விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு எதிராக லோட்ஸில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ரோபி ரெனால்ட் ஜோன்ஸ் என்ற வீரர் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவ்வணியில் இவருக்கும் இலங்கைக்கு எதிராக அழைக்கப்பட்ட ஜக் போல்லுக்கும் இடையே யார் உபாதையடைந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக அறிமுகம் பெறுவது என்ற போட்டி உள்ளது. இதில் காயம் காரணமாக இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறவி…
-
- 23 replies
- 2.5k views
-
-
இனி கிரிக்கெட் இப்படித்தான் நடக்கும்: ஐசிசி அறிவிப்பு! மின்னம்பலம் கொரோனா வைரஸின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அதன் விளையாட்டு விதிமுறைகளில் இடைக்கால மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு பிறகான கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் குறித்த முக்கியமான கூட்டம் நேற்று(ஜூன் 9) நடைபெற்றது. அதில், ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் குழு (சி.இ.சி) அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகளை ஒப்புதல் அளித்தது. இது கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயங்களைத் தணிப்பதையும், கிரிக்கெட் மீண்டும் தொடங்கும் போது வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் பாதுகாப்பை உ…
-
- 5 replies
- 851 views
-
-
கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார்? - ரிக்கி பாண்டிங் பகிர்வு பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பெவிலியன் திரும்பும் ரிக்கி பாண்டிங். | படம்: கெட்டி இமேஜஸ். இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார். டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது: “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகி…
-
- 0 replies
- 425 views
-
-
அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். http://www.virakesari.lk/article/14137
-
- 4 replies
- 502 views
-
-
இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை… அசத்திய கோஹ்லி! இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி டிராவாகும் என்று எல்லோரும் நினைத்திருக்க, 207 ரன்களுக்கு இங்கிலாந்தை, இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு சின்ன சர்ப்பிரைஸ் தான். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்த ஆண்டை நம்பர் 1 அணியாக தர வரிசை பட்டியலில் உச்சத்தில் முடித்துள்ளது. இதைத் தாண்டி கோஹ்லிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டு. இது வரை உடைக்கப்படாத சில சாதனைகளை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 18… டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையவே இல்லை. 2015 ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் தொடங்கி இங்கி…
-
- 0 replies
- 382 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி. வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின. …
-
- 4 replies
- 243 views
-
-
சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது Tamil சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடரின் பலம் மிக்க அணிகளைக் கொண்ட 20 வயதின் கீழ் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்திய பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முன்னர் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியினர் மன்னார் முருங்கன் கல்லூரி அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில்…
-
- 0 replies
- 461 views
-
-
2012ம் ஆண்டு மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்த இங்கிலாந்து விருப்பம் 2012ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்கு இங்கிலாந்து முயற்சி செய்ய உள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கால்பந்து விளையாட்டு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியை பிரிட்டனில் …
-
- 0 replies
- 283 views
-
-
அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஜப்பான் பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி Image Coutesy - Shuji Kajiyama/AP ரஷ்யாவில் 2018 ஆம் அண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்ற நான்காவது அணியாக ஜப்பான் தம்மைப் பதிவு செய்துகொண்டுள்ளது. ஜப்பானின் சைட்டாமா அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய மண்டலத்திற்கான தகுதிகாண் போட்டியில் பலம்கொண்ட அவுஸ்திரேலியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஜப்பான் ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தனது இடத்தை பதிவு செய்து கொண்டது. கடந்த 1998ஆம் ஆண்டு தொடக்கம் ஜப்பான் தொடர்ச்சியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்று வருகின்றமை க…
-
- 0 replies
- 317 views
-
-
இங்கிலாந்தை 5-0 என வெள்ளையடிப்புச் செய்தது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 281 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டீவன் ஸ்மித் 115 ஓட்டங்களையும், பிரட் ஹடின் 75 ஓட்டங்களையும், ஷேன் வொற்சன் 43 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 326 ஓட்டங்களைப் பெற்றது.…
-
- 11 replies
- 764 views
-
-
முழு வட மாகாணமுமே எனக்கு ஆதரவு தருகின்றது – அனித்தா 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை படைத்த யாழ் வீராங்கனை அனித்தா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் சுபாஸ்கரனுடனான ThePapare.comஇன் சிறப்பு நேர்காணல்.
