Jump to content

ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம்


Recommended Posts

ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம்
 

 

 

இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

 

டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது.

 

குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்.

 

அவர் கூறியிருப்பதாவது:

அலிஸ்டர் (cooked) குக் என்று கேலியுடன் துவங்கிய ஷேன் வார்ன், "குக்கைப் பொறுத்தவரை 3 விதமாக அணுகப்படலாம். ஒன்று மண்ணில் தலையைப் புதைத்து நடப்பது நடக்கட்டும், அவர் நிச்சயம் பேட்டிங்கில் ரன்கள் எடுக்கத் தொடங்குவார் என்றும் எங்கிருந்தாவது அவரது கேப்டன்சியில் புத்திசாலித் தனம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்றும் நம்புவது.

 

2வது, கேப்டன்சியில் இருந்து குக் ஒதுங்கி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவது என்பதை அவருக்கு அறிவுறுத்துவது.

3வது அவருக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கொடுப்பது.

 

நான் மட்டுமல்ல நான் கூறுவது போல் அனைவருமே கூறுகின்றனர். இது குக்கிற்கு எதிரான எனது தனி நபர் காழ்ப்பு கிடையாது. வேண்டுமானால் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானிடம் கேட்டுப்பார்க்கலாம், அல்லது நாசர் ஹுசைனிடம் கேட்டுப்பார்க்கலாம்.

அவர் ஆஸ்திரேலியாவிடம் வாங்கிய 5-0 தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

அவர் நேரடியாகச் சிந்திப்பதில்லை, குழப்பமாக உள்ளார், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவரைப் போன்ற மனநிலை உள்ளவர்கள் கேப்டன்சியை எடுத்துக் கொள்ளக்கூடாது.

 

கடந்த திங்களன்று லீட்ஸில் இவரது கேப்டன்சி படு மோசம், 25 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மோசமான ஒரு கேப்டன்சியை நான் பார்த்ததில்லை.

 

ஆஞ்சேலோ மேத்யூசை அவுட் செய்ய குக் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. ஒன்று ஸ்பின்னை மாற்று, அல்லது வேகப்பந்து வீச்சை மாற்று ஒன்றுமே செய்யாமல் சொத்தையான பந்து வீச்சை ஓவருக்கு ஓவர் கொடுத்துக் கொண்டிருந்தார் குக்.

