விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…
-
- 12 replies
- 1.1k views
-
-
யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ? எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. நடைபெற இருக்கும் உதைபந்தாட்டப் போட்டியினைத் தொடர்ந்து யாழ் கள உறவுகளுக்கிடையிலான ஒரு போட்டி இது. போட்டியில் வெற்றிபெறும் கள உறவு யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்படுவார். ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒரு தரத்தில் விடைகளை அளிக்கவேண்டும். அளித்த பதில்களில் எதுவித திருத்தங்களும் செய்தல் தவிர்க்கப்படல்வேண்டும் போட்டிக்கான பதில்களை …
-
- 110 replies
- 9k views
-
-
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: சச்சினுக்கு அடுத்த இடத்தில் சங்கக்காரா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் எடுத்த சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டில் 13,732 ரன்கள் எடுத்து சச்சினுக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடம் வகிக்க அதற்கு அடுத்த இடத்தில் முன்னதாக ரிக்கி பாண்டிங் 13,704 ரன்களுடன் இருந்தார். தற்போது 13,732 ரன்களுடன் சங்கக்காரா 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெடில் சங்கக்காரா 1030 ரன்களை எடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கும் மேல் எடுக்கும் 3-வது இலங்கை வீரர் ஆனார் சங்கக்காரா, மொத்தத்தில் 14-வது வீரர். சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்ப…
-
- 1 reply
- 567 views
-
-
குருவுக்கு பாடம் நடத்திய சீடன்: சக்லைனை நோகடித்த அஜ்மல் மூத்த வீரர்கள் சிலர் தங்கள் நடத்தை மற்றும் பேச்சில் முதிர்ச்சி காட்டுவது அவசியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டித்திருப்பதில் காரணம் இல்லாமலில்லை. பாக்.கிரிக்கெட் வாரியம் இப்படிக் கூறியதற்குக் காரணம் அதன் மூத்த வீரரான அஜ்மல். சயீத் அஜ்மல் வீசும் பந்துகள் 100% விதிமுறைகளை மீறுவதாக உள்ளன என்று ஐசிசி பந்துவீச்சுக் கண்காணிப்புக் குழு கூறி அவர் பந்துவீசத் தடை விதிக்கப் பரிந்துரை செய்து, சயீத் அஜ்மலும் தடை செய்யப்பட்டார். அதன் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அஜ்மல் தனது த்ரோ-வை செய்து கொள்வதற்கு உதவுமாறு முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தற்போது பல்வேறு தரப்பில் பயிற்சியும் அளித்து வரும் சக்லைன் மு…
-
- 0 replies
- 421 views
-
-
சச்சின் டெண்டுல்கருடன் ஏற்பட்ட பிரச்சினை என்ன? - மனம் திறக்கிறார் கிரெக் சாப்பல் அணியின் நன்மைக்காக சச்சின் டெண்டுல்கர் பின்னால் களமிறங்க விரும்பினோம், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை என்கிறார் கிரெக் சாப்பல். 2007-உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸி.-யின் கிரெக் சாப்பல் தனக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் பிளவு ஏற்படக் காரணம் என்ன என்பதை விவரித்தார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் ஒளிபரப்பிய 'கிரிக்கெட் லெஜண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் சாப்பல் அப்போது நடந்ததை விவரிக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் தொடக்கத்தில் இறங்காமல் அதன் பிறகு களமிறங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் சச்சின் அதனை விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். "அணிக்கு…
-
- 1 reply
- 840 views
-
-
11 ஆவது உலகக் கிண்ண திருவிழா தொருமுனையிலும் பாடசாலை நேரங்களின் இடையே திருட்டுத்தனமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் முதல், விடுமுறை நாட்களில் மைதானத்திலும் வெற்றுக்காணிகளிலும் விரைவாக விளையாடும் இளைஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்கப்படும் இரண்டாவது பெருவிளையாட்டான கிரிக்கெட்டின் உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. வண்ணமயமான வர்ணக்கொடிகள். மாயாஜாலம் காட் டும் அலங்கார மின்விளக்குகள், விநோதமான உருவ பொம்மை கள், கண்கவர் சித்திரங்கள், மனதைக் கொள்ளையடிக்கும் பாரிய புகைப்படங்கள் ஒருபுறமிருக்கையில் மறு புறத்தில் சாதாரணமாகவே மக்கள் நெருக்க…
-
- 0 replies
- 756 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த …
-
- 2 replies
- 1k views
-
-
11 ஆவது உலகக் கிண்ணம் : 11 கிலோ எடை வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும். ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்…
-
- 0 replies
- 502 views
-
-
த்ரிஷா வருண்மணியன் ஜோடியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விலைக்கு வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்பே சென்னையில் நடைபெற்றது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து த்ரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற உத்தரவால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விற்பனைக்கு வருகிறது. த்ரிஷாவும், வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=508833839429321861#sthash.ZNL4tAOB.dpuf
-
- 9 replies
- 1.1k views
-
-
2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது? உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம். இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது. இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து …
-
- 0 replies
- 735 views
-
-
சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…
-
- 1 reply
- 341 views
-
-
கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார். கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக். இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பத…
-
- 0 replies
- 355 views
-
-