-
- 0 replies
- 530 views
-
-
UEFA தொடரில் முதல் வெற்றியை சுவைத்த பார்சிலோனா, செல்சி, ரியல் மட்ரிட் Getty UEFA சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டியானது இவ்வாரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஒவ்வொரு அணியும் தமக்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கோல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஜரோப்பாவின் சிறந்த கால்பந்து கழகங்களிற்கிடையிலான UEFA இன் சம்பியன் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப்போட்டி இவ்வாரம் 13ஆம் திகதி ஆரம்பமாகியது. இப்பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் கிண்ண சுற்றுப் போட்டியில் 13ஆம் திகதி 8 போட்டிகளும், 14ஆம் திகதி 6 போட்டி…
-
- 0 replies
- 416 views
-
-
மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார். விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.4…
-
- 4 replies
- 1.7k views
-
-
வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது மார்ச் 26, 2014. கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார். ‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வ…
-
- 0 replies
- 525 views
-
-
காலக் கடிகாரம் அடிக்கத் தொடங்கி விட்டதா? மகேந்திர சிங் தோனி - PTI இ ரண்டு உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, ஐபிஎல் தொடர்களில் சென்னை அணிக்காக இரு முறை கோப்பை மற்றும் 4 முறை 2-வது இடம் பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனியின் மீதுதான் தற்போது விமர்சன கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு வீரராகவும், கிரிக்கெட் புரவலராகவும் நம்பிக்கைக்கு புகழ் பெற்றவராகவும் விளங்கிய விவிஎஸ் லக்ஷ்மணிடம் இருந்துதான் அந்த விமர்சனம் பாய்கிறது. அதிலும் ஜாம்பவனாக திகழும் ஒருவரை ஓய்வு பெறவேண்டும், இளம் வீரருக்கு வழிவிட வேண்டும் என சாதாரணமாக கருத்தை அள்ளித் தெளிக்…
-
- 0 replies
- 473 views
-
-
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் 2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள் விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். ஜனவரி இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20…
-
- 0 replies
- 321 views
-
-
2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்: 2014-07-18 12:07:06 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும். ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல. கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலவற்றின் விபரம்: 1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார். 2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது. 3) பெல்ஜி…
-
- 2 replies
- 427 views
-
-
அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத் அ-அ+ வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.…
-
- 1 reply
- 204 views
-
-
தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம் 'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். Photo Credit: Twitter/RaviShastriOfc சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத…
-
- 0 replies
- 316 views
-
-
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி: 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா. - படம்: பிடிஐ இந்தியாவுக்கு வரும் அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக் கெட் அணி சுற்றுப்பயணம் வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் விளையாட வுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக 2014-ல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. தர்மசாலாவில் 4-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றபோது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களு…
-
- 0 replies
- 202 views
-
-
என்னை இரவில் அடிக்கடி எழுப்பும் முரளி- சங்கா சுவாரஸ்ய தகவல் இலங்கை அணியில் முத்தையா முரளீதரனுடன் விளையாடிய நாட்களில் முரளீதரன் தன்னை நள்ளிரவில் எழுப்பி தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகளை பார்க்கச்செய்வார் என குமார் சங்ககார தெரிவித்துள்ளார் இந்தியாவின் பிரபல இணைய நிகழ்ச்சியான வட் த டக்கில் கலந்துகொண்டவேளை குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முத்தையா முரளீதரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் குமார் சங்ககார இதனை தெரிவித்துள்ளார். முரளீதரன் என்னை நள்ளிரவில் தொலைக்காட்சியில் சிறுவர்நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக எழுப்புவார் என சங்ககார தெரிவித்துள்ளார். அவரிற்கு தொலைக்கா…
-
- 1 reply
- 444 views
-
-
தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் ஸ்திரமான நிலையை அடைந்தது இங்கிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்து ஸ்திரமான நிலையை அடைந்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10:30 மணிக்கு காலியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மத்திய தர வீர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணாக முதலாம் நாள் ஆ…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன்200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இரு…
-
- 2 replies
- 317 views
-
-
உதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடம் இல்லை! உதவும் மனப்பான்மை கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கூட வீரர் கூட இடம் பெறவில்லை.அதே வேளையில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இடம் பெற்றுள்ளார். கருணை உள்ளத்துடன் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் விளையாட்டு வீரர்களில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் குழந்தையின் மூளை அறுவைசிகிச்சைக்கு 83,000 அமெரிக்க டொலர்கள் வழங்கினார். சிகிச்சை பெற்ற குழந்தை தற்போது பூரண குணமடைந்து நலமாக இருக்கிறது. அதுபோல் பல்வேறு நலப்பணிகளுக்காக ரொனால்டோ நன்கொடை வாரி வழங்கி வருகிறார். 'டூசம்திங்' என்ற அமைப்பு உலகில் தொண்டுள்ளத்துடன் செயல்ப…
-
- 0 replies
- 192 views
-
-
மாறுவேடத்தில் தெருவில் விளையாடிய கால்பந்து ஜாம்பவான்! (வீடியோ) நம்ம ஊரில் பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தனியாக தெருக்களில் நடந்து சென்றால் தேனீக்கள் போல் தொற்றி கொள்வார்கள் ரசிகர்கள். அதுவும், பிரபல கால்பந்து ஜாம்பவான் தனியாக தெருவில் விளையாடியால் விட்டு வைப்பார்களா ரசிகர்கள். போர்ச்சுக்கல்லை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை யாரும் அடையாளம் தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் ஸ்பெயினில் உள்ள தெருவில் கால்பந்து விளையாடி அசத்தியுள்ளார். கடைசி வரை யாரும் அவரை அடையாளம் காணமுடியவில்லை. இறுதியாக சிறுவன் ஒருவனிடம் விளையாடிய ரொனால்டோ, தனது மாறுவேடத்தை கலைத்துவிட்டார். அவர் தனது வேஷத்தை கலைத்ததுதான் மிச்சம். ரசிகர்கள் அவரை சூழ்ந்து கெ…
-
- 0 replies
- 226 views
-