிடையில் இங்கிலாந்தின் வோர்ம்ஸ்லேயில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் அசலங்க 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இலங்கை அணி சார்பில், அஷான் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, சில்வா 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பெர்னர்ட் 43 ஓட்டங்களுக்கு 2 விக்…
-
- 0 replies
- 357 views
-
-
இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தோவா எல்போபஷி, நடா மீவாட் இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர். ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் …
-
- 0 replies
- 406 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை "மகிழ்ச்சி" தராத தமிழர்கள் சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகிறது... ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்... இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் நேற்று ஒரே நாளில் …
-
- 1 reply
- 397 views
-
-
ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது குவைத்!- ஆனால்... ஒலிம்பிக் போட்டியில் குவைத்தை சேர்ந்த, ஃபெகாய் அல் திஹானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் குவைத் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. ஆனால் பதக்கம் அதற்கு சொந்தமில்லை. ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்க குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் அரசின் தலையீடு இருந்த காரணத்தினால் குவைத் ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஓ.சி தடை விதித்தது. தடையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் குவைத் முறையிட்டது. ஆனால் தடையை நீக்க சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதே வேளையில், ஒலிம்பிக் கொடியின் கீழ் குவைத…
-
- 0 replies
- 554 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் தொடரும் அனர்த்தங்கள் (அதிர்ச்சி வீடியோ) பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அடிக்கடி அனர்த்தங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று பழுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய ஆர்மேனிய வீரர் அன்ரிக் கரபெட்யன் பலத்த கை முறிவுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். 77 கிலோகிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட 20 வயதான அன்ரிக் கரபெட்யன் 195 கிலோகிராம் பழுவினை தூக்க முற்பட்ட போது பலத்த கை முறிவுக்கு உள்ளாகியுள்ளார். (மனம் பலவீனமானவர்கள் வீடியோவை பார்க்க வேண்டாம்) http://www.virakesari.lk/article/10061
-
- 0 replies
- 301 views
-
-
ஈழத்தமிழன் துளசி தர்மலிங்கம் ரியோ ஒலிம்பிக்கில்..போட்டியில் வென்று பதக்கம் பெற்று வர உலகத்தமிழர்கள் வாழ்த்துகின்றோம். தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார். இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை…
-
- 1 reply
- 433 views
-
-
ஒலிம்பிக்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி! ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளார். 3-வது சுற்றில், உக்ரைனின் எலினா, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவைத் தோற்கடித்துள்ளார். இதனால் செரீனா ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த ஜோடி நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவா-பர்போரா…
-
- 0 replies
- 351 views
-
-
றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் இன்று குத்துச்சண்டைப் போட்டியில் களமிறங்கவுள்ளார். இவர், மங்கோலியரான CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக இன்று தனது முதலாவது போட்டியை சந்திக்கிறார். தனது 18 ஆவது வயதில் ஜேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தர்மலிங்கம் கட்டார் நாட்டின் சார்பில் விளையாடுகிறார். பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்தில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழு முறை ந…
-
- 3 replies
- 942 views
-
-
மைக்கேல் பெல்ப்ஸ்... ஒவ்வொருத் தழும்பும் ஒரு தங்கம்! ரியோ ஒலிம்பிக்கில் ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏராளமான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் உடலில் சிவப்பு நிறத்தில் பெரிய பெரிய தழும்புகளைக் காண முடிகிறது. அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் உடலிலும், இந்த வட்டத் தழும்புகள் உள்ளன. இந்தத் தழும்புகள் டாட்டூவாலோ அல்லது காயம் காரணமாகவோ ஏற்பட்டதில்லை. அதிகளவில் உடற் பயிற்சியில் ஈடுபடுவதால், அதனால் ஏற்படும் உடல் வலியை குறைப்பததற்காக அளிக்கப்படும் "கப்பிங்" (cupping) எனும் பழங்கால சிகிச்சை முறையால்தான், பெல்ப்ஸ போன்ற வீரர்களின் உடலில் இது போன்ற வட்ட வட்டத் தழும்புகள் இருக்கின்றன என்கிறார்கள் உடற்பயிற்ச…
