Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாட்டிலை வைச்சுகிட்டு ஆடணுமா? ஆஹா இப்பவே கண்ணை கட்டுதே.. ஐசிசியின் அதிரடி விதிகள்.! துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கொரோனா வைரஸ்-க்கு இடையே கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் துவக்க சில விதிமுறைகளை வகுத்துள்ளது. புதிய விதிகள் கிரிக்கெட் போட்டிகளை இப்போது துவங்காவிட்டால் பல அணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் இந்த விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விதிகளில் பெரும்பாலானவை பந்து குறித்தவை தான். கிரிக்கெட் போட்டியில் பந்து பல வீரர்களின் கை மாறி, அம்பயர் வசமும் செல்லும். அனைத்து வீரர்களும் பந்தை தொட வேண்டிய அவசியம் உள்ளது. என்ன கூறி உள்ளது ஐசிசி.? பந்தை எப்படி கையாள்வது என்பது பற்றி அந்த விதிமுறைகளில் அதிகம் குறிப…

  2. பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை 54 Views நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பூரணமாக குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக ஹர்…

    • 0 replies
    • 422 views
  3. பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…

  4. பாதி போதையில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசிய கிப்ஸ்: சுயசரிதையில் தெரிவித்துள்ளார் வரலாற்று சிறப்பு மிக்க சேஸிங்கில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசும்போது பாதி போதையில் இருந்ததாக தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் 13-3-2006 அன்று தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான போட்டியும் ஒன்று. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்…

  5. பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…

  6. பாதியில் முறிந்த மைக்கேல் கிளார்க்கின் பயணம் மைக்கேல் கிளார்க் முதலில் சுவாரஸ்யமான ஒரு புள்ளிவிவரம். இந்த மாதக் கடைசியில் ஓய்வுபெறவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் ஜான் கிளார்க்கும் அவரை விரைவில் ஓய்வுபெற வைத்ததில் மறைமுகமாகப் பங்காற்றிய இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக்கும் ஒரே சமயத்தில் (2013, டிசம்பர்) தத்தமது 100-வது டெஸ்ட் போட்டியை ஆடியவர்கள். 100-வது போட்டி முடிந்த பிறகு அவர்களுடைய நிலை என்ன தெரியுமா? அலாஸ்டர் 100 + கிளார்க் 100 = சச்சின் 200 என்பதுதான் அந்தத் தகவல். புதிராக உள்ளதா? இதைப் பாருங்கள்: கிளார்க்: 100 போட்டிகள், 7966 ரன்கள், 26 சதங்கள். குக்: 100 போட்டிகள், 7955 ரன்கள், 25 சதங்கள். இவை இரண்டையும் கூட்டினால் 200 போட்டிகள், …

  7. பாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மெக்கானிக்குக்கு ஏற்பட்ட விபத்தால் ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிவேக கார் பந்தயமாக இருப்பது ஃபார்முலா ஒன்தான். இங்கு வேகத்தை மட்டுமே மனதில்வைத்து அனைத்து கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு நொடியும் மிகமுக்கியம். 300 கி.மீ-க்கு மேல் பறக்கும் கார்களுக்கு டயர்கள் வேகமாக தேய்ந்துவிடும். அதனால், ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் டயர்களை மாற்றுவதற்காக டிரைவர்கள் காரை பிட் ஸ்டாப்பில் நிறுவத்துவது சகஜம். இப்படி …

  8. உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மே.இ.தீவுகள் லெஜண்ட் கேரி சோபர்ஸ். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான கேரி சோபர்ஸ், நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் சில ஷாட்கள் பற்றி கூறும்போது, கவசங்கள் இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் பல ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் ஹெல்மெட், முகக்கவசம் இன்னபிற கவசங்களை கழற்றி விட்டு அத்தகைய ஷாட்களை ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் ஆடுகிறார்களா என்பதையும் பார்ப்போம். கடந்த கால வீரர்களுக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்று ஆடும் சில ஷாட்களை …

  9. பான்பாசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது சானியா ஜோடி டோக்கியோ: பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் சீனாவின் சென் லியாங் - ஜாவ்ஸுவான் யங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா-பர்போரா ஜோடி கனடாவின் கேபிரில்லா டேப்ரோஸ்கி-ஸ்பெயினின் மரியா …