இவ்வாறு கடுமையான விமர்சனம் வைத்தார் ஷேன் வார்ன்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6155023.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருடனான இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மையான முறையில் அடையப்படுவது அவசியம் - ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்  04 MAY, 2024 | 05:18 PM (நா.தனுஜா) 'நண்பன் என்ற ரீதியில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை ஜப்பான் தொடர்ந்து வழங்கும்' என்ற செய்தியைக் கூறுவதற்காகவே தான் இலங்கைக்கு வருகைதந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் அந்த இணக்கப்பாடு வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடைந்துகொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை (04) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.  அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் யொகோ கமிகவா மேலும் கூறியதாவது: எனது பிறப்பிடமான ஷிஸுவோகா 'க்ரீன் டீ'க்கு பெயர்போன இடமாகும். எனவே, 'க்ரீன் டீ' விளையும் மண்ணில் இருந்து முதன்முறையாக 'சிலோன் டீ' விளையும் மண்ணுக்கு வருகைதருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஊக்கமும், சமாதானத்தைக் கட்டியெழுப்பல், புனர்வாழ்வளித்தல் மற்றும் மீள்கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இலங்கையின் முயற்சிகளுக்கு யஸுஷி அகாஷி தலைமையில் ஜப்பானால் வழங்கப்பட்ட ஆதரவும் இரு நாட்டு மக்களினதும் நினைவலைகளில் இருக்குமென நம்புகிறேன். கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வேளையில், இலங்கை எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கியது.  அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில், இலங்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஜப்பான் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கியது.  அதுமாத்திரமன்றி உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு இணைத்தலைமை வகிக்கும் ஜப்பான், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமைதாங்குகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன மீளுறுதிப்படுத்தப்படுவது ஒட்டுமொத்த இந்து - பசுபிக் பிராந்தியத்தினதும் உறுதிப்பாடு மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இன்றியமையாததாகும். 'நண்பன் என்ற ரீதியில் ஜப்பான் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்' என்ற செய்தியை கூறுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். அதற்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை செயற்திறன் மிக்க வகையில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கடன் நெருக்கடி மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலங்கை உரியவாறு கையாள்கிறது.  அந்த வகையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவினருக்கும் இடையில் வெகுவிரைவில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென நாம் எதிர்பார்க்கின்றோம். இருப்பினும் அனைத்துக் கடன்வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடானது வெளிப்படைத்தன்மை வாய்ந்த முறையில் அடையப்படவேண்டும். மேலும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்.  இலங்கையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட மறுசீரமைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு இன்றியமையாதவையாகும் என்று வலியுறுத்தினார்.  https://www.virakesari.lk/article/182677
    • அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ. இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அங்குள்ள நான்கு மாவட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது, அடிக்கடி முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றும் சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் செவிலியர் ஹீதர் பிரஸ்டீயின் நடத்தை, அவர் நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மற்றும் அவர்களை இழிவான முறையில் கடுமையாக திட்டுவது போன்றவை சக செவிலியர்களை சந்தேகப்பட வைத்தது. எனவே செவிலியர் ஹீதர் பிரஸ்டீவை பிடித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இவர் நோயாளிகளின் நீரிழிவு அளவை பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலின் வழங்கியதாக கூறியிருக்கிறார். இதனால் இவர் இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17பேர் நீரிழிவு நோய் இல்லாமலே அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கியதால் இறந்திருக்கின்றனர். மேலும் செவிலியர் ஹீதர் பிரஸ்டீ மன அழுத்தத்தால் நோயாளிகளிடமும், மற்றவர்களிடமும் எப்போதும் கோபமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இவர் பல நோயாளிகளை கடுமையாக காயப்படுத்தியதாகவும், இரவு நேர ஷிப்டுகளின் போது நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை மறுத்து வந்த செவிலியர் ஹீதர் பிரஸ்டீ கடந்த பிப்ரவரி மாத விசாரணையின் போது, தனது வழக்கறிஞர்களிடம் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். எனவே பிட்ஸ்பர்க்கிலிருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், 41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு மேற்கு பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது செவிலியர் பணியை தொடங்கிய ஹீதர் பிரஸ்டீ, 2022 முதல் மே 2023 க்கு இடையில் தனது அம்மாவிற்கு பல கடிதங்களை அனுப்பினார், அதில் அவர் பல்வேறு நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியற்ற தன்மையைப் பற்றி விவாதித்துள்ளார், மேலும் தான் மிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. நன்றி – விகடன் https://thinakkural.lk/article/300874
