விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…
-
- 0 replies
- 541 views
-
-
தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…
-
- 0 replies
- 606 views
-
-
பிறீமியர் லீக்கில் 'பெரிய 4 அணிகளின் ஆதிக்கம் முடிந்தது' இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணிகளெனக் கருதப்படும் நான்கு அணிகளின் ஆதிக்கம், முடிவுக்கு வந்துவிடும் என, ஆர்சனல் அணியின் பயிற்றுநர் ஆர்சீன் வெங்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாக லெய்செஸ்டர் சிற்றி அணி தெரிவாகியுள்ளதோடு, ஏனைய அணிகள், வழக்கமான திறமையை வெளிப்படுத்தத் தடுமாறியிருந்தன. பிறீமியர் லீக்கின் பெரிய நான்கு அணிகளென, மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், செல்சி, ஆர்சனல் ஆகியன கருதப்படுகின்றன. இவ்வணிகள், 2000களில் அதிக ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அணிகளான உள்ளன. இந்நிலையிலேயே கருத்துத…
-
- 0 replies
- 494 views
-
-
ஆண்டின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ் அன்டிகுவாவில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ் பெயரிடப்பட்டார். 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாமுவேல்ஸ், மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 859 ஓட்டங்களைப் பெற்றதோடு, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றுவதற்கும் முக்கியமானவராக அமைந்திருந்தார். குறித்த இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 ஓட்டங்களை துரத்தியிருந்தபோது, இறுதி வரை …
-
- 0 replies
- 394 views
-
-
பராலிம்பிக் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் இறுதிச் சுற்றில் இலங்கையின் அமரா இந்துமதி 2016-09-14 10:59:33 பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் ரியோ 2016 பராலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் அமரா இந்துமதி இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார். எஞ்சென்ஹாஓ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ரி 45/46/47 பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை அமரா இந்துமதி பெற்றார். போட்டியை அவர் 1 நிமிடம் 02.07 செக்கன்களி…
-
- 0 replies
- 302 views
-
-
மெஸ்சியை மிஞ்சும் ரொனால்டோ! #Ballond'or ரஜினிக்கு வயசாயிடுச்சு. முடி கொட்டிப் போச்சு. ஆனாலும் ஸ்க்ரீன்ல அவர் என்ன பண்ணாலும் ரசிக்கிறோம் இல்லையா? அதே மாதிரிதான் ஃபுட்பால்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ. வயசு ஏற ஏற ரொனால்டோ ஆட்டமும் மெருகேறுது. கிரவுண்ட்ல அவர் என்ன பண்ணாலும் அது வசீகரமா இருக்கு. இது ரொனால்டோ குறித்து, சந்தோஷ் டிராபியில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக இருந்த ராபின் சார்லஸ் ராஜா சொன்னது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் (ballon d'or) விருதை, நான்காவது முறையாக வென்றிருக்கிறார் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபிரான்ஸில் நடந்த 2016 யூரோ கோ…
-
- 0 replies
- 349 views
-
-
தென்னாபிரிக்காவில் மூத்தவர்கள் சோடைபோக சம்பியனானது இளம் படை தென்னாபிரிக்காவில் இலங்கை அணி தட்டுத் தடுமாறி விளையாடிவரும் நிலையில், தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை இளம் அணி வெற்றிகொண்டு முக்கோணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் அணியும் தென்னாபிரிக்காவில் முகாமிட்டுள்ளன. இதில் 19 வயதிற்குட்பட்டோருக்கான மூன்று நாடுகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இலங்கை, சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்தத் தொடரின் இறுத…
-
- 0 replies
- 398 views
-
-
அர்ஜுன் டெண்டுல்கரின் கால்பெயர்க்கும் யார்க்கர்: காய அச்சுறுத்தலால் ஜானி பேர்ஸ்டோ ஒரே பந்தில் வெளியேறினார் 2013-ல் அர்ஜுன் டெண்டுல்கர், அருகில் தந்தை சச்சின். | படம்.| கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முந்தைய வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அவருக்கு காய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 17 வயதான, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஜானி பேர்ஸ்டோ எதிர்கொண்ட முதல் பந்தையே காலைப் பதம் பார்க்கும் துல்லிய யார்க்கராக வீச வலியாலும் காய அச்சுறுத்தல் காரணமாக…
-
- 0 replies
- 782 views
-
-
ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் நட்சத்திர வீராங்கனை..! ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் மகளிர் டென்னிஸ் போட்டி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் உலக அளவில் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள நோவக் ஜோகோவிக் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஜோகோவிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை இதுவரை அவர் தெரிவிக்கவே இல்லை. அடுத்த மாதம…
-
- 0 replies
- 278 views
-
-
ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்! நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றபோது புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைஸிங் புனே சுப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ள கோயங்கா, இதற்கும் சுப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர்…
-
- 0 replies
- 283 views
-
-
வங்கதேசத்தில் டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 / 20 ஆட்டங்களுக்காக வந்திருக்கும் இலங்கையணிக்குக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த நாடு எடுத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னதாக பாக்கிஸ்த்தானில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றையடுத்து வங்கதேசத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. http://www.islandcricket.lk/videos/sri-lanka/cricket/sri-lanka-national-team-arrives-in-dhaka
-
- 0 replies
- 389 views
-
-
லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை 2-1 வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஜிரோனா லா லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 சீசன் ‘லா லிகா’ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட், கேட்டலோனியாவில் அமைந்துள்ள ஜிரோனா அணியை எதிர்கொண்டது. அரசியல் நெருக்கடிக்கிடையே ஜிரோனா அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்த பந்தை ஜி…
-
- 0 replies
- 422 views
-
-
பவுலிங்கில் கலக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்... எதிரணியை திணற அடித்தது எப்படி! மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார். ஒரே போட்டியில் இவர் எடுத்த 5 விக்கெட்டுக்கள் காரணமாக எதிரணி மிக சொற்ப ரன்களில் சுருண்டு இருக்கிறது. மும்பையில் அண்டர்-19 பிளேயர்கள் விளையாடும் 'பேஹர் கோப்பை' கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடும் பலர் ரஞ்சி போட்டிகளுக்கும், இந்திய அண்டர்-19 அணிக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தொடர் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் …
-
- 0 replies
- 388 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…
-
- 0 replies
- 339 views
-
-
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான் இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்…
-
- 0 replies
- 404 views
-
-
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை: சச்சின் கொச்சி: ‘‘எனது தந்தை அறிவுரைப்படி புகையிலை, மதுபான பொருட்கள் தொடர்பான விளம்பரங்களில் தோன்றுவதில்லை,’’ என, சச்சின் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 42. பல பொருட்களுக்கு விளம்பர ‘மாடலாக’ உள்ளார். புகையிலை, மது விளம்பரங்களில் மட்டும் தோன்றியது கிடையாது. இது குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின் கூறியது: புகையிலை, மது உள்ளிட்ட போதை தரும் பொருட்களுக்கு எப்போதுமே விளம்பரம் செய்ய மாட்டேன். இவற்றை ஊக்கப்படுத்த கூடாது என மறைந்த எனது தந்தை அறிவுறுத்தினார். இதற்கேற்ப, இப்பொருட்களில் இருந்து விலகியே உள்ளேன்.இளைஞர்கள் தங்களது இலக்கை எட்டும் வரை போராட வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல சவால்களை சந்தித்த…
-
- 0 replies
- 439 views
-
-
இந்தியாவில் விளையாடலாம்; ஆனால், வருவாய் யாருக்கு?- அப்ரீடி கேள்வி ஷாகித் அப்ரீடி. | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார். ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது: இந்தியாவுக்குச் செ…
-
- 0 replies
- 279 views
-
-
டோனி அனைத்தும் அறிவார் November 21, 2015 கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது க்கு தெரியும் என்று முன்னாள் கிரிகெட் வீரர் ஜி.ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட அந்த வீரரை பொறுத்தது. பிறர் அதை வலியுறுத்த கூடாது. டோனி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உழைத்துள்ளார். அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும். பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள், ஒரு வீரருக்கு தேவைப்படும் அளவுக்கு, சிக்னல்களை கொடுத்து விடுகிறார்கள். எனவே அந்த வீரர் வெளியேற்றத்திற்கு அவராகவே தயாராகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி கிடையாது. திடீரென வீரர்களை நீக்கி விடுவார்கள்.…
