விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்... பல பிரிவுகளில் கில்லியடித்த விராட் கோலி! சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் - விராட் கோலி 2017-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் - ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணி - டேவிட் வார்னர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், டிகாக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென…
-
- 0 replies
- 335 views
-
-
2017-ல் அதிக கோல்: மெஸ்சியை துரத்துகிறார் டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் 2017-ம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மெஸ்சியை டோட்டன்காம் வீரர் ஹாரி கேன் துரத்துகிறார். கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் மெஸ்சி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற எல் கிளாசிகோவில் அடித்த ஒரு கோலும் இதில் அடங்கும். இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இ…
-
- 1 reply
- 623 views
-
-
2017: மறக்க முடியுமா? - விளையாட்டு ஜனவரி ஜன. 4: ஒரு நாள் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார். பிப்ரவரி பிப். 20: ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸை ரூ.14 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம்செய்தது. ஏப்ரல் ஏப். 30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார். மே மே. 21: ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அனியை ஒரு ரன்னில் வீழ்த்தி 3-வது முறையாகக் கோப்பையை வென்ற…
-
- 0 replies
- 666 views
-
-
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…
-
- 0 replies
- 379 views
-
-
2017இல் உலகின் அதிசிறந்த மெய்வல்லுனர்களாக முடாஸ், தியாம் முடிசூடல் இவ்வாண்டுக்கான சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை கட்டார் நாட்டைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரரான முடாஸ் ஈசா பர்ஸிம் பெற்றுக்கொண்டார். இதன்படி உலக மெய்வல்லுனர் வரலாற்றில் முதற்தடவையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரரொருவர் இவ்விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மெய்வல்லுனர் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் (IAAF) மெய்வல்லுனர் விருதுகள் வழங்கும் விழா மொனோக்கோவில் நேற்று (24) மிக விமர்சையாக நடைபெற்றது. இதன்படி, வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரர் மற்றும் வீராங்கனைக்கான மூவரடங்கிய பெயர்ப்பட்டியல் இம்மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதில் அதி சிறந்…
-
- 0 replies
- 304 views
-
-
2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார். வானம் உயர்ந…
-
- 0 replies
- 426 views
-
-
2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் 2017ஆம் ஆண்டானது வழமையான ஒருசில உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்ட வருடமாக அமைந்திருந்ததுடன், இதில் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சிகள், ஒரு சில தனிபர் நிகழ்ச்சிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான 2 …
-
- 0 replies
- 366 views
-
-
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…
-
- 0 replies
- 313 views
-
-
2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டி வெற்றிக்கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதல் நாடாக இலங்கை : எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக 23 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 2018 ஜனவரி 23 …
-
- 0 replies
- 234 views
-
-
2018 FIFA உலகக் கிண்ணத்திலிருந்து ஸ்பெயின் நீக்கப்படும் அபாயம் Image Courtesy - EPA ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடு குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் ஸ்பெயின் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசு தொடர்ந்து தலையிட்டால் அடுத்த உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயினுக்கு தடை விதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஏஞ்சல் மரியா வி…
-
- 0 replies
- 614 views
-
-
2018 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச்சென்றார் லூகா மோட்ரிச் பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்செல்ல ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #FIFA #LukaModric லண்டன் : 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வ…
-
- 1 reply
- 620 views
-
-
2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்? இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், குறித்த தொடரினை இலங்கையில் நடாத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத் தொடரின் போது, 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அயல் நாடுகளிடையே அரசியல் ரீதியாக குளறுபடிகள் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்சினைகள் இருக்க…
-
- 0 replies
- 348 views
-
-
2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை 2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை மாத்திரமே கண்ட இலங்கை கிரிக்கெட் அணி, புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹவின் கீழ் புதிய மாற்றங்களுடன் 2018 இல் களமிறங்கவுள்ளது. ஐ.சி.சி இன் எதிர்கால போட்டி அட்டவணையின்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) இதுவரை உறுதி செய்யப்பட்ட அடுத்த வருடத்துக்கான கிரிக்கெட் தொடர்களின்படி இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் அணியுடனும், 3 போட்டிகள்…
