விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் இடைநீக்கம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளர் ஜயந்த வர்ணவீரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடித் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணத்தினாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேர்முக விசாரணையில் கலந்துக்கொள்ளும்படி வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தரப்பங்களில் அவர் விசாரணைக்கு வரவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 414 views
-
-
உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் கோப்பு படம் - THE HINDU டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய முடிவை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எடுத்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டி லீக்கையும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொடரை நடத்துவதற்கான செயல் திட்டமும் தயாராக உள்ளது. இனி அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்த மட்டுமே செய்ய வேண்டும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடை…
-
- 0 replies
- 414 views
-
-
மஹேலவின் ஒய்வு - மனம் திறக்கிறார் சங்கா டெஸ்ட் உலகில் மஹேலவுடன் இணைந்து அசைக்க முடியாத பல இணைப்பாட்டங்களை வழங்கி, சாதனைகளைப் படைத்து, இலங்கையின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியவரும், தனிப்பட்ட வாழ்விலும் மஹேலவின் நெருங்கிய நண்பரான இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார சங்க்கார மஹேலவின் ஓய்வு குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மஹேலவின் ஓய்வு இலங்கைக்கு எப்படியானதாக இருக்கும்? ”மஹேல டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவது இலங்கைக்கு பாரிய நட்டமாகும். சரியான முறையில் சித்தித்து இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கின்றேன். இந்த இடைவெளியை நிரப்ப அதிக காலம் எடுக்கும். இந்த இடைவெளி என்பது இன்னொருவருக்குக் கிடைத்த பெரும்…
-
- 0 replies
- 414 views
-
-
ரியோ ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க நீச்சல் வீரருக்கு 10 மாதம் தடை கொள்ளை நாடகம் நடத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள். | படம்: கெட்டி இமேஜஸ். சமீபத்தில் முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என்று யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தடை பற்றி அத…
-
- 0 replies
- 414 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றான ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்? விரிவாகப் பார்க்கலாம். ஸ்டாப் கிளாக் விதிமுறை ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்…
-
- 2 replies
- 414 views
- 1 follower
-
-
ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டு: சிறைத் தண்டனை பெற்ற அல்பி மோர்கல் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மோர்கல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்காவில் வேட்டை ஆடுவதற்காகச் சென்றபோது ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைத் தண்டனை பெற்றதாக அண்மையில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அல்பி மோர்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, "நான் மொசாம்பிக்காவில் எனது பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது காரை சுத்தம் செய்யுமாற…
-
- 0 replies
- 414 views
-
-
விற்றோரியின் தடை நீக்கம் மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்கள…
-
- 0 replies
- 414 views
-
-
ஸ்ரீசாந்த் வாங்கிய புதிய ஜாகுவார் கார்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் புதியதாக ஜாகுவார் ரக கார் வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட பிறகே அவருக்கு திருமணமும் நடந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த புவனேஷ்வரி குமாரியை ஸ்ரீசாந்த் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்த், புதியதாக ஜாகுவார் ரக காரை வாங்கியுள்ளார். ப…
-
- 0 replies
- 414 views
-
-
ஹமில்டனும் றொஸ்பேர்க்கும் மோத வென்றார் மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் ஸ்பானிஷ் கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனும் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கும் மோதிக் கொள்ள, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், போர்மியுலா வண் வரலாற்றின் இளம் வெற்றியாளராக மாறினார். மேற்படி பந்தயத்தின் முதலாவது சுற்றிலேயே றொஸ்பேர்க்கை முந்த முயன்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன் புற்தரைக்கு சென்று சுழன்று றொஸ்பேர்க்குடன் மோதியதில் அதன் பின்னர் இப்பந்தயம் ரெட்புல்லுக்கும் பெராரிக்குமிடையிலானதாக மாறியிருந்தது. இந்நிலையில்,…
-
- 0 replies
- 414 views
-
-
பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சென்.ஜோன்ஸ் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 19 வயது பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பாதுக்க ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியும் மோதவுள்ளன. இந்த இறுதிப்போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (08) இடம்பெறவுள்ளது. பிரிவு – 3 அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்;டிகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிகளைக் குவித்தது. இதனடிப்படையில், பிரிவு – 3 இறுதிப்போட்டியில் விளையாடும் யாழ்ப்பாணத்தின் முதல் அணியாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணி காணப்படுகிறது. பிரிவு – 3 போட்டிகளில் இறுதிப்போட்டி வரையில் நுழைந்தமையால் சென். ஜோன…
-
- 0 replies
- 414 views
-
-
40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்! போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள். டாஸ் வென்ற ஜமைக்கா டல்லவாஸ், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியைப் பேட்டிங் செய்யச் சொன்னது. அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்களைக் குவித்தது. மன்ரோ 61, மெக்கல்லம் 56 ரன்கள் எடுத்தார்கள். மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல், ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, ஒருகட்டத்தில் 6.1 ஓவர்களில் 41 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்தக் கணத்தில் ஆட…
