விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பாகிஸ்தான் அணி உதவிப் பயிற்றுநர்களாக முஷ்தாக் அஹ்மத், அஸ்ஹர் மஹ்மூத் 2016-06-16 12:02:38 பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பலப்படுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்றுநராக முஷ்தாக் அஹ்மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான முஷ்தாக் அஹ்மத் தற்போது தேசிய கிரிக்கெட் கல்வியத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவனத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 380 views
-
-
சங்கா, மஹேலவுக்கு மெத்தியூஸ் புகழாரம் குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் …
-
- 0 replies
- 380 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்! அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்…
-
- 0 replies
- 380 views
-
-
வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 1 reply
- 379 views
-
-
நம்பமுடியாத ரன் அவுட்கள், ஸ்டம்பிங்குகள்: மேட்ச் ஃபிக்ஸிங்கா என பதறிய ஐசிசி! (விடியோ) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் டி20 போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஆச்சயத்துடன் கருத்து தெரிவித்திருப்பதும் போட்டியின் தன்மை மேட்ச் ஃபிக்ஸிங்குக்கு உகந்ததா என்று ஐசிசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார்ஸ் லீக் என்கிற தனியார் டி20 போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதில் துபாய் ஸ்டார் மற்றும் ஜார்ஜா வாரியர்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் புதிரான முறையில் …
-
- 0 replies
- 379 views
-
-
செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181க்குள் சுருண்டது பாக்கிஸ்தான்! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களுக்குள் பாகிஸ்தான் அணி சுருண்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாத தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி சார்பில் இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரில் இமாம்-உல்-ஹக் ஓட்டங்களை பெறாமலும் பகர் சமான் 12 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழந்தனர். அத்தோடு பக…
-
- 0 replies
- 379 views
-
-
வெளியேற்றப்பட்டது மன்செஸ்டர் யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டது. தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவிடம் தோற்றதைத் தொடர்ந்தே சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது. செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய முதலாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலைய…
-
- 0 replies
- 379 views
-
-
400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலர்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸில் வெள்ளியன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். தனது 400-வது டெஸ்ட் விக்கெட்டாக மார்டின் கப்திலை வீழ்த்திய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ஏ.எஃப்.பி. மார்டின் கப்தில், ஆண்டர்சனின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஆண்டர்சன் இந்த சாதனையை 104-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்லார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பந்து வீச்சாளர் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிகிறார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். இதற்கு ம…
-
- 0 replies
- 379 views
-
-
யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75ஆவது ஆண்டு நிறைவை முனினீட்டு யாழ்ப்பாண மாவட்ட நீதியாக நடத்தும் கால்பந்தாட்ட தொடரில், வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் இடம்பெற்ற ஆட்டத்தில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து திக்கம் யுத் விளையாட்டுக்கழக அணி மோதியது. ஆட்டநேர முடிவில் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக அணி 6 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 379 views
-
-
எஃப்.ஏ. கோப்பை: மிடில்ஸ்ப்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரில் மிடில்ஸ்ப்ரோ அணியை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கிடையிலான ‘கால்பந்து அசோசியேசன் சேலஞ்ச் கோப்பை’ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு காலிறுதிப் போட்டியில் மிடில்ஸ்ப்ரோ- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டேவிட் சில்வா முதல் கோலை அடித்தார். கோல் கம்பத்தின் வலது பக்கம் 6 யார்டு தூரத்தில் இருந்து சபலேட்டா க…
-
- 0 replies
- 379 views
-
-
நியூசிலாந்து பிரபலம் வாய்ந்த ஆக்லாந்து ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தை கைவிடுகிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமாக ஈடன் பார்க்கை கைவிட்டு புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்கிறது. #nz கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் ஒன்று நியூசிலாந்து. இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை என்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆக்லாந்து ஈடன் பார்க். 1930-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெ…
-
- 0 replies
- 379 views
-
-
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி. இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டிலும் 2021ம் ஆண்டில் சிறப்ப…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்: டெய்லரை விமர்சிக்கிறார் மக்கலம் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் றொஸ் டெய்லர் மீது, அவ்வணியின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரென்டன் மக்கலம், விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெய்லரின் தலைமைத்துவம் தொடர்பாகவே, இந்த விமர்சனம் அமைந்துள்ளது. பிரென்டன் மக்கலம் வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையில், "இடம்பெறாத அந்த சதித்திட்டம்" என்ற பிரிவில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தலைவராக இருந்த டானியல் விற்றோரி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தலைவராகப் பதவி வகித்த றொஸ் டெய்லரிடமிருந்து அப்பதவி, திடீரெனப் பறிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மக்கலத்திடம் வழங்கப்பட்டது. மேற…
