விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் சகல துறை வீரர் ரஸல் ஆர்னோல்டும் மிதவேகப் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளனர். உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேரைக் கொண்ட இறுதி அணியை தெரிவு செய்யும் இறுதிநாள் நேற்று திங்கட்கிழமையாகும். இந்த நிலையில் உலகக் கிண்ணத்துக்கான இறுதி அணியை தேர்வுக் குழு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்தது. இதற்கமைய இந்த அணியில் எட்டு துடுப்பாட்ட வீரர்கள், இரு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து நடுத்தர வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்குவர். இதற்காக, கடந்த பல மாதங்களாகக் அணியில் இடம்பெறாத ரஸல் ஆர்னோல்டும் நுவான் குலசேகரவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தவும், பந்துவீச்சு பலத்தை அதிகர…
-
- 0 replies
- 1k views
-
-
திசரவின் போராட்டம் வீண்- போராடி தோற்றது இலங்கை! நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 21 ஓட்டங்களால் போராடி தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்ககை அணி, 2-0 என நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது. மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 90 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 87 ஓட்டங்களைய…
-
- 0 replies
- 812 views
-
-
ரியல்மாட்ரிட் அறிவிப்பு : ரொனால்டோவின் விலை ரூ.7 ஆயிரத்து 445 கோடி ! போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பணக்கார கால்பந்து அணியான ரியல்மாட்ரிட்டுக்காக விளையாடி வருகிறார். கால்பந்து உலகில் அசத்தி வரும் காரத் பேல், ஜேம்ஸ் ரோட்ரிகஸ், மோட்ரிச் உள்ளிட்ட இளம் வீரர்களும் ரியல்மாட்ரிட் அணியில்தான் உள்ளனர்.முன்களத்தில் இந்த இளம் வீரர்களுடன் ரியல்மாட்ரிட் அணி அசத்துகிறது. ரொனால்டோவை தவிர்த்து விட்டு பார்த்தாலும் முன்களத்தில் ரியல்மாட்ரிட் அணி சோடை போகவில்லை. செர்ஜியோ ரமோஸ் தலைமையில் ரியல்மாட்ரிட் அணி வலுவாகவே உள்ளது. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விற்கும் முடிவுக்கு ரியல்மாட்ரிட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரான்சை சேர்…
-
- 0 replies
- 173 views
-
-
இங்கிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. சௌத்தம்ரனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சுக்குத் தடுமாறிய நிலையில் அவ்வணி, 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணி சார்பாக, நிக்கோலஸ…
-
- 0 replies
- 838 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம் அட்லெடிகோஸ் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின்போது, எதிரணி வீரர்களை அநாசயமாக வீழ்த்தி கோலடிக்கும் பார்சிலோனாவின் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை. கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போ…
-
- 0 replies
- 286 views
-
-
இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடரின் முதல…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வீரர்கள், பாலிவுட் நடிகர் இணைந்து 7,600 அடி உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர். பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா, 30. சமீபத்தில் இந்தியா, நியூசிலாந்தின் சுற்றுலா துாதராக இவர் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து சென்ற இவர், ஒருநாள் காலையில் முன்னாள் கேப்டன் பிளமிங், வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுலை அழைத்துக் கொண்டு, அங்குள்ள ‘இசோபெல் கிளேசியர்’ என்ற மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். கடல் மட்டத்தில் இருந்து 7,600 அடி உயரத்தில் உள்ள இது ஒரு பனிப் பிரதேசம். எப்போதும் பனிப்பொழிவு காணப்படும். இங்கு சென்ற இவர்கள் கிரிக்கெட் ‘மேட்டை’ விரித்து ஆடுகளத்தை தயார் செய்தனர். இருபுறமும்…
-
- 0 replies
- 331 views
-
-
ரொனால்டோ உலகின் பணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்!(வீடியோ) ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோதான் கால்பந்து உலகின் பணக்கார வீரர். அட்டகாசமான டிரிபிளிங், தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றும் திறமை, பவர்ஃபுல் ப்ரீகிக்குகள் மட்டும் ரொனால்டோவின் அடையாளம் அல்ல. பந்தை கன்ட்ரோல் செய்வதிலும் ரொனால்டோவுக்கு நிகர் ரொனால்டோதான். GQ Magazine's 'Body Issue இதழுக்காக ரொனால்டோ பந்தை கட்டுப்படுத்தும் வித்தையை செய்து காட்டினார். அந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. http://www.vikatan.com/news/sports/57921-ronaldo-strips-off-to-juggle-ball.art
-
- 0 replies
- 313 views
-
-
ஐபிஎல் அணிகளும் வீரர்களும் முழு விவரம் படங்கள்: ஜி.ஆர்.என். சோமசேகர். ஐபிஎல் கிரிக்கெட் வீர்ர்கள் ஏலம் இன்று நடந்து முடிந்தது, இதில் ஷேன் வாட்சன், பவன் நேகி, யுவராஜ் சிங், கிறிஸ் மோரிஸ், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஏலம் முடிந்ததையடுத்து ஐபிஎல் அணிகள் மற்றும் அதன் வீரர்கள் விவரம் வருமாறு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன், ஏ.பி.டிவில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வீஸ, எஸ்.அரவிந்த், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், கேதர் ஜாதவ், மந்தீப் சிங், ஆடம் மில்ன, சர்பராஸ் கான், சாமுயெல் பத்ரீ, டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் படேல், பிரவீண் துபே, அபு நெகிம்,…
