விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி, கிழக்கு துர்கிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிவாகை பெறும் நம்பிக்கையோடு தமிழர்கள் காத்திருக்கின்றனர். சனிக்கிழமை (14 – 12 – 2019) பிரான்சில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதோடு, வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதியாட்டம் மசிடோனியா நாட்டில் இடம்பெற இருக்கின்றது. தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி, தேர்வுச்சுற்றுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், உதைபந்தாட்ட இரசிகர்கள், சமூக-அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் அணிக்கு தோழமையினை தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ…
-
- 0 replies
- 442 views
-
-
டெஸ்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்து சாதனை (பாகிஸ்தானிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் சதங்கள் குவித்து பாகிஸ்தானுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிலைநாட்டினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானின் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் 2007 இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு வீரர்களான தினேஷ் கார்த்திக் (129), வசிம் …
-
- 0 replies
- 600 views
-
-
சிவப்பு அட்டை காட்டிய நடுவர் சுட்டுக்கொலை அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீரர், தனது காரில் இருந்த பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்த நடுவரை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் நடுவரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும்…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கையின் தோல்வி: சங்கா, மஹேல ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 5ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்து. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கு…
-
- 0 replies
- 497 views
-
-
பாட்டிலை வைச்சுகிட்டு ஆடணுமா? ஆஹா இப்பவே கண்ணை கட்டுதே.. ஐசிசியின் அதிரடி விதிகள்.! துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கொரோனா வைரஸ்-க்கு இடையே கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் துவக்க சில விதிமுறைகளை வகுத்துள்ளது. புதிய விதிகள் கிரிக்கெட் போட்டிகளை இப்போது துவங்காவிட்டால் பல அணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் இந்த விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விதிகளில் பெரும்பாலானவை பந்து குறித்தவை தான். கிரிக்கெட் போட்டியில் பந்து பல வீரர்களின் கை மாறி, அம்பயர் வசமும் செல்லும். அனைத்து வீரர்களும் பந்தை தொட வேண்டிய அவசியம் உள்ளது. என்ன கூறி உள்ளது ஐசிசி.? பந்தை எப்படி கையாள்வது என்பது பற்றி அந்த விதிமுறைகளில் அதிகம் குறிப…
-
- 0 replies
- 730 views
-
-
யூரோ 2020 பல ஐரோப்பிய நாடுகளில் நடாத்தப்படும் என மிசேல் பிளாட்டினி தெரிவித்துள்ளார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Euro 2020 to be hosted across Europe, Uefa announces: http://www.guardian.co.uk/football/2012/dec/06/euro-2020-across-europe-uefa
-
- 0 replies
- 599 views
-
-
அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகள்; வடக்கு மாகாணத்திலிருந்து 9 அணிகள் பங்குபற்றுகின்றன (நெவில் அன்தனி) கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைத் திணைக்களம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பாடசாலைகளுக்கிடையிலான வலைபந்தாட்ட போட்டிகள் குருணாகல் புனித ஆனாள் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளுக்கு எயார்டெல் அனுசரணை வழங்குகின்றது. இப் போட்டிகள் 15, 17, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வய…
-
- 0 replies
- 259 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்; 7-0 கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி கெல்டிக் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் பாஸை கோலாக மாற்றிய மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கெல்டிக் அணியை 7-0 என்று பார்சிலோனா வீழ்த்துவதற்கு மெஸ்ஸியின் அபாரமான ஹாட்ரிக் உதவி புரிந்தது. அலவேஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா கடந்த சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது, இதனையடுத்து பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் ஹென்றிக் எந்த வித சோதனைகளையும் செய்ய விரும்பாமல் வலுவான அணியைக் களமிறக்கினார். ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே நெய்மரிடம் இருந்து பாஸைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி நெருக்கடியான ஒரு கோணத்திலிருந்து முதல…
-
- 0 replies
- 272 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வாய்ப்பு கிட்டியுள்ள மில்கா டி சில்வாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கிரிஸ்புரோ இலங்கையின் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பளர்களான கிரிஸ்புரோ குழுமம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ள வீராங்கனை மில்கா டி சில்வாவிற்கு தமது அனலான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான உடற்தகுதியை அவர் அடைந்துள்ளதால், சர்வதேச ஜிம்னாஸ்டிக் மாநாட்டினால் எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தும். இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது இலங்கை ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக மில்கா டி சில்வா உள்ளார். 18 வயதான மில்கா…
-
- 0 replies
- 566 views
-
-
ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் போட்டி தொடரை வென்றது. படத்தின் காப்புரிமைREUTERS/DANISH SIDDIQUI விளம்பரம் இத்தொடரை வென்ற இந்தியா தொடர்…
-
- 0 replies
- 371 views
-
-
