விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…
-
- 0 replies
- 348 views
-
-
தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில், ரோஞ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் டி20 மற்றும் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட…
-
- 0 replies
- 348 views
-
-
இங்கிலாந்து அணியின் ‘குடி’ பிரச்சினை ஜோக் அல்ல: ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் டேரன் லீ மேன். - கோப்புப் படம். | கே.முரளி குமார் இங்கிலாந்து பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலையில் மதுவை ஊற்றிய சக வீரர் பென் டக்கெட், 2 நாள் பயிற்சி ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தின் இந்தப் பிரச்சினை சிரிப்பதற்குரியதல்ல என்று கூறியுள்ளார் ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன். கடந்த செப்டம்பரில் பிரிஸ்டலில் மதுபான விடுதி அருகே பென் ஸ்டோக்ஸ் குடித்துவிட்டு இருவர் மீது பலப்பிரயோகம் செய்தது பிரச்சினையாகி இன்னமும் முடியாத நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது டக்கெட் மது ஊற்றி விளையாடும் சம்பவம் நடந்துள்ளது. இன்ன…
-
- 0 replies
- 348 views
-
-
சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…
-
- 1 reply
- 348 views
-
-
முதலாவது இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. நேற்று கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து முதலில் துடுப்பாடி 134 ஓட்டங்களைப் பெற்றது.இங்கிலாந்து அணிக்காக புட்லேர் 32 ஓட்டங்களை பெற்றார்.தென்னாப்பிரிக்கா சார்பாக இம்ரான் தாஹீர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர் நிறைவடையும் போது 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை…
-
- 0 replies
- 348 views
-
-
5-வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 3-2 என தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி, 3-2 என தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான். ரஹ்மத் ஷா சதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், அயர்லாந்திற்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட் நொய்டாவில் நடைபெற்றது. கிரேட் நொய்டாவை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வர…
-
- 0 replies
- 348 views
-
-
டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி தண்டிக்கப்படுகிறது: தோனி டி.ஆர்.எஸ். முறை சரியானதுதானா? தோனி மீண்டும் கேள்வி. படம்: ஏ.பி. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கான டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி மோசமான தீர்ப்புகளினால் தண்டிக்கப்படுகிறதா என்று தோனி ஐயம் எழுப்பியுள்ளார். நேற்றைய பெர்த் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லி இறங்கியவுடனேயே கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, பந்து வீசியவர் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண். நடுவர் கெட்டில்புரோ நாட் அவுட் என்றார். அதன் பிறகு பெய்லி 120 பந்துகளீல் 122 ரன்கள் எடுத்து அவரும் ஸ்மித்தும் ஆட்டத்தை 21/2 என்ற சரிவிலிருந்து இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றனர…
-
- 0 replies
- 348 views
-
-
தோனியின் 9,000 ரன்களும் கவனிக்கத்தக்க புள்ளிவிவரமும்! படம்.| கெட்டி இமேஜஸ். மொஹாலியில் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி, தனது பழைய அதிரடி ஆட்டத்தில் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார், இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் தோனி 9,000 ரன்களைக் கடந்தார், இதில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது, நேற்று சக்தி வாய்ந்த பல ஷாட்களை ஆடிய தோனி 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 80 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்ததையடுத்து தோனியும் பட்டியலில் இணைந்தா…
-
- 0 replies
- 348 views
-
-
தெற்காசியாவின் வேகமானோர் இலங்கையர்கள் தெற்காசியாவின் வேகமான நபர்களாக, இலங்கையைச் சேர்ந்த ஹிமாஷ இஷான், றுமேஷிகா புத்திக்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றே, இவர்களிருவரும் இப்பெருமையைப் பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர், 10.28 செக்கன்களில் ஓடி முடித்து, தங்கப் பதக்கம் வென்றார். இது, கடந்த ஏழு தசாப்தங்களில், இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட சிறந்த பெறுபேறாகும். இறுதிப் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் சுற்றில், 10.26 செக்கன்களில் அவர் ஓடி முடித்த போதிலும், தொழில்நுட்பத் தவறு காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. …
-
- 0 replies
- 348 views
-
-
விளாசித் தள்ளிய ஷாரூக்கான்: பதிலடி கொடுத்த விஜய் மல்லையா (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:30.41 மு.ப GMT ] ஐபிஎல் 8வது தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும், பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவும் மோதிய போட்டி ஒன்று வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இதில் கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் மற்றும் பெங்களூர் அணியின் நிர்வாகிகள் மோதினர். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷாரூக்கான் அசத்தலாக சில ஷாட்டுகளை ஆடினார். 10 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் ஷாரூக்கான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் அணி களமிறங்கியது. ஷாரூக்கானுக்கு…
-
- 0 replies
- 348 views
-
-
பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள். சில்வர்ஸ்டோன் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில…
-
- 0 replies
- 348 views
-
-