-
- 0 replies
- 593 views
-
-
சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் வெற்றி ஜோடி பிரிகிறது ஹிங்கிஸ்-சானியா ஜோடி. | கோப்புப் படம். 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் இரட்டையர் சிறப்பு ஜோடியான சானியா மிர்சா, மாரிடினா ஹிங்கிஸ் ஜோடி பிரிவதென முடிவெடுத்துள்ளனர். இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “ஆம். முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆட்டத்தின் முடிவு உற்சாகமூட்டுவதாக இல்லை. எப்படியிருந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் முடிவுக்கு வர வேண்டியதுதான், இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து அவரும் சின்சினாட்டி ஓபன், யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு சானியாவின் ஜோடியாக செக்.குடியரசு வீராங்க…
-
- 1 reply
- 524 views
-
-
மீண்டும் இலங்கை அணியுடன் இணைகிறார் சமிந்த வாஸ் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். சமிந்த வாஸ் இந்த மாத இறுதிக்குள் அணியுடன் இணைந்தக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்று (10) இலங்கை கிரிக்கட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். சமிந்த வாஸ் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இலங்கை ஏ அணி, மற்றும் பிராந்திய அணிகள் என்பவற்றுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்குவதுடன், தேசிய கிரிக்கட் அணி உட்பட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கிரிக்கட்…
-
- 0 replies
- 323 views
-
-
ரியோவில் மேலும் 2 வெற்றி: பெல்ப்ஸின் ஒலிம்பிக் தங்க வேட்டை 21 ஆக உயர்வு மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பெற்ற 21 தங்கப்பதக்கங்களுடன். ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மேலும் இரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 200 மீ. பட்டர்பிளை மற்றும் 4*200மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் அமெரிக்கா குழு அடுத்தடுத்து தங்கம் வென்றது. இதனையடுத்து நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற தங்கப் பதக்க எண்ணிக்கை 21 ஆனது. பெல்பஸ் 200 மீ. பட்டர்பிளை பிரிவில் ஜப்பானின் மசாதோ சகாயை வீழ்த்தினார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நடந்த 4*200 மீட்டர் ரிலே பிரிவில் அமெரிக்…
-
- 0 replies
- 302 views
-
-
தேசிய கொடிக்குப் பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்குபற்றக்கூடிய அபாயம் நிலவுகிறது – தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ (பிரேஸிலிலிருந்து நெவில் அன்தனி) ஒலிம்பிக் போன்ற சர்வதேச பல்வகை விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கொடிக்குப் பதிலாக சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் இலங்கை பங்குபற்றக்கூடிய அபாயம் நிலவுகின்றது. இலங்கையில் விளையாட்டுத்துறை சட்டமூலம் இரண்டு மாதங்களுக்குள் திருத்தப்படாவிட்டால், சில அணிகள் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொடியின்கீழ் ரியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றியதுபோன்ற நிலை இலங்கைக்கும் ஏற்படும் என தேசிய ஒலிம்பிக் குழுத் தலை…
-
- 1 reply
- 233 views
-
-
முதல் இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. தற்போது இந்த நான்கு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் டெஸ்ட் தர வரிசை வெளியிடப்படும். இதில் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அவ்விடத்தை தக்கவைக்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கிலாந்து, இந்தியா அந்த பதவியை பறிக்க முயற்சி செய்கிறது. எது நடக்கிறது என்று டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர்…
-
- 0 replies
- 292 views
-
-
பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்? இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், அந்தரத்தில் தலைகீழாகப் பறக்கும் படம், இன்று பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்துள்ளன. தனது 23 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தீபாவுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு இது. இந்தியா முழுக்க இன்று தீபா கர்மகர்தான் ‘talk of the nation'! இத்தனைக்கும் அவர் இன்னும் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை துவங்கவில்லை. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டத்திலிருந்து வந்து, இந்தியாவுக்கு அந்நியமான ஜிம்னாஸ்டிக்கில், ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவது என்பது... சில போட்டிகளின் தங்கப் பதக்கத்தை மிஞ்சிய சாதனை! ரியோ ஒலிம்பிக் போ…
-
- 0 replies
- 645 views
-