  10. பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்றும் ஜமைக்கா நாட்டின் பொலிஸார் செவ்வாய்கிழமை மாலை அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றபட்ட பிறகு பாப் உல்மர் தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து முதலில் ஒரு மருத்துவர் நடத்திய மருத்துவ ஆய்வில், பாப் உல்மர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு முன்னைய ஆய்வை நிராகரித்தது. உல்மரின் மரணம் தொடர்பான ஒவ்வொரு விடயமும் தொழில் ரீதியாக புலனாய்வு …

  11. பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன. தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர். பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்…

  12. பாய்ந்து சென்று தங்கம் வென்ற மில்லர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை பாய்ந்தபடி கடக்கும் பஹாமஸ் வீராங்கனை ஷானே மில்லர். படம்: ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது. பந்தயம் முடிகிற நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் பெலிக்ஸ் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். அவருக்கும் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லருக்கும் கடும்போட்டி அமைந்தது. அப்போது மில்லர் திடீரென எல்லைக்கோட்டைத் தொடுகிற சமயத்தில் தடாலடியாக கீழே விழுந்த நிலையில் பாய்ந்து முன்னே சென்றார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்கமுட…

  13. பாரதரத்னா மறுக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானுக்கு பிரிட்டன் பார்லியில் விருது! ஹிட்லர் அழைத்தும் ஜெர்மனி அணியில் இணைய மறுத்த, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்துக்கு 'பாரத் கவுரவ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பார்லிமென்டில் இன்று வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் அமைப்பான 'சன்ஸ்கிரிட் யுவா சங்கம்' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. பிரிட்டன் பார்லிமென்டில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிற இந்த விருதை மேஜர் தயான்சந்த் சார்பில் அவரது மகன் அசோக் பெற்றுக் கொள்கிறார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கி உலகின் பிதாமகன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். 1928,1932, 1936ஆம் ஆண்டு இந்…

  14. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…

  15.  பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…

  16. பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் மாரியப்பன் தங்கவேல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது. பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல…

  17. பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…

  18. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மாரியப்பன் தங்கவேல் | கோப்புப் படம். பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக் போட்டியில், சேலம் மாவட்டம், தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டி, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டி என்ற கு…

  19. பாராலிம்பிக்ஸில் இலங்கை வீரா் உலகசாதனை August 30, 2021 ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார். F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் தினேஷ் பிரியந்த ஹேரத் இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளாா். இதன்மூலம் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2021/165226

  20. பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் Published By: VISHNU 26 AUG, 2024 | 08:17 PM (நெவில் அன்தனி) டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர். ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர்…

  21. பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நக­ரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்­ட­ரங்கை சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­யிட்டு பெரும் அதிர்ச்சி அடை­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரி­வித்­துள்ளார். பிரான்ஸ் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் தனது அதிர்ச்­சியை வெளி­யிட்­டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்­மனி அணிக்கும் இடை­யி­லான சிநே­க­பூர்வ கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தத் தாக்­கு­தல்கள்…

  22. பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித…

  23. பாரீஸ் அணியுடனான ஆட்டத்தில் பார்சிலோனா அணி படு தோல்வி சாம்பியன்ஸ் லீக் கால் பந்து தொடரின் குரூப் பிரிவு ஆட்டத்தில், முன்னனி அணியான பார்சிலோனா, பாரீஸ் அணியிடம் 0-4 என்ற கணக்கில் படு தோல்வியடைந்தது. பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, பாரீஸ் நகரில் நடந்த குரூப் போட்டியில், பாரீசை சேர்ந்த பி.எஸ்.ஜி அணியும், முன்னனி கால்பந்து அணியான பார்சிலோனா அணியும் பலப்பரிட்சை நடத்தின. இரண்…

  24. பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10 கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அது…

  25. பார்சிலோனா 3வது முறையாகவும் சம்பியன் December 21, 2015 ஜப்பானில் நடைப்பெற்ற 12வது உலக கழக அணிகளுக்கான கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற இறுதி போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும், அர்ஜென்டினாவின் ரிவர்ட் பிளாட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலத்திய பார்சிலோனா அணி, லயோனல் மெஸ்சியின் ஒரு கோலுடனும், லூயிஸ் சுவாரஸின் 2 கோல்களுடனும் 3-0 என்ற கோல் கணக்கில் ரிவர்ட் பிளாட்டை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது பார்சிலோனா அணி 3வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடதக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6343

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.