விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இண…
-
- 0 replies
- 533 views
-
-
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற கலிஸ் தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 166 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13289 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஜெக் கலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் 11579 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை 25 இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜெக் கலிஸ் 666 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=606313275030792010
-
- 0 replies
- 427 views
-
-
மீண்டும் ஏறுமுகத்தில் றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், இப்பருவகாலத்தில் மோசமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தமையைத் தொடர்ந்து தற்போதே தமது உண்மையான திறமையான வெளிப்பாட்டைக் காண்பிக்கின்றது. இறுதியாக இடம்பெற்ற தமது 11 லா லிகா போட்டிகளிலிருந்து பெறக்கூடிய 33 புள்ளிகளில் 28 புள்ளிகளை றியல் மட்ரிட் பெற்றுள்ளது. லா லிகாவின் தத்தமது 11 இறுதிப் போட்டிகளில் ஓரணி பெற்ற அதிக புள்ளிகள் இதுவேயாகும். றியல் மட்ரிட்டுக்கு அடுத்ததாக பார்சிலோனா தமது 11 லா லிகா இறுதிப் போட்டிகளில் 24 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அத்லெட்டிகோ மட்ரி…
-
- 0 replies
- 302 views
-
-
தோனி, கோலியை விட அதிக சம்பளம் பெறும் ரவி சாஸ்திரி, கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) இருந்து அதிக சம்பளம் வாங்குவதில் அணி கேப்டன் தோனி, துணை கேப்டன் கோலி ஆகியோரை முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் விஞ்சிவிட்டனர். கவாஸ்கர், ரவிசாஸ்திரி இருவரும் இந்த ஆண்டில் ரூ.6 கோடிக்கு மேல் பிசிசிஐ-யிடம் இருந்து சம்பளமாக பெற்றுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாகும். கடந்த 12 மாதங்களில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என மொத்தம் 35 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனிக்கு பிசிசிஐ ரூ.2.59 கோடி சம்பளம் கொடுத்துள்ளது. 39 ப…
-
- 0 replies
- 637 views
-
-
உங்கள் பொன்னான வாக்குகளை அவுஸ்திரேலியாவுக்கு போடுங்கள் http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6599659.stm
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள். மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் ந…
-
- 0 replies
- 718 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் நெஜி பதவி, பிபிசி செய்தியாளர் 21 நவம்பர் 2023 மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் கனவு கனவாகவே முடிந்துள்ளது. போட்டி முழுவதும் சிங்க மனதுடன் விளையாடிய இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் முன் ஆதரவற்ற நிலையில் காணப்பட்டது. இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. போட்டி முடிந்ததும், ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் சோகமான முகத்துடன் படிக்கட்டுகளில் ஏறி டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பிக் க…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
வங்கதேசத்தைத் தொடர்ந்து ஜிம்பாவேவுக்கு அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி சுற்று பயணம் டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது. இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்…
-
- 0 replies
- 272 views
-
-
இயன் சாப்பலின் உலகளாவிய மனித நேயம்: தெரியாத இன்னொரு முகம் 2002-ம் ஆண்டு கிழக்கு தைமூரில் முகாம்களில் அகதிகளை சந்தித்த இயன் சாப்பல். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளரும், கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்ப, விஷயஜீவியுமான இயன் சாப்பலின் இன்னொரு உலகளாவிய மனிதநேயவாத முகம் பலரும் அறியாததே. அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பில் இவர் ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு பிரதிநிதியாக இவர் 2001-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னியில் விருந்து ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கடந்த சனிக்கிழமை உலக அகதிகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இவர் இந்த பொறுப்பை ஏற்றவுடன், தெற்கு ஆஸ்திரேல…
-
- 0 replies
- 416 views
-
-
வாரிசுகள் ஜொலிப்பதில்லை... சச்சினின் அர்ஜுனும், ராகுலின் சமீத்தும் வரலாற்றை மாற்றுவார்களா? இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. உலகளவில் ஹீரோவாக வலம் வந்த விளையாட்டு வீரர்களின் வாரிசுகளும் தங்கள் தந்தையரின் சாதனையில் பாதியைக் கூட எட்டுவதில்லை. கால்பந்து ஜாம்பவான் பீலே தொடங்கி இந்திய கிரிக்கெட்டர்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் ஆகியோரின் வாரிசுகள் வரை பல உதாரணங்களை கூற முடியும். ஆனாலும் வாரிசுகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மட்டும் ஒரு போதும் குறைந்து போவதில்லை. புலிக்கு பிறந்தது குறைந்தபட்சம் பாய்ச்சலாவது காட்ட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. இந்நிலையில் இதுவரை மிரட்டாத வாரிசுகள், இனிமேல் மிரட்டும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர்…
-
- 0 replies
- 402 views
-
-
