விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கால்பந்தாட்டத்தில் மகாஜனா சம்பியன் கௌரி துடிப்பாட்டம் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் நடத்தும் யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் மிகவும் துடிப்பாகச் செயற்பட்டார் மகாஜனக் கல்லூரி வீராங்கனை கௌரி. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் கௌரி, எட்டாவது நிமிடத்தில் தார்மிகா, 12 ஆவது மற்றும் 15 ஆவது நிமிடங்களில் மீண்டும் கௌரி என அடுத்தடுத்து கோல்களைப் பதிவுசெய்ய முதல் பாதியின் …
-
- 0 replies
- 398 views
-
-
கிரிக்கெட் சபையின் நடவடிக்கையாலேயே மலிங்க பதவி விலகினார் இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கை காரணமாக, இலங்கையின் இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து லசித் மலிங்க விலகினார் என முன்னாள் பிரதம தேர்வாளர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் பதவி விலக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த கபில விஜேகுணவர்தன, பதவி விலக்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். 'பொருத்தமான எந்தவிதக் காரணங்களையும் வெளிப்படுத்தாது, நாங்கள் பதவி விலக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் நாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்" என அவர் தெரிவித்தார். திங்கட்கிழ…
-
- 0 replies
- 398 views
-
-
199 ரன்களில் ஆட்டம் இழந்த வீரர்கள் விவரம் 139 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த சில முக்கியமான வீரர்களை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். * கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயதான லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் 199 ரன்களில் கேட்ச் ஆனார். இது, டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 ரன்களில் ஆட்டம் இழந்த 2-வது இந்தியர் லோகேஷ் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை நழுவ விட்டிருக்கிறார். அது தான் அசாருதீனின் அதிகபட்ச ஸ்கோராக நீடிக்கிறது. * லோகேஷ் ராகுல் 200…
-
- 0 replies
- 398 views
-
-
ரொனால்டோவை தண்டியுங்கள்: நெய்மர் எதிரணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மரும், ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ரியல் மாட்ரிட் கொர்டோபா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணி 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் நடுவே ரொனால்டோ நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொர்டபோ அணியின் தடுப்பாட்டக்காரர் எடிமர் பிராகாவை ஒரு கட்டத்தில் தி…
-
- 0 replies
- 398 views
-
-
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை: ஆஸ்திரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திர…
-
- 0 replies
- 398 views
-
-
இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செம்மலை உதயசூரியன் அணி வெற்றி பெற்றுள்ளது. வாழ்த்துக்கள். https://www.facebook.com/video/video.php?v=914720025207351
-
- 1 reply
- 398 views
-
-
மிட்சல் ஜான்சனை நாம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? ஒருதினப் போட்டி என்றால் மிட்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மிட்சல் ஜான்சன், நவம்பர் 17-ம் தேதியோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னார். ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்கு பின்பு, ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல்…
-
- 0 replies
- 398 views
-
-
ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்! உலகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா? வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை ஆஷஸ் தொடரின் 69வது த…
-
- 2 replies
- 398 views
-
-
இங்கிலாந்து அணியின் புதிய தலைவர் ரூனி 2014-08-29 10:22:49 இங்கிலாந்தின் புதிய அணித் தலைவராக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்கள வீரர் வெய்ன் ரூனியை பயிற்றுநர் ரோய் ஹொஜ்சன் நியமித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் முதலாம் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்ட பின்னர் அணித் தலைவர் ஸ்டீவன் ஜெரார்ட் ஓய்வு பெற்றதை அடுத்து தலைவர் பதவியை 28 வயதான ரூனி பொறுப்பேற்றுள்ளார். 95 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களைப் போட்டுள்ள வெய்ன் ரூனியை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக அதன் புதிய பயிற்றுநர் லூயி வன் கால் இம் மாத முற்பகுதியில் நியமித்திருந்தார். இங்கிலாந்துக்கும் நோர்வேக்கும் இடையில் செப்டெம்பர் 3ஆம் திகதி சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி வெம்ப்ளி விளையாட்டர…
-
- 0 replies
- 398 views
-
-
மியாமி டென்னிஸ் - ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்ச்ர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெட…
-
- 0 replies
- 397 views
-
-
ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! by : Anojkiyan கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சரி தற்போது, தரவரிசை பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி இரண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் 1996, மார்ச் 13: ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவலைக்குரிய ஓர் இரவு – சில ரசிகர்கள் மைதானத்திற்குள் போத்தல்களை வீசியும் இருக்கைகளுக்கு தீ வைத்தும் போட்டிக்கு இடையூறு செய்தனர். அந்த ரசிகர் கூட்டம் அமைதி கொள்ளாத நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி அளிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியில் வெற்றி பெற 15.5 ஓவர்கள் எஞ்சி இருக்க மேலும் 132 ஓட்டங்களை…
-
- 0 replies
- 397 views
-
-
19 FEB, 2025 | 05:56 PM (நெவில் அன்தனி) வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன. இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிர…
-
- 1 reply
- 397 views
- 1 follower
-
-
ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் டிசம்பர் 21, 2014. மாரக்கேஷ்: ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், சான் லாரன்சோ அணியை தோற்கடித்தது. மொராக்கோவில், ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான 11வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, அர்ஜென்டினாவின் சான் லாரன்சோ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் அணி சார்பில் ரமோஸ் (37வது நிமிடம்), பாலே (51வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான உலக கோப்பையில் முதன்ம…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று October 17, 2018 1 Min Read இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றியீட்டிருந்தது. இந்தநிலையில் தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/99583/
-
- 0 replies
- 397 views
-
-
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர். சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமு…
-
- 0 replies
- 397 views
-
-
வரலாற்றில் இன்று (2007 ஜூன் 10): மஹேலவும் தோனியும் இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைக் குவித்தனர் 2016-06-10 16:46:29 ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை அணியின் முன்ளாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனியும் இணைந்து இணைப்பாட்டமாக 218 ஓட்டங்களைப் பெற்றமை 9 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஜூன் 10 ஆம் திகதி பதிவாகியது. 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆபிக்க XI, ஆசிய XI அணிகளுக்கிடையிலான அவ்ரோ- ஏசியா கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியில் மஹேலவும் தோனியும் இந்த இணைப்பாட்டத்தைப் பெற்றனர். ஆசிய அணியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் வீரர்களும் ஆபிரிக்க அணியில் தென்…
-
- 0 replies
- 397 views
-
-
கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான்: வங்கதேசம் அதிர்ச்சி வங்கதேச அணி. | படம்.| ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் தனது வங்கதேச கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்தது குறித்து வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை கூட இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” என்றார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொள்ளைவிருந்தது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூறும்போது, “2015-ல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு வாரியங்களுக்கும் இடையே நித…
-
- 0 replies
- 397 views
-
-
அடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2017-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4-27 ஆகிய தேதிகளூக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018-ஆம் ஆண்டு மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக…
-
- 0 replies
- 397 views
-
-
வெளியேறத் தயாரான மேற்கிந்தியத்தீவுகள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்தது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது. 269 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வ…
-
- 0 replies
- 397 views
-
-
சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது: அஜிங்கிய ரஹானே வென்றார் 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இலங்கையின் குமார் சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட, சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை அஜிங்கியா ரஹானே வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது கபில் தேவுக்கு வழங்கப்பட்டது. ரஞ்சி சாம்பியனான கர்நாடக அணியின் கேப்டன்/பவுலர் வினய் குமார் ஆண்டின் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். 264 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசி உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. அஜிங்கிய ரஹானேவுக்கு சுனில் கவாஸ்க…
-
- 1 reply
- 397 views
-
-
ஹாசிம் ஆம்லாவிடம் விருது பெற்ற இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் நரபலி! தென்ஆப்ரிக்காவில் மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வீரரின் பெயர் பெயர் நவாஸ் கான் (வயது 23). இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், உம்ஸிண்டோ என்ற நகரில் தாயுடன் வசித்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. இவர் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை தனது சொந்த பிரச்னைகள் தொடர்பாக சந்தித்துள்ளார். அதற்கு, அந்த மந்திரவாதி ஒருவரது தலையை வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தண்டோக்வேக் டுமா, மன வளர்ச்சி குன்றிய நவாஸ் கான் த…
-
- 1 reply
- 397 views
-
-
டோனி அனைத்தும் அறிவார் November 21, 2015 கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது க்கு தெரியும் என்று முன்னாள் கிரிகெட் வீரர் ஜி.ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட அந்த வீரரை பொறுத்தது. பிறர் அதை வலியுறுத்த கூடாது. டோனி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உழைத்துள்ளார். அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும். பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள், ஒரு வீரருக்கு தேவைப்படும் அளவுக்கு, சிக்னல்களை கொடுத்து விடுகிறார்கள். எனவே அந்த வீரர் வெளியேற்றத்திற்கு அவராகவே தயாராகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி கிடையாது. திடீரென வீரர்களை நீக்கி விடுவார்கள்.…
-
- 0 replies
- 397 views
-
-
பந்துவீச்சுக்கு பதிலாக 'த்ரோ ' : பாகிஸ்தான் பந்து வீச்சாளருக்கு மீண்டும் தடை! விதிகளுக்கு புறம்பாக பந்துவீசுவதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீசுக்கு மீண்டும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 21ஆம் தேதி காலே நகரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முகமது ஹபீசின் பந்துவீச்சு சந்தேகத்துக்கிடமான முறையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாகத்தில், ஐ.சி.சி. அங்கீகரித்த பரிசோதனை மையத்தில் ஹபீசின் பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் முகமது ஹபீசின் எல்போ 31 டிகிரி வரை வளைந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹபீசுக்கு 12 மாதங்கள் பந்துவீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. மு…
-
- 1 reply
- 397 views
-
-
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர். இடது கை பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை …
-
- 0 replies
- 397 views
-