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய 16 வயது இளம் வீராங்கனை மும்பையைச் சேர்ந்த 16 வயதே ஆன இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார். பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரான 19 வயதிற்குபட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அவுரங்காபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- சவுராஷ்டிரா அணிகள் மோதின. மும்பை அணியில் 16 வயதே ஆகும் இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சவுராஷ்டிரா வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஜெமிமா 163 பந்த…
-
- 0 replies
- 489 views
-
-
ஒருநாள் அணியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு இதுதான் காரணம்: தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் பேட்டியளித்துள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம் அளிக்கப்படுவதில்லை. இளம் சுழற்பந்து வீச்சாளர்களான, மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் இனி அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிகிற…
-
- 0 replies
- 403 views
-
-
பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார். ”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் நன்றாக ஆடிவிடுகிறார். மேலும் முன்னிலை வீரர்கள் சிலர் ஃபார்மில் இல்லை. டெஸ்ட் போட்டியில் வெல்ல ரன்கள் தேவை. அப்போதுதான் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும். முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்டிங் மாறுவேடம் பூண்டது, ஸ்டூவர்ட் …
-
- 0 replies
- 296 views
-
-
கால்பந்து உலகின் அடுத்த பீலேவாக உருவெடுத்துள்ள எம்பாப்வே கடந்த 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முற்தடவையாக கால்பந்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகு, பரிஸ் நகரிலிருந்து சுமார் பதினொரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள போண்டி என்ற சிறிய கிராமத்தில் குழந்தை கிலியன் எம்பாப்பே பிறந்தது. சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது தடவையாக பிஃபா உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவராக விளங்கிய இந்த கிலியன் எம்பாப்பே, இம்முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இளம் வீரருக்கான விருதையும் பெற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் அப…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1:0 என கைப்பற்றியுள்ளது. December 30, 2018 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளதுடன் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி கிறிஸ்ட் சரச்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. இதையடுத்து…
-
- 0 replies
- 521 views
-
-
59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை Published By: DIGITAL DESK 7 01 APR, 2024 | 04:16 PM (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முற…
-
- 0 replies
- 561 views
- 1 follower
-
-
5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை மிதாலிராஜ்! மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்ககளை கடந்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரின் 4வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து இந்திய 44.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், 53 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை மிதாலி ராஜ்…
-
- 0 replies
- 318 views
-
-
Published By: VISHNU 08 SEP, 2024 | 09:55 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். நியூயோர்க் சிட்டி ப்ளஷிங் மெடோவ்ஸ் ஆர்த்ர் அஷே அரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரினா சபலென்கா சம்பியனானார். ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு செட் முன்னிலையிலிருந்த சபலென்கா 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் கோக்கோ கோவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தார். இந்த வருடம் நடுநிலையாளராக போட்டியிட்ட 2ஆம் நி…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் விராட் கோலி. | படம்: கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார். மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார். டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கைக்குக் காத்திருக்கும் சோதனைக் காலம் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக இருபதுக்கு-20 தொடர் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இத்தொடருக்குள் நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணிக்கு, அவ்வணியின் சுப்பர் 10 சுற்றில் ஒரு போட்டி மீதமிருக்கும் போதே, இத்தொடர் முடிவடைந்திருந்தது. இதற்கு முன்னரும் கூட நடப்புச் சம்பியன்களாக இருந்த அணிகள், அடுத்த தொடரில் ஆகக்கூடுதலாக அரையிறுதிவரையே முன்னேறியிருந்தன என்ற வரலாறு இருந்ததோடு, இம்முறை இலங்கை அணி சாதிக்காது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. இலங்கை அணியிலும் கிரிக்கெட் சபையிலும் காணப்பட்ட குழப்பங்கள் அவ்வாறு இருந்தன. …
-
- 0 replies
- 388 views
-
-
யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு! யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 கால்பந்தாட்டத்திற்கான டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். 2026 உலகக் கோப்பைக்காக FIFA போட்டியில் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை, ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 கால்பந்து சுற்ற…
-
- 0 replies
- 99 views
-
-
பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…
-
- 0 replies
- 240 views
-
-
‘‘வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை’’ – பயிற்றுநர் கிரஹம் போர்ட் 2016-09-09 10:09:55 (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அணி இருப்பதாக தலைமைப் பயிற்றுநர் க்ரஹம் போர்ட் தெரிவிக்கின்றார். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக் கும் இடையிலான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக் கெட் போட்டி கெத்தாராம விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர்…
-
- 0 replies
- 286 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம…
-
- 0 replies
- 245 views
-
-
BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எட…
-
- 0 replies
- 394 views
-