விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள். பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன. ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திட…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் Tamil இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ் யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடரின் இரண்டாவது பருவகால சம்பியன்களாக நோர்த் டிராகன்ஸ் அணியினர் முடிசூடியுள்ளனர். இந்த பருவகாலத்திற்கான ப…
-
- 0 replies
- 365 views
-
-
மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது. இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து…
-
- 0 replies
- 491 views
-
-
இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி: 37 நாள்களில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள்! அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது இலங்கை அணி. 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள். இவை அனைத்தும், 37 நாள்களில் முடியவுள்ளன! நவம்பர் 16 அன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டிசம்பர் 6 அன்று டெல்லி-யில் மூன்றாவது டெஸ்டுடன் டெஸ்ட் தொடர் நிறைவு பெறுகிறது. தர்மசாலாவில் டிசம்பர் 10 அன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17 அன்று மூன்றாவது போட்டியுடன் ஒருநா…
-
- 0 replies
- 267 views
-
-
மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…
-
- 0 replies
- 243 views
-
-
ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். நியூசிலாந்தி…
-
- 0 replies
- 540 views
-
-
இந்திய அணியின் பிரிவினைக்கு காரணம் 'சென்னை'! இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி, வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்து விட்டது. நாளை 3வது ஒருநாள் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் மீண்டும் மோதவுள்ளன. தோல்வியை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து இறங்கத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் வீரர்கள் தோனி தலைமையிலும், கோலி தலைமையிலும் இரு குழுவாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் மோதல் நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது தோனிக்கு எதிராக வீரர்கள் பலர் அணி திரள்வதற்கு, இரு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. நீண்ட காலமாக அவர் பேட்டிங் பார்மில் இல்லை என்பது முதல் காரணமாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக…
-
- 0 replies
- 235 views
-
-
முக்கிய போட்டியில் இலங்கை தோல்வி – தென்னாபிரிக்கா அபார வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. செஸ்ரர் லே பகுதியிலுள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிதனமாக துடுப்பெடுத்தாடியபோதும், ஒரு கட்டத்தில் விக்…
-
- 0 replies
- 430 views
-
-
’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவிய நிலையில் மிலிங்க மற்றும் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கையை சேர்ந்த 17 வீரர்கள் உட்பட 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை இந் நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நட…
-
- 0 replies
- 434 views
-
-
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…
-
- 0 replies
- 554 views
-
-
பாகிஸ்தான் , மே.தீவுகள் ஒ.நா.ச போட்டித் தொடர் -ச.விமல் இரண்டு கீழ் நிலை அணிகளுக்கிடையிலான தொடர் இது. இது கூட ஒரு விறுப்பைத் தரும் தானே? 92 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 87 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும் உள்ளன. தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ள அல்லது தமது இடங்களை நிலைநிறுத்திக் கொள்ள இந்த தொடர் இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இந்த இரு அணிகளும் வேற எந்த அணியையும் முந்தவும் முடியாது. இந்த அணிகளை வேறு எந்த அணிகளும் முந்தவும் முடியாது. பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைச் சந்தித்தால் மாத்திரம் இந்த அணிகளில் ஒன்று முன்னோக்கி செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெ…
-
- 0 replies
- 400 views
-
-
இடத்தை இழக்கப்போவது யார்? இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் உப தலைவர் சந்திமால் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றனர். இருவரும் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அணியிலிருந்து நீக்கப்படப்போவது யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அஞ்சலோவும் சந்திமாலும் அணியில் இணையும் பட்சத்தில் யார் நீக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் கிரஹம் போர்ட்டிடம் கேட்டபோது, அதற்கு இப்போதே பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அண்மையில் ச…
-
- 0 replies
- 246 views
-
-
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம…
-
- 0 replies
- 368 views
-
-
"எப்படி பந்து வீசினாலும் அடித்த சேவாக்" - அஸ்வின் பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள் வீரேந்திர சேவாக் தன்னை மனம் தளரவைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இணைய நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, வலைப்பயிற்சியில் வீரேந்திர சேவாக் ஆட தான் பந்து வீசிய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் அஸ்வின். அவர் பேசியதாவது: "சேவாக் சிக்கலானவர் அல்ல. ஆனால் உண்மையில் அவர் என் மனதை தளரவைத்துள்ளார். இலங்கையின் தம்புள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் நான் அவருக்கு பந்து வீசினேன். ஆஃப் சைடில் பந்து வீசினேன், கட் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்டம்ப்…
-
- 0 replies
- 703 views
-
-
அபார வெற்றி பெற்ற யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி புதிய சாதனை அகில இலங்கை பாடசாலை மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கொலன்னாவை மகளிர் வித்தியாலயத்தை வீழ்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பாடசாலை வலைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 360 பாடசாலைகள் பங்கேற்றுள்ள 2017ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று பதுளை, விச்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமாகின. இதன் முதல் சுற்றின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், கொலன்னாவை மகளிர் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்த…
-
- 0 replies
- 401 views
-
-
19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: நடப்பு சம்பியன் இந்தியாவுடன் இலங்கையும் ‘அவுட்’ அரை இறுதிகளில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மலேஷியாவின் கின்ராராவிலும் பயொமாஸிலும் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பு சம்பியன் இந்தியாவும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கையும் அரை இறுதி வாய்ப்புகளை இழந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளன. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் முற்றிலும் எதிர்பாராத நாடுகளான ஆப்கானிஸ்தானும், நேபாளமும் அரை இறுதிகளுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தானும், பங்களாதேஷும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தானும் …
-
- 0 replies
- 198 views
-
-
தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய முதல் மட்டக்களப்பு பெண் ஐடா எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த மட்டு நகர், நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த நொபெட் ஜோன்சன் ஜடா குறித்த பார்வையே இது.