-
- 0 replies
- 390 views
-
-
சர்வதேச டென்னிஸ் சம்மேளன சம்பியன்களாக இவ்வருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் வருடத்தின் டென்னிஸ் சம்பியன்களாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக இவ் விருதை வென்றுள்ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ், விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டங்களுடன் மொத்தமாக 11 சம்பியன் பட்டங்கள…
-
- 0 replies
- 561 views
-
-
இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் : டில்சான் கவலை விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான்பேசியவிடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் நான் அமைச்சர் தயாசிறியை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்ன…
-
- 0 replies
- 506 views
-
-
ஓய்வு காலத்தை நெருங்கியுள்ளேன் - ரொஜர் பெடரர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக டென்னிஸ் ஜாம்பவானான ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக திகழும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் பட்டங்கள் அடங்கும். டென்னிஸ் தரவரிசையில் 310 வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை அலங்கரித்த சாதனையாளராகவும் திகழ்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட உபாதைக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெடரர், இவ்வாண்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச…
-
- 0 replies
- 917 views
-
-
'சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலகுவோம்!' ஐ.சி.சி.யை மிரட்டும் பி.சி.சி.ஐ. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி குழு சந்திப்பு துபாயில் சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்றது. அந்த சந்திப்பிற்கு பி.ஸி.ஸி.ஐ அழைக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காமல் போக வாய்ப்பு அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? 2014ம் ஆண்டு ஸ்ரீநிவாசன் ஐ.ஸி.ஸி தலைவராக இருந்த போது "தி பிக் த்ரீ"(The Big Three) என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த …
-
- 0 replies
- 446 views
-
-
தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்: டெய்லரை விமர்சிக்கிறார் மக்கலம் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் றொஸ் டெய்லர் மீது, அவ்வணியின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரென்டன் மக்கலம், விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெய்லரின் தலைமைத்துவம் தொடர்பாகவே, இந்த விமர்சனம் அமைந்துள்ளது. பிரென்டன் மக்கலம் வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையில், "இடம்பெறாத அந்த சதித்திட்டம்" என்ற பிரிவில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தலைவராக இருந்த டானியல் விற்றோரி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தலைவராகப் பதவி வகித்த றொஸ் டெய்லரிடமிருந்து அப்பதவி, திடீரெனப் பறிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மக்கலத்திடம் வழங்கப்பட்டது. மேற…
-
- 0 replies
- 373 views
-
-
விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களின் செப்போகொன்சே கழகம் சம்பியனாகப் பிரகடனம் 2016-12-07 12:20:11 தென் அமெரிக்க கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்தினால் பிரேஸில் கால்பந்தாட்டக் கழகமான சேப்போகொன்சே கழகத்திற்கு கோபா சுடாஅமெரிக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் நடைபெறவிருந்த முதலாம் கட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இக் கழகத்தின் வீரர்கள் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்திற்குள்ளானதில் அணியின் பெரும்பாலான வீரர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து சேப்போகொன்சே கழகத்திற்கு சம்பியன் பட்டத்துடன்…
-
- 0 replies
- 226 views
-
-
இந்த செயலுக்காக வெட்கப்பட வேண்டும்;ஜாஃப்ரி பய்காட் வேதனை!! by MohamedFebruary 13, 2021 இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாப்ரி பய்காட் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட் ஸ்மித் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். . சமீபமாகஇலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது …
-
- 0 replies
- 452 views
-