விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
2018 இளையோர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ரைஸ்சேர்ச், குயிண்ஸ்டவுண், தவுரங்கா, சங்கரேய் உள்ளிட்ட 4 முக்கிய மைதானங்களில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான மேற்கிந்தி…
-
- 0 replies
- 492 views
-
-
சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…
-
- 0 replies
- 400 views
-
-
சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார் பெண்களை இரண்டாந்தர உயிரினங்கள் போன்று சவூதி அரேபியா கருதுவதால் அங்கு நடைபெறவுள்ள செஸ் உலக சம்பியன் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என இரண்டு தடவைகள் உலக செஸ் சம்பியனான யூக்ரெய்ன் வீராங்கனை அனா முஸிசுக் தெரிவித்துள்ளார். ‘எனது கொள்கைகளை நான் கடைப்பிடிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்த அவர், சவூதியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்துவம் பேணப்படாததால் இரட்டை உலக சம்பியன் பட்டங்களைத் தக்கவைக்கப்போவதில்லை என்றார். வீதிகளில் தனியாகக்க…
-
- 0 replies
- 319 views
-
-
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014 காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந…
-
- 0 replies
- 489 views
-
-
புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…
-
- 0 replies
- 215 views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 04:56 PM இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா? ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், ராபின் பீட்டர்சன், ஹஷிம் ஆம்லா. - படம். | ராய்ட்டர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்: தென் ஆப்பிரிக்காவின் கி…
-
- 0 replies
- 332 views
-
-
“தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 441 views
-
-
என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார். மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. இதன் இறுதியாட்டம் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 28:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. …
-
- 0 replies
- 616 views
-
-
பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு ஸிகோ சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க …
-
- 0 replies
- 230 views
-
-
சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…
-
- 0 replies
- 573 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 42ஆவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று லீட்ஸ்- ஹெடிங்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5.3ஆவது ஓவரின் போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. அணி 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற…
-
- 0 replies
- 529 views
-
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 604 views
-
-
வார்னர், மிட்செல் மார்ஷ் அபாரம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா 2016 Getty Images நியூஸிலாந்தை 2-வது போட்டியில் வீழ்த்திய பிறகு மார்ஷ்-ஹேஸ்டிங்ஸ். | கெட்டி இமேஜஸ். வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியின் படுதோல்விக்கு பழி தீர்த்து தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் (98), கவாஜா (50), மிட்செல் மார்ஷ் (69) ஆகியோர் அதிரடியில் 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் முத…
-
- 0 replies
- 402 views
-
-
லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…
-
- 0 replies
- 521 views
-
-
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. …
-
- 0 replies
- 829 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 518 views
-
-
'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…
-
- 0 replies
- 627 views
-
-
எவரெஸ்ற் கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன் எவரெஸ்ற் இன், பொன்விழா கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன். ஆவரங்கால் கிழக்கு லிங்கம் மத்திய சன சமூக நிலையம் மற்றும் எவரெஸ்ற் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாணரீதியில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ற் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியினை அன்றையதினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார். இரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மின்னொளியில் இவ் இறுதிப் போ…
-
- 0 replies
- 339 views
-
-
இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில் டேரன் லீ மேன். | படம்: ஏஎப்பி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார். சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன? மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை…
-
- 0 replies
- 306 views
-
-
பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…
-
- 0 replies
- 159 views
-
-
டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெர…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட்…
-
- 0 replies
- 230 views
-
-
ரஷ்யாவிடம் தோல்வி எதிரொலி: ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா இனியஸ்டா - AFP உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. பெனால்டி ஷூட்டில் ஸ்பெயின் அணி வீரர்களான ஜார்ஜ் கோகே, இயாகோ அஸ்பஸ் ஆகியோர் கோட்டை விட்டனர். இதன் மூலம்…
-
- 0 replies
- 313 views
-