-
- 0 replies
- 363 views
-
-
2017-ன் சிறந்த டெஸ்ட் லெவனுக்கு கேப்டன் கோலி... அணியில் மூன்று இந்தியர்கள் யார்? #Rewind2017 Chennai: ஸ்மித் - கோலி வார்த்தைப் போர், ஸ்மித் - ரூட் வாய்க்கா தகராறு, புனே பிட்ச் பிரச்னை, டெல்லி மாசுப் பிரச்னை, அஷ்வின் - ஜடேஜா விக்கெட் வேட்டை, கேப்டன்களின் சத வேட்டை, வங்கதேசத்தின் எழுச்சி என டெஸ்ட் கிரிக்கெட், இந்த ஆண்டு கமர்ஷியல் படம்போல கலந்துகட்டி அடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த, நான்கு நாள் போட்டிகளையும் அறிமுகப்படுத்திவிட்டது ஐ.சி.சி. 2017-ம் ஆண்டில் இதுவரை 45 போட்டிகள் (டிசம்பர் 25 வரை) நடந்துள்ளன. பல வீரர்கள் இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுள், இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் ப…
-
- 0 replies
- 211 views
-
-
இஷான் கிஷன்: ரோஹித்துக்கு பதில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய இளம் புயல் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ஃபாக் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அப்படித்தான் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும். வெறும் 10க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள இஷான் கிஷன் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தேர்வானார். அதற்கு பின்னர் நடந்த அதிரடிகள் தனிக்கதை. …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
ரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்! கடந்த முறை சர்வதேச பிரீமியர் டென்னிஸ் தொடரில் ‘இந்தியன் ஏசஸ்’ அணிக்காக ஃபெடெரர் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியன் ஏசஸ் அணிக்கு எதிராக இவர் விளையாடிய போதும் ரசிகர்களின் ஆதரவு இவருக்குக் குறையவில்லை. அந்த போட்டியில் அவர் ரஃபேல் நடாலிடம் வீழ்ந்தார். எனினும் இந்திய மண்ணும் அதன் நேசமும் ரோஜர் ஃபெடரருக்கு பிடித்த ஒன்று. ”இந்திய ரசிகர்கள் காட்டும் ஆதரவையும் அவர்களது அன்பையும் நான் மிகவும் நேசிக்கிறேன். எந்தவொரு தருணத்திலும் இந்திய ரசிகர்களின் ஆதரவு எனக்கு குறையவே இல்லை. இந்திய உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைக்காட்டில…
-
- 0 replies
- 620 views
-
-
இறுதி போட்டிக்கு தெரிவான பங்களாதேஷ் அணி..! தென் ஆப்ரிக்காவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியது. பங்களாதேஷ் அணி முதல் முறையாக இவ்வாறு இறுதி போட்டிக்கு தெரிவிக்கியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 விக்கட்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து வெற்றிஇலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44வது ஓவ…
-
- 0 replies
- 502 views
-
-
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் ஆடி தொடர்ந்து வெற்றி பெற்றுத் தரும் விராட் கோலி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளது. விராட் கோலி நடப்பு ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் 4 போட்டிகளில் 184 ரன்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்று கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவர…
-
- 0 replies
- 527 views
-
-
தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹென்றிச் கிளாசெனின் சதத்தால் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா: 291/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆ.இ 123 (114), டேவிட் மில்லர் 64 (70), கைல் வெரைன் 48 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/45 [10], மிற்செல் ஸ்டார்க் 2/59 [10], ஜொஷ் ஹேசில்வூட் 1/63 [10]) அவுஸ்திரேலியா: 217/10 (45.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 76 (94), மர்னுஸ் லபுஷைன் 41 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/30 [8], தப்ரையாஸ் ஷம்சி 2/45 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/39 [7.1],…
-
- 0 replies
- 660 views
-
-
அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது மருதங்கேணி பிரதேச செயலகம் யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்-2016 கால்பந்தாட்டப்போட்டியில் மருத ங்கேணி பிரதேச செயலக அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நலன்புரிக் கழக தலைவர் செ.ரகுநாதனின் தலைமையில் இப்போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயல…
-
- 0 replies
- 328 views
-
-
விராட் கோஹ்லியின் அதகளம் ஷேவாக் சாதனையை முறியடித்தது! #Kohli200 கொலைப்பசியில் இருக்கிறார் விராட் கோஹ்லி. எந்தெந்த அணிகள், எந்தந்த பவுலர்கள் மாட்டுகிறார்களோ, அத்தனை பேரையும் கதி கலங்க வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உலகக்கோப்பையில் சொதப்பித்தள்ளியிருந்தார் கோஹ்லி. கடும் விமர்சனங்கள் எழ, அதன் பின்னர் வேற லெவல் ஆட்டம் ஆடத் துவங்கியிருக்கிறார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட்டாக இருந்தா…
-
- 0 replies
- 516 views
-