    • 04 MAY, 2024 | 04:20 PM   ஒன்மேக்ஸ் டிடி  (OnmaxDT) பிரமிட் திட்டத்தின்  ஊடாக  பணமோசடி  செய்த ஆறு பேருக்கு  வெளிநாடு செல்வதற்கு  தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (03) உத்தரவிட்டுள்ளது.  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீதுவ, திஸ்ஸமஹாராம, லுனுகம்வெஹர ரன்ன, அகுனுகொலபலஸ்ஸ, மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஆறு பேருக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182666
    • திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது? பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவது மைசூர் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பல உணர்வுகளை எழுப்பக்கூடியவராக இருக்கிறார். திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பல வரலாற்று ஆசிரியர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில், கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரான மொஹிபுல் ஹசன் எழுதிய 'History of Tipu Sultan', அவரைப் பற்றி எழுதப்பட்ட வரலாறுகளில் மிக முக்கியமானது. இந்த நூலில், திப்பு சுல்தானின் கடைசி நாட்கள் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.   திப்பு சுல்தானுக்கு எதிரான கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES திப்பு சுல்தானுக்கு எதிராக 1787வாக்கிலேயே மெல்ல மெல்ல ஒரு பெரிய கூட்டணி உருவாக ஆரம்பித்திருந்தது. ஆங்கிலேயர்கள் - மராத்தியர்கள் - நிஜாம் ஆகியோர் ஒன்றாக இணைந்திருந்தனர். இதனால், பிரான்ஸ் அரசிடம் உதவிகோரி ஒரு தூதுக்குழுவை அனுப்பினார் திப்பு. ஆனால், சாதகமான பதில் வரவில்லை. ஆங்கிலேயர்களுடனான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை மீற, பிரான்ஸ் விரும்பவில்லை. இதற்குப் பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலான கார்ன்வாலிஸுடன் கடிதங்களின் மூலம் சமாதானத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் திப்பு. ஆனால், கார்ன்வாலிஸ் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இதுபோலவே தொடர்ந்து ஆண்டுகள் கழிந்தன. 1799ஆம் ஆண்டில் நிலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அந்த ஆண்டு மீண்டும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார் திப்பு. இந்த முறை அவர் பேச்சு வார்த்தையை ஆங்கிலேயத் தளபதியான ஹாரிசுடன் நடத்த வேண்டியிருந்தது. திப்புவின் அழைப்பிற்கு ஹாரிஸ் அனுப்பிய பதில் கடிதத்தில் திப்பு தனது ராஜ்ஜியத்தில் பாதியை கம்பனிக்கு வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோடி ரூபாயை பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்றும் அதில் ஒரு கோடியை உடனடியாகவும் மீதி ஒரு கோடியை ஆறு மாதங்களிலும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதுவரை திப்பு தனது நான்கு மகன்களையும் நான்கு தளபதிகளையும் ஹாரிஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதானால், அதை 24 மணிநேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் 48 மணிநேரத்திற்குள் எட்டுப் பேரையும் ஒரு கோடி ரூபாயையும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனைகள் மிக மோசமானதாக திப்புவுக்கு தோன்றின. ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு கடிதத்தை ஹாரிசுக்கு அனுப்பினார் திப்பு. அதில், ஆங்கிலப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொன்னார் அவர். ஆனால், 29ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் ஏற்கெனவே சொன்ன நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறினார் ஹாரிஸ். இதற்கிடையில் ஸ்ரீரங்கப்பட்டனத்தின் கோட்டையைத் தகர்க்கும் பணிகளும் துவங்கியிருந்தன. ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்தே கோட்டையை நோக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. மே 3ஆம் தேதி கோட்டையில் முதல் உடைப்பு ஏற்பட்டது. அந்தப் பிளவைப் பார்வையிட்ட ஆங்கில கம்பனி அதிகாரிகள், அடுத்த நாள் நண்பகலில் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர். அடுத்த நாள் நண்பகல், அந்த உடைப்புப் பகுதியை திப்பு சுல்தான் வந்து பார்வையிட்டார். அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவரைச் சந்தித்த ஜோதிடர்கள் அன்றைய தினம் நல்ல நாளில்லை என்று கூறினர். அவர்களது ஆலோசனைப்படி பலருக்கு தானங்களைச் செய்தார் திப்பு.   திப்பு சுல்தானின் இறுதித் தருணங்கள் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL. படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்குப் பிறகு தனது முகாமிற்கு வந்த திப்பு சுல்தான், சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போதுதான், கோட்டையின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த சயீத் கபார் பீரங்கிக் குண்டு தாக்கி உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது. மிகுந்த விசுவாசியான சயீத்தின் மரணம் திப்புவை வெகுவாகப் பாதித்தது. அவர் உடனடியாக குதிரை மீதேறி உடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தைச் சென்றடைந்தார். ஆனால், அவர் அங்கு வந்து சேரும் முன்பே ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றிக் கொடியேற்றியிருந்தனர். திப்புவின் வருகை அங்கிருந்த மைசூர் வீரர்களுக்கு உத்வேகமளித்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த தீயைப் பார்த்து, வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இருந்தபோதும் முழுக்க முழுக்க ஒரு சாதாரண வீரனைப் போல களத்தில் நின்றார் திப்பு. தொடர்ந்து வீரர்கள் சிதறி ஓடவே, நகரத்தை நோக்கிச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தார் திப்பு. அந்தப் பாதை மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் படைத் தலைவனாக இருந்த மீர் நதீம் ஏற்கெனவே ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தார். அவர், அந்தப் பாதையைத் திறக்க மறுத்துவிட்டார். அப்போதே திப்புவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, கோட்டை வாசலை நோக்கி முன்னேறினார் திப்பு. அப்போது இரண்டாவது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மைசூர் வீரர்களைத் தாக்கி அழித்தபடி வந்த ஆங்கிலேயப் படை மூன்றாவது காயத்தை ஏற்படுத்தியது. அவரது இடது நெஞ்சின் பக்கம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரது குதிரை கொல்லப்பட்டது. அந்த நேரத்தில் அவரை நெருங்கிய அவரது உதவியாளர் ரஜா கான், ஆங்கிலேயர்களிடம் அவர் யார் என்பதைச் சொல்லலாம் என்றார். ஆனால், திப்பு மறுத்துவிட்டார். அவர்களிடம் கைதியாக இருப்பதைவிட இறப்பதே மேல் எனக் கருதினார் திப்பு. அப்போது ஒரு ஆங்கில வீரன் அவரது இடையிலிருந்த வாளின் உறையைப் பிடுங்க முயன்றார். வீறுகொண்டு அதைப் பறித்தார் திப்பு. அந்த வீரன், தனது துப்பாக்கியை எடுத்து திப்புவைச் சுட்டார். நெற்றியில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தார் திப்பு. அவர் உயிர் பிரிந்திருந்தது.   திப்பு சுல்தானின் இறுதி ஊர்வலம் பட மூலாதாரம்,BONHAMS இதற்குப் பிறகு மைசூர் படையின் வீரர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். திப்பு இறந்துவிட்ட தகவல் ஆங்கிலேயப் படைக்குத் தெரியவில்லை. அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அவரை அங்கே தேடினார்கள். அரண்மனையில் இருந்த இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் நடந்தபோது, அங்கு வந்த படைத் தலைவர் ஒருவர், திப்பு வடக்கு வாசலில் இறந்து கிடப்பதைச் சொன்னார். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, சடலங்கள் குவியலாகக் கிடந்தன. ஒருவழியாக திப்புவின் பல்லக்கு இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் ரஜா கான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர், திப்புவின் உடல் இருந்த இடத்தைக் காட்டினார். மறுநாள் திப்புவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. திப்புவின் உடல் இருந்த சவப்பெட்டியை அவரது தனி உதவியாளர்கள் சுமந்து வந்தனர். இளவரசர் அப்துல் காலிக் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்து வந்தார். ஊர்வலம் சென்ற தெருக்களில், மக்கள் விழுந்து வணங்கினர். லால் பாக் கல்லறையில் இறக்கி வைக்கப்பட்ட திப்புவின் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மரியாதைகள் முடிந்த பிறகு ஹைதர் அலியின் உடலுக்கு அருகில் திப்புவின் உடலும் புதைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டனமும் அரண்மனையும் சூறையாடப்பட்டன. மே 6ஆம் தேதி கர்னல் வெல்லெல்ஸி அங்கு வந்து கோட்டையின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்வரை இது தொடர்ந்தது. அவ்வளவு சூறையாடல்களுக்குப் பிறகும் அரண்மனையில் அதிகளவிலான செல்வம் மீதம் இருந்தது. நேர்த்தியான அரியாசனம், வெள்ளியிலும் தங்கத்திலும் செய்யப்பட்ட தட்டுகள், விலை உயர்ந்த தரை விரிப்புகள், விலை மதிப்பற்ற நகைகள் உள்ளிட்டவை இருந்தன. இவற்றில் ஒரு வைர நட்சத்திரம், நகைகள், திப்புவின் வாட்களில் ஒன்று ஆகியவை வெல்லெல்ஸிக்கு பரிசாக அளிக்கப்பட்டன. சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட புலித் தலை வின்ஸர் கோட்டையின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது, திப்புவின் தலைப்பாகை, மற்றொரு வாள் ஆகியவை கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸுக்கு அனுப்பப்பட்டன.   திப்பு சுல்தானின் தோல்விக்கான காரணம் பட மூலாதாரம்,DD NEWS மிகப்பெரிய வீரராக அறியப்பட்டிருந்த திப்பு சுல்தான், ஆங்கிலப் படையிடம் தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ன? "வங்காளத்திலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும் வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர் தென்னகத்தில் முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் கடுமையான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது. கிழக்கிந்திய கம்பனி மிகப்பெரிய வல்லமையைக் கொண்டிருந்ததால் மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோர் இணைந்து ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் ஹைதர் அலியின் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருவதை விரும்பாத ஆசப் ஷாவும், சூஜா உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு ஒத்துழைக்க மறுத்தனர். மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்தனர். இவையெல்லாம் மைசூர் அரசுக்கு எதிராக மாறியது. முடிவில், ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதி ஏற்றிருந்த திப்பு சுல்தான் இறுதிவரை ஆங்கிலேயருடன் போரிட்டு மடிய வேண்டியதாயிற்று," என்கிறார் மணிக்குமார். திப்பு சுல்தானுக்கு 12 குழந்தைகள் வரை இருந்தனர். அவர்களில் இரு இளவரசர்களுக்கு ஆண்டுக்கு 2,24,000 பகோடாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் அங்கிருக்கக்கூடாது என்றும் வேலூர் கோட்டைக்குள் சென்று வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வேலூர் கோட்டையில் வெடித்த 1807ஆம் ஆண்டின் கலகத்தில் அவர்களுக்கு பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். https://www.bbc.com/tamil/articles/c0klj2xxppgo
    • இவர்கள் தமிழருக்கு தீர்வே தேவையில்லை என்கிறார்களே? ஐக்கிய இலங்கை தான் குறிக்கோள். ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும் பாராளுமன்றைக் கைப்பற்ற முடியுமா? ஒவ்வொரு சட்டங்களையும் பாராளுமன்று அல்லவா நிறைவேற்ற வேண்டும். மிக முக்கியமாக இவர் கலந்து கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் இனப்பிரச்சனை பற்றி மூச்சே விடுவதில்லை.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.