Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனி அதிக மாற்றங்களை விரும்ப மாட்டார்; சேவாக், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பில்லை: கங்குலி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. கங்குலி தலைமையில் செழித்து வளர்ந்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை, காரணம் தோனி அதிக மாற்றங்களை விரும்பமாட்டார் என்று கங்குலி கூறியுள்ளார். இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தனது இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “சேவாக், யுவராஜ் ஆகியோர் நான் பார்த்ததில் மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனா…

  2. அருமையாக பிடியெடுத்த பார்வையாளருக்கு பணப்பரிசு கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அப் போட்டியில் அடித்து சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக பிடியெடுத்ததால் அவருக்கு ரூபா 2.5 இலட்சம் ரூபா பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஹமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் அந்நாட்டு ஓடாகோ அணிக்கும், வெலிங்டன் அணிக்கும் இடையே இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் ஓடாகோ வோல்ஸ் அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது மைதானத்திற்கு வெளியே போட்டியை ரசித்து கொண்டு இருந்த ஹென்ரூட் மைக்கல் என்ற கிரிக்கெட் ரசிகர் ஓடி வந்து பந்தை ஒற்றை கையால் மிகவும் அருமையாக பிடியெடுத்தார். இந்நில…

  3. கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் 6.22 மீற்றர் உயரம் தாவி புதிய உலக சாதனை Published By: DIGITAL DESK 5 28 FEB, 2023 | 02:21 PM (நெவில் அன்தனி) பிரான்ஸில் க்ளேர்மொன்ட் ஃபெராண்ட் உள்ளக அரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற All Star Perche, World Athletics Indoor Tour Silver போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.22 மீற்றர் உயரம் தாவிய சுவீடன் வீரர் மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். ஒலிம்பிக் சம்பியனும் உலக சம்பியனுமான 23 வயதான டுப்லான்டிஸ், பெப்ரவரி மாத முற்பகுதியில் உப்சலாவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் உலக சாதனையைப் புதுப்பிக்க முயற்சி செய்தார். நடப்பு …

  4. தமிழீழம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி. சிறிஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வி செல்வி. நிருசா பிரான்சு நாட்டில் பிறந்து இப்பினி சூ சென் என்னும் இடத்தில் வளர்ந்து கல்வி கற்று வரும் இவர் சதுரங்கப்போட்டியில் il du france அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 ஆண்டுக்கான சிறந்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே champiton de france ஆக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2007ம் ஆண்டு இவர் வாழும் இப்பிணி சூ சென் மாநகரசபையாலும், அதன் முதல்வர் Hervé CHEVEAU அவர்களால் Sportif Méritant என்ற மதிப்பளிக்கப்பட்டது. ஐரோப்பிய ரீதியில் 15 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் சுவிஸ்ல் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் கலந்து க…

  5. அடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2017-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4-27 ஆகிய தேதிகளூக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018-ஆம் ஆண்டு மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக…

  6. நெருக்கடி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது: லஷித் மலிங்கா காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தனக்கு நெருக்கடி என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார். வேகம் குறைந்து, வயிறும் அவருக்கு முன்னால் நீண்டு கொண்டிருக்க லஷித் மலிங்காவின் தோற்றம் அவரை அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலையிலிருந்து கீழே இறக்கி விடுமோ என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. “நெருக்கடி தருணங்கள் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. பிரஷர் தருணங்கள் எனக்கு பழக்கமானவை. அதனால் நெருக்கடி பற்றி தனியாகப் பேச வேண்டினால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றே கூறுவேன். நான் எப்போதும் எங்கு விளையாடுகிறேன், சூழ்நிலைம…

  7. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் சிங்கர் வெற்றிக் கிண்ணத்துக்காக பாடசாலைகளின் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி, 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.சதுர்சன் 29, எம்.பகீரதன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில…

  8. சிரிய அகதிகளை கவுரவப்படுத்திய ரியல்மாட்ரிட் அணி! ( வீடியோ ) உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அப்படி ஹங்கேரிக்கு வந்த ஒசமா அப்துல் மோக்சன் என்ற கால்பந்து பயிற்சியாளரை, பெண் நிருபர் ஒருவர் காலை இடறி கீழே விழ வைத்தார். இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து அந்த பெண் நிருபர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கால்பந்து பயிற்சியாளரான ஒசமா அப்துல் மோக்சனுக்கு ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் பணி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், கடந்த புதன்கிழமை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தனது மகன்கள் சையத்,அகமது ஆகியோருடன் வந்தார். அவருக்கு மாட்ரிட…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர். 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள் ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.…

  10. Canada, Ontario, Mississaugaஐச் சேர்ந்த 19 வயது Bianca Andreescu மகளிருக்கான US Open Tennis போட்டியில், தனிநபர் Grand Slam பட்டத்தை வென்ற முதல் கனேடியராகியுள்ளார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் உலகின் முதல்தர மற்றும் அதிகூடிய 39 Grand Slam பட்டங்களை வென்ற, 37 வயதான Serena Williamsஐ, 6-3, 7-5 என்ற செட்களில் தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், WTA தரவரிசையில் 15வது இடத்தில் இருந்த Bianca, 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் US$3.85million பரிசுப் பணமும் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த Bianca, இந்த நிமிடத்துக்காகவே காத்திருந்ததாகவும், வார்த்தைகளால் விபரிக்க முடியாவிட்டாலும், தனது கனவு நனவான நாள் …

