Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார். ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன. அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பய…

  2. 1983ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு குடிதான் காரணம்: ராட்னி ஹாக் ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 31 ஆண்டுகள் கழித்து தோல்வி கண்டது. அதாவது 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளின் போது ஆஸ்திரேலியா ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட பிறகு நேற்று மீண்டும் தோல்வி கண்டது. இந்தத் தோல்விகளை அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் மீது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு முதல் நாள் இரவு கடுமையாக, கேன் கேனாக குடித்ததே காரணம் என்று அந்த அணியில் இடம்பெற்றிருந்த ராட்னி ஹாக் தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைய…

  3. இங்கிலாந்து ஓய்வறையைப் பற்றி இந்திய வீரர்களிடம் கேளுங்கள்: கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார். "இலங்கை வீரர்களைக் கேளுங்கள், ஆஸ்திரேலிய வீரர்களைக் கேளுங்கள், இந்திய வீரர்களைக் கேளுங்கள், மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள், இந்தியர்களிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு மெசேஜ் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி எண்களைத் தருகிறேன்,…

  4. சொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா? இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக…

  5. அட மிஸ்டர். கூல் கூட சண்டைக்கு போயிருக்காருப்பா...! ( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் தோனிக்கு 'கூல் கேப்ட' என்ற செல்லப் பெயர் உண்டு.ஆனால் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உண்மையிலேயே மிக கூலான மனிதர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜென்டிலாக பல விஷயங்களில் நடந்து கொண்ட நிஜ கிரிக்கெட்டர். ஆனால் இவர் கூட ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரரருடன் சண்டைக்கு போன வரலாறும் உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோகைப் அக்தருடன் ராகுல் டிராவிட் கோபத்தில் சண்டைக்கு போன வீடியோ காட்சி இது. இருவருக்கும் வாக்குவாதம் நடந…

  6. ''அர்ஜென்டினாவுக்காக மெஸ்சி விளையாடக் கூடாது'' !-சக வீரர் கருத்தால் சர்ச்சை தாய்நாட்டுக்காக சோபிக்க முடியாத மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக இனிமேல் விளையாடக் கூடாது என்று சக வீரர் கார்லெஸ் டவெஸ் விமர்சித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது ஜொலிக்கும் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் போது மட்டும் சொதப்புகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அண்மையில் முடிவடைந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம்அர்ஜென்டினா தோல்வி கண்ட போதும் இந்த விமர்சனம் எழுந்தது. அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான மரடோனா, அர்ஜென்டினா அணியின் தற்போதைய பயிற்சியாளர் மார்ட்டினோ ஆகியோரும் கூட தேசிய அணிக்காக விளையாடும் போது மெ…

  7. இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சண்டிக்க ஹத்துறுசிங்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் பதவி காலத்தை நீடிக்காது இருப்பதற்கு நிறைவேற்று குழுவில் தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான போட்டிகளின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முழு பயிற்சியாளர்களையும் நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, ஸ்ரீலங்கா கிரிக்…

    • 0 replies
    • 400 views
  8. சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று: பார்சிலோனாவிடம் மீண்டும் சிக்கியது ஆர்சனல்! ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றுகள் கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்,காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான நாக்அவுட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 16 அணிகள் இந்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அணிகளான செல்சி மற்றும் அர்சனல் ஆகியவை கடினமான போட்டியை எதிர்நோக்கியுள்ளன. இரண்டு லெக் ஆட்டங்களாக நடைபெறும் இந்த சுற்றில், சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டத்திலும் ,எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளின் முடிவில் ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதி…

  9. தேசிய கீதத்தின் போது அநாகரீகமாக நடந்த அவுஸ்திரேலிய வீரர் February 11, 2016 அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தேசிய கீதம் பாட அவுஸ்திரேலிய வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அப்போது சக வீரர் ஆடம் சம்பாவின் இடுப்பில் கை வைத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டார். இது அங்கிருந்த கமெராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்த காவாஜா, ”ஹா..ஹா.. எனது பின் பக்கம் க…