1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் ஒரு விதத்தில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மக்களிடையே பரவச் செய்வதில் ஒரு நாள் ஆட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்றால் அந்த ஒரு நாள் ஆட்டங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது 1975-ல் நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான். இந்தத் தொடருக்கு முன்பாக 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளே நடைபெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட் என்ற அம்சமே புதுமையாகப் பார்க்கப்பட்டது. ஆட்டம் என்னமோ அதே பாணியில்தான் நடந்தது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒரு நாள் போட்டியிலும் ஆடியது. டெஸ்ட் பாணியிலேயே இதுவும் ஆடப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 60…
-
- 25 replies
- 5.6k views
-
-
அதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 2015 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைகிறார் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே. இவரின் முதல் உலகக் கோப்பைப் போட்டி 1999. பாகிஸ்தானின் சயீத் அப்ரிடிக்கும் இது 5-வது உலகக் கோப்பைத் தொடர். இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல் உலகக் கோப்பைத் தொடர். அதிக உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் முதலில் பெற்றார். கடந்த 1975-ம் ஆண்டு தொடரில் அறிமுகமான மியான்தத், முதல் 6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று, அதிக உலகக்கோப்பைத் தொ…
-
- 0 replies
- 548 views
-
-
முக்கியக் கட்டத்தில் தவறு செய்த ஆனந்த் மீண்டும் கார்ல்சனிடம் தோல்வி ஜெர்மனியில் நடைபெறும் கிரென்கா கிளாசிக் செஸ் போட்டித் தொடர் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் இந்தத் தோல்வியினால் 6-வது இடத்தில் உள்ளார். இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த். இந்த முறை கார்ல்சன், ஆனந்தின் உத்திகளை முன்னமேயே கணித்து விட்டது போலவே இருந்தது. ஆனந்தின் காய்கள் உள்ளே நுழையாதவாறு கல்கோட்டைத் தடுப்பணை அமைத்தார். தொடக்கத்தில் ஆனந்துக்கு அனுகூலமான நிலைமைகள் இருந்தது. செஸ் போர்டின் மையப்பகுதி காய்கள் நகர முடியாதவாறு இறுக்கமாக அமைந்தது. ஆன…
-
- 2 replies
- 620 views
-
-
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் டயமன்ஸ் சம்பியன் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது. கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (08) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியும் வதிரி டயமன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மனோகரா அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 5 ஓவர்களில் 43 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி, 4.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து…
-
- 3 replies
- 455 views
-
-
இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் - 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்த…
-
- 0 replies
- 438 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 407 views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…
-
- 3 replies
- 602 views
-
-
தோனியும் ‘மேன்லி பியூட்டி பார்லர்’ சிகையலங்கார நிலையமும் தோனி தனது சிகையலங்காரத்தை அடிக்கடி விதம் விதமாக மாற்றுபவர் என்பது நாம் அறிந்ததே. அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்வில் இருந்த சமயம், ‘மேன்லி பியூட்டி பார்லர்’ என்ற ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அடிக்கடி செல்வார் என்பது உள்ளிட்ட சுவையான தகவல் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்ரிகையாளர் பிஸ்வதீப் கோஷ் எழுதியுள்ளார். "எம்.எஸ்.டி, தி மேன், தி லீடர்" என்ற வாழக்கை வரலாற்று நூலில் தோனியைப் பற்றி இதுவரை கேள்விப்படாத தரவுகள், நிகழ்வுகள் மற்றும் அவரைப்பற்றி பிறர் கூறுவது என்று 245 பக்கங்க்ளுக்கு அந்த நூலை எழுதியுள்ளார் பிஸ்வதீப். தன் கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலங்களில் ராஞ்சியில் உள்ள சாதாரணமான சலூன்களில…
-
- 0 replies
- 379 views
-
-
40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா....? பெங்களூரு: 40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி. உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்படுவது இங்கிலாந்து. ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. மேலும் உலககக் கோப்பை வரலாற்றில் 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட ஒரே அணி இங்கிலாந்துதான். அந்த மூன்று இறுதிப் போட்டியிலும் கிரஹாம் கூச்சும் ஆடியுள்ளார். இதுதான் மிகப் பெரிய சோகம். 1979 இறுதிப் போட்ட…
-
- 0 replies
- 480 views
-
-
குழந்தையை பார்க்க அவசரம் இல்லை: உலகக் கோப்பையை வெல்வதுதான் மிக முக்கியம் - கேப்டன் தோனி பேட்டி எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும். கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எத…
-
- 0 replies
- 282 views
-
-
நெருக்கடி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது: லஷித் மலிங்கா காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தனக்கு நெருக்கடி என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார். வேகம் குறைந்து, வயிறும் அவருக்கு முன்னால் நீண்டு கொண்டிருக்க லஷித் மலிங்காவின் தோற்றம் அவரை அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலையிலிருந்து கீழே இறக்கி விடுமோ என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. “நெருக்கடி தருணங்கள் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. பிரஷர் தருணங்கள் எனக்கு பழக்கமானவை. அதனால் நெருக்கடி பற்றி தனியாகப் பேச வேண்டினால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றே கூறுவேன். நான் எப்போதும் எங்கு விளையாடுகிறேன், சூழ்நிலைம…
-
- 0 replies
- 508 views
-
-
24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார். இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்ம…
-
- 5 replies
- 537 views
-
-
உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…
-
- 0 replies
- 1.5k views
-