-
- 0 replies
- 379 views
-
-
சமரியை அழைக்கும் இங்கிலாந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்தபத்துவை தங்கள் அணியில் இணைந்து விளையாடுமாறு இங்கிலாந்தின் முன்னணி அணியான யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள முதல்தர கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவே சமரிக்கு மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 178 ஓட்டங்களை விளாசினார். சமரியின் இந்த துடுப்பாட்டம் அனைவ…
-
- 0 replies
- 379 views
-
-
சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக நோ-பால்கள் வீசி விடுகிறேன்: இசாந்த் சர்மா இசாந்த் சர்மா. | படம்: ராய்ட்டர்ஸ். கொழும்பு டெஸ்ட் போட்டியில் தொழில்நேர்த்தியான வேகப்பந்து வீச்சில் நேற்று 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசாந்த் சர்மா, தான் அதிகம் நோ-பால்கள் போடுவது பற்றி கருத்து கூறியுள்ளார். இந்த 5 விக்கெட்டுகள் மூலம் இசாந்த் சர்மா தனது 65-வது டெஸ்ட் போட்டியில் 197-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்நிலையில் தனது பவுலிங் குறித்து இசாந்த் சர்மா கூறும்போது, “நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கலாம் என்பது இலக்காக இருக்கலாம். நான் பந்து வீசும் போது ஒரு பவுலர் மட்டுமே. பந்துவீச்சு வரிசையின் தலைவர் அல்ல. எனக்குத் தெரிந்ததை நான் மற்றவர்களிட…
-
- 0 replies
- 379 views
-
-
சிற்றியை வென்றது யுனைட்டெட் Editorial / 2018 ஏப்ரல் 08 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 11:38 Comments - 0 Views - 13 இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றுள்ளது. தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றிபெற்றால் நடப்பு பருவகாலத்தின் இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றியிருக்க முடியுமென்ற நிலையில், தற்போது பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு ஆகக் குறைந்தது இவ்வாரயிறுதிவரை காத்திருக்க வேண்டியுள்ளது. இப்போ…
-
- 0 replies
- 379 views
-
-
இந்தியாவுக்கு எதிராக ட்ரென்ட் பிறிட்ஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஜொனத்தன் ரூட் ஆகியோர் பத்தாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய பதிவு ஒன்றினை நிலைநாட்டியுளனர். நேற்று ஜூலை 10 இருவரும் இணைந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து தனது ஒன்பதாவது விக்கட்டை 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இழந்தது. இறுதியாக அன்டர்சன் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய பதிவாகச் சரியாக ஒருவருடத்துக்கு (9 ஜூலை 2013) முன்னதாக இதே ட்ரென்ட் பிறிட்ஜ் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸியின் அகர் மற்றும் ஹியூஸ் இணை 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பத்தாவது விக்கட் இ…
-
- 0 replies
- 379 views
-
-
அந்த்ரே ரஸல் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு…
-
- 0 replies
- 379 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிந்திருந்த எண் 7 ஜெர்சிக்கு ஒய்வு அளித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பானுபிரகாஷ் கர்னாட்டி பதவி, பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல. அதற்கும் மேல். இவ்வளவு வேலை இருந்தாலும் சரி, கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும். அது, உலகக்கோப்பையோ, ஐபிஎல் போட்டியோ, போட்டியின் மீது தான் எப்போதும் ஒரு கண் இருக்கும். அபாரமாக விளையாடி, மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பாதிப்பில்லை * பி.சி.சி.ஐ., உறுதி அக்டோபர் 09, 2014. புதுடில்லி: ‘‘இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்கும்,’’ என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார். ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்தியா வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனிடையே, புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் மறுத்தனர். பிறகு ஒரு வழியாக கொச்சியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,போட்டியில் வெற்றி பெற்று 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும…
-
- 0 replies
- 379 views
-
-
ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து கழகமான ஏ.சி. மிலானுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் இருந்து ஓர் ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி கால்பந்து லீக்கான சீரி A தொடரில் ஆறாவது இடத்தை பிடித்த மிலான், இந்த பருவத்தில் ஐரோப்பிய லீக் குழுநிலை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த கழகம் கடந்த பருவத்தில் வீரர்கள் பரிமாற்றத்திற்கு 200 மில்லியன் பௌண்ட்களை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA), இது கழகங்களுக்கான சமநிலை விதிகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு எதிராக தாம் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில்…
-
- 0 replies
- 379 views
-
-
முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் மிஸ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற, சகல விக்கட்டுகளும் இழக்கப்பட்ட நிலையில், அவர் தனது சதத்தை பெறமுடியாமல் போனது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங…
-
- 0 replies
- 379 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் …
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி - 253 மற்றும் 132 ஓட்டங்கள் இலங்கை அணி - 204 மற்றும் 345/9 ஓட்டங்கள் இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! (adaderana.lk)
-
- 0 replies
- 378 views
-
-
அஜாஸ் பட்டேல்: இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்களையும் கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியை வெறும் 62 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். …
-
- 0 replies
- 378 views
- 1 follower
-