-
- 0 replies
- 414 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக இன்ஸமாம் அறிவித்துள்ளார். இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் சுப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை இன்ஸமாம் முன்னேற்றியிருந்தார். அப் போட்டியில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வருட இறு…
-
- 0 replies
- 413 views
-
-
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்... சாதித்த சாக்ஷி மாலிக்! ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில், மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய ஆரவாரம் இந்தியாவில் குறைந்த நேரத்தில், புதிதாய் ஒரு நம்பிக்கை பிறந்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பி.வி.சிந்து பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று இரவு, இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர், மல்ய…
-
- 0 replies
- 413 views
-
-
அரை இறுதியில் நுழைந்தது யாழ் புனித பத்திரிசியார் பிருந்தாபன் மூன்று பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தினார் 2016-09-27 09:53:27 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால் இறுதிப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் அணி கோல் காப்பாளர் ஏ.பிருந்தாபன் 3 சமநிலை முறிப்பு பெனல்டிகளை அடுத்தடுத்து தடுத்து நிறுத்தியதன் பலனாக ஹமீத் அல் ஹுசெய்னி அணியை 3–1 பெனல்டி அடிப்படையில் புனித பத்திரிசியார் அணி வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் கடும் உஷ்ணத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப் போட்டியின் 3…
-
- 1 reply
- 413 views
-
-
இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டார் ரோரி பேர்ன்ஸ் Published by J Anojan on 2020-01-07 15:50:35 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, பயிற்சியில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார் ரோரி பேர்ன்ஸ். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை லண்டனில் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் மார்ச…
-
- 0 replies
- 413 views
-
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுத் தொடர் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி மோதியது. முதற்பாதி ஆட்ட முடிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கல்லூரி 2: 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒர் கோலைப் பதிவு செய்தனர். மூன்றாம் இடத்திற்…
-
- 0 replies
- 413 views
-
-
ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ – சந்தர்போல் 2016-02-04 12:30:48 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரேன் சந்தர்போல், உள்ளூர் கிரிக்ெகட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை எனக் கூறியுள்ளார். கயானா கிரிக்கெட் அணிக்காக இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் விளையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்ெகட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை பெறுவதற்காகவே சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க நிர்ப்…
-
- 0 replies
- 413 views
-
-
தொடரிலிருந்து வெளியேறுகிறார் டூப்பிளஸ்ஸி தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வலது தோல்பட்டை பாதிப்புக்குள்ளானதில். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்களுக்குப் பின்னர் மரு…
-
- 0 replies
- 413 views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை..! தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் தமிழ் வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிக இடம்பெறவுள்ளளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா ஆரமமாகவுள்ளதாகவும், இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிக, தனது 13 ஆவது வயதில் பளு தூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுவிற்பாளராக செயற்பட்டு வருகின்றார். 2014 ஆம் ஆண்டில் தனது 13 ஆவது வயதில் பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த…
-
- 1 reply
- 413 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதேவேளையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளை கூடுதலாக பெற்று மொத்தம் 125 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலிடம் வகித்திருந்தது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று தென் ஆப்பிரிக்க அணி 117 புள்ளிகளில் இருந்து 113 புள்ளிகளுக்கு க…
-
- 1 reply
- 413 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 413 views
-
-
ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா அணி 346 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில் ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 413 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 413 views
-
-
மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா-1 கார் பந்தயத்தின் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். பார்முலா-1 கார் பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெறும். இன்று மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது. இதில் பெராரி அணி வீரர் செபஸ்டியான் வெட்டல் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதே கம்பெனியின் மற்றொரு வீரரான கிமி ரெய்க்கோனென் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூ…
-
- 1 reply
- 413 views
-
-
சஷிகலா சிறிவர்தன ஓய்வு By Mohammed Rishad - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான சஷிகலா சிறிவர்தன, இம்மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை பெண்கள் அணி நேற்று (6) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், அதற்குமுன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் அணியின் பயிற்சியாளர் சஷிகலாவின் ஓய்வு பற்றிய …
-
- 0 replies
- 413 views
-