விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…
-
- 0 replies
- 484 views
-
-
பிக் பாஷ் போட்டியில் புத்திசாலித்தனமாக நேசர் எடுத்த பிடி விதிக்குட்பட்டது By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:50 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற ப்றிஸ்பேன் ஹீட் அணிக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கிய தீர்மானம் மிக்க வேளையில் மைக்கல் நேசர் மிகவும் புத்திசாலித்தனமாக எடுத்த அற்புதமான பிடி இன்று கிரிக்கெட் உலகில் பேச்சுப் பொருளாகிவிட்டது. ஆடுகளத்திற்கு உள்ளே பவுண்டறி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மைக்கல் நேசர், வேகமாக ஓடியவாறு பிடியை எடுத்தார். ஆனால், அவரால் சமநிலை பேணமுடியாமல் போனதால் பந்தை மேலே எறிந்துவிட்டு பவு…
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
பிக் பாஷ் போட்டியில் ரசிகர்களால் புதிய சாதனை January 04, 2016 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர். அவுஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், மெல்போர்ன் போன்ற உலக பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கும் ‘பாக்சிங் டே’ கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மெல்போர்னில்தான் நடத்தப்படும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பதே இதற்கு காரணம். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெல்ப…
-
- 0 replies
- 432 views
-
-
பிக் பாஷ் லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங…
-
- 1 reply
- 427 views
-
-
பிக்ஸ் செய்ய கெய்ன்ஸ் பணித்தார்: வின்சென்ட் தனது அணித்தலைவராக இருந்த கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின் கீழேயே, போட்டிகளை நிர்ணயம் செய்ததாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லூ வின்சென்ட் வாக்குமூலமளித்துள்ளார். இலண்டனில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தின் போது கிறிஸ் கெய்ன்ஸ் சேர்க்கப்படாமைக்கு, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தொடரில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமையே காரணமென, அப்போதைய ஐ.பி.எல் பணிப்பாளரான லலித் மோடி பதிவிட்ட டுவீட், தனது நற்பெயரைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்து, கிறிஸ் கெய்ன்ஸ் 2012ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்து, நட்டஈடு பெற்றிருந்தார். எனினும், கிறிஸ்…
-
- 0 replies
- 366 views
-
-
[size=4]ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது மருத்துவ மற்றும் பாலின பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிங்கி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிங்கி, கடந்த 2006ஆம் ஆண்டு டோகா நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாகவும் பணத்தை மோசடி செய்ததாகவும…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…
-
- 1 reply
- 335 views
-
-
பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்? சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முர…
-
- 1 reply
- 387 views
-
-
பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…
-
- 1 reply
- 659 views
-
-
பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு சஷாங்க் மனோகர் | படம்: ஏபி பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். மும்பையில் இன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை மணிநேரத்துக்கும் குறைவாக நடந்த இந்த சிறப்பு பொதுக்குழுவில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒட…
-
- 0 replies
- 311 views
-
-
பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார். பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார். த…
-
- 0 replies
- 309 views
-
-
பிசிசிஐ பாராட்டு விழாவில் தோனி பெயரை மறந்த சேவாக் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சேவாக்கிற்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர். அருகில் ஷேவாக்கின் தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிசிசிஐ சார்பில் சேவாக்கிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சேவாக் தனது கேப்டன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் தோனியின் பெயரை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த அக்டோபர் 20ம் தேதி சேவாக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 818 views
-
-
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…
-
- 0 replies
- 384 views
-
-
[size=5]பிடிபட்டார் பலநாள் கள்வன் - லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங்[/size] [size=1] [size=4]அமெரிக்கரும் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற துவிச்சக்கர வண்டி வீரருமான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தடை செய்யப்பட்ட ஊக்குவிப்பு மருந்துகளை நீண்டகாலமாக பாவித்து வந்திருக்குன்றார். [/size][/size] [size=1] [size=4]இவற்றை பாவித்து புகழ்பூத்த 'டூர் டி பிரான்ஸ்' துவிச்சக்கர வண்டி போட்டியில் அதிகூடிய தடவைகள் வென்று பெரிய சாதனைகளைப்படைத்தவர்.[/size][/size] [size=1] [size=4]இப்பொழுது அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட ஊக்கப்பொருட்களை கண்காணிக்கும் அமைப்பு இவர் எதைப்பாவித்து தடை செய்தாரோ அதை கண்டுபிடித்து இவர் மேல் பழி சுமத்தியுள்ளது. இதனால் இவரின் சகல வெற்றிகளும் நிராகரிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. [/siz…