  10. டி20 போட்டிகளுக்கு அறிமுகமாகும் புதிய சுப்பர் ஓவர் விதிமுறைகள் By Mohammed Rishad - சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை ஐசிசி வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இங்கிலாந்தில் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்ததால் அணிகள் பெற்ற பௌண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐ.சி.சி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப…

  11. 400மீ. ஓட்டத்தில் சாதனை அமெ­ரிக்­காவில் உள்ள லேவா நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச அள­வி­லான ஓட்­டப்­பந்­த­யத்தில் கிரெ­ன­டாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்­டத்தில் சாதனை படைத்தார். அவர் பந்­தயத் தூரத்தை 44.08 விநா­டி­களில் கடந்து முத­லிடம் பிடித்தார். இதன்­மூலம் அவர் அதி­வே­கத்தில் 400 மீட்டர் ஓட்­டத் தூரத்தை கடந்­தவர் என்ற சாதனையை படைத்தார். http://www.virakesari.lk/article/5839

  12. ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். சாதனைப் படைத்துள்ள எரிக் துசீங்கிஸிமானா வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க …

  13. ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333

  14. மத்திய கல்லூரி வெற்றியைத் தழுவியது யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடத்திய 20வயதுப்பிரிவு ஆண்களுக்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி சம்பியனானது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் மத்திய அணியை எதிர்த்து சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. முதல் பாதி முடிவில் 2:1 என்று மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மத்திய கல்லூரி மூன்றாவது கோலை பதிவு செய்து 3:1 என்ற கணக்கில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. http://onlineuthayan.com/sports/

  15. 48 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ரியல் மாட்ரிட் 48 போட்டிகளில் தொடர்ந்து கோல்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது லா லிகா புகழ் ரியல் மாட்ரிட். லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்கு கடும் எதிரியாகத் திகழ்ந்து வருவது ரியல் மாட்ரிட். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஷினேடின் ஷிடேன் பொறுப்பேற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாம்பியன்ஸ் லீக் முதல் அரையிறுதி (First Leg) போட்டியில் மான்செஸ்டர் அணிக்கெதிராக கோல்கள் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அதன்பின் அந்த அணி 34 வெற்றிகள், 11 …

  16. ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…

  17. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த ஐந்…

  18. ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்திய யுவான்டஸ் கோல்கீப்பர் பஃபன் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன இத்தாலியின் முன்னாள் வீரர் பஃபன் ரசிகரை நோக்கி ட்ரவுசரை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டி ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனாவும், இத்தாலியின் முன்னணி கிளப் அணியான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முந்தைய 16 அணிக…

  19. பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…

  20. இந்தியா மீண்டும் நம்பர்–1 செப்டம்பர் 01, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு த…

  21. ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 2014-10-03 13:28:14 ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான இருபது20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 68 ஓட்டங்களால் இலங்கை அணி வென்றது. தென் கொரியாவின் இன்ச்சொன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 37 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் சந்திமால் 27 பந்துகளில 33 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும…

  22. ரெட் புல் அணியின் 60 இற்கும் அதிகமான கிண்ணங்கள் திருடப்பட்டன போர்மியூலா வன் காரோட்டப் பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டில் புரூக் நகரிலுள்ள ரெட்புல் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் வாயிலுக்கூடாக வாகனமொன்றில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இப்பொருட்களை திருடடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 இற்கும் அதிகமான கிண்ணங்களும் கேடயங்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. பல வருட கால…

  23. இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டடியின் வடிவம் வருமாறு, கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது? அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு …

  24. செய்தித் துளிகள் கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, சீனா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனையும், ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும் தோற்கடித்தன. --------------------------------------------------------------------------------------------------------------------- சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தனது 100-வது போட்டியில் விளையாடிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு இந்த வெற்றி மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இதேபோல் நடப்பு சாம்பியன் உருகுவே அண…

  25. கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள் தான் காரணமா? நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 1) மிஸ்டர் ரன் மிஷின்! கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார். 2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்! முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.