  11. [size=5]பிடிபட்டார் பலநாள் கள்வன் - லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்[/size] [size=1] [size=4]அமெரிக்கரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற துவிச்சக்கர வண்டி வீரருமான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தடை செய்யப்பட்ட ஊக்குவிப்பு மருந்துகளை நீண்டகாலமாக பாவித்து வந்திருக்குன்றார். [/size][/size] [size=1] [size=4]இவற்றை பாவித்து புகழ்பூத்த 'டூர் டி பிரான்ஸ்' துவிச்சக்கர வண்டி போட்டியில் அதிகூடிய தடவைகள் வென்று பெரிய சாதனைகளைப்படைத்தவர்.[/size][/size] [size=1] [size=4]இப்பொழுது அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட ஊக்கப்பொருட்களை கண்காணிக்கும் அமைப்பு இவர் எதைப்பாவித்து தடை செய்தாரோ அதை கண்டுபிடித்து இவர் மேல் பழி சுமத்தியுள்ளது. இதனால் இவரின் சகல வெற்றிகளும் நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. [/siz…

    • 0 replies
    • 917 views
  12. வெளியேற்றப்பட்ட டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட், ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. வேடர் பிளீமனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக எர்லிங் பிறோட் ஹலான்ட், ஜியோவனி றெய்னா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், வேடர் பிளீமன்…

    • 0 replies
    • 497 views
  13. பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…

  14. அப்ரிடி ஓய்வு? பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக…

  15. கிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால எமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்களுக்கோ எவரேனும் பாதிப்பேற்படுத்த முனைந்தால் நான் ஒரு போது இடமளிக்கமாட்டேனென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைதானப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்…

  16. இரண்டாவது போட்டியிலும் வீழ்ந்தது இலங்கை ; தொடர் இங்கிலாந்து வசம் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெறும் டி-20 தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து 8 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்டது. அதன் பின்னர் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்றிரிவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறை…

  17. ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்…

  18. வார்னரின் ஆஸி. கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது? விட்டு விலகும் சக வீரர்கள்- ஆஸி. ஊடகம் தகவல் டேவிட் வார்னர். - படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு ஆளாக்கிய பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் வார்னர்தான் இதற்கு மூலக்கர்த்தா என்று செய்திகள் எழுந்துள்ள நிலையில் இனி ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் ஆடுவது மிகக் கடினம் என்ற ரீதியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று அணியின் உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. விசாரணைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் விசாரணை முடிந்து தன் அறிவிப்புகளை வெளியிடவிருக்கும் நிலையில…

  19. அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்ற மாற்றுத்திறனாளியான ஒலெக்ஸி Published By: VISHNU 28 FEB, 2023 | 05:20 PM (நெவில் அன்தனி) அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் விழாவில் முதல் தடவையாக மாற்றுத்திறனாளியான மாசின் ஒலெக்சி அதிசிறந்த கோலுக்கான FIFA புஸ்காஸ் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 'அதிசிறந்த FIFA கால்பந்தாட்ட விருதுகள் 2022' விழாவில் உலகத் தரம்வாய்ந்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒற்றைக் கால் வீரரான மாசின் ஒலெக்சி இந்த விருதை வென்று முழு உலகினதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். கால்பந்தாட்ட விற்பன்னர்களான லியனல் மெ…

  20. ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும் ‘மாட்டுச் சாணத்தை’ எடுத்துச் செல்லும் கிரிக்கெட் வீரர் மகாயா நிடினி : கோப்புப்படம் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஸ்போர்ட்ஸ் கிட் உடன் எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், தன்னுடன் மாட்டுச் சாணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு நேற்று 41-வது பிறந்த நாளாகும். தென் ஆப்பிரிக்க நேரப்படி இன்றுதான் அவருக்குப் பிறந்த நாள். அவர் வேறுயாரும…

  21. கிரிக்கெட் - பாக் அழைப்பு இலங்கை நிராகரிப்பு கிரிக்கெட் போட்டிகள் விளையாட வரும்படி இலங்கைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இலங்கை நிராகரித்துள்ளது. லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவில்லை. எதிர்வரும் அக்டோபர் மாதம் தமது நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருமாறு இலங்கைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், தமது அணியினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதால், அங்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்க…

    • 0 replies
    • 627 views
  22. குழந்தையை பார்க்க அவசரம் இல்லை: உலகக் கோப்பையை வெல்வதுதான் மிக முக்கியம் - கேப்டன் தோனி பேட்டி எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்‌ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும். கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எத…

  23. இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம் Share இருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்தது ஆனால் நாங்கள் 25 -30 ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த நாங்கள் தீடீர் என மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல இதுவே முக்கிய திருப்…

    • 0 replies
    • 472 views
  24. பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் வகையில் சாய்னா நெவால் சாதனை புரிந்துள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சனிக்கிழமையான இன்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதை அடுத்து சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இன்று ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் விளையாடுகிறார். ஆனால், இந்தப் போட்ட…

  25. ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா அணி 346 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில் ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.