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்குச் சாதகமாக களத்தை உருவாக்குவதில்லையா?- கொந்தளித்த ஆண்டர்சன் ஜேம்ஸ் ஆண்டர்சன்: | கோப்புப் படம். நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் தங்களுக்குச் சாதகமாக இங்கிலாந்து பிட்சை தயாரித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாடியுள்ளார். "கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயாரிப்பதில் பெரிய தீமையோ, வெட்கமோ எதுவும் இல்லை" என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த 2 ஆஷஸ் தொடரின் தூசி தும்பட்டை பிட்ச் தற்போது பசுந்தரையாக மாறியிருந்தது. ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 3-2 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. “கடந்த காலங்களிலும்…
-
- 0 replies
- 177 views
-
-
பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு சஷாங்க் மனோகர் | படம்: ஏபி பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். மும்பையில் இன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை மணிநேரத்துக்கும் குறைவாக நடந்த இந்த சிறப்பு பொதுக்குழுவில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒட…
-
- 0 replies
- 310 views
-
-
இந்தியாவுடன் புதிய வீரரை களமிறக்கவுள்ள நியூசிலாந்து அணி By Mohamed Azarudeen - ©GETTY IMAGES தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. ஐந்து T20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டதாக அமைந்த இந்த சுற்றுப்பயணத்தில், முதற்கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடரில்…
-
- 0 replies
- 402 views
-
-
வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல் By Mohamed Shibly நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ல…
-
- 0 replies
- 799 views
-
-
முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி By Mohamed Azarudeen இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான மாபெரும் டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர், முதலில் துட…
-
- 0 replies
- 530 views
-
-
கோலியிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றி மனம் திறந்தார் சச்சின் விராட் கோலி, மனதளவில் மிகவும் பலமானவர் என்பதுடன் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடக் கூடியவரென இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவரிடம் தனக்கு பிடித்த விடயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் . கோலி குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே சச்சின் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கோலியின் ஆட்டத்திறமை குறித்து சச்சின் மேலும் தெரிவிக்கையில், கோலி ஸ்ட்ரெயிட் பேட் முற…
-
- 0 replies
- 363 views
-
-
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300
-
- 0 replies
- 295 views
-
-
உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார். நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை. http://www.vikatan.com/news/sports/76487-rafael-nadal-wins-mubadala-tennis-championship.art
-
- 0 replies
- 259 views
-
-
இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…
-
- 0 replies
- 328 views
-
-
உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார். லண்டன்: உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 02.59 வினாடிகளில் கடந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் 4 நிமிடம் 02.76 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன…
-
- 0 replies
- 325 views
-
-
பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…
-
- 0 replies
- 512 views
-
-
பார்த்திவ் படேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பதினாறே வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பை வரை போனாரே... அவர்தான். அணியில் இருந்து சில நாட்களில் நீக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சேர்த்து கவலையில்லாமல் வசதியாக இருக்கிறார் பார்த்திவ். ஆனால், இதற்கு நேர்மாறான நிலையில், தமிழக விளையாட்டு வீரர் ஒருவர் இருக்கிறார். வியாசர்பாடியை அடுத்த கல்யாணபுரத்தைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் அகஸ்டின். 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர், பல போட்டிகளில், எதிரணியின் பந்துகளைத் தடுத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் இந்த வீரர், வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறார் தெரியுமா? வியாசர்பாடியில் ரயில்களில் வரும் சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…
-
- 0 replies
- 721 views
-
-
ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூ…
-
- 0 replies
- 328 views
-
-
பயிற்சியாளரை தேர்வு செய்ய கோஹ்லிக்கு அதிகாரம் ? ஜனவரி 14, 2015. மெல்போர்ன்: விராத் கோஹ்லிக்கு இந்த பொங்கல் மிகவும் சிறப்பானது. டெஸ்ட் அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவரை சுற்றித் தான் இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இவர் கை காட்டும் நபரை தான் புதிய பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திரம் விராத் கோஹ்லி, 26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலெய்டு, சிட்னி போட்டியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். களத்தில் இவரது ஆக்ரோஷ செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. 4 டெஸ்டில் 692 ரன்கள் குவித்த இவர், கேப்டன் பதவி தனது பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை நிரூபித்தார். …
-
- 0 replies
- 509 views
-