-
- 0 replies
- 532 views
-
-
2020 இலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம் By Mohammed Rishad - நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது. 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (24) விளைய…
-
- 0 replies
- 414 views
-
-
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது. பராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/237591/2021-டோக்கியோ-ஒலிம்பிக்-போட்டிகள்-ஜூலை-23-ஆரம்பம்
-
- 0 replies
- 539 views
-
-
திராவிட்-கங்குலி சாதனை ரன் குவிப்பை முறியடித்த லம்ப், வெசல்ஸ் மைக்கேல் லம்ப் பேட்டிங். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. நாட்டிங்கம் அணிக்கும் நார்த்தாம்ப்டன் அணிக்கும் இடையே நடைபெற்ற ராயல் லண்டன் கோப்பை 50 ஓவர் முதல் தர லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மைக்கேல் லம்ப், ஹென்ரிக் வெசஸ்ல் ஆகியோர் அதிக ரன்கள் கூட்டணி சாதனையை நிகழ்த்தியுள்ளனர். டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. அதாவது இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டுகளில், 1999 உலகக்கோப்பை போட்டியின் போது இலங்கைக்கு எதிராக திராவிட்-கங்குலி கூட்டணி 318 ரன்களைக் குவித்து சாதனை செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது முதல் விக்கெட்டுக்காக 342 ரன்கள் குவித்…
-
- 0 replies
- 547 views
-
-
ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ…
-
- 0 replies
- 421 views
-
-
தென்னாபிரிக்க அணியில் அறிமுகமான நாள் முதல் எனது தாடி ஒரு பிரச்சினையாகவே உள்ளது [13 - December - 2008] * ஆம்லா கூறுகிறார் மும்பையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஆம்லா கண்டனம் தெரிவித்திருக்கிறார். தென்னாபிரிக்கா அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஒரு போட்டி முடிந்துவிட்டது. 2 ஆவது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே மெல்போர்ன் நகரில் நிருபர்களைச் சந்தித்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா அவர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும்- ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி தள்ளிவைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. ஏனெனில், 2022-ம் ஆண்டில் 2…
-
- 0 replies
- 482 views
-
-
இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா? ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மா…
-
- 0 replies
- 322 views
-
-
தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது. http://vethuveettu.blogspot.com/2009/04/blog-post_7792.html
-
- 0 replies
- 5.7k views
-
-
உலக கோப்பை போட்டியில் டோனி ஆடுவாரா? ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. 20 ஓவர் உலக கோப்பையை 2007-ம் ஆண்டும், ஒருநாள் போட்டி உலக கோப்பையை 2011-ம் ஆண்டும் அவர் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக திகழ்ந்த டோனி 20…
-
- 0 replies
- 359 views
-
-
தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப், கைல் மேயா்ஸ் தொடங்கினா். இதில் மேயா்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 39 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷாமா் புரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். 4 ஆவது வீரா் பிராண்டன் கிங் டக் அவுட்டானாா். இடையே தலைவர் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் அதிரடியாக 74 ஓட்டங்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ரோவ்மென் ப…
-
- 0 replies
- 463 views
-
-
ரோஜர் பின்னி: "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்த்த நல்லவர்" சுரேஷ் மேனன் விளையாட்டு எழுத்தாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE HINDU இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது. பிசிசிஐ தலைவராக அலுவல்ப…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
72 பந்துகளில் 277 ஓட்டங்களைக் குவித்து லண்டன் பிராந்திய அணியில் இலங்கையர் சாதனை [07 - September - 2007] 20/20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கையின் முதல்தர ஆட்டக்காரர் ஒருவர் 72 பந்துகளில் 277 ஓட்டங்களை குவித்து வியக்க வைத்திருக்கிறார். தனுகா பத்திரன என்ற இலங்கையரே இந்தச் சாதனையைப்படைத்துள்ளார்.இங்க
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தோனி. | படம்: சஞ்ஜய் கோஷ். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார். "ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டு…
-
- 0 replies
- 323 views
-
-
மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி (வீடியோ) ஜெர்மனி பந்தஸ்லிகா(bundesliga) தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான் லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆ…
-
- 0 replies
- 351 views
-
-
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 498 views
-