அவுஸ்திரேலியாவின் City West Falcons அணியை இறுதிக் போட்டிக்கு எடுத்துச்சென்றுள்ள தர்ஜினி இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ள…
-
- 0 replies
- 348 views
-
-
ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் தொடர்களை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 சிசன் முடிந்துவிட்டது. இந்த 10-வது சீசன் வரை ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்று இருந்தது. இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்க…
-
- 1 reply
- 348 views
-
-
'சேப்பாக்கம் வரவேற்பை மிஸ் பண்ணப்போறேன்' -அஸ்வின் வேதனை இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு, ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கவுள்ளதை அடுத்து சென்னை ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். தோனி, ரெய்னா, ஜடேஜாவை RTM கார்டு சென்னை அணி தக்கவைக்க ஏலத்தின் மூலம் அஸ்வினை பஞ்சாப் வாங்கியது. அஸ்வின் இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னை அணிக்காகக் களமிறங்காதது வருத்தம் அளிக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 10 வருடங்களாக சென்னை அணிக்கு விளையாடிய நிலையில் தற்போது விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. ஏலம் என்பது எதிர்பாராதது. நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் பௌலிங் செய்யும்ப…
-
- 0 replies
- 348 views
-
-
கவாஸ்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா? வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்ததே சாதனையாக இருக்கிறது. அதை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 4 டெஸ்டில் விளையாடி 640 ரன் (7 இன்னிங்ஸ்) குவித்துள்ளார். 2 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 128 ஆக உள்ளது. அதிகபட்சமாக மும்பை டெஸ்டில் 235 ரன் குவித்தார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 1971-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன் குவித்தத…
-
- 0 replies
- 348 views
-
-
‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபை அவசியமில்லை’’ – அமைச்சர் தயாசிறி ஜயசேகர (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபையைக் கலைத்து இடைக்கால நிருவாக சபையை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபாலவை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டு அவரை நிருவாக சபைக்குள் அனுமதித்துள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரங்கில் பிரகாசித்த ஆடவர் ஹொக்கி அணியினரையும் .மகளிர் கூடைப்பந்தாட்ட அணியினரையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட …
-
- 0 replies
- 348 views
-
-
பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி- அர்செனல் தோல்வி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. அர்செனல் தோல்வியடைந்தது. #PremierLeague #MCI #TOT பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் அர்செனல் - டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 1-0 என அர்…
-
- 2 replies
- 347 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 தொடரை தனதாக்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரக்காவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது, இரண்டாவது இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 189 ஓட்டங்களினலும், மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினாலும், நான்காவது போட்டியில் 191 ஓட்டங்களினாலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 347 views
-
-
எவரெஸ்ட் மலையில் வைக்கப்படும் பிலிப் ஹியூக்ஸின் துடுப்பாட்ட மட்டை அவுஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது, பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை பலரும் அறிந்ததே. பல்வேறு வழிகளில் அவருக்கு அவுஸ்திரேலியா தரப்பிலும் உலக அளவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ்க்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தும் விதமாக அவர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டையொன்றை உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நேபாள…
-
- 0 replies
- 347 views
-
-
இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 09:59 AM (என்.வீ.ஏ.) மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை…
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து மகளிருக்கான யுரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்றில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோல் அடிக்கிறார் டென்மார்க் வீராங்கனை நதியா நதிம். - படம்: ஏஎப்பி நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும…
-
- 0 replies
- 347 views
-
-
தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DINESHKARTHIK தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலா…
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…
-
- 1 reply
- 347 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ; ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை ; ரசல் எடுத்த அதிரடி முடிவு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் …
-
- 0 replies
- 347 views
-
-
ஊக்கமருந்து தடையிலிருந்து மீண்ட ஷரபோவா சம்பியனானார் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாத தடைக்குபின்னர் திரும்பிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் இடம்பெற்றுவரும் டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் வீராங்கனை மரியா ஷரபோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கினாலும்இ அதன் பின்னர் சரிவிலிருந்து மீண்டு 7-6இ 7-6 (10-8) என்ற நேர் செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் ஊக்கமருத்துத்…
-
- 0 replies
- 347 views
-