-
- 0 replies
- 345 views
-
-
2018 இளையோர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ரைஸ்சேர்ச், குயிண்ஸ்டவுண், தவுரங்கா, சங்கரேய் உள்ளிட்ட 4 முக்கிய மைதானங்களில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான மேற்கிந்தி…
-
- 0 replies
- 489 views
-
-
2018 ஆம் ஆண்டு உலககிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை ரஷ்யா வென்றுள்ளது. சுவிட்ஸர்லாந்து தலைநகர் சூரிச்சிலுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீஃபா) தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவுடன் இங்கிலாந்தும் போட்டியிட்டது. அதேவேளை இப்போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு ஸ்பெய்ன் -போர்த்துகல் முயற்சித்தன. இதேபோல் நெதர்லாந்து- பெல்ஜியம் ஆகியனவும் இணைந்து நடத்த முயற்சித்தன. இவற்றில் ரஷ்யா தெரிவு செய்யப்பட்டதாக ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டர் அறிவித்தார். >இதேவேளை 2022ஆம்ஆண்டு உலககிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை மத்திய கிழக்கு நாடான கட்டார் பெற்றுள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…
-
- 0 replies
- 437 views
-
-
2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா? பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. 2018 இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து நான்கு அணிகளே நேரடி தகுதி பெற முடியும் என்ற நிலையில், ஆர்ஜன்டீன அணிக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா தனது உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்து…
-
- 2 replies
- 717 views
-
-
2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில்தான்:ஃபிஃபா அடுத்த நான்கு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது போல ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை ரஷ்யாவிடமிருந்து பறிப்பது முறையாகாது என்று ஃபிஃபா கூறியுள்ளது. அண்மையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் 298 பேர் மாண்டனர். இந்நிலையில், உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி ரஷ்யாவில் நடத்தப்படக்கூடாது என்று ஜெர்மனியின் மூத…
-
- 3 replies
- 577 views
-
-
2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் 3-வது கோலை தியாகோ அடிக்க ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிகே (நடுவில் சிரித்துக் கொண்டிருப்பவர்) கொண்டாடுகிறார். - படம்.| ஏ.பி. அல்பேனியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியில் ரோட்ரிகோ (16வது நிமிடம்), இஸ்கோ (23), தியாகோ (26) ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை அடித்து முடித்தனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குரூப்பிலிருந்து உலகக்கோப்பைத் தகுதியை உறுதி செய்துள்ளது. இத்தாலி அணி மேசிடோனியா அணிக்கு எதிராக ட…
-
- 0 replies
- 465 views
-
-
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை. அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்ற…
-
- 0 replies
- 400 views
-
-
2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி பெற்றன. அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்…
-
- 4 replies
- 401 views
-
-
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி 2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடி முதல் அணியாக தகுதி பெற்றது சாவ்பாலோ: 32 அணிகள் இடையிலான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை…
-
- 0 replies
- 270 views
-
-
2019 - உலகக் கிண்ணத் தொடரில் பதியப்பட்ட முக்கிய சுவடுகள் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த 31 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது. மொத்தமாக 10 நாடுகள் கலந்துகொண்ட இத் தொடரின் இறுதிப் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி முதன் முறையாக சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெற்ற முக்கிய பதிவுகள் பின்வருமாறு : 1. பரிசுத் தொகை * சம்பியன் - இங்கிலாந்து - 4,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில் 28 கோடி) * ரன்னர் அப் - நியூஸிலாந்து - 2,000,000 அமெரிக்க டொலர்கள் ( இந்திய ரூபாவில…
-
- 0 replies
- 898 views
-
-
2019 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கட்டார்! அபுதாபியில் நடைபெற்ற ஜப்பான் அணிக்கு எதிரான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டியில் கட்டார் அணி 3–1 என்ற கோல் அடிப்படையில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்யத்தை சொந்த நாட்டில் வீழ்த்தி முதன் முறையாக ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு கட்டார் அணி தெரிவாகியது. இந்நிலையில் அபுதாபியில் உள்ள, ஸாய்ட் ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி போட்டி இடம்பெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நான்கு முறை கிண்ணத்தை வென்ற ஜப்பான் அணியை எதிர்கொண்ட கட்டார் அணி 3– 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த ப…
-
- 0 replies
- 693 views
-
-
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்துச்செல்லப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகக் கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் அண…
-
- 1 reply
- 717 views
-