-
- 0 replies
- 917 views
-
-
பிடிவாத அலிஸ்டர் குக்கை நீக்க வேண்டும்: மைக்கேல் வான் காட்டம் அலிஸ்டர் குக் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை உதற மறுத்தால் அவரை நீக்குவதுதான் ஒரே வழி என்று முன்னாள் ஈகேப்டன் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார். "ஒருநாள் கிரிக்கெட் வித்தியாசமானது. அலிஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து இறங்க மறுத்தால் அவரை நீக்குவதுதான் சிறந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை, ஜேம்ஸ் விடேகர், பால் டவுண்டன் போன்ற வாரிய நிர்வாகிகளும் மாற்றம் வேண்டும் என்பதை உணரவில்லையெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்கால நன்மை குறித்த இவர்களது நோக்கத்தை நான் சீரியசாகக் கேள்வி கேட்க நேரிடும். டெஸ்ட் தொடரை வென்று அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்…
-
- 0 replies
- 366 views
-
-
பின் தள்ளப்பட்டார் ஜஸ்பிரிட் பும்ரா..!! சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் கிரிக்கட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரப்பட்டியல் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் குறித்த தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். …
-
- 0 replies
- 467 views
-
-
பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார். ”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் நன்றாக ஆடிவிடுகிறார். மேலும் முன்னிலை வீரர்கள் சிலர் ஃபார்மில் இல்லை. டெஸ்ட் போட்டியில் வெல்ல ரன்கள் தேவை. அப்போதுதான் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும். முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்டிங் மாறுவேடம் பூண்டது, ஸ்டூவர்ட் …
-
- 0 replies
- 297 views
-
-
பிபா தலைவர் மீது போலீசார் வழக்கு ஜெனிவா: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா அமைப்பின் தலைவர் செப் பிளாஸ்டர், இவர் மீது சுவிட்சர்லாந்து போலீசார் குற்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உபே எனப்படும் ஐரோப்பியன் யூனியன் கால்பந்து கூட்டமைப்பிற்கு 2 மில்லியன் சுவீஸ் பிரான்ஸ் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து , சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் உத்தரவுப்படி அந்நாட்டு போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து செப் பிளாஸ்டர் அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1350067
-
- 0 replies
- 323 views
-
-
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா Image courtesy - Getty Images எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை 1-௦ எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது. இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதியுடன் சேர்த்து ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி …
-
- 0 replies
- 322 views
-
-
பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட ப…
-
- 0 replies
- 346 views
-
-
பிபா தரவரிசை: முதல் இடத்துடன் 2016-ஐ நிறைவு செய்தது அர்ஜென்டினா பிபா கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா 2016-ம் ஆண்டை முதல் இடத்துடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரேசில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்த அர்ஜென்டினா, இந்த வருடம் முடிவில் முதல் இடத்தோடு நிறைவு செய்துள்ளது. அர்ஜென்டினா இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெல்ஜியத்திடம் இருந்து முதல் இடத்தை பற…
-
- 0 replies
- 332 views
-
-
பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு November 14, 2015 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று …
-
- 0 replies
- 317 views
-
-
பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர் ஜூரிச்: ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக பிபா தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தான் பிபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடக்கும் எனவும் பிளாட்டர் கூறியுள்ளார் http://www.dinamalar.com/news_detail.asp?id=1266245
-
- 11 replies
- 930 views
-
-
பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…
-
- 0 replies
- 537 views
-
-
பிபிஎல் நவம்பரில் தொடக்கம் இரண்டு வருடங்கள் இடைவேளையின் பின், பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் மூன்றாவது பருவகாலம், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரானது ஆறு அணிகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், மூன்று புதிய அணி உரிமையாளர்களும் பங்கெடுக்கவுள்ளனர். டாக்கா அணியானது பெக்சிம்கோ குழுமத்தாலும், சிட்டகொங் அணியானது டிபிஎல் குழுமத்தாலும், பரிசல் அணியானது அக்ஸிம் டெக்னோலஜிஸாலும் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், ராஜஸ்தானி, குளுநா ஆகிய அணிகளே இந்த வருடம் உரிமையாளர்கள் இல்லாமல் உள்ளன. மூன்று பழைய அணி உரிமையாளர்களை மட்டுமே அனுமதித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, 2013 ஆம் இடம்பெற்ற போட்டிகளுக்கான மிகுதி பணத்தை செலுத்துபவர்களுக்கும், மூன்றாவது பருவகாலத்துக்…
-
- 0 replies
- 321 views
-